Skip to Content

09.பார்வை மாறினால், பலன் மாறும்

பார்வை மாறினால், பலன் மாறும்

1200க்கு ஏலத்தில் எவரும் கேட்காத சொத்தை 5800 ரூபாய்க்கு ஒருவர் வாங்கினார். அடுத்த ஆண்டு அதன் விலை ரூ.20,000. இது எப்படி வந்தது? சொத்து யார் கையிலிருப்பது என்பது அதன் விலையை நிர்ணயிக்கும். பயிரிடும் நிலம் மனையானால் விலை 10 மடங்கு, 100 மடங்கு ஆகும். நிலத்தையோ, கம்பனியையோ, வேறு சொத்தையோ நாம் உயர்ந்த காரியத்திற்காக வாங்கினால் அதன் விலை அபரிமிதமாக உயரும்.

- இது மார்க்கட் நிலவரம்.

-சொத்து ஜீவனுடையதுஎன வாங்கினால் அந்த ஜீவன் 4 இலட்ச ரூபாய் சொத்துள்ளவருக்கு 40 கோடி ரூபாய் வருமானம் தரும் என்பது ஆன்மீக உண்மை.

- இன்று புதிய மார்க்கட் நிலவரத்தால் hotmailஎன்று கம்பனியை 800 கோடி ரூபாய்க்கு ஒருவர் விற்றார். அது 8 கோடியும் பெறுமானதில்லை.

- எண்ணத்தின் உயர்வு விலையை எட்டமுடியாத உயரத்திற்கு எடுத்துப்போகும்.

-ஆன்மா எண்ணத்தைவிட உயர்ந்தது.

-ஜீவன் ஆன்மாவிற்குரியது.

-சொத்துடைய ஜீவனோடு, ஆன்மீகத்தொடர்புடன் ஒருவர் வியாபாரம் செய்தால், அவர் பெறும் பலன் பல மடங்கன்று, பல நூறு மடங்கு.பற்றற்ற பார்வைக்கு, பரநலமான உள்ளத்திற்குப் பார்த்த இடங்களெல்லாம் பலனுண்டு.

****


 


 



book | by Dr. Radut