Skip to Content

06..அஜெண்டா

 Agenda

Man beating God for not answering his prayers creates an intimacy with God and makes Him human.

தன் பிரார்த்தனை பலிக்காதபொழுது மனிதன் கோயில் சிலையை எடுத்து அடித்துக் கடலில் போடும் பழக்கம் ஆப்பிரிக்காவில் உண்டு. தெய்வத்தை அடிப்பதால் மனிதன் தெய்வத்துடன் நெருங்கிவருகிறான். தெய்வமும் ஓரளவு மனிதனாகிறது

  • வெறுப்பு அன்பின் மறு உருவம்.
    • அன்புள்ளவன் அன்பைச் செலுத்துவான்.
    • ன்பில்லாதவன் தன்னிடம் உள்ளதைத் தருவான்.
    • மனமோ, உணர்வோ வளராத மனிதனுக்கு இருப்பது உடல். அது அன்பு செலுத்தினால் அடிக்கும். நாய்க்குப் பிரியம் வந்தால் காலால் நமது டிரஸ்ஸை அழுக்காக்கும். டிரஸ் அழுக்கானால், நாய் கொடுப்பது அன்பு எனப் புரிகிறது. கொடுமைக்காரன் அடிக்கும் பொழுது, உடல் காயம் படும்பொழுது அவன் அன்பு செலுத்துகிறான் என மனம் அறிவதில்லை.
    • கடவுளை நம் போன்றவராக மனிதர் கருதுகிறார்.
    • கொடுத்தால் நல்லவர், கொடுக்காவிட்டால் கெட்டவர்.
    • கொடுக்காத கெட்டவரை அடித்து அலைமோதும் கடலில் போடுவது அவனுக்குரிய நியாயம்.
    • அடிப்பதால் மனிதன் கடவுளை ஆழத்தில் நெருங்கிவருகிறான் என்கிறார் அன்னை.
    • அடிப்பதற்கு மனிதன் உரிமை கொள்வதால், தெய்வத்தை தம்முள் ஒருவராகக் கொள்கிறான் மனிதன்.
    • அதனால் கடவுள் நெருங்கிவருவதுடன் மனித மனத்தில் கடவுள் மனிதனாக மாறுகிறார்.
    • இந்த வினோதமான தத்துவம் நம் அனுபவத்திற்குப் புரியாது. அன்னை கூறுவதால் ஏற்கலாம்.
    • இதன் உட்கருத்துப் புரிந்தால் மனிதன் உயர்நிலைக்குப் போவான். உட்கருத்து ஆரம்பத்தில் கூறியபடி வெறுப்பு அன்பின் மறு உருவம்.
    • வெறுப்பு தீவிரமான அன்பு.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனிதனின் பரநலம் (selflessness) தெய்வீகச் சுயநலமாக (selfishness) மாறுவது ஆன்மீக முன்னேற்றம்.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்

அனந்தனின் வெளிப்பாடுகள் ஆயிரம். மனிதனில் தனித்தன்மை (uniqueness) அமையும் வரை அது வரும். அந்நிலையில் அது பொதுத்தன்மையை இழக்கும். இழந்து (infinite possibility) அனந்தனை முழுமையடையச் செய்யும்.

மனிதனில் மறைந்துள்ள தெய்வம்.

******       

Comments

06.அஜெண்டா Please remove

06.அஜெண்டா
 
Please remove extra period in the heading  '06..அஜெண்டா'
Please remove the quotes and indent all the sub points under the point
               '. வெறுப்பு அன்பின் மறு உருவம். '
Also please indent and align all the lines under sub points.



book | by Dr. Radut