Skip to Content

10. அஜெண்டா

"Agenda"
Tests of Nature, Spirit and hostile forces.Cheerfulness and fearlessness; confidence and self-giving; vigilence, humility.

  • ஆண்டவன் சோதனை செய்கிறார் என்கிறோம்.
  • அன்னை சோதனை செய்வதில்லை என நான் மீண்டும் மீண்டும் கூறுவதுண்டு.
  • இயற்கை சோதனை செய்யும்; ஆத்மா சோதனை செய்யும்; தீயசக்திகள் சோதனை செய்யும் என அன்னை கூறுகிறார்.
  • சோதனை செய்வது என்றால் என்ன?
  • பள்ளியில் பாடம் முடிந்தபின் படித்தது சரியா என சோதனை செய்ய பரீட்சை வருகிறது.
  • மகன் வளரும்பொழுது, திருமணம் ஆனபின் தாயாருக்கு மகன் தம்மிடம் பிரியமாக இருக்கின்றானா என ஐயம் எழுவதுண்டு. ஐயம் எழுந்தால் அதைச் சோதனை செய்து பார்ப்பார்கள்.
  • குழந்தைக்குத் தன்மீது தாயாருக்குப் பிரியம் போய்விட்டதா என்று தோன்றுவதில்லை. எவ்வளவு நாள் பிரிந்திருந்தாலும் தனக்குத் தாயார் வேண்டும் பொழுது குழந்தை தாயாரிடம் ஓடிவரும். "அம்மாவுக்குப் பிரியம் இருக்குமா?"என்று கேள்வி எழுவதில்லை.
  • இயற்கை என்பது வாழ்வு, ஆத்மா என்பது நம் பகுதி; தீயசக்திகள் ஒருவரிடம் தொடர்புகொண்டால் அவர்களைத் தம் பிடியில் வைத்துக் கொள்ளும். அதனால் தம் பிடியிலிருந்து போய்விட்டாரா எனச் சோதனை செய்யும். வாழ்வு இயற்கையின் பகுதி. வாழ்வுக்கு ஜீவன் உண்டு. அதுவும் நம்மை அதன் பிடியில் வைத்திருக்க முயலும்.
  • தம் பிடியில் நம்மை வைத்திருப்பவர் நாம் பிடியுள்ளிருக்கிறோமா,இல்லையா எனச் சோதனை செய்தபடியிருப்பார்.
  • ஆத்மா உயர்ந்ததென்றாலும், பகுதி என்பதால் தம் பிடியுள் நாம் இருக்க வேண்டும் என நினைக்கும் (possessive). அது பகுதியின் தன்மை.
  • அன்னை முழுமையின் உறைவிடம். அவர் அடிப்படை பூரணச் சுதந்திரம். அவருடைய சுபாவத்தில் (possessive nature) தம் பிடியுள் வைத்திருக்க வேண்டும் என்பது இல்லை. அதனால் அன்னை சோதனை செய்வதில்லை.
  • "மனிதன் தம்மிடம் எதையும் எதிர்பார்க்கலாம் என்ற அன்னை தாம் மனிதனிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை" என்றார். இது முழுமையின் முத்திரை.
  • பயமின்றி, குதூகலமாக இருப்பவர் வாழ்வின் - இயற்கையின் - சோதனையில் தேறுவார் என்கிறார் அன்னை. சந்தோஷமாக இருந்தால் பயம் போகும். பயமில்லை எனில் அடுத்தவர்க்குப் பிடியில்லை.
  • தெம்புள்ளவர் கொடுப்பார்; எதிர்பார்க்கமாட்டார். எதிர்பார்க்காதவர் எவர் பிடியினுள்ளும் வரமாட்டார். ஆத்மாவின் பிடியுள்ளும் வரமாட்டார். Pride and Prejudiceஇல் எலிசபெத் டார்சியிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. டார்சி அவள் பிரியத்தை எதிர்பார்க்கிறான். அதனால் எளிய எலிசபெத் அவன் பிடியுள் வரவில்லை. டார்சிதான் அவளை நினைத்து உருகுகிறான்.
  • தீயசக்திகள் கடுமையானவை, கொடுமையானவை. மயிரிழை தவறினால் அவை ஆபத்து விளைவிக்கும். உஷாராக இருப்பவரிடம், அடக்கமாக இருப்பவரிடமும் தீயசக்திகள் தோற்கும்.

தர்மபுத்திரர் உஷாராக இல்லை. அதனால் சூதுக்குப் பலியானார்.

திரௌபதி அடக்கமாக இல்லை. துரியோதனனைக் கண்டு சிரிக்கிறாள். அவன் மாயமாளிகையில் தண்ணீரில் விழுந்தபொழுது "குருடன் மகன் குருடன்" எனக் கூறிவிடுகிறாள். அடக்கமில்லாத பொழுது தீயசக்திகள் பலிவாங்கும்.

****


 

Comments

10.அஜெண்டா  Last Para   - 

10.அஜெண்டா
 
 Last Para   -  பலி வாங்கும்   -   பலிவாங்கும்



book | by Dr. Radut