Skip to Content

04.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

அன்னையின் திருவடிகளில் என்னை சமர்ப்பித்து இந்த மடலை

எழுதுகிறேன்.

"Whenever you find a little time,

think of me, my child."

இந்த வார்த்தை,

"Whenever you think something

you think Mother and thank Mother"

என்றுதான் மனதில் எழுகின்றது. ஏனெனில் அன்னைக்கு நன்றி கூற இந்த ஆயுள் போதாது.

என்னுடைய வாழ்வில் அன்னையிடம் வந்தபின் இடையறாத அதிசயங்கள், அற்புதங்கள் நிகழ்ந்தன. நமக்கு அருட்பார்வை கிடைக்கும் போது பெறும் ஆனந்தம், நம் மக்களுக்குக் கிடைக்கும் போது பேரானந்தம் இடைவிடாது கிடைக்கின்றது. இதைத்தான் அன்னைக்கு நன்றி கூற இந்த ஆயுள் போதாது என்று கூறுகிறேன்.

அன்னையைப் பற்றிய பாடல்கள் சில என் கணவரால் எழுதப் பெற்று 21.8.2005 அன்று C.D (Audio) வெளியிடப்பட்டன. அன்று அதில் உள்ள 4பாடல்களுக்கு நான் நடனம் அபிநயித்து Sivasami, Mylaporeஇல் அரங்கேறியது. அற்புதமான நாள். அன்னையை மனதார உணர்ந்து,நெகிழ்ந்து, பரவசப்பட்டு என் நன்றியைச் சமர்ப்பித்தேன். அடுத்த நாள் 22.8.05 அன்று என் பெரிய மகனின் (18 வயது) பிறந்தநாள். அவன் திருச்சி NITகல்லூரியில் இரண்டாம் ஆண்டு B.Tech Computer Science படிக்கிறான். அவனுக்கு அங்கு இடம் கிடைத்தது மகாப்பிரபு அன்னையால் தான். 22.8.05 அன்று நடந்த Google Software programming contest இல் பங்குபெற்று மூன்று சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டு உலக அளவில் 86 ரேங்க்கில் தகுதிபெற்றான். அன்னையின் மகிமையே மகிமை. தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 100 பேர் மட்டும் இறுதிச் சுற்றுக்குக் கலந்து கொள்ளத் தகுதி பெறுகிறார்கள். அதில் இவனைச் சேர்த்தவர் அன்னை.இறுதிச் சுற்று கliபோர்னியாவில் உள்ள Google Headquartersஇல்.போட்டி நடக்க இருக்கும் நாள் செப்டம்பர் 23, 2005. தகவல் எங்களுக்கு இவன் சொன்னது ஆகஸ்ட் 3-ஆம் தேதி. 5-ஆம் தேதி திருச்சியில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து, 5-ஆம் தேதியன்றே பாஸ்போர்ட் வாங்க அவனுக்குக் கொடுப்பினை இருந்தது அன்னையின் அருளால் மட்டுமே. அதன்பின் Google Headquartersக்கு பாஸ்போர்ட் நம்பர் கொடுத்து இவன் இறுதிச் சுற்றில் கலந்துகொள்ள வருவதை உறுதி செய்துகொண்டான். விசா விண்ணப்பிக்க விசா ஆபீஸ் சென்றபோது 3 மாதங்கள் அமெரிக்கா செல்ல விசா full என்று தகவல் கிடைத்தது.இண்டர்நெட்டில் தொடர்புகொண்டு பார்த்தபோது "EMERGENCY" என்று கிளிக் செய்ததும் ஒரே ஒரு நாள், அதுவும் செப்டம்பர் 21-ஆம் தேதி என்று வந்தது. 3.45 ல்ம் - 4 ல்ம் appointment சரியாக 22-ஆம் தேதி விடியற்காலை 1.45 மணிக்கு Lufthansa flight பிடிக்கவேண்டும். அன்று மாலை விசா ஆபீஸில் வாசல் (அவனை அனுப்பிவிட்டு) நானும், என் கணவரும் மிகுந்த மன உளைச்சலுடன் இருந்தோம். இருவரும் அன்னையைத்தான் உளமார வேண்டிக்கொண்டோம். Mother never fails.. 6.30 மணிவரை இருந்து (எல்லோரும் சென்றுவிட்டனர்) இவனைக் காணவில்லையே என்று ஏங்கிப் பார்த்துக்கொண்டு இருந்தபோது என் மகன் "விசா கிடைத்துவிட்டது'' என்பதை சொன்னதும் "MOTHER''என்று வாய்விட்டு அழுதுவிட்டேன். ஏனெனில் விசா கொடுத்தாலும்,கையில் கொடுப்பதில்லை. போஸ்ட்டில்தான் அனுப்புவார்கள். அதுவும் இவன் திருச்சியில் பாஸ்போர்ட் வாங்கியதால் திருச்சி சென்றுதான் பெற்றுக் கொள்ளவேண்டும். இவ்வளவும் க்ஷணநேரம் மாற்றப்பட்டு இவன் கையில் விசா வரMOTHER செய்த அற்புதத்தை என்னவென்று சொல்ல? சுற்றி இருந்த 6 ஆபீஸர்களும் மாறி மாறி கேள்வி கேட்டு துளைத்து எடுத்து, பின்னர் நிலைமை சாதமாகி, பெரிய ஆபீஸரே இவனுக்குக் கையில் விசா கிடைக்க, தங்கி இருந்து பின்னர் சென்றார் என்று இவன் கூறும் போது உண்மையிலேயே பெரும் பேறு பெற்றதாக அன்னையை வணங்கினேன்.

குழந்தைக்கு மிகவும் வசதியான, தரமான Lufthansa flight. அன்னையால் மட்டுமே செய்யமுடியும். பெற்ற என்னால் செய்து தர இயலாத சூழ்நிலை. அப்படியே பணம் இருந்தாலும், எதற்கு?.... என்றுதான் யோசிக்கத் தோன்றும்.வசதிமிக்க வாழ்க்கை நான் வாழவில்லை என்றாலும், எனது வசதிகள் பெருகி உள்ளன:

1. 40 வயதுவரை (அன்னையை அறியாதவரை) வாய்ப்புகள் (நாட்டியத் துறையில்) வாராத எனக்கு, அன்னையிடம் வந்ததும் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கின்றன.

2. நாட்டியம் மட்டுமே சாத்தியம் என்று இல்லாமல் இப்போது நடிப்புத் துறையிலும் வாய்ப்புகளை அள்ளி வழங்குகிறார் என் அருமை அன்னை.

3. மனம் துள்ளினாலும், உடல் ஆரோக்கியமாகத் துள்ள வழித் துணையாக வருகிறார் அன்னை.

4. நாட்டியத்தில் கிடைக்கும் பரிசுகள், பாராட்டுகள் உண்மையில், அன்றாடம் உழைத்து ( BSNLஇல் வேலை செய்கிறேன்) பெறும் மாதச் சம்பளத்தை விடவும் உயர்ந்ததாகவும், பெருமையாகவும் இருக்கின்றன.

5. நாட்டியத்தில் படிக்க ( Diploma), எனக்காகவே Offline Campus - வேலை செய்துகொண்டே படிக்க - இதுதான் முதன்முறையாக வந்திருக்கிறது. அன்னை செய்த லீலையை என்ன என்று சொல்ல?

திரும்பவும் சொல்கிறேன், அன்னைக்கு நன்றி கூற என் ஜென்மம் போதாது.

அருள் தரும் அன்னையே! வணங்கினேன் உன்னையே! யாதுமின்றி நின்றார் - எனை மீதமின்றி வென்றார்.

****


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஆசை அழிவதில்லை. அடுத்த உயர்ந்த நிலையில் திருவுருமாற்றம் அடைந்து தன்னைப் பூர்த்திசெய்து கொள்கிறது.

ஆசை உயர்ந்த நிலையில் ஆனந்தமாகப் பூர்த்தியாகிறது.


 


 



book | by Dr. Radut