Skip to Content

12.தவம் - யோகம்

தவம் - யோகம்

இந்தியர்கள் வேலை செய்யமாட்டார்கள். வேலை செய்யத் தெரியாது. தெரிந்தவர் செய்யமாட்டார்கள் எனப் பெயர் வாங்கியவர். நம் நாட்டில் உத்தமன், உயர்ந்தவர் எனக் கருதப்படுவது அரசனில்லை. அப்படிக் கருதப்படுபவர்கள் யோகி, ரிஷி, தவசி, முனி, சன்யாசி, ஆகிய ஆன்மீகப் பெருமக்கள். அவர்களுடைய சாதனை சமாதி, நிஷ்டை. மரத்தடியிலிருப்பவர் மரத்தடியிலேயே இருப்பார். "இருக்குமிடம் தேடி என் பசிக்கு அன்னம் உருக்கமுடன் கொண்டுவந்தால் உண்பேன்'' என்பது இலட்சியம்.

இரண்டாம் உலக யுத்தத்திற்குமுன் நம் நாட்டில் சான்றோர் எனப்படுபவர், படித்தவர், ஊரில் முக்கியஸ்தர்கள், நிதானமாக மெல்லியக் குரலில் பேசுவார்கள். நடந்துபோகும்பொழுது அமைதியாக நடப்பார்கள். அவர்களிடம் பேசுபவர் தூர நின்று அமைதியாகக் கை கட்டி, வாய் பொத்திப் பேசுவர். அவர்கள் பதில் மெதுவாக, நிதானமாக, ஓரிரு சொல்லாக வரும். ஆர்ப்பாட்டம், ஆரவாரம் அவரறியாதது. அதுவே இலட்சியம். அவர்கள் வீட்டைவிட்டு வெளியே அவசியமில்லாமல் போகமாட்டார்கள். திண்ணையிலும் வந்து உட்காரமாட்டார்கள். எனவே, இலட்சிய நடைமுறை என்பது,

- அமைதி, மௌனம், நிதானம்.

- அசையாத இருக்கை அத்தியாவசியம்.

- சம்பாதிக்க முயலாமல், எண்ணாமல், எதையும் செய்யாமல் வாழ்வது ஆன்றறிந்து அடங்கிய சான்றோர் செயல் எனக் கருதப்பட்டது.

- அவ்வுயர்ந்த இலட்சியம் நாளடைவில் எதுவும் செய்யப் பிரியப்படாத சோம்பேறிக்கு உறுதுணையாயிற்று.

 

****



book | by Dr. Radut