Skip to Content

10.லைப் டிவைன் -கருத்து

The Life Divine -கருத்து

No delight condemns the delight of another.

. Bliss ஆனந்தம் Delight என்பது ஆனந்தம் வாழ்வில் வெளிப்படுவது.

. சிருஷ்டி ஏற்பட்டதே உலகில் சச்சிதானந்தம் பெரிய ஆனந்தமாக வெளிப்படுவதற்காக.

. அயர்ந்து தூங்குபவரை நாம் எழுப்பமாட்டோம். அவர் ஓய்வை அனுபவிப்பதை இடையூறு செய்தல் சரியில்லை என நினைக்கிறோம்.

. இளைஞர் பலர் ஆரவாரமாக, சந்தோஷப்படும்பொழுது அதைத் தடுப்பது போன்ற காரியத்தைச் செய்ய வேண்டுமானால், "எப்படி அவர்கள் சந்தோஷத்தைக் கெடுப்பது?'' என நினைக்கிறோம்.

. ஒருவர் ஆனந்தப்படுவதைத் தடுக்கவோ, அல்லது ஒருவருக்கு வருத்தம் தரும் காரியத்தைச் செய்யவோ நாம் தயங்குகிறோம்.

. இதன் அடிப்படை உபநிஷதம் கூறுவது,

"எந்த ஆத்மாவும் எல்லா ஆத்மாக்களினுள் உறைகின்றது. எல்லா ஆத்மாக்களும் ஓர் ஆத்மாவில் உறைகின்றன.''

இதுவே சத்தியஜீவியத்தின் அடிப்படை.

ஆனந்தம் என்பது உறவு.

ஆத்மா அடுத்த ஆத்மாவோடு உறவுகொண்டு ஆனந்தப்படுகிறது.

அப்படியானால் எப்படி ஒருவர் பிறர் ஆனந்தத்தைக் கண்டிக்க முடியும்?

. 20ஆம் நூற்றாண்டில் தூக்குத் தண்டனையை பெரும்பாலான நாடுகள் கைவிட்டன.

. குற்றவாளியைக் குற்றவாளி எனக் கருதாது, அவன் சந்தர்ப்பம் அவனைக் குற்றம் செய்யும்படி நிர்பந்தித்தது, தூண்டியது. அந்த சந்தர்ப்பத்தில் நாமும் அப்படியே செய்திருப்போம் என மக்கள் மனம் மாறுகிறது.

. அடுத்த கட்டத்தில் குற்றவாளி குற்றம் செய்வதில் இன்பம் கண்டால், நாம் அதை ஏற்கவேண்டும் என்று கருதவேண்டும். .அது குற்றத்தைச் சரி என்பதுபோல் தோன்றும்.

. குற்றம் வேறு, அதில் காணும் இன்பம் வேறு. அவன் பெறும் இன்பம் அவனுக்கு முக்கியம். அதை நாம் ஏற்கவேண்டும் என்பது ஸ்ரீ அரவிந்தம். இதைத் தவறாகக் குற்றத்தைச் சரி என்பதாகக் கொள்ளக்கூடாது. படிக்காமல் விளையாடும் பையன் விளையாட்டில் காணும் இன்பத்தை நாம் ஏற்கலாம். அது படிக்காதது சரி என்பதாகாது. படிப்பு முறை இத்தத்துவப்படி விளையாட்டாக அமைந்துள்ளது. காலையில் எழுந்தவுடன் சிறு குழந்தைகள் பள்ளிக்கூடம் போகவேண்டும் என்று கேட்கின்றன.

. விளையாடும் குழந்தையின் இன்பத்தை நாம் ஏற்றால், பிறகு குற்றம் செய்பவனின் ஆனந்தத்தையும் ஏற்கலாம். ஏற்கும் காலத்து குற்றம் முதலில் பிரிந்தும், முடிவில் திருவுருமாறியும் தெரியும்.

**** 

ஸ்ரீ அரவிந்த சுடர்

எண்ணத்தை உணர்வு பலவந்தப்படுத்தினால் படபடப்பு வருகிறது.

ஸ்ரீ அரவிந்த சுடர்

கட்டுப்பாடு வெளியிலிருந்து வருகிறது.

மனம் உணர்வைக் கட்டுப்படுத்துவது சுயக்கட்டுப்பாடு.

உணர்வே தான் கட்டுப்பட முன்வருவது உயர்ந்த கட்டுப்பாடு.


 


 



book | by Dr. Radut