Skip to Content

10.முன்னேற்றம் தரக்கூடிய சாதனை

முன்னேற்றம் தரக்கூடிய சாதனை

(சென்ற இதழின் தொடர்ச்சி....)       

  N. அசோகன்

அறிவும் திறமையும்:

மிருகங்களைவிட மனிதன் மிகவும் மேம்பட்டிருப்பதற்கு முக்கியக் காரணம் அவனுடைய அறிவு உயர்ந்திருப்பதுதான்கடின உழைப்புடன் அறிவுள்ள செயல்பாடும் இணையும்பொழுதுதான் நமக்குச் சிறந்த பலன் கிடைக்கிறதுஅறிவின் சேர்க்கை இல்லாமல் வெறும் கடின உழைப்பு மட்டும் வெளிப்படும்பொழுது பலன் குறைந்தபட்சமாகவே இருக்கும்விவசாயக் கூலிவேலை செய்பவர்கள் கடும்வெயிலில் 10 மணி நேரம் உடலால் உழைக்கின்றார்கள்ஆனால் அதற்கு ஊதியமாக அவர்களுக்குக் கிடைப்பது அதிகபட்சமாக 150 ரூபாய்தான்ஆனால் அதே அளவிற்குக் கடினமாக உழைக்கின்ற டாக்டர்கள், வக்கீல்கள், சாப்ட்வேர் இன்ஜீனியர்கள் மற்றும் மேனேஜ்மென்ட் நிபுணர்களுக்குக் கிடைக்கும் பலன் அபரிமிதமாக இருக்கின்றது. இதற்குக் காரணம் இவர்களுடைய செயல்பாட்டில் அறிவின் சேர்க்கை அதிகமாக இருப்பதுதான்உச்சநீதிமன்றத்தில் ஒரு hearingக்கு ஆஜராவதற்கு லட்ச ரூபாய் கேட்கின்ற வக்கீல்கள் உள்ளார்கள்ஒரு நாள் கன்சல்டிங் வேலை செய்வதற்கு அதே லட்ச ரூபாய் கேட்கின்ற மேனேஜ்மென்ட் நிபுணர்கள் உள்ளார்கள். அரிந்தம் சௌத்திரி என்ற மேனேஜ்மென்ட் நிபுணரின் மேனேஜ்மென்ட் lectureஐ கேட்க விரும்புகின்றவர்கள், அந்த ஒரு நாளைக்கு மட்டும் 25,000/- ரூபாய் கட்டினால்தான் அவற்றைக் கேட்க முடியும்ஆகவே அறிவுபூர்வமான செயல்பாடு வெறும் உடலுழைப்பைவிட பல மடங்கு உயர்ந்தது என்பதில் சந்தேகமே இல்லை.

     அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளும் எப்படி இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளைவிட வாழ்க்கைத் தரத்தில் உயர்ந்துள்ளன என்று பலர் கேட்கிறார்கள். இதற்குப் பதில் சொல்வது மிக எளிது. இந்நாட்டு மக்களுடைய கல்வித்தரம் மற்றும் skill level நம் நாட்டு மக்களுடைய கல்வித் தரத்தைவிட பல மடங்கு உயர்ந்திருப்பதே இதற்கு முக்கியக் காரணம். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகள் கடுமையாகச் சேதமடைந்துவிட்டன. கட்டிடங்கள், சாலைகள், தொழிற்சாலைகள் போன்றவைகள் சேதமடைந்தனவேயொழிய, மக்களுடைய கல்வித் தரம் மற்றும் skill level ஆகியவை பாதிக்கப்படவில்லை.

    ஆகவே மீண்டும் அமெரிக்க மார்ஷல் plan என்ற திட்டத்தின் கீழ் மேற்கண்ட நாடுகளுக்கு ஏராளமான நிதியுதவி கிடைத்த பொழுது, இந்நாட்டு மக்கள் விரைவாக மீண்டும் தம் நாடுகளைச் சீர்படுத்திக்கொண்டனர்இரண்டாம் உலகப் போரின் சமயம் இதே அளவிற்கு இந்தியா சேதமடைந்திருந்தால், ஏராளமான நிதியுதவி கிடைத்திருந்தால் கூட இதே வேகத்தில் நம் நாடு சீர் பெற்றிருக்காதுஏனென்றால் 1940ஆமாண்டுஅளவில் நம் நாட்டு மக்களுடைய கல்வித் தரமோ மற்றும் skill லெவலோ ஐரோப்பியர்கள் அளவிற்கு உயர்ந்திருக்கவில்லை.

     இப்பொழுதுகூட இன்னும் 20 அல்லது 30 வருடங்களில் அமெரிக்காவிற்கு நிகராக இந்தியாவின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்றொரு பேச்சு நம் நாட்டில் அடிபடுகிறதுஇதைச் சாதிக்க வேண்டுமென்றாலும் இந்த இடைப்பட்ட காலத்தில் நம் நாட்டு மக்களின் கல்வித் தரம் மற்றும் skill level உயர்ந்தால்அன்றி இப்படி அமெரிக்காவிற்குச் சமமாக உயர்வது கடினம்.

     முன்னேற்றம் என்பது வெறும் முதலீடு மற்றும் டெக்னாலஜியை பொருத்ததில்லைமக்கள் திறமைசாலிகளாக இல்லாத சமயத்தில் பெரிய முதலீடு செய்தாலும், அது பெருமளவிற்கு விரயமாவதற்கு வாய்ப்புள்ளதுஇந்திய அரசாங்கத்திற்கே இவ்விஷயத்தில் நிறைய ஆர்வமுண்டு. வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ளவர்களை உயர்த்த நம் நாட்டு அரசாங்கம் பல திட்டங்களின் கீழ் ஏழை மக்களுக்கு நிதியுதவி வழங்கிவருகிறது.

     ஆனால் பெரும்பாலானவர்கள் அந்நிதியுதவியை விரயம்தான் செய்கிறார்களேயொழிய ஆக்கபூர்வமாக பயன்படுத்துவதில்லை. இதற்குக் காரணம் முன்னேற வேண்டுமென்ற ஆர்வம்கூட இவர்களுக்கு இருப்பதில்லை.

     அன்னை அன்பர்கள் கடின உழைப்பாளிகளாகவும், திறமைசாலிகளாகவும் இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய உழைப்பின் பலனை அன்னையின்அருள் பல மடங்கு பெரிதாக்குகிறதுஅருளுக்கு இப்படி பலனைப் பெரிதாக்கும் திறனுண்டுஆனால் எல்லா அன்னை அன்பர்களும் திறமைசாலிகள்என்று சொல்ல முடியாதுதிறமை குறைந்தவர்கள் இதற்குப்பதிலாகத் தம்முடைய நம்பிக்கை மற்றும் ஏற்புத்திறனை அதிகரித்துக் கொள்ளலாம்தம்முடைய கம்பெனியின் விற்பனையைப் பத்து மடங்கு பெரிதாக்கக்கூடிய திறமை தமக்கில்லை என்று நினைக்கின்ற அன்னை அன்பர்கூட அன்னையின் அருள் அதைச் சாதிக்கும்என்று திடமாக நம்பினார் என்றால் அந்நம்பிக்கையின் பலனாக அந்தப் பெருக்கம் வரும். திறமை குறைந்திருப்பதால் energy அதிகம் விரயமானாலும், உள்ளே வருகின்ற அன்னையின் அருள் ஏராளமாக இருப்பதால், இந்த விரயத்தையும் மீறிப் பலன் கிடைக்கும்.

துணிந்து செயல்படுதல்:

     சாதிக்க விரும்புகின்றவர்கள் வாழ்க்கையில் சில இடங்களில் துணிந்து செயல்பட்டால்தான் சாதிக்க முடியும். ஏனென்றால் வாழ்க்கை என்பது ஒரு நிலையில்லாத விஷயம்அதில் வெற்றி, தோல்வி, வாய்ப்பு, சிரமம், லாபம், நஷ்டம், உயர்வு, தாழ்வுஎன்று எல்லாமே கலந்துதான் வரும்நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு, கெட்டவற்றை எல்லாம் விலக்குவதற்கு ஒரு திறமையான செயல்பாடு தேவைஅத்திறமை தமக்குள்ளதென்று நம்புகின்றவர்கள் துணிந்து செயல்பட்டு வெற்றிவாகை சூடலாம். பொதுவாக எவருமே தம் வாழ்க்கை முழுமையாகப் பாதுகாப்பாகவும், தமக்குக் கட்டுப்பட்டதாகவும் இருக்க வேண்டுமென்றுதான் விரும்புவார்கள்தம்முடைய குடும்பம் என்ற சிறிய வட்டத்திற்குள் வேண்டுமானால் வாழ்க்கையை ஒருவர் தம்முடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கலாம்குடும்பத் தலைவருடைய அதிகாரத்திற்கு மனைவியும், பிள்ளைகளும் கட்டுப்பட்டு நடந்தால், அந்நபருடைய குடும்ப வாழ்க்கை அவருக்குக் கட்டுப்பட்டிருப்பதாகச் சொல்லலாம்ஆனால் வெளிவாழ்க்கைஎன்பது நம் குடும்ப வாழ்க்கையைவிட மிகப் பெரியதுஅதில் பல விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை. பிஸினஸ் செய்பவர்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் வாங்குகின்ற மூலப்பொருட்களின் விலையோ, மார்க்கெட்டில் கஸ்டமர்களிடமிருந்து வரும் டிமாண்டோ, போட்டியாக வரும் மற்ற சப்ளையர்களுடைய எண்ணிக்கையோ, அரசாங்கத்தின் வரி சம்பந்தப்பட்ட கொள்கைகளோ, தொழிலாளர்களுடைய நடவடிக்கைகளோ, ஆட்சியில் வரும் மாற்றங்களோ, எதுவுமே அவர்களுடைய கட்டுப்பாட்டில் இல்லைஇவற்றில் எதுவும் அவர்களுக்கு எதிராக மாறலாம்சமீபகாலமாக ஒரு டன் ஸ்டீலின் விலை இரு மடங்காக உயர்ந்துவிட்டதுஇதன் காரணமாக fabrication வேலை செய்யும் workshopகள் எல்லாம் பாதிக்கப்பட்டு உள்ளனஒரு மூட்டை சிமெண்ட்டின் விலை 15 அல்லது 20 ரூபாய் ஏறினால்கூட கட்டிட வேலைகள் பாதிக்கப்படுகின்றன.

     தொழிலதிபர்களின் வியாபாரத்தில் இவ்வளவு நிலையில்லாத விஷயங்கள் உள்ளனஎன்றால், விவசாயிகளின் தொழில் மேலும் நிலையற்றது. விவசாயிகள் வறட்சி மற்றும் வெள்ளம் இரண்டிற்கும் தயாராக இருக்க வேண்டும்கடந்த 2 வருடமாக தமிழ்நாட்டில் நிலவும் வறட்சியால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இது தவிர pest attack, விலையிறக்கம், வேலைக்கு ஆள் கிடைக்காமல் போவது, திருடு மற்றும் ஆடு, மாடு மேய்வது போன்ற மற்ற அசௌகரியங்களையும் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும்இப்பொழுதாவது crop insurance என்றொரு திட்டத்தின் கீழ் விவசாயிக்கு நஷ்டஈடு கிடைக்க வாய்ப்புள்ளது. 1970 மற்றும் 1980களில் இம்மாதியான திட்டங்களே இல்லைவிவசாயிகள் நிறைய risk எடுத்துத்தான் பயிர் செய்துவந்தார்கள்.

     பதவி மற்றும் அதிகாரத்தை நாடுபவர்களுக்கு அரசியல் மிகவும் கவர்ச்சியான ஒரு துறையாகும். ஆனால் வெற்றி என்பது நிலையில்லை.  M.P.. தேர்தலில் வேட்பாளராக நிற்பவர்கள் 50லட்சத்திலிருந்து ஒரு கோடி வரையிலும் செலவு செய்வதுமுண்டுவெற்றி பெற்றால் அவ்வளவு செலவு செய்ததற்கு அர்த்தமிருக்கும்.  தோற்றால் அவ்வளவு பணமும் நஷ்டமாகிவிட்டதாக ஆகிறது.  அரசாங்க வேலையில் இருப்பவர்கள் தேர்தலில் நிற்கவேண்டும் என்றால், பதவியிலிருந்து விலகியபின்தான் நிற்க முடியும்இதற்கு பயப்படுகின்றவர்கள் அரசியல் முன்னேற வாய்ப்பே இல்லை. 1950மற்றும் 1960இல் அரசாங்கப் பணிக்கு நல்ல மரியாதை இருந்ததுஅதனால் படித்தவர்கள் அரசாங்கப் பணியை நாடிச் சென்றார்கள்.  தொழில், வியாபாரம் மற்றும் விவசாயம் போன்றவை படிக்காதவர்களுக்கு ஒதுக்கப்பட்டவைகளாகக் கருதப்பட்டதுஇப்பொழுது நிலைமை மாறிவருகிறது. இன்ஜீனியரிங் மற்றும் M.B.A.பட்டதாரிகள்கூட தொழிலில் நிறைய லாபமிருப்பதைக் கண்டு தொழில்துறையை நாடி வருகின்றனர். முன்புபோல் அரசாங்கப் பணியில் கிடைக்கும் செக்யூரிட்டி மற்றும் மரியாதைக்காக ஏங்கிக்கொண்டு  இருப்பதில்லை.    

     சொல்லப்போனால் எந்தத் துறையிலும் ஏதாவது ஒரு riskஇருக்கத்தான் செய்யும்டாக்டர்கள் நிறைய சம்பாதிக்கின்றார்கள் என்றாலும், இப்பொழுது நோயாளிகள் consumer courtற்கு இழுக்கின்ற அபாயம் உள்ளதுஜூனியர் வக்கீல்கள் சீனியரிடம் வேலை செய்யும் பொழுது பல வருடங்கள் சம்பளமே இல்லாமல் வேலை செய்தாக வேண்டிய நிலைமையைச் சந்திக்கவேண்டியுள்ளதுசினிமாத் துறையில் நுழைகின்ற புதுமுகக் கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகள் தொடர்ந்து இரண்டு படங்கள் தோல்வி படங்களாகக் கொடுத்தால், அவர்களுக்கு அதன்பின்னர் அத்துறையில் தலையெடுக்க முடியாது என்ற அபாயமுள்ளது.

     பள்ளிக்கூட ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் மற்றும் முதல்வர்கள் மாணவர்களின் வன்முறையைச் சில சமயங்கள் சந்திக்க வேண்டியுள்ளது. இப்படி எத்துறையை எடுத்தாலும் ஏதேனும் risk இருக்கத்தான் செய்யும். துணிந்து திறமையாகச் செயல்பட முன்வரும்பொழுது ஆபத்துக்களை முறியடித்து, நாம் செய்கின்ற வேலையை வெற்றிகரமாக முடித்து, நல்ல பலனைக் காணலாம்அதுவும் அன்னை பக்தர்கள் அன்னை மேல் முழுநம்பிக்கை வைத்து செயல்பட்டார்கள் என்றால், எந்த இடர்ப்பாட்டையும் வெற்றிகரமாக முறியடிக்கக்கூடிய சக்தியை அன்னை நிச்சயம் அவர்களுக்குத் தருவார்.

தொடரும்....

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

முன்னேற்றம், புதியதைக் கற்றுக்கொள்வது, கற்றுக் கொண்டதைப் பூர்த்தி செய்வது என்பதற்கு இரு பாதைகள் உண்டுகையால் கற்றுக்கொண்டு அதன் மீது ஆசை கொண்டு பிறகு மனதால் பூர்த்தி செய்வது முதற் பகுதி. மீண்டும் மனதில் ஆரம்பித்து, உணர்வாலும், உடலாலும் பூர்த்தி செய்தால் காரியம் முழு நிறைவு பெறும்.

ஆதிநாள் மனிதன் உடலில் ஆரம்பித்து மனதை நோக்கி முன்னேறுகிறான்இன்றைய மனிதன் அறிவாளியாக இருப்பதால், அறிவால் ஆரம்பித்து உடலாலும் பூர்த்தி செய்கிறான்.

நம்பிக்கை - வழிபாடு - பணிவு என்பது மனதில் ஆரம்பித்து உடலில் பூர்த்தியாவது. மனிதனால் அறிவில் ஆரம்பிக்க முடியும்என்பதைக் காட்டுகிறது.

நம்பிக்கை, வழிபாடு, பணிவு என்பவை மனம், உணர்வு, உடலுக்குரியன.

 


 


 


 



book | by Dr. Radut