Skip to Content

10.லைப் டிவைன் -கருத்து

"Life Divine" - கருத்து

பகுத்தறிவுக்கு விடுமுறையளித்து, திரையைக் கிழித்து மேலே போனால் ஞானம் அரியாசனத்தில் வீற்றிருப்பதைக் காணலாம்.

     Ph.D படிக்கவேண்டுமானால் மாணவன் தான் என்ன படிக்கப் போகிறோம் என்பதின் சுருக்கத்தை எழுதி விண்ணப்பிக்க வேண்டும். அதைப் பல்கலைக்கழகம் பரிசீலனை செய்து ஏற்றுக்கொள்ளும்.  மாணவனுக்கு உகந்த பேராசிரியரிடம் அனுப்பும்அவனுக்குப் பிரியமானவர் என ஒரு பேராசிரியரிருந்தால் அவரிடம் மாணவனைப் பல்கலைக்கழகம் ஒப்படைக்கும்இது வழக்கம்.

     M.B.A. முடித்துப் பல ஆண்டுகள் கழித்து,D.B.A. (Doctor of Business Administration) பட்டத்திற்கு இருவர் சேர்ந்து விண்ணப்பிக்க விரும்பினர்.  பல்கலைக்கழகம் அவர்களை proposal விண்ணப்பம் தரும்படிக் கேட்டனர்.  இருவரும் சேர்ந்து Theory of Peace என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்தனர்பிறகு அதை Culture of Peace என மாற்றினர்தங்கள் 10 ஆண்டு  அனுபவத்தை அடிப்படையாகக்கொண்டு outline சுருக்கம் எழுதினர்.  சர்வதேச அரங்கில் அனுபவமுள்ள நண்பரிடம் சுருக்கத்தைக் காட்டி அபிப்பிராயம் கேட்டனர்.

. சுருக்கம் பல புதிய ( original) கருத்துகளைக் கூறுவதைக் கண்டு பாராட்டினார்.

. அதற்கேற்ற உதாரணங்கள் பல கூறினார்.

. உதாரணங்களைத் தர்க்கமாக மாணவர் மாற்றினர்.

. சுருக்கம் விவாத முடிவில் விளக்கமாயிற்று.

. விளக்கம் original புதுக்கருத்துகளைக் கூறுகிறது.

. புதுக்கருத்துகள் சிருஷ்டித்திறனுடன் அமைந்துள்ளன.

. D.B.A.என்பது டாக்டர் பட்டமானாலும் அதைக் கடந்த டாக்டர் பட்டம் Ph.D. ஒன்றுண்டு.

. D.B.A.வுக்காகத் தயாரித்த சுருக்கம் Ph.D.க்குரியதாக அவருக்குத் தோன்றியது.

     "எப்படி இக்கருத்துகள் உங்களுக்குத் தோன்றின'' என மாணவர்களை அவர் கேட்டார். "நாங்கள் சிந்திப்பதில்லை என முடிவு செய்து, தோன்றியதை எழுத ஆரம்பித்தோம்''எனப் பதில் வந்ததுபல்கலைக் கழகத்தில் வழக்கமாகக் கேட்பதுபோல் "யாராவது guide உங்கள் மனதில் இருக்கிறாரா?''எனக் கேட்டனர். அவருக்கு அப்படி எவரும் அதுவரை இல்லைகடந்த சில மாதங்களில் விமானப் பிரயாணத்தில் தமக்குப் பழக்கமான சீன மாது அவர் கம்பனி முதலாளியை அறிமுகப்படுத்தினார்.அவர் பெயர் Fons. மாணவர் "எனக்கு அப்படி எவரும் மனதிலில்லை.சமீபத்தில் Fons அறிமுகமானார். ஒருவேளை அவரை நான் guideஆக ஏற்கலாம்'' என்றார். Fons பெயரைக் கேட்ட பேராசிரியர் "Fons அதிக அனுபவமுள்ள பிரபலம் பெற்றவர்'' என்றார். Fons உலகில் 20ஆம் நிலைக்குரிய expert என மாணவர் கேள்விப்பட்டிருந்தார்சமீபத்தில் வெளியான புத்தகம் ஒன்றில் "Fons உலகில் 5ஆம் நிலைக்குரிய மானேஜ்மெண்ட் எக்ஸ்பர்ட்'' எனக் கூறியது. சிந்தனை அற்றுப்போனால் ஞானம் உதயமாகும்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஜீவனின் எல்லாப் பகுதிகளிலுமுள்ள சக்தி விழித்தெழுவது முறையான ஒருநிலைப்படுதல் எனலாம்.

எல்லா சக்தியும் விழிப்பது ஜீவனின் நிஷ்டையாகும்.


 


 



book | by Dr. Radut