Skip to Content

09.நியாயத்திற்குப் பரிசு

நியாயத்திற்குப் பரிசு

உலகில் பலவகையான அநியாயங்கள், கொடுமைகளுண்டு. ஆண்கள் அனுபவிப்பது ஒருவகை. பெண்களுக்கு இழைத்த அநீதியைப் பல இடங்களில் அவர்களால் வெளியிட முடியாது என்பதால் அக்கொடுமைகள் தாங்கமுடியாதவை. வாழ்வில் சில சந்தர்ப்பங்கள் கோணலாக அமைந்துவிட்டால் வேலை கிடைப்பதைவிட டிரான்ஸ்பர் முக்கியமாகும். சில சமயங்களில் கொடுமையிலிருந்து தப்புவதற்கு டிரான்ஸ்பர் அத்தியாவசியமாகும். நல்ல இடம் பிள்ளைக்கு நல்ல பள்ளியில் கிடைப்பது குழந்தையின் எதிர்காலம் பாதுகாக்கப்பட்டதாகும். ஆபத்துகள் பலவகையின. அவற்றிலிருந்து தப்புவது அருளாகும். ஓர் அன்பரின் ஓரிரு அனுபவங்களைக் கீழே கூறுகிறேன்.

- இரயில்வேயில் பணிபுரியும்பொழுது மிகுந்த செல்வாக்கும், பணமும்,பதவியும் உள்ள ஒருவரால் மிகுந்த துன்பப்பட்டேன். அன்னையின் கருணையை நம்பி அஞ்சாமல் நேர்மையாக இருந்தேன். நான் செய்யாத தவற்றிற்கு வேண்டுமென்றே என்மேல் புகார் கொடுத்து, அங்குள்ள அனைவரும் அவருக்காகச் சாட்சி சொல்லியபொழுதும், என்மேல் சொன்ன பழியைத் தவறு என நிரூபித்து, மறுநாள் எனக்குக் கிடைக்கப் போகும் இன்பத்தை முதல்நாளே எனக்குக் காட்சியாக தெரியப்படுத்தியது அற்புதம்.

- மறுநாள் நான் விரும்பிய இடத்திற்கு நிஜமாகவே டிரான்ஸ்பர் கிடைத்ததும், என் கணவருக்கும் டிரான்ஸ்பர் கிடைத்ததும், எனக்கு She is Supreme அன்னை அற்புதமான தெய்வம் என உணர்த்தியது.

- என் பையனுக்கும், பெண்ணிற்கும் DAV பள்ளியில் சிபாரிசு இல்லாமல்

இடம் கிடைத்ததும் அவற்றிற்குச் சமமானவை.

- Hosurக்கு நானும், என் கணவரும் காரில் போய்க்கொண்டிருந்த பொழுது ஒரு பொட்டலில் வண்டி நின்றுவிட்டது. என்னையோ, காரையோ விட்டுப் போகமுடியாத நிலை. அந்நேரம் ஒரு சிறுவனும், பெண்ணும் வந்து உதவியது அன்னையே அனுப்பித்ததாக நான் உணர்ந்தேன்.

நன்றியறிதல் என்ற தலைப்பில் அன்பர் எனக்கு எழுதிய கடிதத்தின்

முக்கிய பகுதிகளானவை இவை.


 



book | by Dr. Radut