Skip to Content

08.நம்பவில்லையெனில் உயிர் பிழைக்கும்

நம்பவில்லையெனில் உயிர் பிழைக்கும்

Apple என்பது சிறிய பிரபலமான கம்ப்யூட்டர் கம்பனி. அதன் ஸ்தாபகர் ஸ்டீவ். கம்பனி பெரியதான பின் அவரை விலக்கினர்.அவர் வேறொரு கம்பனி ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தினார்.மீண்டும் Apple அவரை அழைத்தது. கடந்த 25 ஆண்டுகளாக அவர் வெற்றியின் உச்சிக்கும், தோல்வியின் முடிவுக்குமாக மாறி மாறி இன்று கம்ப்யூட்டர் உலகில் பிரபலமாக இருக்கிறார். அவரை பல்கலைக்கழகம் ஒன்றில் பேச அழைத்தனர்.

→"இதுவே நான் உயிரோடு இருக்கும் கடைசிநாள் என பல ஆண்டுகளாக வேலை செய்தேன். அதன் பலனாக இன்று இவ்வளவு சிறப்பாக இருக்கிறேன்'' என்று பேசினார்.

அப்படி நினைத்தால் எவ்வளவு வேகம் வரும்? அது திறமை.

அவருக்குக் கான்சர் வந்தது. எல்லாக் கோணங்களிலும் பல இடங்களில் செய்த சோதனைகளின் முடிவாக, 3 மாதங்கள் தந்தனர். உங்கள் கடமைகளை விரைவாக முடித்துக்கொள்ளுங்கள் என்றனர்.

ஸ்டீவுக்கு டாக்டர்கள் மீது முழுநம்பிக்கை. அவர்கள் கூறியதை நம்பினார். மனம் ஏற்கவில்லை. அவர் நம்பியதை மனம் நம்பவில்லை. வேறொரு சோதனை செய்தனர். ரிஸல்ட்டைப் பார்த்து டாக்டர் கண்ணீரும், கம்பலையுமாக, "இது குணமாகும் கான்ஸர். ஆப்பரேஷன் செய்யவேண்டும்'' என்றார்.

"ஆப்பரேஷன் நடந்தது. இதோ நான் பிழைத்துக்கொண்டேன்'' என்றார்.

டாக்டர் கூறுவதை நம்பாவிட்டால், அன்னையை நம்பினால் உயிர் பிழைக்கலாம் என்பது ஆயிரமாயிரம் அன்பர்கள் கண்ட அனுபவம். அதுவே ஸ்டீவ் பெற்ற அனுபவமுமாகும்.

****


 



book | by Dr. Radut