Skip to Content

10.பணவரவு

பணவரவு

சேர்த்தால் பணம் சேரும், செலவு செய்தால் எப்படிச் சொத்து சேரும் என்பது நம் வாழ்க்கை அனுபவம். செலவு செய்தால் பணம் வரும், சேமித்தால் பணவரவு குறையும் என்பது அன்னை கூறியது. இதைச் சோதனை செய்ய எவரும் தயங்குவர். பணத்தைச் செலவு செய்து சோதனை செய்யவேண்டும் என்பதால் பயம் வரும். அன்னை சொல்லியிருப்பதால் அது சத்தியமாக இருக்கும் என்பதை ஏற்க, ஏற்றுச் செயல்பட - செலவுசெய்ய - அன்னை மீது அதிக நம்பிக்கைவேண்டும். அந்த நம்பிக்கையுடன் செயல்பட்டவரின் அனுபவம் பின்வருமாறு:

  • எங்களுக்கு என ஒரு வீடு வாங்கவேண்டும் என்றபொழுது கையில் சேமிப்பு குறைவு, வருமானம் குறைவு, மதரையும் தெரியாது.
  • 1993இல் ஏதோ ஓர் உந்துதலில் HDFC இல் 20 வருஷ லோன் என்று 1½ இலட்சம் கடன் வாங்கி தாம்பரத்தில் ஒரு flat வாங்கினோம். மாதம் ரூ. 2024/- கட்டவேண்டும். இது போக இருவர் சம்பளத்தில் மீதி சிறுதொகை.
  • நான் சிக்கனமாகவே வளர்க்கப்பட்டதால், மிகவும் சிக்கனமாகவே செலவு செய்வேன்.
  • 1997இல் நண்பர்கள் மூலம் மதரைத் தெரிந்துகொண்டேன்.
  • Pay commission வந்து வருமானம் உயர்ந்தது.
  • நான் பழக்கம் காரணமாகச் சிக்கனத்தைச் "சிக்" எனப் பிடித்துக் கொண்டேன்.
  • "பணம் செலவாகிக் கொண்டேயிருந்தால் அளவுகடந்து பெருகும்'' என்று அன்னை கூறியதைப் "பேரொளியாகும் உள்ளொளி"யில் படித்தேன்.
  • அது அன்னைச் சொல்லானதால் நம்பி என் சிக்கனத்தை மாற்றி செலவு செய்ய ஆரம்பித்தேன்.
  • அவசியமான செலவை தயங்காமல் செய்; விரயம் செய்யாதே; ஆடம்பரச் செலவு செய்யாதே என்றிருந்தது.
  • நிலைமை மாறியது, வருமானம் தொடர்ந்து பெருகியது.

20 வருஷத் தவணைக்கு வாங்கிய வீட்டுக் கடன் அன்னையின் அருளால் ஏழு வருஷத்தில் அடைந்தது.

***** 

Comments

10.பணவரவு Point 6   - 

10.பணவரவு
 
Point 6   -  "சிக்'   -   "சிக்"
point 7   -  Line 1 - பெருகும்'' என்று   -    பெருகும்''  என்று
Point 7   -  Line 2 - உள்ளொளி'யில்   -   உள்ளொளி"யில்
 



book | by Dr. Radut