Skip to Content

வாழ்வின் மறுமொழி

விமானப்  பயணம்

புதுவை வந்து சமாதி தரிசனம் செய்த அன்பர் மாத்ரு மந்திர் போனார். சமாதி  அற்புதமாக இருக்கிறது. மாத்ரு மந்திரில் மௌனம் வெள்ளமாக நிறைந்திருந்தது.  தண்ணீரை விலக்கிக் கொண்டு போவதுபோல் உள்ளே நடந்து செல்ல   வேண்டியிருந்தது. மனம் தன் நிலையை இழந்தது. உணர்வு  விழிப்புற்று  மௌனம்  உள்ளே பாய்ந்தது. மனம் இருந்த இடம் தெரியவில்லை. இது புதுப்பிறவி, புனர்ஜென்மம். அன்னை  தம்முள்ளே ஆழத்தில் பிறந்துள்ளார் என்ற ஆத்மத்   தெளிவு  ஏற்பட்டது. சுமார் 6 வருஷம் கழித்து, புதுவை வந்ததும், சமாதியில்  அனுபவம் பெற்றதும், மாத்ரு மந்திரில் ஆத்மா விழிப்புற்றதும் அன்பருக்குப் பெரிய  பேறு.

சென்னையில் விமானம் ஏறும்பொழுது ஜன்னல் பக்கத்து சீட் வேண்டும் எனக்  கேட்டிருந்தார். அது கிடைக்கவில்லை. வேறு  இடம் கொடுத்தார்கள். அது  சௌகரியமாக இல்லை. தாம் கேட்ட  இடம் தாராததால் ஏன் தமக்கு business class இல் இடம் தரக் கூடாது என  நினைத்தார். இவர் டிக்கெட்டைப்  போல் business class டிக்கட் 3  மடங்கு அதிக விலை. விமானம்  நிறைய  பிரயாணிகள்.

தம் எண்ணம் சரியில்லை என அறிந்து மனத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தவர் தம் எண்ணம் நியாயமற்றது எனவும், சொல்லப்போனால்   சுயநலமானது எனவும்  உணர்ந்து, அன்னை  வழிபடி  செயல்பட  வேண்டுமானால்  தாம் என்ன செய்ய வேண்டும்  என சிந்தித்தார்.  அவருடைய சிந்தனைகளை அவர் சொற்களால் எழுதுகிறேன்.

"என்னை என் சீட்டிலிருந்து மாற்றினார்கள்.  சமாதி, மாத்ரு மந்திர்  சூழல்களை  பயனுள்ளவகையில்  பெறும்படி  நடப்பதென  நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.  மனம் உயர வேண்டிய  இடங்கள்  பல இருப்பதால், எண்ணம் பல இடங்களுக்கும்   ஓடுகிறது.  ஆனால் முன்னேற்றமில்லை என நான் அறிகிறேன். எனவே என்னை மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கும் பழக்கத்தை - self centred ego -  மாற்ற நினைத்தேன். என்னைப்பற்றிக் குறைவாகவும், பிறரைப்பற்றி அதிகமாகவும்   நினைப்பது சரி என்ற எண்ணம் அதிகமாகப் பலிக்க அன்னையை அழைத்தேன். இதுபோன்ற எண்ணம் எனக்கு இயல்பாக எழுவதில்லை. சமாதியருகிலும், மாத்ரு   மந்திரிலும்  இந்த நல்ல எண்ணத்தையே முன்வைத்து வணங்கினேன். நான்  சென்னையிலிருந்து  திரும்பி வரும்பொழுது  நான்  கேட்டபடி  எனது  சீட்  ஜன்னலருகிலில்லை. மனம்  இரகஸ்யமாக  business class போக ஆசைப் பட்டது.  விமானம் பயணிகளால் நிறைந்திருந்ததால் சிரமம் அதிகமாகத் தெரிந்தது. இது  நடக்காத  எண்ணம்  என  ஆசையை  மனதிலிருந்து விலக்க முயன்றேன். (Business class டிக்கெட் இப்பயணத்தில் 4 மடங்கு விலை அதிகம்). நானுள்ள இடம்  அசௌகரியமாயிருந்தது. இதைவிடச் சற்று சௌகர்யமான இடம் கொடுக்க மாட்டார்களா என நினைத்துக்கொண்டிருக்கும்பொழுது,  மனம்  விமானக்  கம்பெனியை நாடியது. விமானம் நிறைந்திருப்பதால் கம்பெனிக்கு அதிக வருமானம் என்று  நினைத்து மனம் உள்ளபடியே  சந்தோஷப்பட்டது. என் சொந்த ஆசைகளை மறந்தேன். இந்தியாவுக்கு வருமுன் இதுபோன்ற எண்ணம் எனக்குத்  தோன்றவில்லை. சில  வினாடிகளுக்குள் purser வந்து என்னை  business classக்கு  மாறும்படிக் கேட்டுக்கொண்டார்!  என் சுயநலமற்ற எண்ணத்திற்கும், செலவில்லாமல் உயர்ந்த இடம் என்னைத் தேடி வந்ததிற்கும் உள்ள தொடர்பு தெüவாகத் தெரிந்தது. ஒரு  வகையில் சிறு சிறு விஷயங்களானாலும்,    மனமாற்றம் எதிரொலியை எழுப்புகிறது என்ற அளவில் இது பெரிய விஷயம் என்பதால் உங்களுக்குச் சொல்லப் பிரியப்பட்டேன்''.

மனமாற்றம்  பெரியது.  அன்னைக்கு  முக்கியமானது. எதிரொலியை   எழுப்பவல்லது.  இதையே பிரச்சினை தீர்க்கும் மார்க்கமாகப் பயன்படுத்துவதும் உண்டு. அதே க்ஷணம்  அன்னை  செயல்பட  அன்பர்   பயன்படுத்தக் கூடிய முறை  மனமாற்றம்.  

********

Comments

வாழ்வின் மறுமொழி Para  4  - 

வாழ்வின் மறுமொழி
 
Para  4  -  Line 6         -  அதிக மாகவும்               -     அதிகமாகவும்
Para  4  -  Line 19       -   தெüவாகத்                       -    தெளிவாகத்
 
 
motnir



book | by Dr. Radut