Skip to Content

05.சாதிக்க உதவும் ஆன்மா

சாதிக்க உதவும் ஆன்மா

என். அசோகன்

     புதிதாக வரும் டெக்னாலஜி எல்லாம் நம்முடைய செயல் திறனை உயர்த்தி நம் சாதனையை அதிகரிக்கின்றதுநம் சாதிக்கும் திறனைத் தொடர்ந்து உயர்த்திக் கொண்டுபோக வேண்டும்என்பது நம் வாழ்க்கையின் ஒரு குறிக்கோளாகவும் உள்ளதுநம் கல்வியின் நோக்கமும் அவ்வண்ணமே உள்ளதுசெயலாற்றல் ஏறுமுகமாகவே இருக்க வேண்டும் என்பது மனிதனின் ஒரு முக்கிய குறிக்கோளாகும்ஆன்மீகரீதியாகவும் இத்தகைய குறிக்கோள் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்அப்படியெனில் இதைச் சாதிப்பது எப்படி?

     ஆன்மீக சக்திஎன்பது நம்முடைய உணர்விலிருந்தோ அல்லது அறிவிலிருந்தோ எழும் சக்தியைவிட உயர்ந்ததுஎண்ணெயால் எரியும் விளக்கைவிட மின்விளக்கு எப்படி உயர்ந்ததோ, அவ்வாறே ஆன்மீக சக்தியால் கிடைக்கும் பலன் உணர்வோ, அறிவோ வழங்கும் பலன்களை விட உயர்ந்ததாக இருக்கும். ஆன்மீகச் சூழல் என்பது அமைதியான முறையிலே அறிவுச் சூழலைவிட அதிகம் சாதிக்கும்ஒரு கம்பெனியில் மேற்பார்வையாளருக்குப்பதிலாக முதலாளியே நேரில் நின்று ஊழியர்களை வேலை வாங்கினால் எப்படியிருக்குமோ அப்படி ஆன்மீக சக்தி செயல்படும்பொழுது பலன் சிறப்பாகவிருக்கும்ஒருவர் புத்தகம் படிக்கும் பொழுது சாதாரண அறிவிற்குப்பதிலாக ஆன்மீக அறிவைப் பயன்-         படுத்தினால், அவருடைய புரிந்துகொள்ளும் ஆற்றல் பல மடங்கு உயர்ந்து, படிக்கும் வேகமும் அதிகரிக்கும்.

      எந்தவொரு திறமைக்கும் இணையான ஆன்மீகத் திறமைகளுள்ளன. முதலாவதற்குப்பதிலாக இரண்டாவதைப் பயன்படுத்தினால் பலன் பல மடங்கு அதிகமாகவிருக்கும்ஒவ்வொரு தடவையும் நமக்குள்ள ஒரு திறமையைப் பயன்படுத்த வேண்டிய நேரம் வரும்பொழுது வழக்கமான திறமையைக் கைவிட்டு ஆன்மீகத் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.  இந்த மாற்றத்தை நிகழ்த்த சுலபமான வழி.  அந்நேரம் அன்னையை நினைத்துக்கொள்வதுதான். மனநிலை சரியில்லாத ஒருவரால் தொந்தரவிற்கு ஆளான மற்றொருவர் இதிலிருந்து விடுபட வழி தெரியாமல் அன்னையிடம் முறையிட்டார்மீண்டும் இப்பிரச்சினை வரும்பொழுது தன்னை அழைக்கும்படி அன்னை அவரிடம் கூறினார். அவ்வாறு செய்த பொழுது உடனடி விடுதலை மனநோயாளியிடமிருந்து கிடைத்ததாக, மற்றவர் பின்பு அன்னையிடம் கூறினார்.

      பிரச்சினைகள் எழும்போது அப்பிரச்சினைகளுக்குத் தம்முடைய ஆன்மீக சக்தியை அனுப்பும்படி அன்னை அன்பர்களிடம் கூறியுள்ளார்.  அன்னையின் அன்பரான பெண்மணி ஒருவருடைய கணவர் மாதந்தோறும் 20 நாள் வேலை சம்பந்தமாக வெளியூர் பிரயாணம் செல்ல வேண்டியிருந்தது. இதன் விளைவாக அப்பெண்மணிக்குப் பதற்றம் வந்ததுஇந்நிலையில் தம் கணவர் செல்லவேண்டிய இடங்களுக்கு எல்லாம் அவர் போவதற்கு முன்னரே அன்னையை அப்பெண்மணி அனுப்பினார்இதன் பலனாக அவருடைய கவலை நீங்கியதோடன்றி அவருடைய கணவரின் வேலையும் நன்றாக நடந்தது. அன்னையின் திருவுருவத்தை நாம் கற்பனை செய்யும்பொழுது அதற்குள் எல்லாத் திறமைகளும் அடங்கிவிடுகின்றன.

     ஒரு மணி நேரத்தில் 10 பக்கம் படிப்பவரையும், அதே நேரத்தில் 40 பக்கம் படிப்பவரையும் பார்க்கிறோம். வாசிப்பதுஎன்பது ஒரு திறமை ஆகும். பத்துப் பக்கத்தை இருபது அல்லது இருபத்தைந்தாக உயர்த்த முடியும்திறமைக்கு அடுத்த உயர்ந்த நிலையில் சாமர்த்தியம் உள்ளது.  ஒரே வகைப் பொருள்களை விற்கின்ற இரண்டு கடைகளில், ஒன்றில் 2000 ரூபாய்க்கும், மற்றொன்றில் 15,000 ரூபாய்க்கும் விற்பதைப் பார்க்கின்றோம்ஒரேயொரு திறமைக்காக இவ்வளவு வித்தியாசம் வாராதுபல்வேறு திறமைகள் சம்பந்தப்பட்டிருப்பதால் இத்தகைய மாற்றம் வருகிறதுஇப்படிப் பல்வேறு திறமைகளை உள்ளடக்கிய திறனை சாமர்த்தியம் என்கிறோம்இப்படி சாமர்த்தியத்தைப் பயன்படுத்தும் பொழுது ஆயிரம் ரூபாய் விற்பனையை நம்மால் பதினைந்தாயிரத்திற்கு உயர்த்த முடியாவிட்டாலும் நாலைந்து ஆயிரத்திற்காவது உயர்த்தலாம்.

     நிறைய விபரம் தெரிந்துகொள்வது சாதிப்பதற்கு உதவுகிறதுசிறந்த மனோபாவங்களும் நம் செயல்திறனை அதிகரிக்கின்றனசாதனைக்கு பொறுமை மிக அவசியம்கர்மபலனை நம்பிச் செயலிழந்து நிற்காமல், பல வழிகளில் நம் சாதனையை உயர்த்திக்கொள்ளலாம்திறமை மற்றும் சாமர்த்தியத்தை உயர்த்திக்கொள்ளுதல், பொறுமை, கவனம் மற்றும் உழைப்பின் அளவை உயர்த்துதல், தகவல் மற்றும் விபரம் சேகரித்தல் ஆகியவை எல்லாம் செயலாற்றலை உயர்த்தும் வழிகளாகும்இவற்றை எல்லாம் செய்தபின்னர், அன்னையின் ஆன்மீக சக்தியைப் பயன்படுத்தும்பொழுது பலன் மேலும் பல மடங்கு உயரும்முதலில் திறமை, உழைப்பு, சாமர்த்தியம் ஆகியவற்றை உயர்த்திவிட்டு, பின்பு அன்னையைப் பயன்- படுத்துவது உகந்த முறையாகும்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

எந்தத் தெய்வத்திற்குப் பிரார்த்தனை செய்கிறோமோ அது பலன் தருகிறது. மேலும் ஓர் உண்மையுண்டுநாம் எந்நிலையில் நம் சக்திகளைச் சேர்த்து முறைப்படுத்துகிறோமோ அந்நிலையில் அம்முறைக்குத் தெய்வீக சக்தியுண்டு. அதுவும் பிரார்த்தனைக்குப் பலன் தரும். யார் பிரார்த்தனைக்குப் பதில் சொன்னார்கள் என்பது வேறுபடும்.

முறைக்கும் சக்தியுண்டு.


 


 book | by Dr. Radut