Skip to Content

02.சாவித்ரி

"சாவித்ரி"

P.44, And lost life's incapacity for bliss

கடந்த வாழ்வு ஆனந்தத்தை இழந்த வாழ்வு.

. சாவித்திரியிலில்லாதது உலகில் இனி வரப்போவதில்லை என அன்னை கூறியிருக்கிறார். அதன் ஓர் அம்சத்தின் இரு பகுதிகள்.

. சாவித்திரியின் அந்தராத்மாவின் பகுதிகள் எழுந்து வெளிவந்து, "நானே உன் ஆன்மா, நான் சொல்வதைக் கேள்" எனக் கூறி அவளைத் தடம் பிறழ முயல்கிறார்கள். சாவித்திரி ஒரு முறை தவறாது, "நீ ஆன்மாதான்.ஆனால் என் ஆன்மாவின் பகுதி" எனக் கூறி அவற்றிடமிருந்து தப்பிக்கின்றாள்.

. எமன் தானே முழுமுதற் கடவுள் என சாவித்திரியிடம் கூறி இறைவனுக்கு எதிரான மனித வாதங்களை ஒன்றுவிடாமல் கூறுகிறான். வரம் தர விரும்புகிறான். அவை முடிவான பதில்கள். ஆனால் சாவித்திரிக்கு அவை முடிவானவையல்ல. ஸ்ரீ அரவிந்தம் மனிதனுக்கும், மாயாவாதிக்கும், நாத்திகனுக்கும், பௌத்தத்திற்கும், யதார்த்தவாதிக்கும், மனித இலட்சியத்திற்கும், சுயநலத்தின் சிகரமான மோட்ச இலட்சியத்திற்கும் சொல்லும் பதில்களை, சாவித்திரி எமனுக்குக் கூறுகிறாள்.

. அதன் விளைவாக எமன் தோற்கவில்லை.

. இருளின் தலைவன் ஒளியின் பிழம்பாக மாறுகிறான்.

. மாறியபின்னும் அறிவாளிகள் உலகில் முழுமையை அறியாமல் பகுதியை முழுமையெனக் கண்டதால் சொல்லும் வாதங்களைக் கூறுகிறான்.

. எமன் தோல்வியை ஒப்புக்கொள்ளவேயில்லை; கடைசிவரை ஒப்புக்கொள்ளவில்லை என்பது அகந்தையும், மனமும் ஆயிரம் தோல்விகட்குப்பின், தங்கள் தோல்வியை ஏற்று வாயால் கூறுவதில்லை என்ற உண்மையை காவியநயத்துடன், சொல்லாமல் பகவான் சுட்டிக்காட்டி வலியுறுத்துவது, "இன் சொலாலன்றி இரு நீர் வியனுலகம் வன் சொலால் என்றும் மகிழாதே'' என்று காட்டுகிறது.

****


 



book | by Dr. Radut