Skip to Content

07.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

XIII. The Divine Maya

13. தெய்வீக மாயை

Page No. 115  Para No. 8

The infinite consciousness works.

அனந்த ஜீவியம் செயல்படுகிறது.

It produces results.

அது சிருஷ்டிக்கிறது.

We are thinking of Maya between them.

இவற்றிடையே நாம் மாயையை நினைக்கிறோம்.

Why is it necessary?

மாயைக்கு என்ன அவசியம்?

This existence is Self-aware.

சத் தன்னையறியும்.

It is of Infinite range,

அது அனந்தமானது.

It freely creates forms.

அனந்தம் ரூபங்களை சிருஷ்டிக்கிறது.

The forms remain in play.

ரூபங்கள் லீலையில் ஈடுபடுகின்றன.

The play continues till it is ordered to stop.

தடுக்கும்வரை லீலை தொடரும்.

The old Semitic Revelation tells us of it.

பைபிள் காலத்தில் அதைக் கூறினார்கள்.

"God said let there be light and there was light."

கடவுள் ஜோதி வேண்டும் என்றார், ஜோதி ஏற்பட்டது".

By this, we assume a power of consciousness.

இது உண்மையானால் அது ஜீவியம்.

It can determine light out of everything that is not light.

ஜோதியற்றதினின்று ஜோதியை ஏற்படுத்துகிறது.

We can also presume a directing faculty.

வேண்டும் என்பதைச் செய்ய முடியும்எனத் தெரிகிறது.

It is an active power.

அது சக்திவாய்ந்தது.

It corresponds to the original perceptive power.

ஆதியில் சுயமாக உற்பத்தியான சக்தியைச் சேர்ந்தது.

This power brings out the phenomenon.

அச்சக்தி இத்தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

It works out light.

அது ஜோதியை ஏற்படுத்துகிறது.

It is according to the original perception.

இது ஆதியின் கருத்து.

There are other possibilities.

வேறு பல நடக்கலாம்.

They are infinite.

அவை அனந்தம்.

This power prevents these possibilities to prevent light.

இவை ஜோதியைக் காப்பாற்றுகின்றன.

Infinite consiousness produces infinite results.

அனந்த ஜீவியம் அனந்தமான பலன் தரும்.

We have to settle upon a fixed Truth.

நமக்கு ஒரு குறிப்பிட்ட பலன் தேவை.

It is an order of truths.

அது முறையான சத்தியம்.

It builds a world.

அது உலகை சிருஷ்டிக்கிறது.

That world is in conformity with what is fixed.

அவ்வுலகம் நாம் எதிர்பார்ப்பது.

It demands a selective faculty.

அதைச் செய்ய ஒரு சக்தி தேவை.

It is a faculty of knowledge.

அது ஞானம்.

It is commissioned to shape finite appearance.

குறிப்பிட்ட தோற்றத்தை அது ஏற்படுத்தும்.

It emerges out of the Infinite Reality.

அனந்த சத்தியத்திலிருந்து எழுவது அது.

Contd....

தொடரும்.....

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்

நியாயம் என்பதைச் சட்டத்தின்மூலம் மட்டுமே பெறமுடியும். இதைவிட அதிகமாக நியாயத்தைப் பெற வழியில்லை. சட்டம் என்பது வரையறுக்கப்பட்ட முறை. இதன் அஸ்திவாரமும், அமைப்பும் உண்மைக்குப் புறம்பானவை. (நிர்வாகம், கோர்ட்,ஸ்தாபனம், சமூகம் ஆகியவை அநீதியின் கருவிகளாக அடிக்கடிப் பயன்படுத்தப்படுகின்றன) அவையே நியாயத்திற்கு இன்று சிறந்த கருவிகள்.

உண்மைக்குப் புறம்பானவையே நியாயத்தின் சிறந்த கருவிகள்.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 

"மேல் மனதிலிருந்து கட்டுப்பாட்டால் உள்ளே போகலாம்'' என்கிறார் பகவான்.

அந்தக் கட்டுப்பாட்டின் பகுதிகள்:

  • கடந்த காலத்தைப் பற்றி வருந்துவதில்லை.
  • கடந்தது எதையும் மனம் இதமாகப் போற்றக்கூடாது.
  • அபிப்பிராயம், பிரியம் போன்ற மனத்தின் சிறு பகுதிகளால் எதையும் புரிந்துகொள்ள முயலக்கூடாது.

கட்டுப்பாடு அறியாமையின் கட்டுப்பாட்டை உடைக்கும்.

*****           

Comments

07.லைப் டிவைன்Please add

07.லைப் டிவைன்

Please add following after 'கர்மயோகி'

         Page No.115

         Para  No.8



book | by Dr. Radut