Skip to Content

09.வாழ்வின் மறுமொழி

 Life Response

ரெயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்ட்

       Life Response என்ற சொல் உலகுக்குப் புதியது. இச்சொல் கூறும் கருத்தை நம் நாட்டில் நாம் அறிவோம். அதற்கு இதுவரை நாம் பெயரிட்டதில்லை. வெளிநாட்டிலும் இது போன்ற நிகழ்ச்சிகளுண்டு. அவர்கள் இதைக் கருதுவது மூட நம்பிக்கை என்று நினைக்கிறார்கள். ஆன்மீக ஞானம் உள்ளவர்க்கு, Life Responseஎன்ற ஞானம்,

       உலகம் இதுவரை பெறாத ஞானம்.

       எலக்ட்ரானிக்ஸ் துறைக்கு கம்ப்யூட்டரைவிட,

       வாழ்வுக்கு Life Response முக்கியம்.

என்று அறிவார்கள்.

       கடந்த 500 ஆண்டுகளில் விஞ்ஞானத்தால் உலகம் பெற்ற நன்மைகளுக்குச் சமமானவற்றை உலகம் ஓராண்டில் பெற உதவும் ஞானம் Life Response.

       இதை எல்லா கோணத்திலிருந்தும் புரிந்து கொள்ளலாம். Goodwill நல்லெண்ணத்தின் மூலமாக நடப்பவற்றை நான் முக்கியமாகக் கருதுகிறேன்.

       ரெயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்டில் வேலை செய்யும் அன்பர் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர். Guru Soft என்ற Websiteல் Life Response பற்றிய அனுபவங்களை வெளியிடுவதால், இந்த அன்பர் கீழ்க்கண்ட அனுபவத்தை அந்த Siteக்கு அனுப்பியிருந்தார்.

       நான் இந்த போர்டில் வேலை செய்கிறேன். பரீட்சை சம்பந்தமான வேலைகள் என்னுடையது. பரீட்சைக்குத் தயார் செய்து பல கட்டங்களுண்டு. அது பிரம்மாண்டமான வேலை. சென்ற வாரம் நான் போர்ட் சேர்மனிடம் இதை எலக்ட்ரானிக் மூலம் செய்வது சுலபம், செலவு குறைவு என்றேன். சேர்மன் சம்மதப்படவில்லை, இது முடியும் என்பது என் தீர்மானம். 3 நாள் கழித்து சேர்மன் என்னை அழைத்து ஒரு அயல்நாட்டு Software கம்பனி பரீட்சையை கம்ப்யூட்டர் மூலம் நடத்துகிறது. அதை நான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். நான் விரும்பியவையும், மற்றவைகளையும் கம்பனி கொண்டுவந்துள்ளது.

நல்லெண்ணம் செயல்படும்.

நல்லெண்ணம் Life Response மூலம் செயல்படும்.

அன்னை நல்லெண்ணம் மூலம் Life Response ஏற்படுத்துகிறார்.

இந்த அன்பரின் தெளிவான நல்லெண்ணம் கம்பனிக்கும், பரீட்சை எழுதுபவர்கட்கும், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நல்லதை செய்தது.

 

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஒரு நேரம் பிரார்த்தனை சாதிப்பதை, வாழ்வையும், செயலையும் முறைப்படுத்தினால் பிரார்த்தனையின்றி தாமே அதுபோன்ற காரியங்கள் நடக்கும்.

ஆன்மீக வசதியில்லாவிடில் பிரார்த்தனை தேவை.

அதிருந்தால் பிரார்த்தனை தேவையில்லை

 

 



book | by Dr. Radut