Skip to Content

03.எங்கள் குடும்பம் II

எங்கள் குடும்பம் II

(சென்ற இதழின் தொடர்ச்சி.....) 

  • இது சரி. ஆனால் யோசனையே மௌனத்தையும் தரும்.
  • அன்னையை நம்புகிறோம், அன்னையை மட்டும் நம்புகிறோம் என்பதே ஒரு முறையாகவும் மாறும்.
  • அன்னை மீதுள்ள நம்பிக்கை உணர்வாலானது. "அன்னையை நம்புவது" என்பது ஓர் எண்ணம், முறையாக மாறும் வாய்ப்புண்டு.
  • அப்படி நம்பிக்கை முறையாக மாறினால், ஏதோ ஓர் அளவில் அது பலிக்கத் தவறும்.
  • நமது நம்பிக்கை எண்ணமானதா, உணர்வாலானதா என்ற தெளிவு நமக்கிருப்பதில்லை. அன்னை நினைவு எண்ணமாக வருவது எண்ணம், மனநிறைவாக வருவது உணர்வு, உடல் புல்லரிப்பது உடல் உணர்வு. நம்பிக்கை ஜீவனிலிருந்தால் எவரும் பயப்படும் நேரம் பயம் எழாது. அதை நாடி, விரும்பி, நெருங்கத் தோன்றும்.
  • பணம் வந்தால் பிள்ளைகள் அன்னையை ஏற்பார்கள் என்ற தாயாரின் நினைவு சரியில்லை. பணம் வந்தால் பணத்தை ஏற்பார்கள், அன்னை மறந்துபோகும், மறந்தேபோகும். அன்னை மூலம் வருவது எதையும் நம்பினால் அன்னை விட்டுப்போகும்.
  • மனத்தால் தாயார் கம்பனி, பிராஜெக்ட், டெய்வான் ஆகியவற்றை மறந்து அன்னையை மட்டும் நினைத்து, அன்னையை நாடினால், அன்னையில் கரைந்தால், குடும்பம் அனைத்தையும் மறந்து அன்னையை நாடத் தாயாரை ஏற்பார்கள் என்ற உண்மை ஓரளவு தெரிந்தாலும் தாயாருக்கு அதன் முழுஉண்மை மனத்தைத் தொடவில்லை.
  • தாயார் மனம் யோசனையிலிருக்கிறது; அன்னையிலில்லை. அதனால் எழும் ஐயம் இவை.
  • இக்கருத்து தாயாருக்கு நிதர்சனமானால், தாயார் உட்சோதியில் கலப்பார்; உலகத்தை மறப்பார். தாயாருடைய பக்தி அவ்வுயர்வு பெற்றதன்று. அதுவே பிரச்சினை. பிரச்சினை யோசனையில்லை, முயற்சியில்லை, அதிகபட்சமில்லை, சமர்ப்பணமோ, சரணாகதியோ இல்லை.
  • இவ்யோசனையின் பலனாக தாயாரின் யோசனை அழிந்தால், யோசிக்கும் சக்தியே அழிந்தால், அது அவருடைய முன்னேற்றம்.
  • யோசனை தாயாருக்குக் குடும்பத்தினரைவிட்டகன்று, அன்னைக்குப் போய் தன்னை இழப்பது, கரைவது நல்லது.
  • இம்மனநிலையில Let Thy will be done, not my will என்று இடைவிடாமல் சொல்லமுயன்றால்,
    • அது மறந்துபோகும். நமக்கு அதில் நம்பிக்கையில்லை என்றாகும்.
    • சொல்லமுடிந்தால், சிரமத்துடன் சொல் எழும்.
    • அச்சொல்லை மீறி வழக்கமான நம் செயல் திமிறிக் கொண்டு போகும்.
    • அப்படிப் போகும் பொழுது சொல்லும் முயற்சியைத் தொடர்ந்தால், அச்சொல் மீறிப்போகும் வேகத்தைத் தணிப்பதைக் காணலாம்.
    • பலன் மிகச்சிறியதானாலும், தொடர்ந்த பலனாக இருப்பதாகக் காணலாம்.

இதுவரை உயர்ந்தது பெரியது, வந்து தவறியது பெரியதன்றோ!

மேலும் நான் செய்யக்கூடியதில்லையா?

அதையும் சரணம் செய்வது மேலன்றோ!

எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகப் புரிகிறதோ,

அவ்வளவுக்கவ்வளவு கேள்விகள் எழுகின்றன.

முடிந்தவரை அமைதியாக இருப்பது நல்லது.

அமைதிக்குத் தூய்மை வேண்டாமா?

தூய்மையான அமைதியைக் கருதினால் விரக்தி வருகிறது.

இதுவரை தாயாரின் மனநிலையை 15 அல்லது 17 வகைகளாக விவரித்தேன். மேலே மேலும் 7 வகைகளான கேள்விகள் மூலம் தாயார் மனநிலையைக் காண்கிறோம். இவற்றை ஏற்கனவே ஒரு முறை கண்டோம்.

  • இனி நடந்த நிகழ்ச்சிகள் மூலமும் இவற்றை ஆராய்ச்சி செய்தால் நாம் ஆராய்ச்சியின் முடிவுக்கு வருவோம்.
  • ஒரு காரியத்தை எப்படிச் சிறப்பாகச் செய்வது என்பதன் மூலம் ஆராயலாம்.
  • அது, குடும்பம் உயர என்ன செய்யலாம் என்ற கேள்வி.
  • குடும்பம் 3-ஆம் நிலையிலிருந்து உயர்ந்து 15-ஆம் நிலைக்கு வந்துவிட்டது. அதற்குமேல் நாம் எப்படி 15-ஆம் நிலைக்குச் சிறப்பாக உயர்த்துவது என்று சிந்திக்கவேண்டாம். 15-ஆம் நிலைக்கு வந்தது பலன். எப்படி வந்தது என அறிவது process முறை. ஏன் வந்தது என்பது மூலம் essence.
  • பலனைப் பெறுவது உடலால் நடப்பது; உயிரால் பெறுவது.
  • முறையை அறிவது மனத்தால் பலனைப் பெறுவது.
  • முறையின் மூலத்தை அறிய ஆத்மாவால் அல்லது வளரும் ஆத்மாவால் அறியவேண்டும்.
  • ஆத்மாவால் அறிய ஆத்மவிழிப்பு நிஷ்டை மூலம் பெறவேண்டும்.
  • ஆத்மாவால் அறிவது மூலம். அது முறையை அறிவதை விட 100 மடங்கு, 1000 மடங்கு சிறப்பானது.
  • வளரும் ஆன்மாவால் அறிவது முடிவற்ற முன்னேற்றத்தை நம்முள் எழுப்புவது.
  • முறையை அறிய, மனத்தால் அறிய, சிந்திக்கவேண்டும்.
  • மூலத்தை அறிய, ஆத்மாவால் மூலத்தை அறிய, சிந்தனையற்று தியானம் வரவேண்டும்.
  • முறையை அறிந்தால் 15-ஆம் நிலைக்குச் செல்வம் வந்ததுபோல், இதர அம்சங்கள் - செல்வாக்கு, பண்பு, திறமை, பிரபலம் - வரும்படி நடக்கலாம்.
  • மூலத்தை அறிந்தால் நாம் எதையும் உற்பத்தி செய்யலாம். ஏழ்மையைச் செல்வமாக்கலாம், சிறுமையைப் பெருமையாக்கலாம்.
  • மூலத்தின் நோக்கத்தை அறிய வளரும் ஆன்மாவைச் சமர்ப்பணத்தால் அடையலாம்.
  • பலனும், முறையும் வாழ்வை வளப்படுத்தும்.
  • மூலம் நம்மைக் காலத்தைக்கடந்து நாம் செய்வது நாடெங்கும் பலிக்கச்செய்யும்.
  • மூலத்தின் நோக்கத்தை வளரும் ஆன்மா மூலம் அறிந்தால், அன்னை நம்மைக் கருவியாக்கி பரிணாமத்தின் மூலம் நம் வாழ்வில் உலகுக்காகச் செய்ய முயல்வது பலிக்கும்.
  • நாம் இதுவரை கண்ட 20, 24 கேள்விகள் வாழ்வில் நாம் பெற்ற choice வாய்ப்பை அந்த, அந்த நிலையில் சுட்டிக்காட்டுவதாகும். வாய்ப்புகள் சிறிய பலனாகவும், நிரந்தரமான பலனாகவும், பெரிய பலனாகவும், பணமாகவும், தொழிலாகவும், அறிவாகவும், சேவையாகவும்,அன்னைக்குரிய கருவியாகவும் வருகின்றன. இவற்றை ஏற்கும்பொழுது வாழ்க்கைக்கேயுள்ள அடிப்படைக் கேள்விகளை நிகழ்ச்சிகள் நடைமுறையில் பதிலளிக்கின்றன. உதாரணமாக,
    • Hotmail கண்டவன் எளியவனாலும் எதுவும் முடியும் என்று உலகுக்கு நிரூபித்தவன்.
    • Bill Gates புதியது வருவதை அனைவரும் அனுபவிக்கும்படிச் செய்ய முயன்றால் உலகம் இதுவரை உற்பத்தி செய்த மார்க்கட்டை ஒரு 10 அல்லது 15 வருஷத்தில் உற்பத்தி செய்யலாம் என நிரூபித்தார்.
    • டாட்டாவும், பிர்லாவும் 150 ஆண்டுகளில் செய்ததை இன்று 15 அல்லது 20 ஆண்டுகளில் செய்யும் வாய்ப்பு இந்தியாவில் உள்ளது என அம்பானியால் அறிந்தோம்.
    • Hole in the wall என்ற சோதனை மனிதனுக்கு எவரும் கற்பிக்காவிட்டால், அவனே கற்பது அதிகம், அதிகமானது எனக்காட்டுகிறது.
    • கிளன்டோமான் முறையை ஒரு பள்ளியில் பின்பற்றினால் குழந்தைகள் 3 வயதிலேயே 6 வயது படிப்பைப் பெறுகின்றன எனக்கண்டார். திருச்சியில் ஒருவர் அம்முறை எல்லாத் தாய்மாருக்கும் கிடைக்கும் ஏற்பாடு செய்தார். 45 தாய்மார்கள் சேர்ந்தனர். அவருடைய மாத வருமானம் ரூ.20,000 ஆயிற்று. அனைவரும் பெறும் அமைப்பு மார்க்கட்டை 10 அல்லது 100 மடங்கு விரிவுபடுத்துகிறது. அது பெறுபவர் பெரும் பணம். நாடு பெறுவது நானிலம் அறியாதது. 100 ஆண்டுகளில் நாடு பெறும் கல்வி முன்னேற்றத்தைப் 10 ஆண்டுகளில் நாடு பெறும்.
    • மேற்சொன்னவை நாட்டில் நடந்தவை. நம் மனம் பழைய கேள்விகளைக் கேட்காமல் புதிய உற்சாகத்துடன் வரும் வாய்ப்புகளைப் பெற்றால், 1000 ஆண்டு முன்னேற்றம் அப்பொழுதே வரும் என நாம் 100 ஆண்டுகளாகப் பார்க்கிறோம். பார்த்தாலும் சிந்திப்பதில்லை.
      • சிந்தனை பெரியது - மனத்திற்குரியது.
      • மௌனம் அதனினும் பெரியது - ஆத்மாவுக்குரியது.
      • மௌனமான சிந்தனை, மௌனமான செயல் - வளரும் ஆன்மாவுக்குரியது என்பதால் முடிவான பலன் முதலிலேயே வரும்.
  • நடந்த ஒரு நிகழ்ச்சியை, பலன், முறை, மூலம், மூலத்தின் நோக்கம் என நாம் ஆராய்ந்தால், என்ன கேட்கக்கூடாது, என்ன செய்யக்கூடாது, இப்பொழுது என்ன செய்கிறோம், ஏன் அதைச் செய்கிறோம், நாம் என்ன செய்யமுடியும், எப்பொழுது செய்யலாம், நமக்கு அன்னை வாழ்வில் கொடுப்பதென்ன, நாம் எந்த அளவில் பெறுகிறோம், நம்முன் உள்ளதென்ன எனத் தெரியவரும். இந்த ஆராய்ச்சியின் முடிவு,
    • வேண்டும் என்பது கிடைக்கும்.
    • வேண்டாம் என்பது கிடைக்காது.

நாம் அன்னையின் குழந்தைகளாக இருக்கவேண்டும்; அர்த்தமற்ற பூஜ்யங்களாக இருக்கக்கூடாது. அன்னை வேண்டும் என்ற அன்பராக இருக்கவேண்டும்; பலன் மட்டும் வேண்டும் என்ற பாமரராக இருக்கக்கூடாது எனப் புரியும். 3-ஆம் நிலை முதல் 15-ஆம் நிலைக்கு வந்தது, அங்கிருந்து 80-ஆம் நிலைக்கு வந்து காப்பாற்றத் தவிப்பது, பார்ட்னர்ஷிப், பவர் பிராஜெக்ட் ஆகியவற்றைத் தாயார், கணவர், பிள்ளைகள், பெண், ஊருடைய சூழல், குடும்பத்தாரின் மனச்சூழல், நாம் அன்னையை விரும்பி ஒதுக்குவது, அறியாத அறியாமை, தெரிந்து விரும்பும் அறியாமை, சோம்பேறித்தனம் கண்ணில் படாதது, சுயநலம் இலட்சியமாகத் தெரிவது, ஆகியவை வெளிவரும். இதைப் படிக்கும் அன்பர்கள் இதே கருத்துகளைத் தங்கள் வாழ்வில் பொருத்திப் பார்த்தால், "பகவானும் பக்தனும்" என்ற நூலிலும், The Life Divine பற்றிய பல கட்டுரைகளிலும் வரும் எல்லாக் கருத்துகளும் வாழ்வில் புரியும்.

  • வாழ்வில் புரிவது அதிர்ஷ்டம், பேரதிர்ஷ்டமும் கூட.
  • ஆத்மாவில் புரிவது அருள்.
  • வளரும் ஆத்மாவில் புரிவது பேரருள்.

அதிர்ஷ்டம், அருள், பேரருள் அன்பரை அறைகூவி அழைக்கிறது.

சிறியவன் தாயார் தனக்கு வேட்டுவைப்பதாக நினைக்கிறான்:

  • தாயாரும், பெண்ணும் சேர்ந்தால் தமக்குச் சந்தேகமாக இருக்கிறது என்கிறான் சிறியவன்.
  • குடும்பத்தில் எவரும் அடுத்தவரைச் சந்தேகப்படமாட்டார்கள்.
  • சந்தேகப்பட்டால் குடும்பமில்லை.
  • வெளியில் நாம் பேசும்பொழுது நம்மை மற்றவர்கள் நம்பவேண்டும் என்று நினைத்தால், "என்ன, இதுவும் உங்கள் வீடு என்று நினைத்தாயா?" என்பார்கள். வீட்டில் நம்பிக்கையுண்டு, வெளியில் அந்த நம்பிக்கையிருக்காது.
  • "எனக்கு வேட்டுவைக்கிறீர்கள்" என வெள்ளை மனதுடைய சிறியவன் கேட்கிறான் எனில் the psychological entity of the family குடும்பம் என்ற உணர்வே இவ்வீட்டில் ஏற்படவில்லை எனப் பொருள்.
  • "சந்தேகப்பட முடியாத இடம் குடும்பம்" என்பதே இவர்கள் அறியாதது.
  • தாயாருக்கு அன்னை பலனை மற்றவர்கட்குக் கொடுக்க சிரமமிருக்கிறது எனில் குடும்பமே இன்னும் ஏற்படவில்லை என்று தெரிகிறது.
  • சந்தேகம் என்பது மனம் ஒட்டாத இடத்திற்குரியது (psychological distance).
  • வீடு கல் கட்டிடம்; குடும்பம் மனத்தாலான ஓவியம். மனமே ஒட்டவில்லை எனில் குடும்பமேது?
  • பொதுவாகப் பிள்ளைகள் தாயாரை அதிகமாக நம்புவார்கள்.
  • தாயாரையே நம்பாத பையன் பொல்லாதவன். சிறியவன் பொல்லாத குணமுடையவனில்லை. பொதுவாகக் கெட்ட பையனில்லை. அவனுக்கே சந்தேகம் வருகிறது எனில் குடும்பம் physical level ஜடஉணர்வுள்ளது என்று நாம் அறிகிறோம்.
  • இவர்கள் குடும்பமாக உருவாக நாளாகும். அடுத்த தலைமுறை அல்லது அடுத்த ஜென்மத்தில் குடும்பம் ஏற்படும். அடுத்த ஜென்மத்தில் பெறவேண்டியதை அன்னை இப்பொழுதே தந்துவிட்டார்.
  • கம்பனியில் வேட்டுவைப்பவன் கம்பனிக்குத் துரோகி.
  • கம்பனியில் புது ஆள் எடுத்தால் அவன் சரியில்லாமல் வேட்டு வைப்பான்.
  • குடும்பத்தில் புது ஆள் எடுப்பதில்லை. எல்லாம் இருப்பவர்களே.
  • இருப்பவர்களே "வேட்டுவைப்பவர்" எனப் பையன் நினைக்கிறான்.
  • அதாவது பையன் குடும்பத்தைச் சேர்ந்தவனில்லை; குடும்பமில்லை.
  • நம்பமுடியாது என்பது நல்ல குணமில்லாதது.
  • வேட்டுவைப்பது என்பது கெட்ட குணம், துரோகமிருப்பது.
  • துரோகம் குடும்பத்திலில்லை. ஆனால் இருப்பதாக நினைப்பவன் ஒருவனிருக்கிறான்.
  • குடும்பம் துரோக மனப்பான்மையினின்று முழுவதும் விடுபடவில்லை. துரோகம் தரித்திரத்திற்குரியது.
  • துரோகத்திலிருந்து விடுபடவில்லை எனில் இன்னும் தரித்திரம் பிடித்துக்கொண்டுள்ளது.
  • குடும்பத்தினர் அலட்சியம், மட்டமான பேச்சு, அவநம்பிக்கை, பொறுப்பில்லாத குணம் ஆகிய அனைத்தும் தரித்திரத்தின் சின்னங்கள்.
  • தரித்திரத்தின் சின்னங்கள் போகுமுன் அன்னை அதிர்ஷ்டத்தைக் கொடுத்துவிட்டார்கள். காப்பாற்றுவது கஷ்டமாக இருக்கிறது.

உருண்டு விழுந்த கடிகாரம் தரையில் விழவில்லை, சிறியவன் பிடித்துக்கொண்டான்:

  • கடிகாரம் உருண்டு விழுகிறது எனில் எடுப்பவர் கண்மூடியாகச் செயல்படுகிறார்.
  • செய்தது தாயார். அவர்தாம் நிலைகுலைந்திருந்தார். தமக்கு வெட்கமில்லைஎனக் கண்டு வெட்கப்பட்டார்.
  • மனம் நிலைகுலைந்திருந்ததால் புத்தகங்களை அடுக்கிவைக்கப்போனார்.
  • மேஜை மீது புத்தகங்கள் கலைந்திருந்தன – physical disorder.
  • அவர் மனம் நிலையற்றிருப்பதும், மேஜை கலைந்திருப்பதும் ஒன்று.
  • அது வீட்டின் ஆன்மீகச் சூழல்,
    • அடிப்படை physicalயில் ஒழுங்கில்லை.
    • தலைமைக்குத் தலையில் நிதானமில்லை என்று காட்டுகிறது.
  • தவறியபின் கடிகாரம் உடையாமலிருக்கும் படிப் பையன் பிடித்துக்கொள்வது அருள் செயல்படுவது.
  • அருள் வீட்டில் ஜடமான சூழலில் சூட்சுமமாகச் செயல்படுகிறது (subtle physical atmosphere).
  • இதை எப்படிப் பயன்படும்படிப் புரிந்துகொள்வது?
  • வெட்கம் என்பது பண்பு. அது இல்லை என்று தெரிவது துரோகமில்லை என்று சந்தேகம் தெரிவிப்பதுபோன்றது.
  • ஆன்மீகச்சூழல், ஆன்மா பவித்திரமாக வீட்டில் செயல்படுவதைக் காண்பிக்கவேண்டும் எனில், டிராயரில் பொருள்கள் பல ஆண்டுக்கு முன் வைத்தவை சுத்தமாக, ஒழுங்காக அடுக்கிவைக்கப்பட்டு இருப்பதையும், கரைபடக் கூடிய பொருள்களும் கரைபடாமல், கிழிந்துபோக வேண்டியவை கிழிந்துபோகாமலும், உளுத்துப்போகக் கூடியவை நன்றாகவுமிருப்பது. அது ஆன்மா நம் மனத்தின் ஆழத்தில் தூய்மையாக இருப்பதாக அர்த்தம்.
  • நம் எதிர்வீட்டில் திருடன் எவருமில்லாமலிருந்த நேரம் புகமுயன்றதை அதன் பின்வீட்டு மொட்டைமாடியிலிருந்தவர் பார்த்துக் குரல் கொடுத்து ஓட்டிவிட்டார் என்பது நம் வீட்டு ஆன்மீகச்சூழல் எதிர்வீட்டில் செயல்படுவதாக அர்த்தம்.
  • நம் வீட்டில் நல்ல சூழலிருந்தால் கடிகாரம் உருண்டுவிழாது.
  • மேஜை அலங்கோலமாக இருக்காது.
  • மனம் நிலையற்றிருக்காது.
  • இப்படிப்பட்ட சூழலில் அப்படிப்பட்டவை நடக்கின்றன எனில் சூழலுக்கு சக்தி அதிகம்.
  • இக்குடும்பத்திற்கு இச்சூழல் அதிகம்.
  • Mother's Grace எனப் பையன் சத்தமிடுவது குரலில்  கேலியனாலும், grace என்பது உண்மை.
  • அவனையும் அருள் தானிருப்பதை உணர்த்துகிறது.

ஏதோ நடக்கிறது கணவருக்குத் தெரிகிறது. எவ்வளவு பெரியது வந்தாலும், அதையும் தன் அதிகாரத்திற்குக் கணவர் உட்படுத்துகிறார்:

  • மாமா ஆக்ராவுக்குச் சிறியவனை அழைத்துப் போகவேண்டும் என்ற சமயம் கணவர் வெளியிலிருந்து வந்தவர், "என்ன விசேஷம், ஏதோ நடக்கிறாப் போலேயிருக்கிறது" என்றார்.
  • மாடிக்குச் சோகமாகப் போன சிறியவன் மாமா போனில் பேசியது தெரியாவிட்டாலும், முகம் மலர்ந்துவிட்டான்.
  • தங்கள் சம்பந்தமாய் எங்கு, எது நடந்தாலும் அவரவர்க்குச் சூட்சுமமாய் தெரிகிறது.
  • அதுபோல் அன்னை நம் விஷயத்திலும், சூழலிலும், உலகிலும் செயல்படுவதை நாம் அறிய முயல்வதில்லை. முயன்றால் அருள் நிலையாகச் செயல்படும்.
  • பார்ட்னர்ஷிப்பும், பவர் பிராஜெக்ட்டும் கணவருக்காக வரவில்லை. கணவரைக் கடந்து தாயாருக்குப் பலிக்க பார்ட்னர், பெரியவன் மூலம் வருகிறது. அவையெல்லாம் எப்படி வந்தாலும், "நான் கணவன் என்பதால், என் மனைவியின் நிலை எவ்வளவு உயர்ந்தாலும், அவள் எனக்குட்பட்டவளே" என்று கணவர் நடப்பது கதையில் குறிப்பிடத்தக்கது.
  • அது கணவர் மனம் மட்டுமன்று; ஆண்கள் மனம் மட்டுமன்று; அகந்தையின் குணம். 3 வயதுக் குழந்தைக்கும் இடம் கொடுத்தால், தன்னிஷ்டப்படிமட்டும் நடக்கவேண்டும் என்று கூறும். சமூகத்தில் கடைசி நிலையில் சாப்பாட்டிற்கும் கஷ்டப்படும் நிலையில் உள்ளவன் (priest) பூசாரி. அவனுக்கு நாம் பணிந்துபோகும் நேரம் அவன் பூரண அதிகாரத்தைக் கொண்டாடுவான். அவனுக்கு பூஜை விஷயங்கள் தெரியும் என்பதால் தன்னை உயர்வாகக் கருதுகிறான்.
    • நமக்கு ஒரு விஷயம் - பணம், படிப்பு, சட்டம், மருந்து, சுலோகம் - தெரியும் என்பதால் நான் உயர்ந்தவன் என மனிதன் கருதுகிறான்.
    • சட்டம் படித்த வக்கீலும், மரவேலை தெரிந்த தச்சனும், "விஷயம் தெரிந்தவர்கள்". சட்டமும், மரவேலையும் information செய்தி என்ற அளவில் சமம். அதனால் உயர்வோ, தாழ்வோ இல்லை. ஒரு கோடி ரூபாய் உள்ள பெட்டியைத் தூக்கிப் போகின்றவனும், பெட்டி நிறைய துணியைத் தூக்கிப் போகின்றவனும் போர்ட்டரே. பணத்தைத் தூக்கிப்போவதால் உயர்வு வாராது.
    • மனிதன் அடுத்த மனிதனைவிட மாறுபட்டவன்; உயர்ந்தவனோ, சிறியவனோ இல்லைஎன்பது அகந்தை அழிந்த மனத்திற்குரியது.
    • மடசாம்பிராணி என்பதற்குச் சிறந்த அறிகுறி அவன் தன் மேதாவிலாசத்தை நினைத்து மகிழ்வான். "எவருக்கும் என் அறிவு விளங்கவில்லை. என் அறிவை விளங்கும் அளவுக்கு எவருக்கும் அறிவில்லை" என்று மடையன் நினைக்கிறான். எல்லோரும் நினைப்பது அதுவே. கணவர் அப்படியே நினைக்கிறார். அன்பர் அப்படி நினைக்க உரிமையற்றவர்.

பெரியவன் பொறுப்பில்லாதவன்:

  • பெரியவன் கெட்டிக்காரன், ஆனால் பொறுப்பில்லாதவன்.
  • கெட்டிக்காரத்தனம் சுயநலத்தால் வரும்.
  • பரநலமில்லாமல் பொறுப்பு வாராது.
  • பெரிய குடும்பத்தில் அனைவரும் பொறுப்புடனிருப்பார்கள்.
  • சிறிய குடும்பத்தில் "நானில்லை"என ஒதுங்குவார்கள்.
  • பொதுவாகப் பொறுப்புள்ள இடத்தில் சந்தேகம் எழாது.
  • பொறுப்புள்ளவர் வயிற்றுவலி குமாஸ்தாவை வதைக்கமாட்டார்.
  • பொறுப்பும் கருணையும் உடனுறைபவை.
  • பொறுப்பில்லாதவன் சாமர்த்தியமானால், பிறருக்குச் சாமர்த்தியம் இல்லை எனச் சுட்டிக்காட்டுவான்.
  • சுட்டிக்காட்டுவது நாளடைவில் கேலியாக மாறும்.
  • பொறுப்பில்லாதவன் பிறர் பெருமையைக் கண்டுகொள்ளமாட்டான்.
  • அதைக் கண்டுகொள்வது தனக்குக் குறைவு என நினைப்பான்.
  • பொறுப்பில்லாத திறமைசாலிக்கு எது வந்தாலும் தன் திறமைக்கு வந்ததாக நினைப்பான்.
  • பெரியவனுக்குப் பொறுப்பில்லை என்பது தகப்பனாரிடமிருந்து நேரடியாக வந்தது. தாயார் அன்னைக்குப் பொறுப்பேற்கவில்லை என்பது மகனில் பொறுப்பின்மையாகத் தெரிகிறது.
  • பொறுப்பில்லாதவனுக்குப் பொறுப்புள்ள வேலையை அருள் கொடுத்து அவனைத் திருவுருமாற்ற முயல்கிறது.
  • பொறுப்பில்லாதவன் கேலி செய்வதுடன், பிறரிடம் குறை காண்பான், பிறரை வேலை செய்ய அனுமதிக்கமாட்டான்.
  • தன் வேலை முடிந்தால்போதும், பிறர் வேலை கெடவேண்டும் என முயல்வான்.
  • பொறுப்பு என்பது அனைவர் வேலையும் கூடிவர ஆர்வம்கொள்வது.
  • கெட்டிக்காரத்தனம் வேலைக்கு மட்டும் உரியது. பொறுப்பு மனிதர்களையும் சேர்த்துச் செயல்படுவது.
  • கெட்டிக்காரன் சம்பளத்திற்கு வேலை செய்வான். சம்பளத்தில் ஓய்வுபெறுவான்.
  • பொறுப்புள்ளவன் முதலாளியாவான்.
  • சம்பளக்காரன் முதலாளியாவது மாற்றம்; சமூகத்தில் திருவுருமாற்றம்.
  • தாயார் யோகத்திருவுருமாற்றத்தை நாடினால் பெரியவனுக்குச் சமூகத்திருவுருமாற்றம் வரும்.
  • பொறுப்பற்றவன் வேலை செய்தால் வேலையில் குறை வாராது. வேலை முடிந்தும் பலன் வாராது.
  • கணவர் ஒரு சமயம் பெரியவன் கோபப்பட்டபொழுது - ஜாதிபுத்தியைத் திட்டியபொழுது - தானும் அவன்போலவே நடப்பேன் என்றார்.

வரன் வந்ததும் தெரியாது, தவறியதும் தெரியாது:

  • அரசியல், இராணுவத்தில், பெரிய உத்தியோகங்கட்கு நாணயமும், திறமையும் உள்ளவர் கிடைப்பதில்லை.
  • மேல்மட்டத்திலுள்ளவர் அதன்கீழ் எந்த மட்டத்திலும் பொறுப்பானவர் rising steers இருக்கிறார்களா என கவனித்தபடி இருப்பார்கள். அவர்கட்கு வரும் செய்தியைப் பொருத்து தாம் குறிப்பிட்டவரை பொறுக்குவார்கள். வந்த செய்தி சரியில்லை என்றால் நினைவை மாற்றிக்கொள்வார்கள். இழந்தவருக்கு வந்ததும் தெரியாது, போனதும் தெரியாது.
  • சாவித்திரியில் ஒரு பகுதி: மேல் லோகங்களில் பழுத்த ஆத்மாக்கள் உலகில் பிறக்கப் பக்குவமான கருவைத் தேடுகிறார்கள். கருத்தரித்த முதல் 3 மாதங்களில் அவர்கள் உள்ளே வருவார்கள் என்று கூறுகிறதுஅப்படித் தேடும்பொழுது கருவுற்ற பெண் தேடும் ஆத்மாக்களுக்கு எதிரான காரியங்களைச் செய்தால், அவர்கள் மனம் மாறி விடுவார்கள்.
  • அன்னை இக்குடும்பத்திலிருப்பதால் மேல்மட்டக் குடும்பங்கள் இதைக் கவனித்தன. கீழ்மட்டக் குடும்பமானாலும், இவர்கள் மீதுள்ள பிரகாசத்திற்காக இவர்களை நாடினர். அதே சமயம், குடும்பம் தரக்குறைவாக நடந்துகொண்டதால், அவர்கள் மனம் மாறினர்.
  • சமூகத்தின் அடியில் திறமையும், நாணயமுள்ள நபர்கட்கு மேல்மட்ட ஆதரவு மிகப்பெரிய அளவில் கிடைக்கும். வந்ததும் தெரியாது, போனதும் தெரியாது என்றால் அக்குடும்பம் பெரும் தகுதியும், சிறிய பழக்கங்களையும் உடைய கீழ்மட்டக் குடும்பம் என்று நாமறிய வேண்டும்.
  • வந்தது தெரிய வழியுண்டா? தவறுவதைத் தடுக்க வழியுண்டா?
  • வருவது தெரிய சூட்சுமமாகச் சூழலைக் கவனிக்கவேண்டும். நிச்சயமாக அறிகுறிகள் அனைத்தும் தெரியும்.
  • தெரிந்தபின் அனைவரும் அவ்வறிகுறிகளைக் காண முயலவேண்டும்.
  • எக்காரணத்தைக்கொண்டும் அவ்வறிகுறிகள் மறையாதபடி பேச்சும், நினைவும், செயலும் மாறி அமையவேண்டும்.
  • பெரிய கம்பனி பார்ட்னர்ஷிப்பை விட பெரிய சம்பந்தம் கிடைப்பது அரிது.
  • சிறிய குடும்பத்திற்குப் பெரிய சம்பந்தம் வந்தாலும் அங்கு அவர்கட்குத் திருப்தியாக நடந்து, வந்ததைக் காப்பாற்ற முடியாது.
  • இந்தக் குடும்பத்திற்கு எந்தப் பிரச்சினையுமில்லாமல், வந்தது தெரியாமல் வந்தது, போனதும் தெரியாமல் போய்விட்டது.
  • அன்பர் பெறுவது வாழ்வு தருவதில்லை. வாழ்வு திறமைக்கும், தகுதிக்கும் தருகிறது.
  • அன்னை அதிர்ஷ்டத்தைக் கொடுத்துவிட்டு நாம் திறமையும், தகுதியும் பெறக் காத்திருக்கிறார்.

தாயார் சுயநலம் என ஏற்கிறார்:

  • உண்மை என்பதை மனம் பலவாறு அறியும்.
  • மனம் இல்லாததை நம்பிவிட்டால் அது இதமாக இருந்தால் உண்மையை அறிய விரும்பாது.
  • வேதரிஷிகளும், உபநிஷதரிஷிகளும் உடலின் இருளைக் கண்டு, மிரண்டு, அதைத் தங்களால் சமாளிக்க முடியாது என அதனின்று விலகி, மோட்சத்தை நாடினர்.
  • மனிதன் பஞ்சம் வந்தால் நரமாமிசம் சாப்பிடுவான் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் நான் அதையெல்லாம் அறியப் பிரியப்படவில்லை என்று மனம் கூறுகிறது.
  • என் தாயாரே, தம்பியே என்னை ஏமாற்றலாம். அதையெல்லாம் கிளப்பாமல் நான் போய்ச்சேருகிறேன். நானே அதைச் செய்வேன். அதெல்லாம் சரி. அவற்றையெல்லாம் என் கண்ணால் பார்க்காமல் என் வாழ்நாள் முடியட்டும் என்றே மனம் விழையும். ரிஷிகள் அப்படியே மோட்சத்தை நாடினர். உண்மை அதைக் கடந்தது. தண்ணீர் சாப்பிடவும், கால் கழுவவும் ஒரே பாத்திரத்தை ஜெயிலில் கொடுத்தபொழுது பகவான் தாம் அதை அருவெறுப்பைக் கடக்கும் சோதனையாக எடுத்துக் கொண்டதாகச் சொன்னார். ரிஷிகள் காண  மறுத்ததை பகவானும், அன்னையும் காணவிழைந்தனர். புதுப் பாதையை ஏற்படுத்துபவர் என்பதால் அவர்கள் உடல் தழலாக வெந்ததை ஏற்று யோகம் செய்தனர். அவர்கள் வகுத்த பாதை என்பதால் பின்வருபவர்க்கு வேதனையில்லை. அவர்களையும் கடந்துசென்றால்தான் வேதனை.
  • அன்னையை முன்வைத்துச் செல்லும் பாதையில் வேதனையில்லை. அகந்தை முனைந்தால் வேதனையுண்டு.
  • தாயார் இக்குடும்பத்திற்கு இவ்வளவும் செய்தபின் பிள்ளை,
    • அம்மாவுக்குப் பெரிய இடத்துக் கல்யாணத்திற்குப் போக வேண்டும்.
    • அம்மாவும் நம்மைப்போல் சுயநலம் என்கிறான்.
    • அவன் கூறுவது ஆன்மீக உண்மை.
    • அது உண்மையானாலும் தாயார் அதைக் கசந்து ஏற்கிறார்.
    • கசப்பு வாழ்க்கைக்குரியது.
    • கசப்பைத் தருவது அகந்தை.
    • அகந்தையை விட்டகன்று அன்னையிலிருந்தால் கசப்பில்லை.
    • கசப்பு இனிப்பாகும்.
    • தாயார் கசப்பை அனுபவிக்கும் நிலையிலிருக்கிறார். அன்னையை ஏற்கும் நிலையிலில்லை.
    • அதை மகன் சுட்டிக்காட்டுவது வாழ்வு.
    • கசப்பைவிட, கசப்பைச் சுட்டிக்காட்டுவது கொடுமை.
    • அதைக், கசந்தாலும், உண்மைஎன ஏற்கும் மனப்பான்மை தாயாருடையது.
    • அந்த மனப்பான்மையே குடும்பத்தை முன்னேற்றுவது.
    • அதற்கு ஒரு ஞானம் தேவை.
    • அந்த ஞானம் பெறத் தேவையான உண்மை சத்தியஜீவிய உண்மை.
    • தாயாருக்கு அது உண்டு.
    • தமக்கு அது உண்டு எனத் தாயார் அறியவில்லை.
    • வாழ்வு, வாழ்வின் உண்மை என்பது அதையும் பெற்ற பிள்ளையும் சுட்டிக்காட்டுவான் என்பதாகும்.
    • அதைச் சுட்டிக்காட்டாதது பண்பு.
    • அப்பண்பில்லாத குடும்பம் இது.
    • கசப்பு, வேதனை வருவது அப்பண்பு இல்லை என்பதால் தான்.
    • சுயநலம் சுடும்.

பார்ட்னர் உயர்ந்தவர், நம்மைச் சமமாக நடத்துகிறார்:

  • உயர்ந்தவர் சமமாக நடத்துவது உலகிலில்லை. உயருமுன், உயர்ந்தவராகத் தம்மைக் கருதி பிறரை மட்டமாக நடத்துவதால் ஆபீஸிலும், வீட்டிலும் பிரச்சினைகள் அபரிமிதமாக எழுகின்றன.
  • வரப்போகும் உயர்வு மனிதனைத் தாங்கமுடியாதபடி நடக்கச் செய்கிறது.
  • ஒரு சொல் புதிதாகக் கற்றால், அதைச் சரியாக உச்சரிக்க முடியாவிட்டாலும், அதைப் பயன்படுத்தாமலிருக்க  முடியாது. புதிதாக வீடு கட்டியவர் எதைப் பேசினாலும் அதனுள் வீடு வந்துவிடும்.
  • இந்த எண்ணம் வளர்ந்தால், "நாங்கள் உயர்ந்தவர்கள். உலகில் மற்ற அனைவரும் அழியவேண்டும்" என்று மாறி தங்களை முழுவதும் அழித்துக்கொள்ளும் என்பது ஹிட்லர் ஜெர்மனியில் நடத்திக் காட்டியது.
  • உயர்வு என்ற எண்ணம் உலகை அழிக்கும் வரை உயரும்.
  • இன்றைய பயங்கரவாதத்தின் அடிப்படை அதுவே. இது இல்லாத உயர்வு, இருப்பதாக நினைப்பது.
  • உயர்வு என்பது உண்மையானால், உலகம் அதை ஏற்றுப் போற்றும் பொழுது, அப்பாராட்டைப் பெற்று அனுபவிப்பவன், அவ்வுயர்வுக்கு உரியவரில்லாதவரைச் சமமாக நடத்துவது உலகில் இல்லை.
  • நக்கீரன் சிவபெருமானுடன் சம அந்தஸ்து கொண்டாடவில்லை. தன்னை அவரைவிட உயர்வாக நினைத்துப் பெருமானிடம் பேசினான்.
  • உண்மையான உயர்வு உறையும் பொழுது, மற்றவரைச் சமமாக நடத்துவது வெறும் பண்பன்று, ஆன்மாவுக்குரிய பண்பு.
  • ஆன்மா அனைவருக்கும் உள்ளது. எளியவனின் ஆன்மா, வலியவனின் ஆன்மாவுக்குச் சமம் என்றறிந்தாலும், தன்னை உதாசீனம் செய்வதை அது பொறுத்துக் கொள்வது ஆன்மீகப்பண்பு. பிறரைச் சமமாக ஏற்பதும் அதுவே.
  • உயர்வைக் கருதினால், உலகம் நம்மைத் தேடி வரமுடியாது. பள்ளத்தை நோக்கியே நீர் ஓடும்.
  • சீனுவை "போ, அப்புறம் வா" எனப் பெரியவன் சொல்லியபொழுது பார்ட்னர் அவனை அழைத்துப் பேசுவதும், அவனை வீடு வரை கொண்டுபோய் விட்டுவருவதும் செயற்கையாக நடிக்கக் கூடியதன்று.
  • நாம் தாழ்ந்துபோனால், உலகம் நம்மை நோக்கி, பள்ளத்தை நாடி நீர் வருவதுபோல், வரும். நாம் உயர்ந்திருந்தால், அதுவும் உயர்வில்லாத பொழுது, உயர்ந்திருந்தால், நம்மை நோக்கி எவரும் வரமாட்டார்கள்.
  • தாழ்ந்தவன், தாழ்ந்து பணிபவன், பண்பால் பணிவை ஏற்பவன், உயர்வான்; தொடர்ந்தும் உயர்வான்.

உயர்வு பண்பின் பணிவு.

  • கணவருக்கோ, பெரியவனுக்கோ இல்லாத பண்பை பார்ட்னர் மூலம் அருள் கருவியாக்குவதும், அதையும் கணவர் அதிகாரமாகப் பெறுவதும், வெட்கமில்லை எனவும் அறியாமல் வீராப்புடன் பேசுவதும், அதையும் கடந்து தாயாருக்காக அருள் செயல்படுவதும், மின்சாரம் மிகச் சிறிய தொடர்பால் உள்ளே நுழைவதுபோலாகும்.
  • பார்ட்னர் பெரியவனை "நம்ம பையன்" என்கிறார். பாங்க் பார்ட்னரை "நம்ம client" என்கிறது. பாங்க் சேர்மன் பார்ட்னரைப் பாராட்டுகிறார். பிரெஞ்சுக்காரருக்கு அறிமுகப்படுத்துகிறார். பிரெஞ்சுக்காரர் பார்ட்னரை அடுத்த புராஜெக்ட்டும் போடும்படிக் கேட்கிறார். பம்பாய்க் கம்பனி சரக்கை வாங்குகிறது. டெய்வான் கம்பனி பாங்குக்குப் பார்ட்னரை அறிமுகப்படுத்த முன்வருகிறது. இவை பண்பின் பணிவு பெறும் பரிசு

குடும்பம் 3 அல்லது 4ஆம் நிலையிலிருந்து 15ஆம் நிலைக்கு வந்துவிட்டது:

  • முதல் நிலை கடை குமாஸ்தா என்றால் பியூன் நிலை 2 ஆகும். 3-ஆம் நிலை சர்க்கார் குமாஸ்தாவானால் 4-ஆம் நிலை சர்க்கார் ஆபீஸர் நிலையாகும். இன்று சர்க்கார் குமாஸ்தாவுக்கு ரூ.5000/- சம்பளம். ஆபீசருக்கு ரூ.10,000/- சம்பளம். பெரும்பாலும் இந்த ஆபீசர்களில் பாதிப் பேர் கெஜட் பதவிக்கு உயர்ந்து ஓய்வு பெறுவார்கள். அது இல்லாமல் ஓய்வுபெறுபவர் பாதி. ஒரு சிலர் சஸ்பென்ஷன், டிஸ்மிஸல் மூலம் உத்தியோகத்தை இழந்து கடைத்தெருவில் வேலை தேடுவார்கள். 15-ஆம் நிலை இவர்கட்கு வந்ததற்குக் காரணம் கணவர் வேலையில் தொடர்ந்த உயர்வுபெற்று 20,000 ரூபாய் சம்பளம் பெறுகிறார். பெரியவன் இன்ஜீனியராக அவனும் ரூ.20,000 சம்பளம் பெறுவதால் வருமானத்துடன் அந்தஸ்தும் உயர்ந்து பல நல்ல காரணங்களால் வசதியும், மரியாதையும் பெருகிவிட்டன. கணவருக்கு 47-ஆம் வயதில் இது நடந்தது அதிர்ஷ்டம். இவர்களுடைய உறவினர், நண்பர்கள் சுமார் 100 பேரில் இந்த அளவு முன்னேறியவர் 6 பேர். அவர்களுள் ஒருவர் 100 ஏக்கர் குடும்பம். அடுத்தவர் தகப்பனார் டிபுடி கலெக்டர். இவருக்கு அதுபோன்ற சொத்தோ, அந்தஸ்தோ இல்லை. கணவருடைய தகப்பனார் சர்க்கார் குமாஸ்தாவாக இருந்தவர்.

செல்வமோ, அந்தஸ்தோ இல்லாமல் இவர் அளவுக்கு முன்னுக்கு வந்தவர் இவரறிந்தவர் எவரும் இல்லை. இவர் பெற்றது அன்னையின் அருளால் மட்டுமே என்பது இவர் நன்றாக அறிந்தது.

  • இப்படி முன்னுக்குவந்த குடும்பங்கள் முடிந்தால் நல்ல சம்பந்தம் வழி தங்கள் அந்தஸ்தைப் பாதுகாப்பார்கள்.
  • குடும்பம் பண்பற்றதெனில் அம்முயற்சியில் இவர்கள் பண்பு வெளிவந்து எந்த நல்ல வரனும் அருகே வாராது. இது நல்ல சம்பந்தமாகாது எனப் பெயர் எடுத்து விடுவார்கள்.
  • பிள்ளைகள் சம்பாதிக்க ஆரம்பித்தால் பெற்றோர் கட்டுப்பாட்டிலோ, சொந்தக் கட்டுப்பாட்டிலோ இருப்பது அதிர்ஷ்டம். அவர்கள் தவறாகப் போகும் பாதைகள் ஏராளம். எந்த வழியில் தவறாகப் போனாலும், அப்பையனுக்குத் திருமணமில்லை. செய்தால் தாழ்ந்த குடும்பங்களில் தான் செய்ய முடியும்.
  • காலம் மாறுவதாலும், பிள்ளைகள் பெற்றோரைவிட அதிகம் படிப்பதாலும், சுதந்திரம் சென்ற தலைமுறையிலிருந்ததைவிட அதிகம். 1972க்குமுன் தமிழ்நாட்டில் மதுவிலக்கிருந்தது. அதன்பின் மது வியாபாரம் வளர்வதால், இளைஞர்கள் மதுவை நாடினால், வெளிவருவது சிரமம். மதுவை நாடினால், அது அடுத்தகட்டமாக பெண்ணை நாடும். இதற்குப் பணம் வேண்டும். அதற்காக இலஞ்சம் பழக்கமாகும். சுமார் 60% குடும்பங்கள் இவ்வழியில் போகின்றன. அவற்றுள் பாதி சில ஆண்டுகளில் திரும்பி வருகின்றன. அப்படி வந்தபின் இருப்பதைக் காப்பாற்றுவதே பெரிசு. பெரும்பாலும் காப்பாற்ற முடியாது.
  • தகப்பனாருக்கு அவசரம், எரிச்சல், சுயநலமிருந்தால் பிள்ளைகள் மது, புகை, பெண்ணை அண்டுவார்கள்.
  • அவசரமும், எரிச்சலும் போதுமான சக்தி - தெம்பு - இல்லையென்பதால் வருகிறது. தெம்பில்லாதவனால் தொழிலைச் சிறப்பாகச் செய்ய முடியாது. தொழில் சிறப்பாக இருந்தால் வீண் வேலைக்கு மனம் போகாது. தொழில் மந்தமானால், மனம் மற்ற விஷயங்களை நாடும்.
  • இந்த நாளில் மட்டுமன்று, எந்த நாளிலும் அடுத்த தலைமுறை தவறான பாதைக்குப் போகவில்லை எனில் அதற்குரிய காரணங்கள் பல:
    • தவறு செய்யப் பணமில்லை என்றால் தவறு வாராது.
    • உள்ளூரிலேயே இருந்து குடும்பப் பெயர் தடை செய்தால் ஓரளவுக்குக் கட்டுப்பாடு இருக்கும்.
    • பெற்றோரின் சிறப்பான குணம் பிள்ளைகட்கு வந்து கட்டுப்படுவது உண்டு.
    • இவையெல்லாம் இல்லாதவர் தவறாமல் கெட்டுப்போவார்கள்.
    • இவையெல்லாம் இல்லாத வரை அருள் காப்பாற்றுகிறது என்பதை அன்பர்கள் பூரணமாக உணர்வதில்லை.

பிள்ளைகள் சொந்தக் காரியத்தில் உஷாராக இருப்பார்கள் (shrewdly selfish):

  • அனைவரும் பிரம்மம்; அதனால் அனைவரும் சமம் என்பது தத்துவம்.
  • இந்த உண்மை நமக்குப் புலப்படுவதில்லை. அதனால் அதைத் தத்துவம் என விட்டுவிடுகிறோம்.
  • சொந்தக் காரியத்தில் அனைவரும் உஷாராக இருப்பதில் மனிதர்கள் சமமானவர்கள்.
  • அப்படி உஷாராக இல்லாவிட்டால், அந்த நிலையிலிருந்து வாழ்வு சரியும்.
  • வாழ்வு நிலை உயர்ந்ததோ, தாழ்ந்ததோ, அவரவர் உள்ள நிலையினின்று கீழிறங்க மனிதன் லேசாக இடம் கொடுக்கமாட்டான். அப்போராட்டத்தில் அனைவரும் சமம்.
  • உடல்நலம் அதுபோல் இறங்கினால் வியாதி வரும். உடல் வியாதியை எதிர்த்து முழுமூச்சுடன் போராடும். அவ்விஷயத்தில் அனைவர் உடலும் சமம்.
  • அப்போராட்டத்திற்கு உள்ளே ஒரு மையம் உண்டு.
  • மனத்தின் அம்மையத்தில் எவரும் அடுத்தவரை அனுமதிக்க மாட்டார்கள்.
  • அந்த இடத்தில் தாம் நின்று அன்னையை உருக்கமாக ஏற்பது பக்தி.
  • அந்த இடத்தினின்று தாம் விலகிக் கரைந்து அன்னையை நிரந்தரமாகப் பிரதிஷ்டை செய்பவர் அன்னை விரும்பும் அன்பர்.
  • அங்கு மனம் அவ்வளவு வலுவாக இல்லை. உணர்வு அம்மையத்தை ஆக்ரமித்துக் கொண்டிருக்கும். அதற்கு அடிப்படை உடல்.
  • அவ்வுடலும் அன்னையை ஏற்கச் சம்மதித்தால் மனிதன் சத்திய ஜீவனாவான்.
  • பிள்ளைகள் உஷாராக இருப்பது சுயநலம்.
  • அப்படி உஷாராக இருப்பதால் அன்னைக்குத் தீவிர அன்பராக முடியும் என்பதால் உஷாராக இருப்பது சாதகமாக முடியும்.
  • "எனக்கு அன்னை வேண்டாம், டீமில் இடம் வேண்டும்" என்று சிறியவன் கூறுவதும், "நானும் அப்படித்தான் பேசுவேன்" எனக் கணவர் பெரியவனிடம் சொல்வதும், "பலனில்லாவிட்டால் ஏன் அன்னையை வணங்கவேண்டும்" எனப் பெண் கேட்பதும், "நடப்பதைப் பேசுவோம்" எனப் பெரியவன் சொல்வதும், எவர் மனதிலும் அன்னையில்லை என்பதைக் காட்டுகிறது.
  • அவர்களை அன்னையை நினைக்கச் சொல்வது, "உங்களுக்குப் பலனுண்டு" என்று கூறினால் தான் சொல்ல முடியும். இல்லையெனில் அவர்களிடம் அன்னையைப் பற்றிப் பேசமுடியாது.
  • பிரம்மம் தன்னுள் தான் மறைந்து, மறைந்ததை மறந்த நிலையில் உழலும்பொழுது, அருள் மேலிருந்து செயல்பட்டு மறந்ததை நினைவுபடுத்த முயன்றால், அந்நினைவு தம்மைத் தொந்தரவு செய்வதாக விரைந்து விலக்குவது சொந்தக் காரியத்தில் உஷாராக இருப்பதாகும். பகவான் அதை Taste of ignorance "அறியாமையின் ருசி" என்கிறார்.
  • கணவனோ மனைவியோ இந்த இடத்தில் மனைவிக்கோ, கணவனுக்கோ இடம்தர நினைக்கவும்மாட்டார்கள். அது மற்ற மனிதர்க்குரிய இடமில்லை. தெய்வத்திற்குரிய இடம்.
  • அந்த இடத்தை அன்னைக்குக்கூட கொடுக்க மனம் சம்மதிக்காது.
  • எதற்கு மனம் சம்மதிக்காதோ, அதைச் சந்தோஷமாக ஏற்பது பக்தி, நம்பிக்கை.

காரியம் கூடிவராததும் அருளன்றோ (ஆக்ரா போக மாமா அழைத்தது):

  • காரியம் கூடிவருவது அருள், கூடிவாராதது அருள், ஏனெனில் ல்லாச் செயல்களும் அருள்.
  • கூடிவாராதது அருள் என்று மனம் ஏற்றவுடன், கெட்டுப்போன காரியம் கூடிவரும்.
  • காரியம் கூடிவருவது ஆதாய மனப்பான்மை எனக் கருதலாம். அன்னை லோகத்தில் கூடிவாராத காரியம் என்பதில்லை என்பதால், கூடிவாராததும் அருள் என நினைத்தவுடன், மனம் அருளுலகத்திற்குச் செல்கிறது என்பதால் காரியம் கூடிவருகிறது.
  • பெரியவன் சிறியவனை இச்சொல்லைக் கூறி கேலிசெய்கிறான்.
  • கேலியினால் அருள் விலகி காரியம் கெட்டது தெரிகிறது.
  • கேலியில் உள்ள அருள் உயிர்பெற்று காரியத்தைக் கூடிவரச் செய்கிறது.
  • காரியம் விஷயமன்று, விஷயம் அருள்.
  • பெரியவன் சிறியவனைக் கேலி செய்யவில்லை - தரித்திரம் அருளை விரட்டுகிறது.
  • கதையில் வரும் ஒவ்வோர் உரையாடலையும் இப்படிக் கருதினால்,
    • அருளை அழைக்கும்பொழுது காரியம் பெரியதாக நடப்பதும்,
    • எதிராகப் பேசுவதனால், காரியம் கெடுவதையும் காணலாம்.
    • ஒவ்வொரு சொல்லையும் .√ அல்லது × என மார்க் செய்யலாம்.
  • கேலி மனப்பான்மை தரித்திரம் என்றோம்.
  • தரித்திரம் அறியாமை.
  • தரித்திரமான அறியாமை, தெரியாத அறியாமை போன்ற மற்ற அறியாமைகளினின்று வேறுபட்டது.
  • தரித்திரமான அறியாமை இருள்.
  • அது பொருள்களை அகற்றும் இருள்.
  • அது உடல், உயிர் வாழமுடியாத இருள்.
  • இருள், அறியாமை, இயலாமை ஆகியவை பல்வேறு வகைகளான தரித்திரம்.
  • ஒவ்வொன்றிற்கும் உரிய சொல்லுண்டு.
    • இருள் - சோகம்
    • அறியாமை - நம்பிக்கையின்மை
    • தரித்திரம் - கேலி.
    • இயலாமை - சந்தேகம்
  • நமக்குள்ள அத்தனைக் குறைகளையும் எடுத்து எந்த குறைக்கு எந்தவிதமான இருள் உண்டு என அறிவது பயன் தரும்.
  • அப்படிச் செய்யும் ஆராய்ச்சியில் ஆர்வம் வந்தால் ஆராய்ச்சி மூலமே அவ்விருள் வரும்.
  • அங்கும் விசேஷம் இருளிலில்லை. நமக்கு எதில் ஆர்வமுள்ளது என்பதிலுள்ளது.

பெரியவன் 'பெயிலானதும் நல்லது' எனப் பேசுகிறான்:

  • இப்படிப் பேசுவது சாதுர்யம், பேச்சில் சாமர்த்தியமாகப் பேசுவது.
  • சாதுர்யம் என நாம் எதைக் குறிப்பிடுகிறோம்?
  • வசமாக மாட்டிக்கொண்டபின், சந்தர்ப்பத்திலுள்ள சாதகமான விஷயத்தை அறிவது சாதுர்யம்.
  • இதை நல்லவிதமாகவும் அல்லது கெட்டவிதமாகவும் பயன்படுத்தலாம்.
  • பெயிலானதால் நல்லது நடந்தது அருளால் என்பதைப் புறக்கணித்துப் பேசுகிறான்.
  • பாஸ் செய்யவேண்டும் என்றுதான் பரீட்சை எழுதினான். பெயிலானபின் அதுவே மேல் எனப் பேசுகிறான்.
  • எது அவனில் இதைச் செய்கிறது?
  • மனிதன் தன் தவற்றைச் சில சமயங்களில் ஏற்பான். அகந்தையும், அசுரனும் ஒருபொழுதும் அதை ஏற்கவேமாட்டார்கள்.
  • அதை ஏற்பது அவர்கள் தாம் சாக மருந்து சாப்பிடுவதாகும்.
  • இந்தக் குடும்பத்திற்கு நல்லது மேலும் நடக்க அவனுடைய அகந்தை மழுங்கிச் சாகவேண்டும்.
  • "நான் உள்ள நிலைமையே சரி. அதுவே எனக்குப் போதும்" என்ற மனநிலையிது.
  • உள்ளதை இரசிப்பது அறியாமையின் ருசி taste of ignorance.
  • அருள் நினைவுபடுத்துகிறது. "அறியாமையை விட்டெழுந்து ஞானத்திற்கு வா" என அருள் அழைப்பதை மறுக்கும் மனப்பான்மை பெரியவனுடையது.
  • பெயிலான பின் வீட்டில் அருள் சூழலிருப்பதால், அதே பிரமோஷன் இங்கேயே கிடைத்தது. அச்சூழலில்லாவிட்டால், என்ன நடந்திருக்கும்?
  • பெரியவனால் அதை யோசிக்க முடியவில்லை.
  • என்ன நடந்தது, எது தவறியது, எப்படி இவைகள் நடக்கின்றன அவனால் யோசிக்க முடியவில்லை.
  • தான் சரி என மட்டும் பேசமுடிகிறது.
  • யோசிக்க முடியாதவன் அறிவில்லாதவன்.
  • அவனுக்குத் திறமையிருக்கிறது; அறிவில்லை.
  • திறமையிருந்து அறிவில்லை என்பது இருளின் திறமை.
  • கணவர், பிள்ளைகளிடம் இருளின் தெளிவைக் காண்கிறோம்.
  • தாயார் அருளின் தெளிவை அளிக்க முயல்கிறார்.
  • அதை மறுக்கும் மனநிலை, ஆத்மநிலை பெரியவனுடையது.
  • தாயாருக்கு அருளை வளர்க்கும் வேலை மட்டுமில்லை; இருளை அழிக்கும் வேலையும் உண்டு.
  • இருளை அழித்து அருளை வளர்க்கும் வேலைக்குத் திருவுருமாற்றம் எனப் பெயர்.

கொடுப்பது அன்னை; பெறுவது நாமல்லவா!

  • அன்னைக்கு personal, impersonal, universal, supramental, divine தனிப்பட்டது, பொதுவானது, பிரபஞ்சத்திற்குரியது, சத்தியஜீவியம், தெய்வம் என்ற அம்சங்களுண்டு.
  • நாம் குடும்பத்தினின்றும், சமூகத்தினின்றும், சர்க்காரிலிருந்தும், வாழ்விலிருந்தும், இயற்கையினின்றும், தெய்வத்திடமிருந்தும் பெறுபவை பலவகைகள்.
  • குடும்பம் நம்மைக் கட்டாயப்படுத்தி படிக்கவைத்து, நல்லவனாக்கி, வேலை வாங்கிக்கொடுத்து, திருமணம் செய்கிறது. நாம் பாராமுகமாக இருந்தாலும் நம்மைக் கட்டாயப்படுத்தி இவற்றைக் குடும்பம் செய்கிறது.
  • சமூகம் நம்மைத் திருமணம் செய்துகொள்ள அதன் அபிப்பிராயத்தால் கட்டாயப்படுத்துகிறது. குடும்பம்போல் கட்டாயப்படுத்துவதில்லை.
  • தடுப்புஊசிகளைச் சர்க்கார் கட்டாயமாகப் போட்டு, காலராவிலிருந்து நம்மைக் காப்பாற்றுவது போல் கல்லூரியில் சேரக் கட்டாயப் படுத்துவதில்லை. கல்லூரிப் படிப்பு வாய்ப்பு; தடுப்புஊசி கட்டாயம்.
  • மோட்டார்பைக் விளம்பரம் நம்மை பைக் வாங்கத் தூண்டுகிறது; கட்டாயப்படுத்துவது நம் ஆசை. கம்பனி கட்டாயப்படுத்துவதாகப் பேசினாலும், அது கட்டாயமில்லை.
  • ரேஷன்கார்டு பெறுவது வேறுவகையான கட்டுப்பாடு. நமது தேவை கட்டாயப்படுத்துகிறது. சட்டம் கட்டாயப்படுத்துவதில்லை. கார்ட் இல்லாமல் அரிசி கிடைக்காது.
  • நாம் ஆசையால், ஆர்வத்தால், அவசியத்தால், கவர்ச்சியால், கண்மூடியும் செயல்படும்போது வாய்ப்பு, கட்டாயம், சந்தர்ப்பம் எனப் பல அம்சங்கள் தனித்தும், சேர்ந்தும் செயல்படுகின்றன.
  • அன்னையிடம் இத்தனை அம்சங்களும், மேலும் பல அம்சங்களும் உள்ளன. நாம் எந்த அம்சத்துடன் தொடர்புகொள்கிறோமோ, அந்த அம்சம் மூலம் அன்னை செயல்படுகிறார்.
  • நானும் இந்த ஊரில் தானே இருக்கிறேன். எனக்கு ஒரு டிகிரி கொடுக்கக் கூடாதா என காலேஜில் சேராதவன் கேட்பதில்லை. நாம் அன்னையிடம் அப்படியும் எதிர்பார்ப்பதுண்டு.
  • நாம் மறந்தாலும், அன்னை மறக்காமல் செயல்படுவது, ஒரு காலத்தில் மறக்கமுடியாத அளவு அன்னையை நாம் நினைத்திருக்கிறோம் என்பதால்.
  • என்றுமே அன்னையைப் பலனுக்காக மட்டும் நினைப்பவர், தாம் அன்னையை மறந்தபின் ஏன் அன்னை என்னைக் காப்பாற்றவில்லை எனக் கேட்பார்.
  • சமர்ப்பணம் செய்து விதையை வாங்கியவர், சமர்ப்பணம் செய்து விதைத்தபின், தண்ணீர் பாய்ச்சாமல் ஊருக்குப் போய்விட்டால், மழை பெய்து பயிரைக் காப்பாற்றும்.
  • வேலை போனபின் அன்னைக்கு நேரடியாகச் சொல்லியனுப்ப சந்தர்ப்பமிருந்தும் அதையறியாமல் செய்யத் தவறினால், அன்னையே அவரை அழைத்து நேரடியாக விவரம் அறிந்து வேலையைத் திரும்பித்  தருகிறார் எனில், நேரடியாகச் சொல்லியனுப்பாவிட்டாலும் வேலை போனதிலிருந்து மனம் அன்னையிலே இருந்ததால் அன்னை அப்படிச் செயல்படுகிறார்.
  • "நாம்" என்ற நிலையைக் கடந்த மையத்தை அடைந்து அங்குள்ள அன்னையை உள்ளிருந்து அழைத்துவிட்டால் அது கொஞ்ச நாளானாலும், பிறகு தாயார்போல், தெய்வம்போல், சமூகம்போல் தேவைப்பட்ட நேரம், தேவைப்பட்டபடி அன்னை நம்மை மறக்கவில்லை எனக் காணலாம்.
  • அன்னைக்கு ஆயிரம் அம்சங்களிருப்பதுபோல் உலகில் அன்னை மனிதர்களிலும், செயல்களிலும், பொருள்களிலும், நினைவிலும், நிழலிலும், சலனத்திலும், நிஷ்டையிலும், அமைதியிலும் இருப்பதை நாம் எங்கெங்கு, எந்த, எந்த ரூபத்தில் உணர்ந்து பாராட்டினாலும், அதேபோல் அன்னையும் நம்மைப் பாராட்டுவதைக் காணலாம்.
  • நம் அனுபவங்களை ஆராய்ந்தால் அன்னை செயல்படும் வகை, நம்மில் அன்னை செயல்படும் வகை, செயல்படத் தவறும் வகை, அன்னையின் அம்சங்கள் நமக்குத் தெளிவுபடும்.

பாக்டரி வந்ததால் பேசக் கற்றுக்கொள்கின்றனர்:

  • பாக்டரி வந்தபிறகும் பழையபடி பேசுவதை விட இதுமேல்.
  • பாக்டரி வந்தபிறகு "இதுவரை நமக்குப் பேசத் தெரியவில்லை. அது போல் நாமறியாதவை ஏராளம். இனி எனக்குத் தெரியாத நல்லனவெல்லாம் தெரிந்துகொள்கிறேன்" என்பது தெரிந்துகொள்வது மட்டுமன்று; இனி நாம் உயரவேண்டும் என்ற உணர்வு பெறுவது.
  • இந்தக் குடும்பத்திற்கு அது வரவில்லை. பேச்சைப் பற்றி மட்டும் ஒரு நல்ல நினைவு வந்திருக்கிறது.
  • இந்த மாற்றத்திற்கு என்ன அர்த்தம்?
  • நமக்கு நல்லது உரியதன்று, இனி நல்லது வரும்படி நடந்துகொள்வோம் என்ற உணர்வு வரவில்லை. மனம் மாறாமல் ஒரு செயல் மட்டும் மாறுகிறது. தவற்றின் மீது பற்றுள்ள மனம் இது.
  • குடும்பத்தார் அனைவரும் ஒன்றுசேர்ந்து "நாம் இனி மாறுவோம்" என்றால் ஏற்படுவது மாற்றமாக இருக்காது; திருவுருமாற்றமாக இருக்கும். தானே உணர்ந்து மாறும் மாற்றம் திருவுருமாற்றம்.
  • திருவுருமாற்றம் எழுகிறது எனில் மனம் சரணாகதியை ஏற்கிறது எனப் பொருள்.
  • மனிதன், தான் "மனமில்லை, சத்தியஜீவியம்" என உணர்ந்த பின்தான் சரணாகதி வரும்.
  • அவ்வுணர்வு எழுந்தால் அகம், முழுமை, பிரபஞ்சம், சக்தி ஆகியவை தென்படும்.
  • பாக்டரி பொருள், பணம். அது அன்னை மூலம் வருகிறது. ஒளியைத் தாங்கி வருகிறது. ஒளியைத் தாங்கிவரும் பொருள் நம்முடலில், பொருளில் (substance) மாற்றத்தை ஏற்படுத்தவல்லது. அது செய்ததே இம்மாற்றம். நம் உடலின் பொருள் திருவுருமாற பரமனின் ஒளி இறங்கி வரவேண்டும். அதுதவிர வேறெந்த ஒளியாலும் உடலின் இருள் திருவுருமாறாது.
  • பாக்டரி வந்தபிறகு இடக்காகப் பேசுபவருண்டு. அவர் ஆழத்தில் இடக்கானவர். ஒளியை இடக்குப் பெற்று, இடக்கு வளர்கிறது என்று பொருள்.
  • இந்தக் குடும்பத்திற்கு அதுபோன்ற இடக்கில்லை.
  • வருவதைப் பெற்று நம்மை அழித்துக்கொள்ளும் நிலை இவர்கட்கில்லை. வருவதை அலட்சியமாகத் தவறவிடும் தன்மையுடையவர்கள் இவர்கள்.
  • பாக்டரி நிலம்போலில்லை.
  • நிலத்திற்கு அதற்குரிய மதிப்புண்டு - பணத்தின் மதிப்பு.
  • பாக்டரிக்குப் பணத்தைக் கடந்த மரியாதையுண்டு.
  • அதே காரணத்தால் பாக்டரி, நிலம் தாராத தொந்தரவையும் தரும்.
  • பாக்டரியில் சரக்குண்டு.
  • சரக்கின் தரத்தைப் பொருத்து மரியாதை உயரும்.
  • பாக்டரிக்குரியவர் அக்காரணத்தால் கவர்னர்வரை பெரிய மனிதர்களைச் சந்திக்கலாம்.
  • நம்மைவிட உயர்ந்தவர்களுடன் பழகும்பொழுது நம் குறை வெளிப்படையாகத் தெரியும்.
  • பாக்டரியில் தரம் ஏற்படுவது சிரமம்.
  • ஏற்பட்டால் நிலைப்பது அதனினும் சிரமம்.
  • இச்சிரமங்கள் மனிதனை உயர்த்தும்.
  • உயர்வதில் பேச்சு ஒன்று.
  • உடை முக்கியம்.
  • எவரிடம் பழகுகிறோம் என்பதைவிட எவரிடம் பழகக்கூடாது என்பது மிக முக்கியம்.

பெற்ற பிள்ளைக்கும் செய்வதற்கு அளவுண்டு - மட்டமான குடும்பப் பேச்சு:

  • நம் பிள்ளைக்கு நம்மால் முடிந்தவரை செய்யவேண்டும் என்பது நம் அபிப்பிராயம்.
  • இந்த அபிப்பிராயத்திற்கு அடிப்படை நமக்கு நம் பிள்ளை மேல் கடமை, உரிமையுண்டு என்பது.
  • அது குடும்பம், சமூகம், வாழ்வு விதித்த கடமை.
  • அக்கடமைகட்கு அளவுண்டு.
  • அந்த அளவுவரை நாம் கடமையைச் செய்யாவிட்டால் தவறு என்பதுபோல் அந்த அளவைமீறி "கடமை"யை நிறைவேற்ற முயல்வதும் தவறு.
  • நாம் தூங்க வேண்டியது அவசியம்.
  • தூக்கம் வரும்பொழுது தூங்காமலிருந்தால் உடல் சோர்ந்துவிடும்;
  • உடல் நம்மைமீறித் தூங்கும்.
  • தூக்கம் வாராதபொழுது நாம் தூங்க முயன்றால் உடல் தூங்க மறுக்கும்.
  • உடல் தூங்குவதற்கு ஒரு சட்டம் உண்டு. பகலில் உழைத்தால்
  • இரவில் எளிதில் தூக்கம் வரும். பகலில் வேலை செய்யாதவர்க்கு தூக்கம் எளிதில் வாராது. தூங்கினாலும் வேலை செய்த அன்று தூங்கிய அளவு தூங்க முடியாது.
  • தூக்கத்திற்குச் சட்டம் இருப்பதைப்போல் சாப்பிடுவதற்கும், மற்ற எல்லாக் காரியங்கட்கும், குறிப்பாக நாம் நம் பிள்ளைக்கு என்ன செய்யவேண்டும், என்ன செய்ய முடியும் என்று சட்டங்கள் உள்ளன.
  • இந்தச் சட்டங்களை மீற முடியாது. மீறினால் காரியம் தடைபடும். வலியுறுத்தினால் அதற்குரிய தண்டனை கிடைக்கும்.
  • இந்தத் தண்டனையை நமக்கு எவரும் தருவதில்லை; நாமே பெற்றுக் கொள்கிறோம்.
  • நீச்சல் தெரியாதவன் தண்ணீரில் இறங்கினாலும், கரண்ட் ஓடும் கம்பியைத் தெரியாமல் தொட்டாலும் உயிர் போகும், ஷாக் அடிக்கும்.
  • இது தெரியும் என்றாலும், தண்ணீரில் விழுந்து சாவதும், ஷாக் அடித்துக்கொள்வதும் போன்றவை நடந்தபடியிருக்கின்றன.
  • சமூகம் ஒரு சட்டப்படி நடக்கிறது. குடும்பத்திற்கும் சட்டம் உண்டு. எந்த மனிதனும் தம் உடலுக்குரிய சட்டப்படி வாழ்வதைப்போல், அவன் வாழ்வுக்குரிய சட்டம் உண்டு. அந்தச் சட்டத்திற்கு அவன் உட்படவேண்டும். அவனுக்கு அச்சட்டம் கட்டுப்படாது.
  • அவனுக்கே கட்டுப்படாத சட்டம் அடுத்தவருக்குக் கட்டுப்படாது.
  • நாம் அந்தச் சட்டத்தின் எல்லைக்குள் செயல்படவேண்டும்.
  • இந்தச் சட்டங்கள் ஏழு வகை அஞ்ஞானங்களால் விவரிக்கப்படுகின்றன.
  • கவர்னர் பார்ட்டிக்குப் போக எந்த டிரஸ் கிடைக்கும் என்ற சட்டம் பெரியவனுடைய வாழ்வால் நிர்ணயிக்கப்பட்டது. அதை மாற்ற முடியாது.
  • அருள் அன்னைச் சட்டப்படி பவர் பிராஜெக்ட்டைக் குடும்பத்திற்குக் கொடுக்கிறது. குடும்பத்தை அருளின் சூழல் சூழ்ந்துள்ளது. சூழல் அருளின் சட்டப்படி செயல்படும். அது கொடுப்பதைத் தடுக்க முடியாது; கொடுக்காததைப் பெறமுடியாது.
  • மனிதன் இச்சட்டங்களை unconscious ஆக அறிவான். எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்ற அளவில் அறிவான். அவன் அறிந்த அளவுக்கு அவன் செயல்படமுடியும்.
  • அவன் அறிந்த சட்டங்களையோ, அறியாத சட்டங்களையோ மீற அவனுக்கு உரிமையில்லை.
  • நம் பிள்ளைக்கு நாம் அதிகமாகச் செய்யவேண்டும் என்பது நம் ஆசை.
  • நம் ஆசை எந்தச் சட்டத்தையும் மதிக்காது.
  • ஆசை செல்லும் நேரம் உண்டு, செல்லாத நேரம் உண்டு.
  • ஆசை அன்பாகும்வரை அதற்குரிய சட்டப்படி பலன் வரும்.

முதலியார் வீட்டுப் பெண் நல்ல வரனை மறுக்கவேண்டும் என அவள் தாயார் கூறினார்:

  • பெண்ணுக்கு நல்ல வரன் தேடவேண்டும் என்பது குடும்பச் சட்டம்.
  • தாயார் தமக்கு அமைந்ததைவிட நல்ல வரன் தம் பெண்ணுக்கு  அமையக் கூடாது என செயல்படுவது மனித சுபாவத்தின் சட்டம்.
  • முடிவாக நடக்கப்போவது குடும்பச் சட்டமோ, சுபாவமோயில்லை. நடக்கப்போவது வாழ்வுச் சட்டப்படி நடக்கும்.
  • வாழ்வின் சட்டம் என்பது இவ்விரு சட்டங்களின் மோதலின் முடிவு.
  • வாழ்வில் செயல்படும் சட்டங்கள் அனந்தம்.
  • ஒவ்வோர் அசைவும் ஒரு தலைப்புக்குரியது.
  • ஒவ்வொரு தலைப்புக்கும் தனித்தனிச் சட்டங்கள் உள.
  • ஒரு நிகழ்ச்சியில் அவை சந்திக்கின்றன, மோதுகின்றன.
  • அதன் முடிவு பலன்.
  • அன்னை இந்தச் சட்டங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்.
  • தம்மை இச்சட்டங்கட்கு உட்படுத்தி ஓரளவு செயல்படுவார்.
  • அவ்வளவைக் கடந்தால், சட்டம் எதிராகச் செயல்படும்.
  • முதலியார் மனைவி தம் பெண்ணுக்கு வரும் நல்ல வரனைத் தடுக்கலாம்.
  • முதலியாரும், பெண்ணும் அதை ஆமோதிக்கலாம். அதுவே முடிவானால் அது நடக்கும்.
  • அதைக் கடந்த அன்னைச் சூழலிருப்பதாலும், அத்தையின் பிரார்த்தனை அங்கு எழுவதாலும் தாயார் எண்ணம் முடிவன்று.
  • பெண்ணுக்கே வரன் பிடிக்கவில்லை எனில் தாயார் எண்ணம் பலிக்கும்.
  • பெண் தாயாருக்காகப் பேசுவதால், பெண் பேசுவது சொந்த அபிப்பிராயமில்லை.
  • முதலியார் வீட்டுப் பெண்ணுக்குத் தாயாரின் பொறாமையைமீறி நல்ல வரன் அமைவதும், இக்குடும்பத்திற்கு மட்டமான பழக்கங்களைமீறி அதிர்ஷ்டம் வருவதும் ஒன்றே என்பதால் அந்தச் செய்தி குடும்பத்திற்கு வருகிறது.

காரணமில்லாமல் செய்தி வாராது.

  • அக்காரணத்தை நாம் அறிவது வாழ்க்கை செயல்படும் முறையை அறிவதாகும்.
  • வாழ்க்கை இயற்கையின் பகுதி.
  • இயற்கை (பிரகிருதி) ஜீவனின் பிரதிபலிப்பு.
  • ஜீவனோ, இயற்கையோ முழுமையில்லை; இரண்டும் பகுதிகளே.
  • முழுமை என்பது ஜீவனும், பிரகிருதியும் சேர்ந்தது.
  • அம்முழுமை உலகம் ஏற்பட்ட நாளாக இன்றுவரை எவரும் அறியாதது.
  • பகவான் ஸ்ரீ அரவிந்தர் அம்முழுமையை சத்தியஜீவியத்தில் கண்டார்.
  • உலகம் அம்முழுமையை அடையுமானால், சத்தியஜீவன் பிறந்து, மரணம், துன்பம் அழியும்.

நமக்கு நம்மைவிட அன்னை வேண்டும் என்பதே சூட்சுமம்:

  • நமக்கு நாம் முக்கியம், நாம் மட்டும் முக்கியம். நம் உலகில் வேறு எவருமில்லை. எத்தனைப் பேரிருந்தாலும், அவர்களை நாம் நமக்காக மட்டுமே வைத்திருக்கிறோம் என்பதைப் பெரும்பாலோர் அறிவதில்லை.
  • அது தெரிவதற்குத் self-awareness தன்னறிவு வேண்டும்.
  • அவர்கட்கு இத்தலைப்புப் புரியும்.
  • மனிதன் சுயநலம் என்பதால் இப்படியிருக்கிறான் என்று கூறலாம். ஆனால் அத்துடன் விஷயம் முடியவில்லை.
  • Embodied Being மனிதப்பிறப்பு என்பது பிரம்மத்திலிருந்தும், உலகிலிருந்தும் பிரிந்து தான் - அகந்தை - என்ற அனுபவம் பெற ஏற்பட்டதால் இந்த அமைப்பு, இந்த சுபாவம் ஏற்பட்டது என நாம் அறியவேண்டும்.
  • பிரிந்தது சேர்வதே தவம், பரிணாமம்.
  • ஆன்மா மட்டும் ஜீவனிலிருந்து பிரிந்து பரமாத்மாவுடன் சேர்வது தவம்.
  • நம் கரணங்களிலிருந்து ஆன்மா வெளிப்பட்டு அகந்தை கரைந்து  பிரபஞ்சம் முழுவதும் ஜீவன் பரவி பரமாத்மாவுடன் மீண்டும் சேர்வது பரிணாமம்.
  • மனித வாழ்வில் நாம் நம்மை மட்டும் அறிவோமே தவிர வேறெவரையும் அல்லது வேறெதையும் அறியமாட்டோம். இதுஅடிப்படை உண்மை.
  • நம்மைவிட அன்னை முக்கியம் என்பது இந்த நிலையைத் தலைகீழே மாற்றுவதாகும்.
  • அதைச் செய்வது சமர்ப்பணம்.
  • எழுவகை அஞ்ஞானங்களும் கரைந்து பலன் எழுவதால் சமர்ப்பணம் பலிக்கிறது. சமர்ப்பணம் எழுவகை அஞ்ஞானங்களையும் கரைக்கவல்லது.
  • சமர்ப்பணத்தை ஏற்றவராலேயே "நம்மைவிட அன்னை வேண்டும்" எனக் கூறமுடியும்.
  • அன்பராக வாழ்வை ஆரம்பித்தவர் "அன்னை முக்கியம்" எனக் கூறுவது யாத்திரை முடிந்துவிட்டதாக அர்த்தம்.
  • தாயார் அன்னையைவிட குடும்பம் முக்கியம் என்றிருக்கிறார்.
  • குடும்பத்திற்காக எதையும்விட அன்னை முக்கியம் என்ற தாயார், அன்னை மட்டும் வேண்டும் என்று கூறும் மனநிலையிலில்லை.
  • அன்னைக்குள் குடும்பம் உள்ளது என்று அன்னையை ஏற்பதும், அன்னை மட்டும் வேண்டும் என்றாகாது.
  • குடும்பத்தை விலக்கி, அன்னையை நாடுவதாக இதைப் புரிந்துகொண்டால் சரியானது. ஆனால் அது தவறன்று.
  • மனம் அன்னையை மட்டும் நாடிப் பெற்றபின் அதனுள் உள்ள எதை நம்மை அன்னை ஏற்கச் சொல்கிறாரோ, அதை ஏற்பது தலைப்புக்குரிய மனப்பான்மை.
  • சூட்சுமத்தைச் சூட்சுமமாகப் பிடித்துக்கொள்வது பக்தி.

பார்ட்னர் பிறந்த ஊர் பண்பான ஊர்:

  • நாம் பேசும் மொழி நம் குடும்பம், ஊர் பேசும் மொழி; நம்முடையது  மட்டுமன்று.
  • பண்பான இதயத்தில் அன்னை அதிகமாகப் பலிப்பது உண்மை. அன்னை முழுவதும் பலிக்க பண்பும் தடை.
  • பண்பில்லாமலிருப்பதைவிட, பண்பு அன்னைக்குகந்தது என்பதைப் போல் அறிவு, திறமை, அழகு, அன்பு, உடல்நலம் ஆகிய அனைத்தையும் கூறலாம்.
  • அன்னை நம் ஆசைகளைப் பூர்த்தி செய்வதால், மறந்துபோன ஆசைகளைப் பூர்த்திசெய்வதால், ஆழ்ந்த ஆசைகளைப் பூர்த்தி செய்வதால், ஆசை அன்னையை அடைய ஒரு கருவி என்று கூறக் கூடாது.
  • எறும்புப்புற்றும், சூரியமண்டலமும் சமம் என்றாலும், அன்னை சூரியமண்டலத்தின் மூலம் எளிமையாகச் செயல்படுவார்.
  • ரூபம் சக்தியை வெளிப்படுத்துகிறது என்பது பரிணாமம். அன்னையின் சக்தி ரூபம், சக்தியைக் கடந்தது.
  • அதிர்ஷ்டத்தைத் தேடும் மனிதனுக்கு பண்பு உயர்ந்தது.
  • அருளைத் தேடுபவனுக்கு அதுவும் தடை.
  • அருள், பேரருளை நாடுபவன் திருடன், விபசாரி போன்ற செய்கைகளில் பிரம்மத்தைக் காணவேண்டும்.
  • உலகில் நடக்கும் எந்தச் செயலும் அன்னைக்கு இன்று அவசியமான வெளிப்பாடு என்பதை அறியாதவனுக்கு யோகமில்லை.
  • பண்பில்லாதவன், பண்பைப் பெற்று, பிறகு அதைச் சரணடைய வேண்டுமென்பதில்லை.
  • பண்பில்லை என்பதை அவனால் சரணடைய முடியும் என்றால் அருள் செயல்படும்.
  • கர்மத்தை அருள் நீக்குகிறது என்றால் பண்பும் கர்மத்திற்குட்பட்டது அன்றோ!
  • சேறு, சகதி, விஷஜந்துக்கள் இறைவனின் வெளிப்பாடு என அறியமுடியாவிட்டால், அம்மனம் மூலம் இறைவன் வெளிப்பட மாட்டான்.
  • பண்பில்லாதது அன்னைக்குத் தடை என்பதுபோல் பண்பும் அன்னைக்குத் தடை.
  • நாம் எதையும் ஆரம்பிக்கக்கூடாது என்பது சர்வ ஆரம்பப்பரித்தியாகம்.
  • நாம் இல்லாவிட்டால், ஆரம்பிக்க நம்முள் ஒன்றில்லை.
  • Force சக்தி செயல்படாது. அதன்பின் ஜீவன் Being செயல்படும்.
  • ஜீவன் சக்தியான ஜடத்துள் ஒளிந்து வெளிவருவது சிருஷ்டியில்  அதிகபட்ச ஆனந்தம் என்பதால் ஜடம் பரிணாமத்தின் உச்சியாகிறது. அதனால் பிரிவினை முக்கியமாகிறது. ஜீவன் ஜீவனாகவே இருந்தால் பரிணாமமில்லை, ஆனந்தமில்லை.
  • அந்த நோக்கில் பண்பில்லாதவன் திருவுருமாறினால் பெறும் ஆனந்தம், பண்புள்ளவன் திருவுருமாறுவதைவிடப் பெரியது.
  • P.238, 239 இல் The Life Divine இக்கருத்தைக் கூறுகிறது.
  • தாயார் குடும்பநலனுக்காக அன்னையை ஏற்றவர்.
  • அவர் சாதனை பெரியது.
  • அவர் சாதனையைக் குடும்பம் ஏற்று அவருக்குள்ள (stress) சிரமத்தை விடுவிக்கவேண்டுமானால், தாயார் அன்னையை அன்னைக்காக மட்டும் ஏற்கவேண்டும்.
  • இப்படிப் பேசுவது யோகத்தின் கடைசி கட்டத்திற்கு முன்கட்டத்தை penultimate stage விவரிப்பதாகும்.
  • தாழ்த்தப்பட்டவன் முன்னேற உயர்ந்தவனாகி பிறகு முன்னேற வேண்டும் என்பதில்லை; நேரடியாக முன்னேறலாம்.

தொடரும்..... 

Comments

Points after the paragraph

Points after the paragraph that start with 'இதுவரை தாயாரின் மனநிலையை 15 அல்லது ....'

 

Point 19 - Sub point 3             -  பிர்லா வும்  -  பிர்லாவும்
Point 19 - Sub point 6 - Line 4 -  முதலேயேமுதலேயே
 
Points after the paragraph that start with 'உருண்டு விழுந்த கடிகாரம் தரையில் ...'
 
Point 18 -  Please reduce the font size for the letter 'னா' in the word  கேலியானாலும்
 
Points after the paragraph that start with 'பார்ட்னர் உயர்ந்தவர், நம்மைச் சமமாக நடத்துகிறார்'
 
Point 1   -  உலகில்லை            -   உலகிலில்லை
Point 3   -  பயன்படுத்தாமருக்க  -    பயன்படுத்தாமலிருக்க
 
Points after the paragraph that start with 'காரியம் கூடிவராததும் அருளன்றோ'
Last Point  -   இருளில்லை   -    இருளிலில்லை
 
Points after the paragraph that start with  'பாக்டரி வந்ததால் பேசக் கற்றுக்கொள்கின்றனர்'
 
Point 14  -  நிலம்போல்லை  -  நிலம்போலில்லை
 
Points after the paragraph that start with     'பெற்ற பிள்ளைக்கும் செய்வதற்கு அளவுண்டு - மட்டமான குடும்பப் பேச்சு'
 
Please combine points 10 & 11
Please combine points 16 & 17
 
Points after the paragraph that start with  'முதலியார் வீட்டுப் பெண் நல்ல வரனை ...'
Point 21    -    பிரதிபப்பு  -    பிரதிபலிப்பு 
 

03.எங்கள் குடும்பம் II Point 

03.எங்கள் குடும்பம் II
 
Point  4   -  Please join the two lines
Point 10  -  Please remove the extra blank line
Point 11  -  Please remove the extra blank line
Point 12  -  Indent all the sub-points under this point and remove the quotes
  Sub point 5 - Move the line starting with 'இதுவரை உயர்ந்தது பெரியது...' to a new line and indent all the lines till following line by few spaces
    தூய்மையான அமைதியைக் கருதினால் விரக்தி வருகிறது
 
Points after the paragraph that start with 'இதுவரை தாயாரின் மனநிலையை 15 அல்லது ....'
 
Point  10      -  Please combine the two lines
Point 13,14, 15,18  -  Please remove extra blank line
Point 18       - Please reduce the font size for the letter 'லி' in the word பலிக்கும்.



book | by Dr. Radut