Skip to Content

13.யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

77. அழைப்பு பாக்கியம்என அறிதல்நினைவே ஒரு பாக்கியம்ஆன்மீக          நன்றியறிதல்.

அன்னையை அறிதல் அதிர்ஷ்டம்.

அன்னையை அழைப்பது ஆன்மீக பாக்கியம்ஜீவனில் நன்றியில்லாமல் அன்னையை அழைக்க முடியாதுஎன்று இடைவிடாமல் அழைக்க முயன்றவர் அறிவார்.

சோவியத் யூனியனில் ஒவ்வொருவருக்கும் தினமும் ஒரு முட்டை கிடைக்கும் என்பதைக் கேட்டவர் "இதென்ன பெரிசு' என்றார்.  அவர் வீட்டில் 8 பேருண்டு. அடிக்கடி முட்டை சாப்பிடுபவர். முட்டை சாப்பிடுவதும், தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதற்கும் உள்ள வேறுபாடு பெரியது.

8 பேர் தினமும் ஒரு முட்டை சாப்பிட மாதம் 240 முட்டை வாங்க வேண்டும்அவர் அந்த மாதம் வாங்கியது 10 முட்டை. தினமும் ஒருவருக்கு 1/24 பங்கு முட்டையுண்டு.

அடிக்கடி, மாதம் ஒரு முறை, அழைப்பில் உட்காருபவர் இல்லை, குறைவு.உட்கார்ந்தால் தூங்குபவர் பலர்ஒரு சிலர் குறட்டையும் விடுவர்.

தினமும் 1 மணி நேரம் அன்னையை அழைப்பவர் டெபுடி கலெக்டரானால், 6 மாத முடிவில் அவர் அகில இந்திய ஸ்தாபனத் தலைவராவார்.

நான் எழுதும் உதாரணமெல்லாம் வசதி பெறுபவை.அறிவு வளர்வது, ஆதரவு பெருகுவது, மனம் அமைதியடைவது, பிரபலம் பெறுவது ஆகியவை வசதியுடன் ஒப்பிட முடியாத உயரத்திலுள்ளவை.  அன்னையை அறியாமல் அதன் சாரலில் வந்த இனிய பழக்கமுள்ள ஆபீசர் சில ஆண்டுகளில் அகில இந்தியப் புகழ் பெற்றார், பல ஆண்டுகளில் உலகப்புகழ் பெற்றார்இவை அன்னையின் சூழலால் வந்தவைஎனவும் அவர் அறியமாட்டார்.

வாய்விட்டு அழைத்து, அதை மனத்தால் சொல்லி, அழைப்பை நெஞ்சுக்குக் கொண்டுபோய், அங்கிருந்து நெஞ்சுக்குப்பின்னால் கொண்டு போவதில் ஒவ்வொரு கட்டமும் எப்படி முக்கியம், சிரமம் எனத் தெரியும். ஒரு வாழ்நாளில் ஒரு முறையும் இவை சாதிக்கக் கூடியவையல்ல.

யோகத்தில் நாட்டமுள்ளவர் அறியக்கூடிய பாதையிது.

வாயால் அழைப்பதே பாக்கியம்.

அதையும் தொடர்ந்து செய்ய முடியாது.

ஒரு நாளில் சில மணி நேரம் அழைத்தால் பிறகு 1 மாதம் மறந்து போகும்.

பாக்கியத்தைப் பணமாக எண்ணாமல், பாக்கியமாகக் கருதும் மனமிருந்தால் ஒவ்வொரு முறையும் அழைக்கும்பொழுது அது "பாக்கியம்' எனக் கூறும்.

பாக்கியம் என்று அறிவிப்பது அறிவு.

அமிர்தம்என உணர்வது உயிர்.

உணர்ந்து பேசமுடியாத உடல் புல்லரிக்கும்.

உடலின் புல்லரிப்பு அங்கு உயிரின் புன்னகை.

நினைவு, உணர்வு, உடல் உணர்வு என்பவை மனம்.

உயிர், உடல் அன்னையால் தீண்டப்பெறுவதாகும்.

78. எந்தக் காரியத்தை எவருக்குச் செய்தால் வழிவிடும்என அறிதல்.

பெரியவருக்கு நமஸ்காரம் செய்யத் தடையை அகற்று.

தியானத்தில் ஒரு சில ஆங்கிலேயர் இருந்தனர். நாம் குருவுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதால், அவர்களும் தாமாகவே முன்வந்து செய்தனர்.

"நமஸ்காரம்' என் தலையில் கத்தி ஊடுருவுவதுபோலிருக்கிறது என்றார் அந்த மேல்நாட்டார்அவர்கட்குப் பழக்கமில்லைஒரு பெரிய ஆத்மாவுக்கு நமஸ்காரம் செய்யும் பக்குவமற்ற ஆத்மா அவர்.

தனக்கு வரவேண்டிய பெரிய பிரமோஷனில் பெருங்கேள்வி எழுந்து, 6 மாதமாகத் தடையாயிருப்பவர் 6 மாதம் முன் வீட்டில் உள்ள அண்ணன் மகனுக்கு வாங்கிய தீபாவளித் துணியை அவனைத் தண்டிக்க வேண்டி கொடுக்காமல் வைத்திருக்கிறார்என்று அறிவதில்லை.

அதைக் கொடுக்கும் நிர்ப்பந்தம் எழுந்ததுஅன்றே பிரமோஷன் கிடைத்தது.

நம்சுபாவப்படி நாம் பல காரியங்களைச் செய்கிறோம், பல்வேறு காரியங்களைச் செய்ய மறுக்கிறோம்நாம் செய்த, செய்யாத ஒவ்வொரு காரியத்திற்கு நேரான தொடர்புடைய மற்றொரு காரியம் உண்டு என நாம் அறிவதில்லை.

கவனித்தால் பெரும்பாலும் விளங்கும்.

யோசனை செய்தால் மேலும் விளங்கும்.

சமர்ப்பணம் செய்து, யோசனையுடன் கவனித்தால் அனைத்தும் விளங்கும்.

ஒரு பெரிய சிக்கல் அண்ணனுக்குத் தம்பி தோற்க வேண்டும் என்ற "நல்ல' எண்ணம். சிக்கல், பெருஞ்சிக்கலாகி, உடைந்து, மீண்டும் சிக்கல் ஆயிற்று. 11 வருஷம் கழித்து ஒரு நாள் தம்பி அண்ணனை நோக்கி, "சற்று உதவினால் நல்லது'' என்றார்.  11 வருஷமாக அண்ணன் மனநிலையை அறிந்தவர் தற்சமயம் அவர் மனம் சற்று மாறுபட்டிருப்பதை அறிந்து கேட்டார்அண்ணன் இசைந்தார். மறுநாள் சிக்கல் அவிழ்ந்து, எழுதி, கையெழுத்துப் போட்டு முடித்தனர்.

நம்வீட்டு நிலைமையை "எங்கள் குடும்பம்'' தாயார் அறிவதுபோல் கவனித்தால்,

. எந்தப் பிரச்சினைக்குரிய முடிச்சும் தெரியும்.

. எந்த வாய்ப்புக்குரிய வாயிலும் தெரியும்.

பக்தியிருந்தும் பழக்கத்தால் நமஸ்காரம் செய்ய உடல் தயங்கினால்,தயக்கம் விலகி நமஸ்காரம் செய்தால், தடை விலகும், வாய்ப்பு பலிக்கும்.

. கவனிப்பது முக்கியம்.

. தொடர்பை அறிவது அதைவிட முக்கியம்.

. இல்லாத தொடர்பைக் கற்பனை செய்பவர் பலனைக் கண்டு நிலையை அறிய வேண்டும்.

. பகுத்தறிவு பேசுபவர் இதுபோல் கவனித்தால் "அவர்கள் பகுத்தறிவுக்கும்' உலகில் தேவைப்பட்ட அறிவுக்கும் உள்ள தூரத்தைக் காண்பர்.

தொடரும்....

****


 


 


 book | by Dr. Radut