Skip to Content

05.தமிழ்நாட்டுப் பழமொழிகளும், ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும், ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

                                                                                                                     கர்மயோகி

21. தாய், பிள்ளையானாலும் வாய், வயிறு வேறு.

. ஒவ்வொரு செயலும் தனிச்சிறப்புடையது.

22. நினைத்தனவெல்லாம் நடக்குமா*.

. நினைக்காதனவெல்லாம் நடக்கும்.

23. அடி உதவுவதுபோல் அண்ணன், தம்பி உதவமாட்டார்கள்.

. அன்னை அருள்வதுபோல் அண்ணனோ, தம்பியோ உதவமாட்டார்கள்.

24. பணம் பாதாளம் வரை பாயும்.

. சமர்ப்பணம் சந்துபொந்தெல்லாம் நிரப்பும்.

25. உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா*.

. மனிதன் இறைவனாகலாம்.

26. இல்லாதவனை, இல்லாளும் மதிக்கமாட்டாள்.

. நம்பிக்கையற்றவனுக்கு நல்லது எதுவும் நடக்காது.

27. விசும்பின் துளி வீழினல்லால் பசும்புல் காண்பதரிது.

. அருளன்றி வாழ்வில்லை.

28. பழகப் பழகப் பாலும் புளிக்கும்*.

. பழகப் பழக புளியும் இனிக்கும்.

29. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு*.

. அளவுகடந்த பின்னரே அன்னையை அறிய முடியும்.

30. உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.

. அன்னையின் பாதுகாப்பு அதுபோல் விரைந்துவரும். ____________________________________________________________

* In these proverbs the opposite is true in Mother.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

நமக்குள்ள சந்தர்ப்பத்தில் அன்னைச் சட்டப்படி எந்தப் பெரிய திட்டம் பூர்த்தியாகவில்லையோ, அவ்விஷயத்தில் நம் முயற்சி, ஆர்வம், தெளிவு பூர்த்தி பெறவில்லைஎனப் பொருள்

படிப்பறிவில்லாதவன் உதாரணத்தின் மூலம் எளிதில் புரிந்து கொள்வான்.

ஒரு விளக்கம் அல்லது முறை (as explanation or a method) அறிவுள்ளவனுக்குப் புரிய வைக்கும்.

இனிமையான பழக்கம், உணர்ச்சிபூர்வமானவனுக்கு விளக்கும்.

ஆசையுள்ளவனுக்கு ஆர்வம் தெளிவுறுத்தும்.

திறமை அல்லது திறன் அல்லது நிறைவு உடலுக்குப் புரிய வைக்கும்.

மௌனத்தால் தபஸ்வி எளிதில் ஏற்றுக்கொள்வார்.

திருஷ்டி, ரிஷிக்கு ஞானத்தைத் தரும்.

யோகி பார்த்தவுடன் புரிந்துகொள்வார்.

ரூபத்தை அறிவது தெய்வம்.

தன்னையே பிரம்மமாகவும், உலகைத் தான் ஆகவும்,                                              மற்றவரை உலகமாகவும் அறிவது சத்தியஜீவியம்.

நிலைக்கேற்ற நிரூபணம் உண்டு.


 


 



book | by Dr. Radut