Skip to Content

02. லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

The spiritual man is not the end; the supramentsl being would evolve.

ஆத்மா முடிவன்று; சத்தியஜீவியம் பிறக்கும்.

  • மனிதனே முடிவு என்பது விஞ்ஞானம் கண்டது.
  • கிருத்துவ மதம் மனிதனுக்கு ஒரே பிறவி எனக் கூறுகிறது.
  • இந்து மதம் மனிதன் இறைவனின் படைப்பின் சிகரம்எனக் கருதுகிறது.
  • ஸ்ரீ அரவிந்தம் மனிதனுக்குப்பின் சத்தியஜீவன் பிறப்பான் என்கிறது.
  • சிருஷ்டியில் மனம் - முனிவர் - ரிஷி - யோகி - தெய்வம்-சத்தியஜீவியம் - ஜீவியம் - சத்புருஷன் - பிரம்மம் என்ற நிலைகள் உள்ளன.
  • மனிதப் பிறவி மனம் என்ற நிலைக்குரியது.
  • உபநிஷதம் விஞ்ஞானமயகோசம், ஆனந்தமயகோசம் என்பவற்றைப் பற்றிப் பேசுகிறது. எனவே விஞ்ஞானமயப்புருஷன் (சத்தியஜீவன்), ஆனந்தமயப்புருஷன் உண்டு என்றாகிறது.
  • ஆத்மா மனத்தைக் கடந்தது; சத்தியஜீவியம் ஆத்மாவைக் கடந்தது.
  • சித்தி பெற்ற மனிதனை ஜீவன் முக்தன் என்கிறோம்.
  • அவனே spiritual man ஆத்மாவுக்குரிய பிறவி.
  • மனிதன் மனத்தால் செயல்படுவதைப்போல் spiritual man ஆத்மாவால் செயல்படுபவன்.
  • அவனை தவசி, முனி, ரிஷி, யோகி என்கிறோம்.
  • அவற்றைக் கடந்த சத்தியஜீவியத்திற்குரியவன் - சத்தியஜீவன் - அடுத்த species என்கிறார் பகவான்.
  • கட்டை வண்டிக்குப்பின் காரும், இரயிலும், விமானமும் வந்தன.
  • எதையும் முடிவு எனக் கூறமுடியாது என்பதை அவை காட்டுகின்றன.
  • மனிதன் இன்ப, துன்பங்கட்காளானவன், கர்மத்திற்குக் கட்டுப்பட்டவன்.
  • சத்தியஜீவனுக்கு இன்பமுண்டு, துன்பமில்லை; கர்மமில்லை.
  • மேலும் ஆன்மீக மனிதன் சாட்சிப்புருஷனுக்குரியவன்.
  • சத்தியஜீவன் வளரும் ஆன்மாவுக்குரியவன்.
  • அவன் வாழ்வு அற்புதமானது.
  • அற்புதம் அன்றாட நிகழ்ச்சியாகும் அவன் வாழ்வில்.
  • சிருஷ்டி வேதனைக்காக ஏற்பட்டதன்று; சந்தோஷத்திற்காக ஏற்பட்டது.
  • அதுவே சிருஷ்டியின் இரகஸ்யம்.
  • பிரம்மம் அனந்தம்; சிருஷ்டி பிரம்மம்; எப்படி மனிதன் முடிவாக முடியும்? மனிதனும் முடிவல்லன்; சத்தியஜீவியமும் முடிவன்று. முடிவில்லை என்பதே முடிவு.

*******

Comments

02. லைப் டிவைன் - கருத்து

02. லைப் டிவைன் - கருத்து
 
Point 16 - கட்டுப் பட்டவன்     -   கட்டுப்பட்டவன்



book | by Dr. Radut