Skip to Content

14.அமெரிக்காவைத் தாக்கினர்

 பயங்கரவாதிகள் அமெரிக்காவில் 120 மாடிக் கட்டிடத்தைத் தாக்கியதில் ஆயிரக்கணக்கான பேர்  யிரிழந்தனர். இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்றுள்ளவர் குடும்பங்கள் தங்கள் மக்கள் என்ன ஆனார்கள் என்று பதை பதைத்தனர். ஆபத்து பொது. தப்பிப்பது அதிர்ஷ்டம்.

 

நாங்கள் பத்திரமாக இருக்கிறோம் என்ற செய்தி வரும்வரை குடும்பத்தாருக்கு நிலையில்லை. அப்படித் தாக்கப்பட்ட இடங்கள் இரண்டு, நியூயார்க்கில் ஒன்று, வாஷிங்டனில் Pentagon என்று இராணுவத் தலைமை நிலையம். அன்பர் ஒருவருடைய மகன் வாஷிங்டனிலிருக்கிறார். அவர் ஆபீஸ் Pentagonக்கு 500 அடி தூரத்திலிருக்கிறது. அவர் தன்னூருக்கு போன் கிடைக்கவில்லை என்பதால் சென்னைக்கு செய்தி சொல்லி வீட்டுக்கு அறிவித்தார். மகன் பத்திரமாக இருப்பது பெற்றோருக்குத் தெரிய வந்தது.

சான்பிரான்ஸிஸ்கோவில் ஒரு அன்பர். அவருக்கு (neighbours) உடன் உறைபவர்கள் 3, 4 பேர் வாஷிங்டனில் வேலை செய்கிறார்கள். இவர்கள் அன்பரில்லை. 3 பேரிடமிருந்தும் அன்பருக்கு போன் வந்தது. ஏதோ காரணங்களுக்காக இவர்கள் அன்று ஆபீசுக்குப் போகவில்லை.

கேட்டாலும், கேட்காவிட்டாலும், தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் ஏதோ ஒரு வகையில் தொடர்புள்ளவர்க்குப் பாதுகாப்புண்டு.

 



book | by Dr. Radut