Skip to Content

11.அமிர்தத்தை அறியாத அறிவு

அமிர்தத்தை அறியாத அறிவு

பதவியிலுள்ளவன் செய்யும் தவறு அவனைப் பாதிப்பதில்லை.அதனால் அது தவறு என அவன் அறிவதில்லை. அவன் அறிந்தாலும்,அறியாவிட்டாலும் தவறு தவறேயாகும். கெட்டிக்காரப் பையன் படிக்காவிட்டாலும் பாஸ் செய்கிறான். பாஸ் செய்யப் படிக்கவேண்டும் என்பது அவசியமில்லை என்று அவன் பேசுவதை அனைவரும் எடுத்துக்கொள்ள முடியாது. அவன் பெற்றது பாஸ்; இழந்தது முதல் வகுப்பு, முதல் மார்க்.

அன்புக்காகக் கெஞ்சுபவன் நிலை

அவல நிலை என்று தாகூர் கூறினார்.

இழந்ததை அறியாதது அறியாமையின் சிகரம்

எனக் கூறத் தோன்றுகிறது.

ஏதோ காரணத்தால் அன்னையின் ஆதரவில் வளர்ந்தவர் பலர்,அருகில் இருந்தவர் சிலர், அவர் சூழல் உள்ளவர் ஏராளம்.அவர்கள் தாங்கள் பெற்றதை அறியாமல் அதை இழப்பதற்குரிய அத்தனையும் செய்வது அனைவரும் தவறாது செய்வது. உடன் பிறந்தவர் என்பதால் தொத்து வியாதி தொற்றி வாராதா?அன்னையை ஏற்றுக்கொண்டவர்கள் பழைய உறவு, நட்பு - அவர்கள் அன்னையை ஏற்காத உறவு, நட்பு - ஆகியவற்றைப் பாராட்டினால் மூச்சு திணறும். அவர்கள் ஸ்பர்சம்பட்டால் திணறும் மூச்சு நின்றுவிடும். இதை 10 வருஷங்களாக அறியாமல் இருக்கலாமா?மீண்டும், மீண்டும் சூழலைவிட்டு வெளியே போகமுயலலாமா? கருமாதி போன்ற சாங்கியங்களுடன் தொடர்புகொள்வது அன்னை ஜீவியத்திற்கு நேர் எதிரானது. சூழல் வலுவாக இருக்கும்வரை கருமாதி உடல் உபாதை தரும். சூழலில் கரைந்துவிட்டால் ஆபத்து.

அன்னையின் அரவணைப்பிலுள்ளவர் அதைவிட்டுப் போக விரும்பும்

நினைவு அறிவுக்குப் பொருந்துமா? வாழ உதவுமா?

****


 



book | by Dr. Radut