Skip to Content

11.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

      ஸ்ரீ அரவிந்த அன்னைக்கு நன்றி கலந்த வணக்கத்தோடு எழுதுவது. சென்ற 17.9.06 மாலை அன்று என் தாயாருக்குத் திடீர் என்று மயக்கமாகவும் நடக்க முடியாமலும் போய்விட்டதுஅவர்கள் ஏற்கனவே பி.பி., சர்க்கரை வியாதி உள்ளவர்கள்உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் சென்று காண்பித்துப் பரிசோதனை செய்ததில், மிக அதிகமாக பி.பி.யும் சர்க்கரையும் உள்ளதுஎன்று கூறி சிகிச்சை ஆரம்பித்தார்நான் அன்னையிடம் வேண்டிக்கொண்டேயிருந்தேன்ஒரு மணி நேரம் கழித்து உடல்நிலை ஓரளவிற்கு நார்மலுக்கு வந்தது. அன்னைக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருந்தேன். இரவும் இதே நிலையில் இருந்தார்கள்.  மருத்துவமனையிலே இருந்தோம். மறுநாள் 18.9.06 காலையிலிருந்து முதலில் இருந்த மாதிரியே பி.பி. ஏற ஆரம்பித்து, கட்டுப்பாட்டிற்குள் வரவில்லைமனது மிகவும் வேதனையாகி அன்னையிடம் சமர்ப்பணம் செய்துகொண்டே இருந்தேன். மருத்துவர் "நீங்கள் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்'' என்று கூறினார்மனது மிக வேதனையோடும் அன்னை மீது நம்பிக்கையோடும் அன்னை நிச்சயமாகத் தாயாரைக் குணமாக்குவார் என்ற நினைவுடனும் சமர்ப்பணம் செய்துகொண்டேன். "அன்னையே, என் அம்மாவை முதலில் எப்படி நடக்க வைத்து நல்லபடியாக அழைத்து வந்தேனோ அதே மாதிரி வீட்டிற்கு திருப்பி அழைத்து செல்ல வேண்டும்'' என்று சமர்ப்பணம் செய்து கொண்டேன்மதியம் 1 மணியளவில் KH Apolloவில் அவசரப் பிரிவில் சேர்த்து CT scan பார்த்தபிறகு மூளையில் இரத்தம் உறைந்துள்ளது என்று மருத்துவர்கள் கூறினார்கள். அப்பொழுதும் நான் அன்னையிடம் சமர்ப்பணம் செய்து கொண்டே இருந்தேன். பின்னர் ICUவில் சேர்த்து சிகிச்சை ஆரம்பித்தார்கள். சிறிது சிறிதாக உடல்நிலை நல்லபடியாக முன்னேற்றமாகி கை, கால் அசைக்க ஆரம்பித்தார்கள்.அவர்களாகவே சாப்பிடவும், தண்ணீர் குடிக்கவும் முடிந்தது. அன்னைக்கு நன்றி சொன்னேன். சென்ற 27.9.06 மருத்துவமனையிலிருந்து அன்னையின் கருணையால் அவர்களாகவே எப்படி நடந்து வந்தார்களோ அதே மாதிரி வண்டியிலிருந்து இறங்கி, நடந்து வீட்டிற்கு வந்தார்கள்.அன்னையின் கருணையை என்னவென்று சொல்வது. "நன்றி அம்மா! நன்றி அன்னையே!'' என்று கூறிச் சமர்ப்பணம் செய்தேன்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

செய்து பார்த்து ஜடம் புரிந்துகொள்வதை மனம் புரிந்துகொள்ள நாளாகும். மனத்தின் அறிவை, உடல் திறனாகப் பெற அதிக நாளாவது போன்றது அது.

மனம் அறிவதை உடல் செய்ய நாளாகும்.


 


 



book | by Dr. Radut