Skip to Content

06. சாவித்ரி

சாவித்ரி

P.82 A greater Force than the earthly held his limbs.

பூமியைவிடப் பெரிய சக்தி அவனைத் தாங்கிப் பிடித்தது.

. அவனது காணாத லோகங்களைப் பெருஞ்சக்திகள் கண்டுகொண்டன.

. வினோதமான சக்திகள் செயல்பட்டு வலுவான கரங்களைத் திரையிட்டு மூடின.

. மனமெனும் முப்புரிநூலை அவிழ்த்து விடுதலை செய்தன.

. ஆண்டவனின் பார்வை அகல விரியும் மோட்சலோகம்.

. உடை உணர்த்தும் உடலுருவம்.

. ரூபத்தை கடந்து மறைந்துறையும் பிரம்மம்.

. பிரபஞ்சம் உணர்ந்து பெற்ற பிரம்ம திருஷ்டி.

. கருவிகள் பெருகிச் சிறந்தன.

. அகல விரியும் பூதக்கண்ணாடி மாயையைக் கரைத்தது.

. நழுவும் கையின் தவறும் செயல்.

. பிரம்மாண்டமான தோற்றம் அணுவாகச் சுருங்கியது.

. சிறிய அகந்தை சேர முடியாமற்போயிற்று.

. பிரம்மத்தின் பிரம்மாண்டமான லோகத்தில்,

. உடலே உடையும் ஓடாயிற்று.

. மனம் பல வண்ண ராஜ்யசபையாயிற்று.

. அழியாத அமரன் அரச கொலுவீற்றிருக்கும் சபை.

. அவன் ஆத்மா தெய்வச் சூழலை நுகர்ந்தது.

. இடியோசையும் அதனுடன் இசையும் அலையோசையும்.

. மாயவேலியைக் கடக்கும் சிறைப்பட்ட தெய்வம்.

. பெருந்தடைகள் அழியப் போட்டியிட்டன.

. அசைவற்ற அஸ்திவாரத்தில் உலகத்துடன் ஒன்றி நின்றன.

. வேலையின் நம்பிக்கை வீழ்ந்து மாய்ந்தன.

. எண்ணமும், செயலும் மையமாகி மறுக்கமுடியாதபடிக் கவர்ந்தன.

. அசையாத நிலையான எண்ணங்கள்.

. எடுத்த பிறவியின் நடையில் தம்மை அழித்துக்கொண்டன.

. ஆழ்ந்த இரகஸ்யத்தின் கசந்த வேர்கள்.

. எண்ணமும், செயலும் அவற்றிடையே உலவின.

. பயங்கர எல்லையைக் கடப்பதைத் தடை செய்தன.

. ஊமை இருள் பெருங்காவலனாயிற்று.

. சிறகற்ற ஆத்மாவைச் சூழும் திறன் பெற்றது.

. மனத்தின் அஞ்ஞான எல்லை எனும் அரங்கம்.

. காலத்தைக் கடந்து இரட்டையைக் காக்க மறுத்தது.

. தம் பெருங்கடமையைவிட்டு மறைந்தன.

. சிருஷ்டியின் பெருமை நிறைந்தபின் சின்னமாக இருந்தது.

. சூன்யம் விரிந்து தன் அசுர வளைவை இழந்தது.

****
 

ஸ்ரீ அரவிந்த சுடர்

நாம், பிறந்த மண்ணின் பகுதி. நம் உடல் உறையும் ஆன்மாவின் பகுதியாகவும் நாமிருக்கின்றோம். ஆன்மாவைக் கண்டு சித்தி பெறுபவன் யோகி. உடல் பிறந்த மண்ணின் ஆன்மீகத்தைக் காண்பவன், பூரண யோகி.

உடல் பிறந்த மண்ணின் ஆன்மீகம்.


 



book | by Dr. Radut