Skip to Content

04.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)                                                                                   கர்மயோகி

XV. The Supreme Truth-Consciousness

                                                      Page No.135

            Para No.7

15. உயர்ந்த சத்தியஜீவியம்

This Supermind has a conscious force.

சத்தியஜீவியத்திற்குத் தெளிவான சக்தியுண்டு.

It creates many forms of itself.

அது தன் பல ரூபங்களை சிருஷ்டிக்கிறது.

The Supermind contains those forms.

சத்தியஜீவியத்துள் அந்த ரூபங்களிருக்கின்றன.

The Supermind pervades those forms.

இந்த ரூபங்களை சத்தியஜீவியம் ஊடுருவுகின்றது.

It changes itself into an indwelling Presence.

அதனுள் உள்ள ஆத்ம ஜோதியாக அது மாறுகிறது.

Also it becomes a self-revealing Light.

அது சுயம் பிரகாசமான ஜோதியாகும்.

There are forms and forces in the universe.

உலகில் ரூபங்களும், சக்திகளும் உள்ளன.

The Supermind is present in those forms and forces.

அவற்றுள் சத்தியஜீவியம் உண்டு.

But it is concealed.

அது அங்கு மறைந்துள்ளது.

It decides and determines sovereignly and spontaneously.

முழு அதிகாரத்துடன் உடனே அது முடிவு செய்கிறது.

It so decides the form, force-functioning.

ரூபம், சக்தி, செயல் அப்படி முடிவு செய்யப்படுகின்றன.

It compels a variation.

அவை மாற சத்தியஜீவியம் வற்புறுத்தும்.

It limits these variations.

அம்மாற்றங்களை சத்தியஜீவியம் அளவுக்குள் வைத்துள்ளது.

It uses the energy.

சக்தியை அது பயன்படுத்தும்.

It gathers, dispenses and modifies that energy.

அந்த சக்தியைச் சேகரம் செய்து, மாற்றி, செலவிடுகிறது.

All this is done by the first laws.

அடிப்படைச் சட்டப்படி அவை இயங்குகின்றன.

The law is fixed by its self-knowledge.

சுயஞானம் இச்சட்டத்தை நிர்ணயிக்கும்.

It arises with the birth of the form.

ரூபம் பிறக்கும்பொழுது சட்டமும் பிறக்கிறது.

It occurs at the starting-point of the force.

சக்தி ஆரம்பிக்கும் இடத்தில் சட்டம் பிறக்கிறது.

It is seated within everything.

சத்தியஜீவியம் அனைத்துள்ளும் இருக்கிறது.

It is the Lord in the heart of existence.

பிரபஞ்ச வாழ்வின் அம்சங்களின் இதயத்துள் ஈஸ்வரனாக அது அமைந்துள்ளது.

The Lord turns on them as on an engine.

ஈஸ்வரன் அவற்றை ஒரு யந்திரம் செலுத்துவதுபோல் செலுத்துகிறான்.

It is done by the power of his Maya.

இது மாயையால் நடக்கிறது.

It is within them.

இது அதனுள் இருக்கிறது.

It embraces them as the divine seer.

தெய்வீக ரிஷியாக சத்தியஜீவியம் அவற்றைத் தழுவுகிறது.

He is variously disposed.

அங்ஙனம் சத்தியஜீவியம் ஆயிரம் வழியாகச் செயல்படும்.

He ordained objects.

இறைவன் பொருள்களை நிர்ணயிக்கிறான்.

He ordained each rightly.

ஒவ்வொன்றையும் சரியாக நிர்ணயிக்கிறான்.

It is so done according to the thing it is.

ஒவ்வொரு பொருளின் அம்சத்திற்கேற்ப அவை நிர்ணயிக்கப்படுகின்றன.

This is done from years sempiternal.

இது யுகாந்த காலமாக நடைபெறுகிறது.

Page No.136,

Para No.8


 

There are animate things in Nature.

உலகில் உயிருள்ளவை உண்டு.

There are others that inanimate.

உயிரற்றவையும் உண்டு.

Some are mutually conscious.

சில அறிவுடையவை.

Others are not self-conscious.

மற்றவற்றிற்கு அறிவில்லை.

Each of them is governed by Power.

ஒவ்வொன்றையும் ஒரு சக்தி ஆள்கிறது.

It is an indwelling Power.

அச்சக்தி, அதனுள் உறைகிறது.

They are governed in their being and operations.

அதன் ஜீவனும், செயலும் அப்படி ஆளப்படுகின்றன.

That power is a Vision.

அச்சக்தி திருஷ்டி.

That power is subconscient to us.

அச்சக்தி நம் கண்ணுக்குத் தெரியாது.

Maybe it is inconscient also.

அது நம் மனத்திற்கும் தெரியாது.

But it is not inconscient in itself.

அது ஜடமன்று.

It is profoundly conscient.

அது சக்திவாய்ந்த ஞானம்.

It is also universally conscient.

அது உலகையும் அறியும்.

This power is the real-idea.

அதன் பெயர் முழு எண்ணம்.

It is of the divine Supermind.

அது தெய்வீக சத்தியஜீவியத்துடையது.

Each seems to do the works of intelligence.

அது அறிவுடன் செயல்படுகிறது.

But they do not possess intelligence.

ஆனால் அதற்கு அறிவில்லை.

It does so because it obeys the real-idea.

அது முழுஎண்ணத்தை ஏற்பதால் அறிவுடன் செயல்படுகிறது.

It is sub-conscious in the plant and the animal.

தாவரத்திலும், விலங்கிலும் அது புலன் அறியாமலிருக்கிறது.

It is half-conscious in Man.

மனிதன் அதை அரைகுறையாக அறிவான்.

All things are informed and governed.

பொருள்கள் ஆட்சி செய்யப்படுகின்றன. அவற்றிற்கு விபரம் கூறப்படுகிறது.

It is not a mental idea or intelligence.

அது மனத்தின் அறிவில்லை.

It is self-aware Truth of being.

அது தன்னையறியும் ஜீவனின் சத்தியம்.

Here self-knowledge is inseperable from self-existence.

இங்கு சுயஞானம் சுயப்பிரபஞ்ச வாழ்வுடன் கலந்துள்ளது.

This is Truth-consciousness.

இது சத்தியஜீவியம்.

It need not think out things.

இது சிந்திக்க வேண்டாம்.

It works them out with knowledge.

இதன் வேலைக்கு அறிவுண்டு.

It has an impeccable self-vision.

மாசுமறுவற்ற சுயதிருஷ்டியுடையது அது.

It has an inevitable force.

அதன் சக்தி தவிர்க்க முடியாதது.

It is a force of Self-Existence.

சுயப்பிரபஞ்ச வாழ்வின் சக்தியது.

It is a sole force.

இது ஒரே சக்தி.

It is self-fulfilling.

இது தன்னைத் தானே பூர்த்தி செய்யவல்லது.

Mental intelligence thinks out.

மனத்தின் அறிவு சிந்தனையால் சிறக்கும்.

It is merely a reflecting force of consciousness.

இது ஜீவியத்தைப் பிரதிபலிக்கும் சக்தி.

It does not know.

இது அறியாது.

But it seeks to know.

இது அறிய முயல்கிறது.

It follows step by step.

படிப்படியாக இது தொடரும்.

It does so in Time.

காலத்தில் இது தொடர்கிறது.

It follows the workings of a higher knowledge.

ஓர் உயர்ந்த ஞானத்தின் தொழிற்பாடுகளை இது தொடர்கிறது.

It is a knowledge that always exists.

இந்த ஞானம் என்றும் உளது.

It is one and whole.

இது முழுமையான ஒன்று.

It holds Time in its grasp.

காலத்தை இது தன்பிடியில் கொண்டுள்ளது.

It sees the past, present and future.

கடந்தது, நிகழ்வது, வருவதை இது காணும்.

It does so in one grasp.

அவற்றை ஒரே பார்வையில் காணும்.

Contd....

தொடரும்....

****

****


 


 book | by Dr. Radut