Skip to Content

14.அஜெண்டா

"Agenda"

எல்லா முறைகளையும் முயன்றேன்; பலனில்லை.

உடலில் ஏதோ ஒன்று ஆன்மீக சக்தியை ஏற்கவில்லை.

. முறைகட்குப் பலன் உண்டு. ஆனால் முடிவான பலன் மூலத்திற்கே உண்டு.

. வாழ்வும், யோகமும் ஓர் அம்சத்தில் ஒன்றுபோன்றவை.

. மகனுக்குத் தந்தை சொத்து தருகிறார்; புத்திமதி சொல்கிறார்;

அவனுக்கேயுள்ள சுபாவம் உண்டு.

பிதிராஜ்யம் பெரியது. ஆனால் பிரகாசம் பெறாது.

புத்திமதியை ஏற்பது சொத்தைவிடப் பெரியது. ஆனால் சொந்தம் ஆகாது.

நெருக்கடி வரும்பொழுது பிதிராஜ்யமோ, புத்திமதியோ பயன்படாது.

சுபாவம் வெளிப்பட்டுச் செயல்படும். அதுவே நிலையானது.

. மோட்சத்தை நாடும் தவம் நிஷ்டைக்குப் பலிக்கும்.

பூரணயோகம் மோட்சத்தை நாடுவதில்லை.

மோட்ச லோகத்தை உலகுக்குக் கொண்டுவரும் யோகம்.

எல்லோரும் இந்நாட்டு மன்னராகும் யோகம் பூரணயோகம்.

அதனால் இங்கு முறைகளுக்கு முக்கியத்துவமில்லை.

இருந்தாலும், மனம், உயிரைப் பொருத்தவரை முறைகள் ஓரளவு பயன்படும்.

உடல் அவைபோல் செயல்படாது; சுபாவத்தை வலியுறுத்தும்.

"என் ஜபம் சாயவில்லை'' என்பது உடலைப் பொருத்தவரை உள்ளது.

சுபாவம் மாறினால், மூலவன் மூலத்திலிருந்து வந்து உடலில் செயல்பட்டால், உடல் அசையும்.

அன்னையின் யோகம் அந்த நிலைக்குப் போனபொழுது எந்த முறையும் பலன் தரவில்லைஉடலில் ஒன்று எதிர்ப்பு தெரிவிக்கிறது என்றார்.

மனம் குழப்பமாக இருந்தால் அன்னையை அரை மணி நேரம் அழைத்தால் தெளியும்.

கவலை நம்மை ஆக்ரமித்தால் 1 நாள் அழைப்பு கவலையை சந்தோஷமாக மாற்றும்.

உடல் உபாதைகள், தலைவலி, உளறல், சோர்வு, வயிற்றுவலியும் அதுபோல் மறையும்அதைக் கடந்த வியாதிகள் உண்டு. அவை அழைப்பு, பிரார்த்தனைக்குப் பலன் தாராஅதன் காரணத்தைக் கண்டு விலக்கியபின் பிரார்த்தனை பலிக்கும். யோகம் அதையும் கடந்தது. அங்கு அதிகபட்ச எதிர்ப்பு உடலிலிருந்து எழும்.

****


 


 



book | by Dr. Radut