Skip to Content

13.ஜலதோஷம்

எகிப்து மன்னன் சாலமன் எறும்பு, நாய் இவற்றின் பாஷையை அறிவார். அன்னை தென்னை மட்டை, கம்பளம், கழுதைக் குட்டிகளுடன் பேசுவார். ரோஜா மலர் அவரிடம் கோபித்துக் கொள்ளும் நிகழ்ச்சிகள் அன்பர்கள் அறிந்தவை.

வாரம் தோறும் தியானம் நடக்கும் வீடு. மூன்றாம் ஞாயிறு சிறப்பான தியானம். அன்று சிம்பல் போட ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் சிம்பல் போட்டு அதைப் பயன்படுத்துவார்கள். அடியில் ஷீட்டில் சிம்பலிருந்ததால், புஷ்பம் அடுக்க வசதியாக இருக்கும். ஒரு தியானம் முடிந்தவுடன், ஷீட்டை அலம்பி காய வைப்பது வழக்கம். அடுத்த முறை, தேவைப்படும் பொழுது ஷீட் காணவில்லை. அவ்வீட்டுப் பெண்மணிக்கு அதிக ஜலதோஷம் அதை ஒட்டிய தொந்தரவுகளால் எதையும் கவனிக்க முடியவில்லை. ஷீட்டை கண்டுபிடிக்க தியானம் செய்தார். “கிணற்றில் பார்” என்ற குரல் கேட்டது. மதிய நேரம். 10 அடி தண்ணீர் உள்ளது. ஷீட் கிணற்றில் இருக்கிறது. பாதாள சுரடு மூலம் எடுத்தனர்.

இத்தனை நாள் வாட்டிய ஜலதோஷம், நிற்காமல் நீர் வடிந்த மூக்கு, திடீரென மறைந்துவிட்டது. பல நாளாக உடல் வலி தாங்க முடியாத பையனுக்கும் வலி திடீரென நின்றுவிட்டது.

- ஷீட் ஜடப் பொருள். பக்தியுள்ள குடும்பத்தில் ஷீட்டிற்கும் உயிர் வந்துவிட்டது. பக்தியும் வந்தது போலும், கவனம்  குறைந்தவுடன் தொலைந்துவிட்டது.

- ஷீட் கிணற்றில் விழுந்ததால் ஷீட்டிற்கு ஜலதோஷம் வந்துவிட்டது.

- அது அவ்வீட்டுப் பெண்மணியின் ஜலதோஷமாயிற்று.

 

 

 



book | by Dr. Radut