Skip to Content

05. Agenda

Agenda

Vol.I P.81

Goodwill and aspiration are perhaps the two things necessary. It is our best bet.

பக்தியும் நல்லெண்ணமும் மட்டும் போதும்.மற்றவை கணக்கில்லை.

புத்தர் கடுகு கேட்டதுபோல் பக்தியும், நல்லெண்ணமும் பெறுவது சிரமம்.கோயிலுக்குப் போவது, கடவுளை நம்புவது பக்தி என நாம் நினைத்தால் அது அனைவராலும் முடியும்.

நெஞ்சு நிறைந்து, உணர்வு பெருகி, வேறெதையும் நினைக்க முடியாத அளவு, நினைவு இறைவன் மீது செல்வதற்குப் பக்தி எனப் பெயர்.

இதுவே பக்தி என்பதன் விளக்கம்.Aspiration ஆர்வம் என்ற சொல்லால் அன்னை இதைக் குறிப்பிடுகிறார்.நமக்கு எப்பொழுது இதுபோன்று பக்தி மேலிட்டது என நினைத்துப் பார்த்தால் பலரும் பலவகையாகப் பதில் கூறுவார்கள்.

  • தட்சிணேஸ்வரர் கோயிலில் எனக்கு அப்படி இருந்தது என்றார் ஓரு மதுரைவாசி.மதுரை சொக்கநாதர் கோயிலுக்கு எத்தனையோ முறை போயிருந்தாலும் மனம் பக்தியால் அதுபோல் நிரம்பியதில்லை என்றார்.
  • சமாதியை முதலில் தரிசித்தேன்.நீங்கள் கூறியது போலிருந்தது.பிறகு ஒவ்வொரு முறை சமாதியைத் தரிசிக்கும் பொழுதிருந்தது என்றார் வேறொருவர்.
  • "சமாதியை நினைத்தால் மனம் உணர்ச்சியால் நிரம்புகிறது' என்பது ஓர் அனுபவம்.
  • "எனக்கெல்லாம் அப்படித் தோன்றியதேயில்லையே' என்று பலர் கூறுவர்.
  • பிறந்த நாளில் தவறாது அப்படியிருக்கும்' எனப் பலரும் அறிவர்.
  • "எனக்குக் கடவுள் மேல் மட்டுமல்ல, எது மேலும் அந்த ஆர்வம் இல்லை' என்று கூறுவர் வறண்ட நெஞ்சுக்குரியவர்.

    நல்லெண்ணம் எனில் நமக்கெல்லாம் உள்ளது நல்லெண்ணம்தான் என நினைப்போம்.எண்ணமே கெட்டது என்பது அன்னையின் விளக்கம்.ஒருவரைப் பார்த்தவுடன் மகிழும் மனம், மலரும் மனம் நல்லெண்ணத்திற்குரியது.நமக்குத் தெரிந்தவர்கட்கு நல்லது நடக்கிறது என்றவுடன் நமக்கே அந்த நல்லது வந்ததுபோல் நெஞ்சு பூரிப்பவர் நல்லெண்ணத்திற்குரியவர்.

  • அன்னை கூறும் இவையிரண்டும் இருப்பவர்களை நாம் அறிவோமா?எத்தனை பேர் தேறுவார்கள்? நாம் தேறுவோமா?

  • இந்த யோகத்தை மேற்கொள்ள வேண்டிய தகுதிகள்பெரியவை, பல.அவை எதுவும் இல்லாவிட்டாலும்,இவையிரண்டுமாவது இருக்க வேண்டும் என அன்னை கூறும் நிபந்தனைக்கு நாம் ஆளானால் அது பாக்கியம்.
  • இதைக் கண்ணுற்ற பின் அன்பராக இத்தகுதி பெறவேண்டும் என நினைப்பது படித்ததற்குரிய பலன்.

********

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஊறிப்போன சுபாவம் முரண்டு செய்தால் அதைக் கிளறி மேலே போகச் செய்ய அபரிமிதமான சக்தி தேவை.

 

 



book | by Dr. Radut