Skip to Content

11.நமக்கு அவ்வளவுதான்

நமக்கு அவ்வளவுதான்

நமக்கு நியாயம் கிடைக்காதபொழுது மேலிடத்தில் குறை சொன்னால் சில சமயங்களில் ஓரளவு நியாயம் கிடைக்கும். மெடிக்கல் சீட் நிலையாக எதிர்பார்த்து ஏமாந்தவனுக்கு பல் டாக்டர் BDS படிப்புக்கு இடம் கிடைக்கும். "நமக்கு அவ்வளவுதான்'' என மனம் ஏற்கிறது. முதல் மார்க் வாங்கியவனுடைய பரிசை அடுத்தவனுக்குக் கொடுத்ததுடன் ஜாதி துவேஷத்தால் 81 என்ற மார்க்கை 18 என திருத்தி பெயிலாக்கியபின், நியாயம் தேடிப் போனவனுக்கு ஏராளமான சிரமங்களுக்குப் பின் பாஸ் போடுகிறார்கள். இது உலக நியாயம்.

The Life Divine, "முயற்சியை முடிவுவரை செய்வது அவசியம்; பாதியில் நிறுத்தக்கூடாது" என்கிறது. பெயிலான மாணவன் தலைமை ஆசிரியருக்கு அப்பீல் செய்யலாம். தவறினால் DEOக்கு எழுதலாம். பலனில்லை எனில் கோர்ட்டிற்குப் போகலாம். அங்கும் நியாயம் கிடைக்கவில்லை எனில் ஜனாதிபதிக்கு எழுதலாம். எந்தக் கட்டத்திலும் நியாயம் கிடைக்கலாம்;கிடைக்காமற் போகலாம். G.O. சர்க்கார் ஆர்டரை மீறி அநியாயம் செய்தால் கவர்மெண்ட் ஆர்டர் நியாயம் வழங்கும். அது தவறினால Rule சட்டம் நியாயம் தரும். அதுவும் தவறினால் Law சட்டம் நியாயம் தரும். அதுவும் தவறினால் Constitution அரசியல் நிர்ணய சட்டம் நியாயம் வழங்கும்.

- நாமே பாதியில் முயற்சியை முடிக்காவிட்டால் முடிவுவரை முயற்சியைத் தொடர்ந்தால், பலன் நிச்சயம் உண்டு என்பது The Life Divine முதல் அத்தியாயத்தில் கூறுவது.

மனம் நியாயத்தை நம்பி, அன்னைமீது நம்பிக்கை வைத்து, நம்மாலியன்ற அளவு முயற்சி செய்து, பிரார்த்தனையை மேற்கொண்டால்,

- முடிவான சட்டம் தருவதை முதலிலேயே அன்னை தருவார்.

- "நமக்கு அவ்வளவுதான்" என்பதை "நமக்கு அன்னை இருக்கிறார். நம் மனத்தில் உண்மையிருக்கிறது. ஊரோ, உலகமோ, சட்டமோ, நியாயமோ முடிவில்லை. முடிவு அன்னை" என மாற்றிக்கொள்ள பக்தர்கட்கு உரிமையுண்டு.

****

Comments

11.நமக்கு அவ்வளவுதான்  Para 2

11.நமக்கு அவ்வளவுதான்

  Para 2 - Line 1 - நிறுத்தக்கூடாது'  -  நிறுத்தக்கூடாது"

  Please highlight the following point

 நாமே பாதியில் முயற்சியை முடிக்காவிட்டால் முடிவுவரை முயற்சியைத் தொடர்ந்தால், பலன் நிச்சயம் உண்டு என்பது The Life Divine முதல் அத்தியாயத்தில் கூறுவது.



book | by Dr. Radut