Skip to Content

15.மார்க்கட் தரும் உபரி இலாபம்

மார்க்கட் தரும் உபரி இலாபம்

     சீசனுக்குரிய சரக்கு பலஉபரியானால் உற்பத்தி செய்பவன் வியாபாரியை நாடவேண்டும்கிராக்கியானால், வியாபாரி நம்மைத் தேடி வருவார்ஒருவர் சுமார் ஒரு லட்சம் சரக்கு ஒன்றை உற்பத்தி செய்தார்கிராக்கியாக விற்றது. அவருக்கு மார்க்கட்டில் யார் வாங்குகிறார்கள் என்ற விபரம் தெரிய வந்தது.  விநியோகத்திற்கும் ஓர் ஏற்பாடு செய்தார்இதே சமயம் சீசன் இல்லாதபொழுது எங்கெல்லாம் இந்தச் சரக்கு உற்பத்தியாகிறது எனவும் அவர் அறிந்தார். மார்க்கட்டில் 3 லட்சம் சரக்குக்கு கிராக்கியிருக்கிறதுஇவரிடம் 1 லட்சம்தான் உற்பத்திசென்ற வருஷம் அவர் செய்த பல வேலைகளின் பலனாக 20 லட்ச ரூபாய் சம்பாதித்தார்மார்க்கட்டில் தேவைப்படும் உபரியான 2 லட்சம் சரக்கையும் இவரால் வாங்க முடியும்ஒரு சரக்கில் இவருக்கு 20 பைசா நிகரமாக நிற்கும்அதாவது தினமும் செலவு போக, இவரால் 40,000 சம்பாதிக்க முடியும் என்று கண்டார்அது வருஷத்தில் ஒரு கோடிக்கு மேலாகிறது என்பது இவரைத் திகைக்க வைத்தது.

. வேலையைப் பொறுப்பாகச் செய்தால் வேலை உபரியைக் காட்டும்.

.மார்க்கட் தினமும் மாறக்கூடியது. குழந்தை போன்றது.

கொண்டாடினால் நம்மை நோக்கி ஆவலாக வரும்.

மார்க்கட் ஒருவரைக் கைதூக்கிவிட முடிவு செய்தால் அதற்கு முடிவே இல்லை.

.இது மார்க்கட்டின் தன்மை.

.வேலை பெரியது. மார்க்கட் அதனுள் பகுதி.

.வேலையை ஆர்வமாகச் செய்தால், வேலை தரும் பலன் பெரியது.

****


 



book | by Dr. Radut