Skip to Content

14.வயிற்று வலி

வயிற்று வலி

     அன்பரிடமிருந்து வந்த கடிதத்தை (e-mail) நேரடியாக மொழி- பெயர்த்து எழுதுகிறேன்."

     இன்று காலை என் மகளுக்கு வயிற்றுவலி. குழந்தை அழுது படுக்கையில் புரண்டு புரண்டு வேதனைப்பட்டாள். நடந்து வர முடியாது என்பதால் டாக்டரிடம் வர மறுத்தாள். என் சகோதரர் டாக்டர். அவரைக் கேட்கலாமென போன் செய்தேன்; கிடைக்கவில்லை. ½ மணிக்குப்பின் "The Life Divine' முதல் அத்தியாயம், முதற் பாரா படிக்க ஆரம்பித்து மகளருகில் உட்கார்ந்தேன்இரண்டு நிமிஷங்களில் அழுகை நின்றது; வலிகுறைந்ததுமுக்கால்வாசி தேவலாம் என்றாள்.

     அதன்பின் காலையிலிருந்து என்ன நடந்ததுஎன யோசனை செய்தேன். வேலைக்காரி வரவில்லை. தன் மகன்மூலம் உடல்நலம் குன்றியதாகவும், காலையில் வேலைக்கு வரமுடியாது எனவும் செய்தி சொல்லியனுப்பினாள்உடனே என் மனைவி "அது பொய்'' என்றாள். வேண்டுமென்றே லீவு எடுத்துக்கொண்டதாகக் கூறினாள். இது என் மகள் சாவித்திரியின் வயிற்றுவலிக்குக் காரணமாக இருக்கலாம் என நினைத்தேன். என் மனைவியை அவள் மனத்தைச் சோதனை செய்து பார்க்கச் சொன்னேன். என்னையே நான் சோதனை செய்தேன். சில நிமிஷங்களில் சாவித்திரி தூங்கிவிட்டாள். வயிறு வலிக்கவில்லை.

    P.S..: நான் மேற்கண்ட e-mailஐ அனுப்பியபின் வேலைக்காரி மாலையில் ஜுரத்துடன் வந்தாள். வேலை செய்வதாகக் கூறினாள். "ஜுரத்துடன் வேலை செய்ய வேண்டாம். போய்ப் படுத்துக்கொள்'' என்றாள் என் மனைவி. "ஏதாவது வேலை செய்கிறேன். துணி வரைக்கும் துவைக்கிறேன்'' என்றாள். வேலை செய்பவர்கள் இப்படி நினைப்பதில்லை.அவளை வீட்டிற்கு அனுப்பிவிட்டோம்''.

நம்மிடமிருந்து வாராமல் நமக்குத் தொந்தரவு வாராது - தாயறியாத சூலுண்டோ!

     வயிற்றுவலியை மருந்தால் குணப்படுத்தினால் அதன் மூல காரணமான குணம் அப்படியே இருப்பதால் மீண்டும், மீண்டும் வரும்.மூலத்தை மேற்சொன்னதுபோல் அகற்றினால் மீண்டும் ஆயுள் முடியும்வரை வாராது.

****


 



book | by Dr. Radut