Skip to Content

02.லைப் டிவைன்

 “ஸ்ரீ அரவிந்தம்”

லைப் டிவைன்                                                                                                                                                      கர்மயோகி

X. Conscious Force

10. சித் -சக்தி

Materialism speaks of extension of consciousness.

ஜீவியம் பரந்து விரிகிறது என நாத்திக வாதம் கூறுகிறது.

To them it is a material pehnomenon.

அது ஜடமான நிகழ்ச்சி என்கிறார்கள் அவர்கள்.

They are inseparable from our physical organs.

நம் உறுப்புகளினின்று பிரிக்க முடியாதவை என்கின்றனர்.

It is their result.

இது அதனுடைய பலன்.

It is not their utiliser.

அவற்றைப் பயன்படுத்துவது இது இல்லை.

This is an orthodox contention.

இது சம்பிரதாயமான வாதம்.

Knowledge is increasing like a tide.

அறிவு அலைகள் பெருகுகின்றன

This does not hold against new knowledge.

ஆனால் புது ஞானத்தை இது தடை செய்யாது.

Orthodox view explains more and more.

சம்பிரதாயம் மேலும் மேலும் பேசுகிறது.

These explanations are less adequate.

ஆனால் விளக்கம் போதாது.

They strain more and more to explain.

விளக்கம் எழுவது சிரமமாக இருக்கிறது.

We now see a greater truth.

ஒரு பேருண்மை தெரிகிறது.

Our total consciousness has a capacity.

நம் ஜீவியத்திற்குத் திறனுண்டு.

Our parts of the body and being have a capacity.

நம் உடலுறுப்புகட்கும், ஜீவனுக்கும் திறனுண்டு.

Our organs, senses, nerves and the brain are there.

உறுப்புகள், புலன்கள், நாடி, நரம்பு, மூளை அவ்வுறுப்புகளாகும்.

One exceeds the other.

இவற்றைக் கடந்தது ஜீவியத்தின் திறன்.

Do these organs generate those capacities?

இவ்வுறுப்புகள் அத்திறன்களை உற்பத்தி செய்கின்றனவா?

These organs are only their habitual instruments.

உடலுறுப்புகள் பழக்கத்திலுள்ள கருவிகளாகும்.

They do not generate those capacities.

அவற்றால் திறனை உருவாக்க முடியாது.

Consciousness uses the brain.

ஜீவியம் மூளையைப் பயன்படுத்துகிறது.

The upward strivings of the brain do produce the consciousness.

மூளையின் ஆர்வமான எழுச்சி ஜீவியத்தை உற்பத்தி செய்வதில்லை.

Brain has not produced consciousness.

மூளை ஜீவியத்தை உற்பத்தி செய்யவில்லை.

Nor does the brain use the consciousness.

மூளை ஜீவியத்தைக் கருவியாகப் பயன்படுத்துவதுமில்லை.

Consciousness produces the brain for its use.

ஜீவியம் தன் வேலைக்காக மூளையை உற்பத்தி செய்தது.

We see this in abnormal instances.

அரிதான நேரத்தில் நாம் இதைக் காண்கிறோம்.

They prove our organs are dispensable.

நம் உறுப்புகள் இன்றிமையாதவையில்லை என அவை அறிவுறுத்துகின்றன.

The heartbeat is not absolutely essential for life.

இதயத்துடிப்பு உயிருக்கு இன்றியமையாததில்லை.

Breathing too is not essential to life.

மூச்சும் உயிருக்குத் தேவையில்லை.

The organised brain cells are not necessary to thought.

வளர்ந்த மூளைச் செல்கள் சிந்திக்கத் தேவையில்லை.

An engine is constructed.

ஒரு என்ஜினைச் செய்கிறோம்.

There is its motive power of steam or electricity.

அதை ஓட்டும் நீராவி அல்லது மின்சாரமுள்ளது.

The engine does not cause the steam.

நீராவியை என்ஜின் உற்பத்தி செய்யாது.

Nor does it explain it.

என்ஜின் நீராவி எப்படி வந்தது எனவும் கூறாது.

Similarly, our physical organism does not explain thought.

அதேபோல் நம் உடலுறுப்பு எண்ணம் எழுந்த வகையை அறியாது.

Nor does it explain consciousness.

அவை ஜீவியத்தையும் அறியா.

The force is anterior.

சக்தி முந்தையது.

Not the physical instrument.

உறுப்பன்று.

Page No 86, Para No.14

Momentous logical questions follow.

பெரிய பிரச்சினைகள் எழுகின்றன.

We see inertia and inanimation.

ஜீவனற்ற தமஸைக் காண்கிறோம்.

Mental consciousnes exists there.

அவற்றுள் மனத்தின் ஜீவியம் காணப்படுகின்றது.

If so, what about material objects?

அது உண்மையெனில், ஜடப்பொருளைப் பற்றி என்ன சொல்வது?

Is there a mind present there?

அவற்றுள் மனம் உண்டா?

Would it be universal subconscious mind?

அது பிரபஞ்சத்தின் ஆழ் மனமாகுமா?

Is it incapacitated to act?

அதனால் செயல்பட முடியாதா?

Is it unable to communicate itself to the surface?

அதனால் மேல் மனத்துடன் பேச முடியாதா?

Can we say, it is due to want of organs?

உறுப்பில்லாததால் முடியாது என்று சொல்லலாமா?

What about the material state?

ஜடத்தின் நிலையைப் பற்றி என்ன சொல்வது?

Is it empty of consciousness?

அதற்கு ஜீவியமில்லையா?

Or, does consciousness sleep there?

அல்லது அங்கு ஜீவியம் துயிலுறுகிறதா?

What is it from the point of view of evolution?

பரிணாமப் பார்வையில் அது என்ன?

It is an original sleep.

அது அடிப்படையில் உறக்கம்.

It is not intermediate sleep.

அது அரைத் தூக்கமன்று.

What is sleep?

தூக்கம் என்பது என்ன?

Let us learn from the human example.

மனித உதாரணத்திலிருந்து நாம் அறிய முயல்வோம்.

Sleep is not a suspension of consciousness.

தூக்கத்தில் ஜீவியம் நின்று போகவில்லை.

It is a gathering inward away from response.

செயலிலிருந்து விலகிச் சேர்ந்து ஒதுங்குவதாகும்.

At least from conscious physical response.

பதில் பேசும் நிலையினின்று விலகுவது தெரிகிறது.

The impact of external things does not evoke responses

புற நிகழ்ச்சிகளின் மோதல் அதைச் செயல்படுத்துவதில்லை.

There is existence with no means of communication.

பேசும் திறனற்று வாழ்வுள்ளது.

They have not yet developed those means for outward communication.

புறத் தொடர்பை ஏற்கும் திறனை அவை இதுவரை பெறவில்லை.

The world is external and physical.

உலகம் என்பது புறம், ஜடம்.

Existence needs communication with this world.

வாழ்வுக்கு இதன் தொடர்பு அவசியம்.

Their position is this inability.

திறனற்ற நிலையே அதன் உண்மை நிலை.

Much of existence sleeps.

வாழ்வு தூக்க மயக்கத்திலுள்ளது.

Does something awake in them?

அதனுள் விழிப்பானதுண்டா?

Is it conscious?

அது ஜீவனுள்ளதா?

It is Purusha or Soul?

அது புருஷனா? ஆத்மாவா?

                                                                                                      ...contd.

                                                                ...தொடரும்

                                                          ****

****



book | by Dr. Radut