Skip to Content

02. எங்கள் குடும்பம் II

எங்கள் குடும்பம் II

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

தாயார் - பள்ளியைப்போல் சாதனை; முக்கியஸ்தர்போல் முடிவு இருந்தால் வருவது தவறாது; வருவது சிறியதாக இருக்காது:

 • எது வரும்? வருவது என்றால் என்ன? ஏன் சிறியதாக இருக்காது? தண்ணீர் பள்ளத்தை நோக்கிவரும். பள்ளம் வேண்டும். பள்ளம் என்பது அடக்கம். பள்ளம் இருப்பதால் மட்டும் தண்ணீர் வாராது. மழை பெய்தால் பள்ளத்தில் தண்ணீர்வரும்.
  • பள்ளம் அடக்கமானால்,
  • மழை அருள்.
  • அடக்கமானவர்க்கு அருள் வரும்.
  • கர்மத்தை நம்புகிறவர்க்கு அருளில்லை.
  • கடவுளைத்தவிர வேறெதை நம்புபவர்க்கும் அருளில்லை.
  • அன்னையை நம்புகிறவர்க்கு அருள் உண்டு.
  • சொந்தத் திறமையை நம்பாவிட்டால் அருள், பேரருளாகும்.
  • வருவது என்றால் என்ன?
  • வேலை, சேவை, உழைப்பு, ஆகியவை உதவி, ஒத்தாசை பணத்தைக் கவர்ந்து இழுக்கும் - இவை உடல் உழைப்புக்கு உரியவை.

   இலட்சியம், சுறுசுறுப்பு, இனிமை, கவர்ச்சி அதிகமாக மேற்சொன்னவற்றை இழுக்கும் - அவை உணர்வுக்குரியவை.

   அறிவு, இலட்சியச் சிந்தனை, திறமை (organisation) மனத்திற்கு உரியவை. இவை மேலும் பணத்தை அழைக்கும் – இவை மனத்திற்குரியவை.

   பக்தி, நம்பிக்கை, நாணயம், பண்பு ஆகியவை அபரிமிதமாகப் பணத்தைத் தானே நம்மை நாடிவரச் செய்யும் - அவை ஆன்மாவுக்கு உரியவை.

   குதூகலம், பிறர் கண்ணோட்டம், (மௌனம்) செயல் மௌனம் ஆகியவை சத்தியஜீவியத்திற்குரியவை - தானே நமக்கு வேண்டியவை எல்லாம் நம்மை நாடிவரும்; வந்தபடியிருக்கும்.

  • ஏன் சிறியதாக இருக்காது?

   வாக்காளர் அரசியல் பெறக்கூடிய மிகச்சிறிய பதவி M.L.A அரசியலுக்கு M.L.A. பதவி சிறியதானாலும், வாக்காளருக்கு, தொகுதியை முழுவதும் அது பிரதிபலிப்பதால் அது மிகப் பெரியது.

   மனிதவாழ்வு வாக்காளர் போன்றது.

   அன்னை வாழ்வு அரசியல் போன்றது.

   இடைவெளி ஏராளம்.

   M.L.A.க்கு அடுத்தது M.P. அல்லது மந்திரி பதவி எனலாம்.

   எளிய மனிதனுக்கு இவை எட்டாக்கனி.

   இவை முதற்படி என்பதால் ஏராளம்.

   அன்னை அரசியலைச் சிறியதாக்குபவர்.

   பெறுவது பெரியது.

   சிறியதாகப் பெறமுடியாது.

   வருவது நிற்காது; வந்தபடி இருக்கும், வளர்ந்தபடியிருக்கும்.

   நிற்காமல், நிரந்தரமாக வளரும்அருள் நம்மைச் சூழ்ந்துள்ளது.

  இந்தக் குடும்பம் இந்திய மண்ணிலிருந்து பெற்றது என்ன?

 • ஒவ்வொரு நாட்டிற்கும் உரிய திறமையுண்டு.
 • இந்தியர் நாட்டிலிருந்து பெறுவது என்ன?
 • ஒரு புத்தகம் இந்தியாவில் அச்சிடுவதற்கும், இலண்டனில் அச்சிடுவதற்கும் என்ன வித்தியாசம்? வித்தியாசம் ஏராளம். நம்மூர் புத்தகம் அட்டை வளையும், பக்கங்கள் விட்டுப் போயிருக்கும், சில பக்கங்களில் இங்க் சரியாக விழுந்திருக்காது. எல்லாப் பக்கங்களிலும் அச்சுப்பிழையிருக்கும். இதுபோன்ற எந்த குறையும் இலண்டனில் அச்சிட்ட புத்தகத்திலிருக்காது.
 • கையால் அச்சுக்கோத்து புத்தகம் அச்சிட்டாலும், கம்ப்யூட்டரில் அச்சுக்கோத்தாலும் புத்தகம் ஒன்றே. கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி புத்தகம் அச்சிட்டால், அந்தக் கம்ப்யூட்டரிலிருப்பதால் வேறு பல காரியங்களைச் செய்யலாம்.
 • விவசாயி என்பவன் விவசாயம் செய்கிறான். அவன் வெறும் விவசாயி.

  டிராக்டர் போன்ற நவீனச் சாதனைகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்தால் அவன் வெறும் விவசாயில்லை. சீக்கிரம் அவன் பேக்டரிக்குப் போய்விடுவான்.

  செய்வது விவசாயமானாலும், விஞ்ஞான முறைப்படி விவசாயம் செய்தால், அவன் விவசாயத்தை விட்டு மற்ற துறைகளில் உயர்ந்துவிடுவான்.

 • இந்தக் குடும்பம் இந்திய மண்ணிலிருந்து ஆன்மீகம் பெறும். அன்னையிடமிருந்து ஸ்ரீ அரவிந்தம் பெறும். ஸ்ரீ அரவிந்தத்தால் கம்பனி நடத்தினால் இக்குடும்பம் கம்பனி மூலம் ஸ்ரீ அரவிந்தம் அளிக்கும் அத்தனை பேறுகளையும் பெறலாம்.
 • பட்டேலை சர்தார் என்பார்கள். சர்தார் வல்லபாய் பட்டேல் என்பது அவர் முழுப்பெயர். 20 ஏக்கர் குடும்பம். நான்கு பிள்ளைகள். ஆண்டிற்கு 30"மழையுள்ள ஊர். நம்மூரில் 40"முதல் 60"வரை மழைபெய்கிறது. 3-ஆம் வகுப்பு முடிக்கும்பொழுது பட்டேலுக்குப் 17 வயது.
  • "இன்று இந்தியா என ஒன்றிருக்கிறது என்றால் அது பட்டேல் நமக்களித்தது"என ராஜன்பாபு கூறினார்.
  • பட்டேலை இரும்பு மனிதன் என்பார்கள்.
  • சுமார் 560 சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்தார்.
  • இவர் செய்த வேலைகளில் தோல்வி மிகக் குறைவு.
  • மகாத்மா பிறப்பிலேயே மகான். நேரு இந்நாட்டிற்கு முடிசூடா மன்னன். கூட்டம் மகாத்மாவுக்கும், நேருவுக்கும்தான் வரும்.
  • பட்டேல் சாதனை பெரியசாதனை. பட்டேலைச் சந்தித்த வைஸ்ராய்கள், இங்கிலாந்தின் தலைவர்கள், அனைவரும் "தலைமைக்கு உரியவர் பட்டேல்"என்றனர்.
  • பிறப்பிலோ, குடும்பத்திலோ, வளர்ப்பிலோ, எந்தச் சிறப்பும் இல்லாதவர்.
  • பட்டேல் செய்த பெரிய காரியத்தை விவசாயக் குடும்பத்தில் பிறந்த நாணயமும், திறமையுமுள்ள எவரும், அவருடைய அனுபவம் இருந்தால் செய்வார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் ஓரிரு பட்டேல்கள் உள்ளனர் என்பது இந்திய நாட்டின் சிறப்பு. இது எப்படி வந்தது?
 • இந்தியர் விவசாயம், வியாபாரம், தொழில், அரசியல், ராஜ்ய பரிபாலனம், ஆகியவை எதைச் செய்தாலும், ஆன்மீகச் சட்டப்படிச் செய்தனர், செய்கின்றனர்.
  • வெறும் விவசாயி கூலிக்காரனாவான்.
  • விஞ்ஞானம் படித்தவன் விவசாயம் செய்தால் அவனால் விவசாயம் விஞ்ஞான அனுபவம் பெறும்.
  • ஆன்மீகச் சட்டப்படி விவசாயம் செய்பவனுக்கு விவசாயம் ஆன்மீக அனுபவம் தரும். பெரும்பாலோர்க்கு ஆன்மீகம் பயன்படாவிட்டால் க்ஷத்திரிய தர்மத்தை, வைசிய தர்மத்தையும் தரும் என்றால்,
   • அவர்களால் போரை வெல்லமுடியும்.
   • நாட்டை ஆளமுடியும்.
  • IAS பயிற்சி பெறுபவர் தாலுக்கா ஆபீஸில் தாசில்தாராக வேலை செய்தால், அவர் தாசில்தாராகவே இருக்கமாட்டார். IAS ஆபீசராவார். IAS மனப்பான்மையுடையவர் தாசில்தாராக வேலை செய்தால் சந்தர்ப்பம் வரும் பொழுது அவர் IAS ஆபீசராகி விடுவார்.
  • இந்தியர் எல்லாத் துறைகளிலும் ஆன்மீக அடிப்படையில் செயல்படுவதால், நாணயம், திறமை, பண்புள்ளவர், நாட்டின் தலைமைப் பதவியை எத்துறையிலும் எட்டலாம்என்பது ஆன்மீக அனுபவம். பட்டேல் அப்படி உயர்ந்தவரே.
  • இக்குடும்பத்தில் கணவர் சொத்தை. பிள்ளைகள் எந்தச் சிறப்பும் இல்லாதவர்கள். தாயார் இந்தியப் பண்பால் பயன்பெற்றவர். அன்னை பக்தர்.
   • இதுவரை அவர் பெற்றது இந்தியப்பெண் பெற்றது.
   • அன்னைக்கு பண்பும் - இந்தியப்பண்பும் - பெரும்தடை.
    • கெட்டவன் நல்லவனாவது சரி.
    • நல்லவன் நல்லவனாக இருப்பது அன்னைக்குத் தடை.
    • கெட்டவன் கெட்டதை விட்டதைப்போல் நல்லவன் நல்லதைக் கைவிட வேண்டும்.
    • நல்லதைக் கைவிட்டால் அவன் சுதந்திரமான மனிதன் ஆவான்.
    • சுதந்திரமான மனிதன் அன்பனாகும் உரிமை பெற்றவன்.
    • சுதந்திரம் விழிப்புப் பெறவேண்டும்.
    • சுதந்திரம் அன்னையை ஏற்க முடியவேண்டும்.
    • மனத்தின் உண்மை அன்னையை ஏற்க அவசியம்.
    • உண்மை, ஏற்புத்திறன், விழிப்பு அன்பருக்குத் தேவை.
    • நல்ல குணம் தடை, தேவையில்லை.
    • குணமே தடை என்றால், நல்ல குணம் ஏன்?
    • விழிப்பு (opening) இன்று மனிதனுக்கில்லாதது. உண்மையும்,ஏற்கும் திறனும் அவனுக்கில்லை. இந்தியர் அவற்றைப் பெற்றால் நாடு ஜகத்குருவாகும்.

தாயார் - பெரியதை எதிர்பார்த்தால் சிறியது வரும்:

 • எதிர்பார்ப்பு, இல்லாத பொழுது எழுகிறது. எதிர்பார்க்கும் மனம் இயலாமைக்கு உரியது.

  பெரியதை எதிர்பார்ப்பது நினைவு; செயலன்று. செயலுக்கு முழுமையுண்டு. நினைவுக்குத் திறனில்லை.

  வாழ்வு உடனே செயல்படக்கூடியது.

  உடனே செயல்படவேண்டும் என்றால் பெரியதைத் தரமுடியாது. முடிந்தது சிறியது.

  இயலாமை செயல்படாமலிருந்தால் நினைக்காது; எதிர்பார்க்காது.

  இயலாமை செயல்பட்டால், முடிந்த அளவில் செயல்படும். முடிந்தது நினைவு என்பதால் எதிர்பார்க்கிறது.

  உரியதை மட்டும் பெறுவது பண்பு.

  உரியதை நினைப்பவர்க்கு எதிர்பார்ப்பு இருக்காது.

  தமக்குரியது இல்லாதவற்றை இயலாமையுடையவர் உடனே பெற விரும்புவது எதிர்பார்ப்பு. அதற்குரியது சிறிய பலன்.

 • இந்தக் குடும்பத்திற்கு வந்தனவெல்லாம் எதிர்பாராதது.

  எதிர்பார்க்கவில்லை என்பதற்குக் காரணம் அப்படி ஒரு வாய்ப்பு தங்களுக்குண்டு என்று தெரியாது.

  பொதுவாக எதிர்பாராதது நடப்பதற்குக் காரணம், நம் மனம் குறுக்கிடமுடியாத காரணத்தால். தெரிந்ததை மனம் எதிர்பார்க்கும். அது நடக்காது.

  தெரிந்து, எதிர்பாராமலிருக்க மனித மனத்தால் முடியாது.

  அது முடிந்தால் மனிதன் உயர்ந்து தெய்வமாகிறான்.

 • எதிர்பார்ப்பு, கற்பனையிலிருந்து வேறுபட்டது.

  எதிர்காலத்தில் நடக்கக்கூடியதை உருவகப்படுத்துவது கற்பனை.

  தன் ஆசையைக் கற்பனைக் கோட்டையால் பூர்த்திசெய்வது எதிர்பார்ப்பு.

  கணவரோ, குடும்பமோ கம்பனி வரும் என அறியவில்லை.

  பவர்பிராஜெக்ட் அவர்கள் கற்பனையிலோ,சிந்தனையிலோ இல்லை.மனத்திலில்லாதது நடக்கிறது.

  சிறியவன், அண்ணன் கேலியை நிறுத்துவான் என எதிர்பார்க்கிறான்;நடக்கவில்லை.

  A.G ஆபீஸ் ஆபீஸர் கான்சர் குணமாகும் என நினைக்கவில்லை; குணமாயிற்று.

  பெண், தோழிக்கு, அவள் அக்காவுக்கு நல்லது நடக்கவேண்டும் எனப் பிரியப்படுகிறாள். இருக்கும் நிலையில் மனம் எதிர்பார்க்கவில்லை; நடந்தது.

  கவர்னர் பாக்டரிக்கு வருவது, பார்ட்டிக்கு அழைப்பது ஆகியவை எதிர்பார்ப்பில்லாதவை.

 • கணவர் அன்னையை ஏற்கவேண்டும் என்பது எதிர்பார்ப்பது. ஒப்புக்கு நடக்கிறது. உண்மையில் நடக்கவில்லை.

  எதிர்பார்ப்பது என்றால் என்ன?

  சாதிப்பது ஜீவன் அல்லது உடல்.

  உடல் ஜடப்பொருள். சாதனை ஜட உடலுக்குரியது.

  மனம் எண்ணும்; எண்ணம் சூட்சுமமானது.

  உயிருக்கு சக்தியுள்ளது; உருவமில்லை, உடலில்லை.

  உடல் சாதித்தால், உயிர் உதவும். தானே சாதிக்கும் திறனுடையதன்று உயிர்.

  எண்ணம் நினைக்கும்; சாதிக்காது.

  பெரியதாக நினைப்பது எதிர்பார்ப்பது.

  பெரியதாக எதிர்பார்ப்பது ஜீவனற்றவனுடைய பெரிய ஆசை; பேராசை.

  ஆசை தன்னை எண்ணமாகப் பூர்த்தி செய்துகொள்ளும்; உண்மையில் பூர்த்தி செய்து கொள்ளாது.

  சக்தியும், உடலுமற்ற எண்ணம் செயல்படுவது எதிர்பார்ப்பது.

  எதிர்காலத்தில் நடப்பதை இப்பொழுது வேண்டும் என்பது எதிர்பார்ப்பது.

  ஜீவனற்றதைப் பெரியதாக்கிச் சாதிக்க நினைப்பதுடன், உடனே வேண்டும் என்பது காலத்தையும் சுருக்க நினைப்பதாகும். சுருங்குவது காலமன்று, பலன்.

மட்டமானவர்க்கு,கெட்டஎண்ணமுள்ளவர்க்கு உதவிசெய்தால் நம் வேலை கெடுமென கணவர் அறிவார்:

 • கெட்டஎண்ணமுள்ளவனைக் கணவர் நல்லவன் என நினைக்கிறார். அவனுக்கு லைசென்ஸ் வாங்கித் தருகிறேன் என்றார். அவனால் 2 வருஷங்களாக முடியாததைக் கணவர் முடித்துக் கொடுக்கப்பிரியப்படுகிறார். இந்த உதவியைச் செய்ய ஏற்றுக் கொண்ட பிறகு, கேள்விப்பட்ட முதல் செய்தி, கணவருக்கு முக்கியமான டிபார்ட்மென்டின் தலைவராக இவருடைய பரம எதிரி வந்துள்ளதாக அறிந்தார்.
 • உலகில் ஆனந்தம் தவிர வேறில்லை என்றால் கெட்ட எண்ணம் எப்படி வந்தது?

  அது அகந்தைக்குரியது.

  அகந்தையுடன் தொடர்பு கொண்டால் அதன் பலன் நமக்கும் கிடைக்கிறது.

  நாம் கெட்ட எண்ணத்துடன் தொடர்பு கொள்வதால், கெட்டஎண்ணம் அழிகிறது. அது சரியன்றோ?

  நாம் கெட்ட எண்ணத்துடன் தொடர்பு கொண்டால், கெட்ட எண்ணம் அழிவதன் முன் வளரும்.

  வளர்ந்தாலும், முடிவில் அழியும்.

  கெட்டஎண்ணம் அழியும்பொழுது நாமும் அழிவோம் - அதாவது நம் கெட்டஎண்ணமும் அழியும்.

  அது தவறில்லை.

  நாம் கெட்டஎண்ணத்துடன் ஐக்கியமாக நினைத்தால் நாம் அழிவோம்.

  எப்படியும் முடிவு நல்லதாக இருக்கும்.

  அது நமக்குத் தேவையா?

  அன்னை, உலகில் வந்து நம்முடனெல்லாம் பழகவில்லையா, பழகியதற்காக அவதிப்படவில்லையா?

  கெட்டஎண்ணம் அழிய நாம் செய்யும் சேவை அது எனக் கொள்ளலாமா?

  தத்துவம் சரி. நம்மால் அது முடியுமா? நமக்கு அது தேவையா? என்பது கேள்வி. கெட்டஎண்ணம் அழியும் வழிகள் இரண்டு: மனம் ஏற்காது.

  1. தன் கெட்டகுணத்தை அறிந்து, அழிய விரும்பி, அழிய முன்வருவது
  2. கெட்டஎண்ணம், நம் கெட்டஎண்ணத்துடன் சேர்ந்து அதை அழித்துத் தானும் அழிவது.

  ஹிட்லர் உலகை அழிக்க முயன்று தான் அழிந்தான். அது இரண்டாம் வகைக்கு உதாரணம். கெட்டஎண்ணம் தன்னையறிந்து தானே அழிய கோர்பஷேவ் வரும் வரை உலகில் உதாரணமில்லை. ஹிட்லர் உலகை அழிக்க முயன்றதால் நேச நாடுகளில் உள்ள கொடுமை இரண்டாம் போரால் அழிந்தது. இரண்டாம் போருக்குப் பின், உலகம் அநியாயத்தை அழித்தது. பெரியவன் கிளப்பில் பேசாததை பேசியதாக அடியாள் கூட்டம் அறிந்து அவனை அடிக்க முயன்றனர்.

  • அது அருளால் விலகியதை நாம் போற்றுகிறோம். 
  • அடியாள் கூட்டம் அநியாயமாகப் பெரியவனைத் துன்புறுத்தியிருந்தாலும் அது பெரியவன் மனதிலுள்ள தவறான எண்ணத்தை அழித்திருக்கும்.
  • எப்படியும் முடிவு நல்லதாக இருக்கும்.

   அம்முடிவு துன்பத்தாலோ, துன்பமில்லாமலோ வரும்.

   எவ்வழி முடிவு வரவேண்டும் என்பது நம் choice இஷ்டத்தைப்பொருத்தது.

   நாம் பெரியவனுக்குத் தொந்தரவு வரக்கூடாது என விரும்புவோம்.

   அது வரக் கூடாது எனில் அவன் தன் மனத்தைத் தூய்மையாக்க முன்வரவேண்டும்.

   பொதுவாக, மனிதர்கள் கெட்ட எண்ணத்துடன் ஐக்கியமாக இருப்பார்கள்.

   அதைத் தாழ்ந்தஜீவியம் low consciousness என்கிறோம்.

   அதனால் அவர்களே அழிவார்கள். அதுவும் நல்ல பலன் என நம் மனம் ஏற்காது.

   கெட்டதிலிருந்து விலக நம் மனம் சம்மதித்தால் தொந்தரவு விலகும்.

   இது கடுமையான இடம்.

   கடுமையாகத் தெரிந்தாலும், இதுவும் கடுமை அழியும் மார்க்கம்.

   கடுமை இனிமையாக மாறுவது திருவுருமாற்றம். நாம் நாட வேண்டியது அதுவே.

 • இரண்டாம் உலகயுத்தம் வருமுன் பகவான் அதைத் தவிர்க்க முயன்றார். அவர், கரியஉருவம் உலக சூட்சுமச்சரீரத்தில் எழுவதைக் கண்டார். இது தவிர்க்க முடியாததுஎன அறிந்து, அதை போர்மூலம் அழிக்க முடிவுசெய்தார். உலகப்போரை அன்னையின் போர் எனக்கூறினார். சர்ச்சில் 1920லிருந்து உலகப்போரை எவ்வளவு தவிர்த்திருக்கலாம் என்று விளக்கமாக எழுதுகிறார்.
  • இங்கிலாந்து பாராமுகமாக இருந்ததால் ஹிட்லர் வளர்ந்தான் என சர்ச்சில் எழுதுகிறார்.
  • பென்டரில் மூன் என்ற I.C.S ஆபீசர் பாகிஸ்தான் தவிர்க்கப்படக் கூடியது என எழுதுகிறார். 1946 டிசம்பர் வரை பிரிவினையைத் தவிர்த்திருக்கலாம் எனக் கூறுகிறார். 1946க்குப் பின்னும் உயிர்ச்சேதத்தைத் தவிர்த்திருக்கலாம் எனக் கூறும் முன் தம் சமஸ்தானத்தில் - பவல்பூரில் - தானே அதைச் செய்ததை விளக்கி எழுதியிருக்கிறார்.
  • பஞ்சாப் சீக்கியர்கள் உடல் வலிமைபெற்றவர்கள். உடல் மாற, அது அழியவேண்டும். தானே மாறாது. மாறக்கூடாது எனச் சட்டமில்லை; அது choice இஷ்டத்தைப் பொருத்தது. இரண்டாம் யுத்தம், இந்தியச்சுதந்திரம் மேற்கூறிய கருத்தை விளக்குகிறது.
  • நம் வாழ்வில் நாம் அதைத் தெளிவாகப் பார்க்கலாம்.
  • கடந்தது மிகத்தெளிவாக விளக்கும்.
  • மனம் அடங்கி, உடல் வணங்கி, அடக்கம் வந்த இடங்களில் ஆபத்து விலகி, அபரிமிதமான முன்னேற்றம் வந்ததையும், மனம் அடங்காத இடத்தில், மனம் அடங்கினாலும், உடல் வணங்காத இடத்தில் வாழ்வு ஆபத்தைக் கொண்டு வந்ததையும், நஷ்டம், கஷ்டம் வந்ததையும் காணலாம்.
  • மேலும் விளக்கம் தேவைப்பட்டால் நடப்பதைக் காணலாம். புதிய எண்ணத்தைச் செயல்படுத்திப்பார்த்து பலனை ஆராயலாம்.
  • கதையில் நெகட்டிவான இடங்களை நான் அதிகமாக எழுதவில்லை. சிறியவனுக்குக் கேலி வருவது, பெரியவனுக்கு ஆபத்து வந்து விலகுவது, கம்பனிக்குத் தொழிலாளர்த் தலைவன் வருவது, தூரத்து உறவில் வேலை போய் வருவது போன்ற நிகழ்ச்சிகளில் இந்த அம்சத்தைத் தொட்டுப்பார்த்திருக்கிறேன். பெரிய தொந்தரவுகளைக் கதையில் உருவாக்கவில்லை. ஏனெனில், எவருக்கும் கடந்தகாலம் அதை விளக்கும். எதிர்காலத்தைப் பாஸிட்டிவாகவே விளக்க முயன்றிருக்கிறேன். வேலைக்காரியின் கணவனுக்குத் தோப்புக் குத்தகை வருவதும், தோப்பு சொந்தமாக வருவதையும் குறிப்பிட்டுள்ளேன். பார்ட்னர் கணவர்மீது அதிர்ஷ்டம் இருப்பதைக் கண்டு,
   • அவருக்குப் பங்குகொடுக்க முன்வந்ததால்,
   • கம்பனி வளர்வதையும்,
   • பவர் பிராஜெக்ட் வருவதையும்,
   • டெய்வான் பேங்க் அழைப்பதையும்,

    காட்டியிருக்கிறேன். இவற்றையெல்லாம்விட அந்தஸ்து உயர்வதையும், கவர்னர் அழைப்பதையும், பெரிய இடத்துப் பழக்கம் வருவதையும், குடும்பம் பெரியதாகக் கருதி தத்தளிக்கும் நிலையில் கதையை முடித்துவிட்டேன்.

   • எவரும் இக்கதை மூலம் தங்கள் வாழ்வில் நன்மை, தீமை கடந்த நாட்களில் செயல்பட்டதையும், இன்று நமக்கு choice இருப்பதையும், எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்பையும் அறியமுடியும்.

தாயார் -

 1. பழையமுதலாளிக்கு உதவினார், மகசூல் 30 வருஷங்களாகப் போயிற்று;
 2. பழையபேராசிரியருக்கு சமாதிபுஷ்பம் அனுப்பினார், வீடு கேஸ் வந்தது;
 3. பழையதலைவருக்கு வீடு இனாம்கொடுக்க நினைத்தார், சொத்து மேல் கேஸ் வந்தது;
 4. பழையநண்பனுக்குக் கைமாற்றுக் கொடுத்தார், மானம் போயிற்று:

 • இக்கதையில் கெட்ட எண்ணம் செயல்படுவதைத் தவிர்க்கவேண்டும் என்பதை சிறிதளவே குறிப்பிட்டுவருகிறேன். வாழ்வில் நாம் சில விஷயங்களைப் பார்த்தாலும் பொருட்படுத்துவதில்லை.
  • தகப்பனார் ரிடையராகி, P.F.பணம் ரூ.3,000/-இல் வாழ வேண்டிய நிலையில், அவர் ரிடையரானபொழுதுள்ள சம்பளத்தைப் போல் இருமடங்கு அசோக் லேலெண்டில் சம்பாதிக்கும் பையன், தகப்பனாரைப் பார்க்க வந்தான். அவர் ரிடையர் ஆனது 1960. பென்ஷனில்லை. ஒரே பையன், ஒரே பெண். செல்லப்பையன். P.F.பணத்தைக் கேட்கிறான். நான் என்ன செய்வேன் என்றார் தகப்பனார். பிச்சை எடேன் என்றான். ஏதோ பையன் ஆசைப்படுகிறான் என்று தோன்றியதே தவிர அதன்பின் உள்ள மனிதச்சுபாவம் புரிவதில்லை.
  • பேராசிரியர் பால்ய நண்பர், அரசியல் தலைவர். தலைவருக்குப் பெரிய வீடிருக்கிறது. சாப்பாட்டிற்கு வருமானமில்லை. சுதந்திரப் போராட்ட வீரர்கட்கு பென்ஷன் வாராத காலம். பேராசிரியருக்கு இரண்டு வீடுகள். மகனும், மகளும் டாக்டர்கள். பேராசிரியரின் மாணவன் வேலையை இராஜினாமா செய்துவிட்டு அன்னைச் சேவையிலிருக்கிறான்.அரசியல்தலைவர் வீட்டை விலை கொடுத்து வாங்கினான். இரசீது பெற மனம் வரவில்லை. பேராசிரியரும் மாணவனும் உயிருக்கு உயிரானவர். பேராசிரியர் அன்பர். "நீ விலை கொடுத்து வாங்கிய வீட்டைத் தலைவருக்கு இனாமாகக் கொடுத்தால் எனக்கு சந்தோஷம்" என மாணவனுக்குக் கடிதம் எழுதினார். இவருக்கு 2 வீடுகள் இருக்கின்றன. இவர் ஒரு வீடு தரலாம். தலைவருக்கு வீடுண்டு. மாணவனுக்கு வீடில்லை. மாணவன் மனம் பேராசிரியர் அன்பைக் கருதியது. பொறாமை, கெட்ட எண்ணம் எனத் தோன்றவில்லை. அவர் எழுதியதை மாணவன் பொருட்படுத்தவில்லை. அவர் உடல் முழுவதும் எக்ஸிமா வந்துவிட்டது. எந்த ஸ்பெஷலிஸ்டாலும் குணப்படுத்தமுடியவில்லை. அவர் அன்னைபக்தியும் குணப்படுத்தவில்லை. மாணவன் ஆசிரியர் மீதுள்ள அன்பால் தினமும் சமாதிபுஷ்பம் அவருக்கு அனுப்பினான். எக்ஸிமா குணமாயிற்று. தலைவர் தாம் விலை கொடுத்து வாங்கிய வீட்டை - இரசீது கொடுக்காததால் - திருப்பிக் கொடுக்கச்சொல்லி கேஸ் போட்டார்; தோற்றார். கெட்டஎண்ணமுள்ள பேராசிரியருக்கு சமாதிபுஷ்பம் அனுப்பியதால் அவர் கெட்ட எண்ணம் நிறைவேறியது. கேஸ் போடுமுன் மாணவனுக்கு தலைவர் மீது அனுதாபம் ஏற்பட்டு அவர் கேட்பதுபோல் வீட்டைத் தருவதாக அவருக்குக் கடிதம் எழுதினான். அடுத்த நாள் அவனுக்குப் பாதி உரிமையுள்ள பெரிய சொத்தில் அவனுக்கு உரிமையில்லை என பங்குதாரர் கேஸ்போட்டார். மாணவனுக்கு கேஸ் வந்தபிறகு காரணம் புரிந்து past consecration மூலம் கேஸை ஜெயிக்க 2 ஆண்டுகளாகி, ஹைகோர்ட் வரை போக வேண்டியதாயிற்று.
  • நண்பர், குரு, உறவினர், உடன்பிறந்தவர் "நீ நடுத்தெருவில் நிற்பதை நான் பார்த்துக் கைதட்டிச் சிரிக்கவேண்டும்" என்று சொன்னாலும் அது மனதைத் தொடுவதில்லை, புண்படுத்துவது இல்லை. ஏதோ சொன்னார்கள் என விட்டுவிடுகிறோம். அந்தச் சொல் பலித்தபொழுது யோசனை வருவது வழக்கம்.
   • கெட்ட எண்ணம் இல்லாதவரில்லை.
   • பிறர் கெட்டஎண்ணம் நம்மைப் பாதிக்கும்படி நாம் அடிக்கடிநடக்கிறோம். அது தெரிவதில்லை.
   • அவை பொருட்டில்லை. விழித்துக்கொண்டால் தப்பிக்கலாம். நம் கெட்ட எண்ணத்தை நாம் அறியவேண்டும், அதிலிருந்து தப்புவது அதைவிடக் கடினம்.
  • தலைவருக்கு உன் வீட்டைக் கொடு என்ற பேராசிரியருடைய பெரிய வீட்டை அவர் அனுபவிக்கமுடியாமல், அவசியமில்லாமல், கொடுக்க வேண்டியதாயிற்று. கேஸ்போட்ட தலைவர் அடாவடியாகக் கேட்டுப் பணம்பெற்ற அடுத்த மாதம் இறந்துபோனார்.
  • மகள் நல்லபுடவை கட்டி அழகாக இருப்பதைக்கண்டு பொறாமைப்படும் தாயாருண்டு என நம்மால் நம்பமுடிவதில்லை.
  • தனக்குப் பெரிய சேவை செய்த நண்பனை மனிதன் அழிக்க முயல்வான்; "அவன் கெட்டலைந்து என்னிடம் வரவேண்டும்" என மனமாரச் சொல்வான் மனிதன் என நம்பமுடியாமல் திகைக்கும் பொழுது, பலியானவன் மீண்டும் அவனையே நாடுவதைக் காண்கிறோம்.
  • "உன்னுடைய பிரபலமான திட்டம் கூடிவரக்கூடாதல்லவா?" என ஆசீர்வாதம் செய்யும் குருவும் உண்டு என்றால் எப்படி நம்புவது? கேட்டவருக்கே நம்பிக்கை ஏற்படவில்லையே!
  • திருடாதவன் மீது போலீஸ் பிராது கொடுத்து, அவனை நையப் புடைத்த பின், அடிவாங்கியவன் முதலாளியிடம் வந்து "நீங்களே என் தகப்பனார்"என்பது உலகவழக்கம்.
  • மனிதனுக்கு சத்தியம், நேர்மை தேவையில்லை. பொல்லாதவரானாலும் குரு, பெற்றோர், கணவன், மனைவி, மக்கள் தேவை என்பது நடைமுறை உண்மை.

   இவை அஞ்ஞான ருசி Taste of Ignorance.

  • துரோகம் செய்து பலியானபின் விடமுடியாத உறவை துரோகம் செய்வதன் முன் அறிவால் புரிந்து, உணர்வால் களைந்து, விலகி, அன்னை மூலம் வரும் உறவும், நட்புமே உறவு எனக்கொள்ள முடியுமா?

   அன்பராகும் தகுதிக்கு அது தேவை.

  • உறவை, நட்பைக் களைதலைவிட அவர்களை மனதால் நாடும் மனப்பான்மையைக் களைந்தால், அவர்கள் தாமே விலகுவதைக் காணலாம்.

   நாமே மீண்டும் அவர்களை நாடுவோம்.

  • நெகிழ்ந்த உறவில் நிலையான துரோகத்தைக் காண்பது கயமை.அதன்படி நடப்பது தீமை. நாம் அப்படி துரோகத்தை நம்முள்ளே காணவேண்டுமே தவிர பிறருள் காண முயலக்கூடாது.
  • நம்முள் உள்ள துரோகம் களையப்பட்டால், துரோகம் நம்மை விட்டு விலகும்.
  • அதைத் திருவுருமாற்றம்என்கிறோம்.
  • புறத்தில் செய்ய புனர்ஜென்மமெடுக்க வேண்டும்.
  • அகத்தில் சாதிக்க அடுத்தவர் துணை வேண்டாம்.
  • அகத்தில் சாதிப்பது புனர்ஜென்மம்.
  • அப்படிச் சாதித்தால், அன்று நம் வயது 38 ஆனால், 72 ஆனால், அந்தச் சாதனை 38ஐ 76 ஆக்கும், 72ஐ 144ஆக்கும். சாதனையால் ஆயுள் இருமடங்காகும்.

கணவர் - அன்னை பக்தன் என்பதால் எல்லாப் பிரார்த்தனைகளும் பலிக்க வேண்டுமன்றோ?

தாயார் - பிரார்த்தனையின் உண்மை பலிக்கும். பர்சனாலிட்டிக்கு ஏற்றவாறு பிரார்த்தனை பலிக்கும்;

கணவர் - அன்னை பலிக்கும் என்பது பொய்யா? நான் ஏமாந்து விட்டேனா?

 • எல்லா உண்மையான பிரார்த்தனைகளும் பலிக்கும் என அன்னை கூறியிருக்கிறார்.
 • உண்மையான பிரார்த்தனை என்றால் என்ன?
 • நமக்குரியது என ஒன்றுண்டு. நம் தகுதிக்குரியது என ஒன்றுண்டு. இவையிரண்டும் உண்மையானவை. நம் ஆசைக்குரியது என்பது உண்மையில்லை. நம் கற்பனைக்குரியது கணக்கில் சேராது. நான் பட்டம்பெற்றவன். என் நண்பர்கள், என்னைப் போன்றவர்கள் சர்க்காரிலும், பாங்கிலும் கிளார்க்காக இருக்கும் பொழுது நான் பிரைவேட் கம்பனியில் வேலை செய்கிறேன் என்றால், நான் அன்னையிடம் வந்தால் எனக்கும், என் நண்பர்கள்போல் வேலை நான் பிரார்த்திக்காமல் கிடைக்கும். பிரார்த்தித்தால் நிச்சயமாகக் கிடைக்கும். இவை உண்மையான பிரார்த்தனைகள். நான் IAS ஆபீசராக வேண்டும் என்பது ஆசைக்குரியது, உண்மையில்லை. கவர்னராக வேண்டும் என்பது கற்பனைக்கோட்டை. உரியநேரம் என்றால் என்ன?

  என்னைப் போன்றவர் சர்க்காரில் குமாஸ்தாவாகும் பொழுது நான் பிரைவேட் கம்பனியில் வேலை செய்கிறேன் எனில், இருவரும் பட்டம் பெற்றது ஒன்றானாலும், அவன் பட்டம் I கிளாசாகவும், என் பட்டம் III கிளாசாகவுமிருக்கும். III கிளாஸ் வாங்கிய மற்றொருவன் பாங்கில் வேலை செய்கிறான் எனில் அவனுக்குள்ள பொறுமை எனக்கிருக்காது. ஒரே படிப்புள்ள பலர் வெவ்வேறு உயர்ந்த உத்தியோகத்திலிருப்பதை அவருள் ஒருவர் கருதினால்,

  • இவருக்கில்லாத தகுதி அவர்கட்கு இருக்கும்.
  • அது செல்வம், செல்வாக்கு, திறமை, குணம், பழக்கம், ஆகிய எதுவாகவுமிருக்கும்.
  • நமக்கில்லாத பொறுமை அன்னையிடம் வந்தபின் 2 ஆண்டுகளில் அல்லது 2 மாதங்களில் வந்தால், பொறுமைசாலிக்குக் கிடைத்த பதவி நமக்குக் கிடைப்பது உரிய காலம்.
  • நம் குடும்பத்தில்லாத உயர்வு பிறர் குடும்பத்திருப்பதைப் போல் பிறர் குடும்பத்தில்லாத குறை நம் குடும்பத்திலிருக்கும்.
  • பர்சனாலிட்டிக்கு ஏற்றவாறு பலிக்கும்என்பது அந்தஸ்து, திறமை, குணம் ஆகியவற்றைக் குறிக்கும்.
  • அன்னை பலிக்கும் என்பது பொய்யன்று; எந்தப் பிரார்த்தனையும் பலிக்கும் எனப் புரிந்துகொள்வது பொய்.
  • பொய் என இருந்தால் அது அன்னையிடமில்லை. நம்மிடம் இருக்கும்.
  • ஏமாற்றுவது என்பது அன்னையிடமில்லை.
  • நாம் நினைக்காதன எல்லாம் பலிக்கும் பொழுது ஏமாற்றுவது எது?
  • நாமே நம்மை ஏமாற்றிக் கொள்வதுண்டு. அன்னை நம்மை ஏமாற்றுவதில்லை.

கணவர் - விஷயம் மனத்தைப்பொருத்ததா?

தாயார் - மனத்தின் பக்குவத்தைப்பொருத்தது;

கணவர் - பக்குவத்திற்கு அளவில்லை;

தாயார் - பணத்திற்கும் அளவில்லை:

 • நாம் கடவுள் என்பதை பிரம்மா, சிவன், விஷ்ணு என்கிறோம். கடவுள் என்பது ஒரு கருத்து (concept). நம்மைப்போல் கடவுள் இருக்கிறார். அவர் தமிழ் பேசுகிறார். அவருக்கு மனைவியுண்டு; குழந்தைகளுண்டு; ஆசை, அபிலாஷைகளுண்டு; கோபதாபங்கள் உண்டு என்பது மனிதமனம் வளரும் பொழுது அதில் ஒரு கட்டம் (anthromorphism) எனப் பெயர். எல்லா நாடுகளிலும் இதுவே மதம் வளர்ந்த வரலாறு. மனம் மேலும் வளர்ந்தபின் இதைச் சிறுபிள்ளைத்தனம் என உணர்ந்தனர். ரூபம் உடையவன் இறைவன் என்ற மனநிலை மாறி இறைவன் ரூபமற்றவன், அரூபி என மனம் உணர்ந்த பின், இறைவன் ஆனந்தமயமானவன், சக்திமயமானவன், சத்தானவன் என அவனுக்குக் குணங்களைக் கற்பிக்கிறோம். அதைக் கடந்த நிலை அரூபிணி. சச்சிதானந்தம் என்பதே இறைவனுக்குக் குணத்தைக் கற்பிப்பது. எல்லாக் குணங்களையும் உடையவன் சகுணி எனவும், எந்தக் குணமும் இல்லாதவன் நிர்குணி எனவும் கூறுகிறோம்.

  இறைவன் ரூபங்களைக் கடந்தவன் - அரூபிணி

  குணங்களைக் கடந்தவன் - நிர்குணி

  எனக் கருதும் தத்துவம் மனித மனத்தைக் கடக்க முயலும் நிலை. அதனால் அவனை முடிவற்றவன், அந்தம் - முடிவு - இல்லாதவன் அனந்தன் என்றார்கள். அனந்தன் என்ற கருத்து அனந்தம் எனப்படும். ரூபத்தையும், குணத்தையும் கடந்ததைப் போல் இறைவன் காலத்தையும், இடத்தையும் கடந்தவன் என்பதை அனந்தன் (Infinity, Eternity) என்றோம்.

  • காலத்தையும், இடத்தையும், ரூபத்தையும், குணத்தையும் கடந்த நிலை அனந்தம்; அதுவே ஜீவனானால் அனந்தன். அனந்தன் என்பது ஆண்பால், பெண்பால் அதற்கில்லை. அந்த ஜீவனை சத்புருஷன் என்றோம். அந்நிலையை சத் என்றோம். பகவான் அதை Self-Conscious Being என்றார். அந்நிலையை Existence எனவும், அந்த ஜீவனை Existent எனவும் கூறுகிறார். அவனுடைய சக்தியே சமுத்திரம்.
  • இவ்வளவும் மனம் அறிந்தது, கற்பித்தது, கற்பனை, மாயை. மனத்தைக் கடந்த நிலையைச் சொல்லால் வர்ணிக்க முடியாது. அனுபவிக்கலாம். அத்திறன் மனத்திற்கில்லை. சத்திய ஜீவியத்திற்கு உண்டு.
  • சத்புருஷனுக்கு 5 வெளிப்பாடுகள் உள்ளன என்றோம். அவை:
   1. பிரம்மம், புருஷா, ஈஸ்வரா.
   2. சத், சித், ஆனந்தம்.
   3. காலம், இடம்.
   4. சத்தியஜீவியம்.
   5. ஆன்மா என்ற அகம்; சத்தியம் என்ற புறம்.

   இவை மனம் அறிந்தவை, மனம் கற்பித்தவை. சிவன், விஷ்ணு, பிரம்மா என்பவை சிறுபிள்ளைத்தனமானவை. அவற்றைக் கடந்த கருத்துகள் இவை. வேதரிஷிகள் கடவுள்களை - இந்திரன், அக்னி, லக்ஷ்மி, நாரதர், சிவன் போன்ற கடவுள்களை - கற்பித்து அவர்கள் மூலம்சச்சிதானந்தத்தை எட்டினர். உபநிஷதம் அதைக் கடந்த மனநிலை. நேரடியாக சச்சிதானந்தத்தை எட்டினர். அதையும் கடந்தனர். கடந்தனர் எனில் கடந்ததைக் கற்பனை செய்தனர். அப்படிப்பட்ட கருத்தே அக்ஷரப்பிரம்மம்.

   கீதை, "வேதத்தைப் படித்தோ, உபநிஷதத்தைப் படித்தோ புருஷோத்தமனை அடைய முடியாது" என்கிறது. புருஷோத்தமன்,அக்ஷரப்பிரம்மத்தைக் கடந்தது. புருஷனைவிட உயர்ந்த நிலை புருஷோத்தமன். பிரம்மத்தைவிட உயர்ந்தது பரப்பிரம்மம்; ஈஸ்வரனை விட உயர்ந்தது பரமேஸ்வரன். இவை மூன்றும் சேர்ந்தது சத்புருஷன். ஜீவன், புருஷன் என்பதைக் கடந்த நிலை சத் என்பது Existence பிரம்மம் அதையும் கடந்த நிலை, அனந்தன் என்றதைக் கடந்த அனந்தம்; அனந்தம் என்பதும் குணம். அதையும் ஆண்டவனுக்குக் கற்பிக்க முடியாது என்பதால் அவ்வனந்தம் சுயமானது Self-existent Infinityஎன்றார் பகவான்.

   • Infinite, finite என்பவை முரண்பாடு என்பதால் மனம் அறிவது.
   • அவற்றைக் கடந்த Infinity என்பதை மனம் கற்பனை செய்ய முடியாது என்பதால் மனம் தன்னை இழக்கிறது. அதுவே சமாதி நிலை. மனம் தன்னைக் கடக்க முயன்றால் தன்னை இழக்கும்; Unconscious ஆகும். சமாதி நிலை என்பது மரபில் உயர்ந்த உன்னதம் பெற்றது. பகவான் அதைக் கடந்து போய் conscious ஆக இருப்பது சத்தியஜீவிய நிலை என்கிறார். அங்கு முரண்பாடில்லை. முரண்பாடற்ற அனந்தம் சத்தியஜீவியம். அது விழிப்பான நிலை. அதை முதல் அனுபவித்தவர் பகவான்.
    • அலிப்பூரில் அவர் கண்ட நாராயண தரிசனம் சத்திய ஜீவியம்.
    • கிருஷ்ணன் அர்ஜுனனுக்குக் கொடுத்த விஸ்வரூபம் இருபுறமும் உள்ளது. அது overmind கண்டது.
 • இந்த யோகத்தின் தத்துவம் இறைவன் சுயமான, முழுமையான அனந்தம். அதை விழிப்பில் காண்பது சத்தியஜீவியம். அதைக் காணும் மனம் சத்தியஜீவியமாகும். அதைக் காணும் வாழ்வு அனந்தமாகும். வாழ்வில் அனந்தம் என்பது அபரிமிதம்; தோல்வியற்ற நிலை. நாம் அந்த அபரிமிதத்தை அதிர்ஷ்டம் என்கிறோம். அதை உடல் கண்டால் நாம் சத்தியஜீவனாகிறோம். அது யோகநிலை. வாழ்வில் அந்நிலை,
  • நாம் தொடுவனவெல்லாம் அபரிமிதமாகப் பெருகும்.
  • புத்தகம் விற்றால் ஆயிரக்கணக்காகத் தொடர்ந்து விற்கும்.
  • ஏராளமான புத்தகத்தைத் தொடர்ந்து விற்பவர் சத்தியஜீவியத்தை  உடல், வாழ்வில், செயலாக, பலனாகக் காண்கிறார்.
  • இது பலிக்க "அன்னை" என்ற நூல் கூறிய 30 குறைகளின் சாயலும் இருக்கக்கூடாது.

   உடல் சுறுசுறுப்பாக வேலை செய்யவேண்டும்.

   வாழ்வு தோல்வியற்ற இனிமையாக இருக்கவேண்டும். மனம்

   'The Life Divine"ஐ கதைப் புத்தகம்போல் படிக்கவேண்டும். பிறர் வாழ மனம் பூரிக்கவேண்டும்.

 • இவற்றிற்கெல்லாம் தத்துவத்தில் அடிப்படை அனந்தம் Infinity.
  • Infinityஅனந்தம் என்பதை மனத்தால் தத்துவமாகவும், வாழ்வில் கருணை நிறைந்த இனிமையாகவும், உடலில் அபரிமிதமாகவும் காணமுடியும்.
  • செய்வதை அபரிமிதமாகப் பலிக்கும்படிச் செய்தால் நாம் அந்நிலையை எட்ட முயல்கிறோம்.
  • சத் என்பது ஆன்மா என்ற அகமாகவும், சத்தியம் என்ற புறமாகவுமிருப்பதால் முழுமையான சத்தியம், உண்மையைப் பின்பற்றினால் புறத்தகுதி பெறுகிறோம். அதை உள்ளே காண்பது ஆன்மா. ஆன்மாவும், சத்தியமும் உள்ளே இணைவது சத்புருஷன். புருஷன் என்ற கருத்தைக் கடப்பது சத்தாவதாகும்.அதையும் கடப்பது பிரம்மம். பிரம்மத்தின் வெளிப்பாடு

   சத்திய ஜீவியம்.

 • நாம் செய்யும் காரியம் அபரிமிதமாகப் பலிப்பது சத்தியஜீவிய மனநிலை.
 • தாயாருக்கு இந்த தத்துவம் எல்லாம் தெரியாது. அவர் தத்துவம் படித்ததில்லை.அத்தத்துவங்கள் அன்னைச் சட்டங்களாக வாழ்வில் வெளிப்படுவதைப் படித்திருக்கிறார். அது தத்துவம் தெரியாத நடைமுறை>. ஆதாயம் தேடும் குடும்ப மனநிலை. தத்துவமான நடைமுறை என்பது ஆதாயம் தேடாத higher consciousness உயர்ந்த மனநிலை. தாயாருக்கு அது தெரியாது. அவர் மனம் குடும்பத்திலிருப்பதால், குடும்பத்தின் மனம் ஆதாயத்திலிருக்கிறது.
  • 5000 ரூபாய் முதல் 10,000 ரூபாய்வரை சம்பாதித்த குடும்பம்அளவுகோலில் 3, 4, 5 என்றிருந்தது.
  • தகப்பனாருக்கும், பெரியவனுக்குமாகச் சேர்ந்து 25 ஆயிரம், 30 ஆயிரம் என வருமானம் பெறும் நிலை 15ஆம் நிலை.
  • கம்பனி, பவர் பிராஜெக்ட், 150 கோடி கமிஷனில் பங்கு என்பது 80ஆம் நிலையைத் தொடுவது.
  • இந்நிலையில் முழுக்குடும்பமும் தாயார் மனநிலையைப் பெற்றால் 80ஆம் நிலை வந்தது நிலைக்கும். அல்லது தாயார் தத்துவமான நடைமுறையை அடையவேண்டும்.
   • குடும்பம் உயர்ந்தால் தாயார் மனநிலை உயரும்.
   • தாயார் மனநிலை உயர்ந்தால் குடும்பம் உயரும்.
   • ஒன்று நடந்தால் அடுத்தது நடக்கும்.
   • இரண்டும் நடப்பது உசிதம்.
   • இந்த அபரிமிதம் கறுப்புப் பணமாக வருவது நெகட்டிவ்.
   • பாஸிட்டிவாக வருவது செல்வம், செல்வாக்கு,பதவி, அந்தஸ்து, பிரபலம். அவை நாடெங்கும் பரவும்; நாட்டின் எல்லையைக் கடந்து பரவும்.
  • நாமுள்ள இடம் முழுவதும், நாடு முழுவதும், நாட்டைக் கடந்தும் அன்னை நம்மால் பரவுவது, நம் பிரபலம் பரவுவதாகும்.
  • பெரியவன் செய்யும் கேலி;
  • பெண் "ஆதாயமில்லாவிட்டால் அன்னை எதற்கு" என்பது;
  • கணவர் வயிற்றுவலி குமாஸ்தா வதைவதை அனுபவிப்பது ஆகியவை தடை. அதுபோன்ற தடைகள் ஆயிரம்.
  • "ரங்கன் மந்திரியாவான்" என்றால் நான் என் வாயால் அந்தப் பாவத்தைச் செய்யமாட்டேன் என்பது;
  • பார்ட்டிக்குப் புதுடிரஸ் வேண்டும் என்பவை சிறு காரியங்களானாலும்,
  • பெரியதைத் தடுக்கும் சிறியவை அவை.
  • அவை மனத்தை விட்டே அகல்வது அன்னை பக்தி, தூயமனம்.
   அளவுகடந்த சுத்தம்,
   (எந்தப் புத்தகத்தின் மீதும் தூசியில்லாமலிருப்பது, எந்த அலமாரியடியிலும் குப்பையில்லாமலிருப்பது போன்ற நிலை என்றுமிருப்பது) அவசியம்.
   • இந்த அவசியத்தின் தத்துவத்தையும், நடைமுறையையும் உணர்வது பக்தி.
    அளவுகடந்து சத்தமில்லாமலிருப்பது,
   • பூரண மௌனம்.
    பெரிய ஒழுங்கு,
   • எந்த டிராயர், பெட்டியிலும் எல்லாம், எப்பொழுதும் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது.
    சுத்தமான கணக்கு,
   • கடைசி பைஸாவரைக் கணக்கெழுதுவது.
    உஷாரான பார்வை,
   • எது எதனுடன் தொடர்பு கொண்டுள்ளது என்ற கவனம்.
    தூய்மையான மனம்,
   • பிறர் கண்ணோட்டத்தில் மட்டும் விஷயங்களை அறிதல்.
   • அடுத்தவர் அதிர்ஷ்டம் பெற மனம் ஏங்குதல்.
    காலத்தைச் சுருக்குவது,
   • காரியங்களைத் திறமையாகச் செய்வது.
    இடம் விரயமாவதைத் தடுப்பது,
   • உள்ள இடத்தை நன்றாகப் பயன்படுத்துவது.
    தோல்வியற்ற நிலை,
   • எதையும் வெற்றிகரமாகச் செய்வது.
    சக்தியைப் பயன்படுத்துவது,
   • முயன்று செய்வதை மூலத்தால் செய்வது.
    எந்த நேரமும் சந்தோஷமாக இருப்பது,
   • ஆனந்தத்தை (bliss) வெளியிடுவது (delight).
    நெகட்டிவானவற்றைப் பாஸிட்டிவாகச் செய்வது,
   • மனத்தைக் கடந்து சத்தியஜீவியத்தை அடைவது.
    பிரச்சினைகளை வாய்ப்பாக்குவது,
   • அதிர்ஷ்டத்தை அருளாக்குவது.
    அருளைப் பேரருளாக்குவது,
   • கடுமை இனிமையாகி, இனிமை கருணையாகி, கருணை அருள் பேரருளாவது, ஜீவியம் திருவுருமாறி உயர்வதாகும்.

கணவர் - ......... சிறு விஷயங்களில் தங்களைக் கட்டுப்படுத்த முடியாதவர்கள் சமர்ப்பணத்தை இழக்கின்றனர். கட்டுப்பாடு சிறியதானாலும் கடைசியில் பார்க்கும்பொழுது கடவுளுக்குச் சமமாகும்.

 • கணவருக்கு எந்தக் கட்டுப்பாடும் ஒத்துவாராது. மனைவி சொல்வதை ஏற்பது அவருக்கு மனைவிக்குக் கட்டுப்படுவதாகத் தெரிகிறது. அதனால் ஆழ்ந்து உணர்ந்து கட்டுப்பாட்டைக் கடவுளாகக் காண்கிறார்.
 • கட்டுப்பாடு என்றால் என்ன?
  • பசி, தாகம் கட்டுப்படுவது சிரமம்.
  • ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாது.
  • ஒன்று உடலுக்குரியது; ஆத்திரம் உணர்ச்சிக்குரியது.
  • கட்டுப்பாடு எனக் கணவர் இங்குக் கூறுவது சுயக்கட்டுப்பாடு. புறக்கட்டுப்பாடு சிரமமானாலும் நாம் அதற்கு எளிதில் கட்டுப்படுகிறோம். நாமாக கட்டுப்படுவது, நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்வது (Self-discipline) என்பதே கடவுள் போன்ற கட்டுப்பாடாகும்.
  • சிறு விஷயங்களிலும் தமக்குக் கொஞ்சம்கூட கட்டுப்பாடில்லை என்பதைப் பூரணமாக உணர்ந்து கணவர் பேசுகிறார்.
  • நாம் கட்டுப்படாத சிறு விஷயங்களில் பூரணமாகச் சுயக்கட்டுப்பாட்டை ஏற்க முன்வந்தால் அன்னையை நோக்கி ஓர் அடி எடுத்து வைப்போம்.
  • அப்படி, கணவர் குறிப்பிடுபவை: வேலைக்காரியிடம் சண்டை போடுவது, குறுக்கே பேசுவது, பேரம் பேசுவது, வயிறு நிறைந்த பின் வாய்க்காகச் சாப்பிடுவது போன்றவை.
  • Token act என அடிக்கடி நான் எழுதுவதுண்டு. அவை நாம் அன்றாடம் செய்யும் காரியங்கள். அதை அகத்தில் செய்யலாம். இந்த தத்துவம் செயல்படும் இடம் இது.
 • Token act -அகத்திற்குரிய அடையாளச் செயல்.
  • Impulses உள்ளிருந்து எழும் வேகத்தைக் கட்டுப்படுத்துவதாக இது அமையும்.
  • இதில் முக்கியமான இடம், வெளியில் நடக்கும் நிகழ்ச்சி நம் அகக் கட்டுப்பாட்டால் மாறுவது. Life Response என நாம் அறிவோம்.
  • பெரும்பாலும் Silent will செயல்படும்.
  • அலமாரி வாங்கப்போகிறோம். நாம் பார்த்ததை அடுத்த வீட்டுக்காரர் 3900 ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார். அவர் ஏமாந்தவர். இது 3500 ரூபாய்க்குமேல் பெறாது. கடைக்காரர் 4700 ரூபாய் என்கிறார். இப்பொழுது மனம்துடிக்கிறது, "இதே கடையில் 3900 ரூபாய்க்கு அடுத்த வீட்டார் வாங்கி இருக்கிறார்" என்று சொல்ல, அதை சொல்லாமலிருப்பது Silent will. சமர்ப்பணம் செய்வது கட்டுப்பாட்டை விட உயர்ந்தது.
   • இப்பொழுது எதுவும் முடியவில்லை. பேச ஆசையாக இருக்கிறது.
   • நாமே கட்டுப்படுத்துவது, வேகம் தானே கட்டுப்படுவது, மௌனம் ஏற்பட்டு கட்டுப்பாடு தேவைப்படாதது, சமர்ப்பணம் ஆகியவை நம்முன் உள்ளன.
   • நாமே கட்டுப்படுத்தினால் 4000 ரூபாய் என்கிறார்; தானே கட்டுப்படும் பொழுது 3900 ரூபாய் என்று பேச்சு வருகிறது; சமர்ப்பணத்தை நினைத்துப் பலிக்கும்பொழுது முதலாளி வந்து ரூ.3500/-க்கு எடுத்துக்கொள்ளுங்கள் என்கிறார்.
   • இத்தனையும் பார்த்தபிறகும் அடுத்த முறை நமக்குப் பேசத் தோன்றுகிறது. எந்த எந்த விதமாக இப்படிப்பட்டவருக்குப் பதில் சொல்லலாம் என மனம் சிந்தனையிலீடுபடுகிறது.
   • அவற்றையெல்லாம் அறிந்தவருக்குக் கட்டுப்பாடு கடவுளாகத் தோன்றும்.

என்னால் முடியாது. என்னால் எப்படி முடியும்? என்னை உங்களிடம் ஒப்படைத்தேன். நான் செய்யவேண்டியதை, எனக்காக, என் சார்பாக நீங்கள் செய்யவேண்டும் " — Agenda, Volume 5, P.101–102.

 • பிறவியிலேயே அன்னை இறைவனின் தொடர்புடன் பிறந்தவர்.
 • அந்தத் தொடர்பில்லாமல் உலகில் எதுவும் அசையாது என்பது ஞானம்.
 • அந்த ஞானம் செயல்பட அதற்குத் தடையானது விலகவேண்டும்.
 • நாமே இது நாள்வரை செயல்பட்ட பழக்கம் இருக்கிறது. அதுவும் இறைவனின் அருளால் நடந்தது, நம்மால் நடந்ததில்லை என்று நாம் அறிவதில்லை.
 • நாம் என்பது அணு. இறைவன் அனந்தம்.
 • அணுவை உற்பத்தி செய்தது அனந்தம்.
 • அணுவை இயங்க வைப்பது அனந்தம்.
 • அணு தானே இயங்குவதாக நினைத்துப் பழகிவிட்டது.
 • பழக்கம் அணுவை அகந்தையாக்கியது.
 • அகந்தை அணுவாகி, அணு அனந்தமாக, "என்னால் முடியாது, என்னால் எப்படி முடியும்?" என்ற தெளிவு தேவை.
 • என்னால் முடியாது என அறிந்த எவராலும் எதுவும் முடியும்.
 • அன்னை தாம் செய்வது, எவருக்கும் கொடுக்க முடியும்.
 • அவரால் முடிந்தால், அவரை நம்புபவர் எவராலும் முடியும்.
 • அன்னையின் உயிரும், உடலும், பிரபஞ்சத்தின் உயிரும் உடலும் ஆகும்.
 • என்னால் முடியாது என்றறிந்த எவரும் அன்னையை அழைத்தால், அவருடல் அன்னையுடலுடன் தொடர்புகொள்ளும் - அதை நாம் அன்னை மீதுள்ள நம்பிக்கை என்கிறோம்.
 • அன்னையின் உடல் "என்னால் முடியாது. எப்படி என்னால் முடியும். என்னை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன். என் வேலையை எனக்காக நீங்கள் செய்யுங்கள்"என இறைவனிடம் கூறியபடி இருக்கிறது.
 • அதைக் கூறும் எவரும் அன்னையுடன் தொடர்பு கொள்கிறார்கள் - உடனே சூழல் மாறுகிறது.
 • சூழல் மாறினால் அவர்கள் சொல்லியது உண்மை.
 • "எனக்காக நீங்கள் செய்யுங்கள்" என்பதை எவரும் எளிதாகக் கூறலாம்.
 • அது பலிக்க அதற்குமுன் சொல்லவேண்டியது, "என்னால் முடியாது,எப்படி என்னால் முடியும்" என்பது. அதைச் சொல்ல எவரும் முன் வருவதில்லை.
 • அதைச் சொல்லியவுடன், சொல்பவர் சூழல் உலகின் சூழலாகும்.
 • குறைந்தபட்சம் அவருடைய உலகின் சூழலாகும்.
 • அதிலிருந்து அவர் செய்வனவெல்லாம் பலிக்கும்; தொடர்ந்து பலிக்கும்.
 • இரகஸ்யம் "என்னால் முடியாது" என்பதை அறிவது.
 • அதை பக்தி, நம்பிக்கை எனலாம். அடக்கம் என்பது பொருத்தம்.
 • உணர்ந்தவர்க்கு உலகம் உண்டு; உலகத்தில் எல்லாம் உண்டு.
 • உலகம் உள்ளங்கையில் வருவது இந்தச் சொல்லால்.
 • இது சொல்லானால் பயன்தாராது; உணர்வானால் உயிர்வரும். . உடலே எழுந்து உயிர் பெற்றுப் பேசினால், உடனே பலிக்கும்.
 • மேற்சொன்ன கருத்து கருவானது. அது அன்னையின் சமர்ப்பணம்.
 • கதையில் பார்ட்னர் குடும்பத்திற்கு கம்பனியைக் கொடுத்துவிட்டார்.
 • உடனே கம்பனியை நடத்த முயல்கின்றனர். "இந்தக் கம்பனியை என்னால் நடத்த முடியாது" என்ற எண்ணம் அவர்களுள் எவருக்கும் உதயமாகவில்லை. அது வந்தால் தானே அன்னையிடம் விடும் விஷயம் எழும். அது எவருக்கும் தோன்றுவதில்லை.
 • கம்பனி என வந்தவுடன், என்ன செய்யலாம், எப்படிச் செய்யலாம் எனத் தோன்றுகிறதேயொழிய, என்னால் முடியாதுஎனத் தோன்றுவது இல்லை.
 • நாம் கம்பனியை அன்னை நடத்துவதுபோல் நடத்த முடியாது. நாம் நடத்துவது போல் நடத்தலாம்; அதுவே நம் கையிலில்லை.
 • வீட்டில் "என்னால் முடியாது", "என்னால் முடியும்" என்பவை பிரச்சினைகளில்லை. என்ன கிடைக்கும், எப்பொழுது கிடைக்கும் என்பது பேச்சு. அதை எதிர்பார்ப்பவருக்கு எதுவும் கிடைக்காது. தாம் நடத்துவது போலும் நடத்த முடியாத பிரச்சினைகள் வரும். அப்பொழுது அன்னை நினைவு வரும். அது சாதாரண மனித வாழ்வுக்கும் தாழ்ந்தது.
 • "எனக்குத் தெரியும்; நான் செய்வேன்" என்றால் இதுவரைக்கும் என்ன செய்திருக்கிறாய் என்பது கேள்வி. வாய்ப்பு வந்தது உண்மை. அதுவே தாயார் பக்திக்குரியது. வாய்ப்பைச் செயல்படுத்த வேண்டாமா?
 • என்னால் முடியாது என்றே தெரியாதவர் என்னால் முடியாது என அறிவது முன்னேற்றம்.
 • இக்குடும்பம் அந்நிலையிலில்லை.
 • தாயார் அதைக் கருதுகிறார்.
 • தாயார் மனம் எப்படியிருக்கிறது?
 • எப்படி இதைச் சாதிக்கலாம், அன்னை என்ன முறையைக் கூறியுள்ளார் என நினைக்கிறது.
 • தாயாருக்கு என்னால் இது முடியாது எனத் தோன்றவில்லை.
 • அன்னை முறைப்படி செய்வதானால், யார் செய்வது? செய்வது தாயாரன்றோ!
 • அந்த முதற்படிக்குத் தாயார் தகுதியற்றவர் என நம்ப முடியவில்லை.
 • அதுவே உண்மை.
 • தாயாருக்கே அந்த உண்மை புரியும்வரை எதுவும் நகராது.
 • எதுவும் நகராத நிலையில் இவ்வளவு நடப்பது அருளின் சிறப்பு.
 • அப்படி ஒரு நாள் தாயாருக்கு "என்னால் முடியாது" எனத் தெரிந்தால் அதை அன்னையிடம் விட முன்வருவாரா? வந்தால் தாயாருலகம் மாறும்.
 • அது முதற்படி, முதற்கட்டம், முதல் நிபந்தனை.
 • என்னால் சமர்ப்பணம் செய்ய முடியவில்லை என்று நினைக்கும் தாயார், நான் சமர்ப்பணம் செய்ய விரும்பவில்லையே என அறியார்.
 • நாமனைவரும் தாயார் போலிருக்கிறோம்.
 • நாம் எதையும் சாதிக்காமல் அவர் போலிருக்கிறோம். அவர் பெரிய வாய்ப்புகளைப் பெற்று நம் போலிருக்கிறார். சமர்ப்பணம் அவசியம்.மனிதனின் இயலாமையை உணர்வதும், அதை அன்னையிடம் விடுவதும் அவசியம்.

தொடரும்.....

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

பிறர் அறியாமையைக் காணும்பொழுது அறியாமையின் புறத்தோற்றத்தைக் காண்கிறோம். நம்முடைய அறியாமையைக் கண்டால் அறியாமையின் உள்ளுறை இரகஸ்யங்கள் தெரியும்.

அறியாமையின் உள்ளுறை இரகஸ்யங்கள் தெரியும்.

******

Comments

Points under conversation   

Points under conversation

    கணவர் - ......... சிறு விஷயங்களில் தங்களைக் கட்டுப்படுத்த முடியாதவர்கள்..

    Point  1  - Please remove the extra blank line.

    Point 2  - Please indent all the sub points by few spaces
            பசி, தாகம் கட்டுப்படுவது சிரமம்
            :
            :
           Token act என அடிக்கடி நான் எழுதுவதுண்டு. அவை ....
 
     Point 3 starting with following line
         Token act -அகத்திற்குரிய அடையாளச் செயல்
               Please indent following sub points
                   Impulses உள்ளிருந்து எழும் வேகத்தைக் ..
                  இதில் முக்கியமான இடம், வெளியில் நடக்கும் நிகழ்ச்சி...
                 பெரும்பாலும் Silent will செயல்படும்
                அலமாரி வாங்கப்போகிறோம் .... 
          Please indent all the sub points under the paragraph starting with following line by few spaces
                 அலமாரி வாங்கப்போகிறோம்....

Continuation of comments

Continuation of comments added on  4/2/11  --- Please note, when I tried to save the comments, the indentation for the 'square' sub points goes away. Actually the 'square' sub points should be indented by few spaces.

 
 Please use the following to get the right indetation of these lines in this article

·  பார்ட்டிக்குப் புதுடிரஸ் வேண்டும் என்பவை

    சிறு காரியங்களானாலும்,

·  பெரியதைத் தடுக்கும் சிறியவை அவை.

·  அவை மனத்தை விட்டே அகல்வது அன்னை பக்தி, தூயமனம்.அளவுகடந்த சுத்தம்

     (எந்தப் புத்தகத்தின் மீதும் தூசியில்லாமலிருப்பது,எந்த அலமாரியடியிலும் குப்பையில்லாமலிருப்பது போன்ற நிலை என்றுமிருப்பது) அவசியம்.

 • இந்த அவசியத்தின் தத்துவத்தையும், நடைமுறையையும் உணர்வது பக்தி.

அளவுகடந்து சத்தமில்லாமலிருப்பது,

 • பூரண மௌனம்.

பெரிய ஒழுங்கு,

 • எந்த டிராயர், பெட்டியிலும் எல்லாம், எப்பொழுதும் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது.

சுத்தமான கணக்கு,

 • கடைசி பைஸாவரைக் கணக்கெழுதுவது.

உஷாரான பார்வை,

 • எது எதனுடன் தொடர்பு கொண்டுள்ளது என்ற கவனம்.

தூய்மையான மனம்,

 • பிறர் கண்ணோட்டத்தில் மட்டும் விஷயங்களை அறிதல்.
 • அடுத்தவர் அதிர்ஷ்டம் பெற மனம் ஏங்குதல். காலத்தைச் சுருக்குவது,
 • காரியங்களைத் திறமையாகச் செய்வது.

இடம் விரயமாவதைத் தடுப்பது,

 • உள்ள இடத்தை நன்றாகப் பயன்படுத்துவது.

தோல்வியற்ற நிலை,

 • எதையும் வெற்றிகரமாகச் செய்வது.

சக்தியைப் பயன்படுத்துவது,

 • முயன்று செய்வதை மூலத்தால் செய்வது.

எந்த நேரமும் சந்தோஷமாக இருப்பது,

 • ஆனந்தத்தை (bliss) வெளியிடுவது (delight).

நெகட்டிவானவற்றைப் பாஸிட்டிவாகச் செய்வது,

 • மனத்தைக் கடந்து சத்தியஜீவியத்தை அடைவது.

பிரச்சினைகளை வாய்ப்பாக்குவது,

 • அதிர்ஷ்டத்தை அருளாக்குவது.

அருளைப் பேரருளாக்குவது,

 • கடுமை இனிமையாகி, இனிமை கருணையாகி, கருணை அருள் பேரருளாவது, ஜீவியம் திருவுருமாறி உயர்வதாகும்.

Points under

Points under conversation

 கணவர் - விஷயம் மனத்தைப்பொருத்ததா?
 
 Point starting with the following line
      தாயாருக்கு இந்த தத்துவம் எல்லாம் தெரியாது....
         Please indent the subpoints starting with following lines by few spaces
                5000 ரூபாய் முதல் 10,000 ரூபாய்வரை சம்பாதித்த ....
                தகப்பனாருக்கும், பெரியவனுக்குமாகச் சேர்ந்து 25 ஆயிரம் ...
                கம்பனி, பவர் பிராஜெக்ட், 150 கோடி கமிஷனில் .....
                இந்நிலையில் முழுக்குடும்பமும் தாயார் மனநிலையைப் ....
                      Please indent 6 points under this sub point by few spaces
                நாமுள்ள இடம் முழுவதும், நாடு முழுவதும் ....
                பெரியவன் செய்யும் கேலி
                பெண் "ஆதாயமில்லாவிட்டால் அன்னை எதற்கு" என்பது
                கணவர் வயிற்றுவலி குமாஸ்தா வதைவதை ....
                          Please move the following to a new line
                                தடை. அதுபோன்ற தடைகள் ஆயிரம்.
                "ரங்கன் மந்திரியாவான்" என்றால்
                 பார்ட்டிக்குப் புதுடிரஸ் வேண்டும் ...
                          Please move the following to a new line
                                  சிறு காரியங்களானாலும்...
                பெரியதைத் தடுக்கும் சிறியவை அவை  ....
                அவை மனத்தை விட்டே அகல்வது அன்னை பக்தி   ....

Points under

Points under conversation

 கணவர் - விஷயம் மனத்தைப்பொருத்ததா?
Point 1 - Line 6 - சிறுபிள்ளைத்- தனம்    -   சிறுபிள்ளைத்தனம் 
Point 1 - Please indent the points numbered 1 - 5 by few spaces
Point 1 - Please indent points starting with following by few spaces
                      Infinite, finite என்பவை முரண்பாடு என்பதால் மனம் அறிவது    
                      அவற்றைக் கடந்த Infinityஎன்பதை மனம் கற்பனை செய்ய முடியாது ...
                          Please indent sub points under point starting with above line by  few extra spaces 
                         அலிப்பூரில் அவர் கண்ட நாராயண தரிசனம் சத்திய ஜீவியம்   
                         கிருஷ்ணன் அர்ஜுனனுக்குக் கொடுத்த விஸ்வரூபம் ....
                      இந்த யோகத்தின் தத்துவம் இறைவன் சுயமான, முழுமையான அனந்தம்
                          Please indent sub points under the point starting with above line by few extra spaces
                          Please remove the extra blank line  after the following line
                                 வாழ்வு தோல்வியற்ற இனிமையாக இருக்கவேண்டும். மனம்       
            Please indent points starting following lines by few spaces    
                       Infinityஅனந்தம் என்பதை மனத்தால் தத்துவமாகவும்  ..
                       செய்வதை அபரிமிதமாகப் பலிக்கும்படிச் செய்தால்    ...
                       சத் என்பது ஆன்மா என்ற அகமாகவும் ....
                            Please remove the extra blank line after the following line
                                    சத்புருஷன். புருஷன் என்ற கருத்தைக் கடப்பது சத்தாவதாகும்
                                    Please move 'சத்திய ஜீவியம்'  to a new line and center it

Points under

Points under conversation

 கணவர் - அன்னை பக்தன் என்பதால் எல்லாப் பிரார்த்தனைகளும் பலிக்க வேண்டுமன்றோ
Please indent all the points under the paragraph starting with following line, by few spaces.
       என்னைப் போன்றவர் சர்க்காரில் குமாஸ்தாவாகும் பொழுது  ......

For points under the

For points under the following conversation

தாயார் -

1. பழையமுதலாளிக்கு உதவினார், மகசூல் 30 வருஷங்களாகப் போயிற்று;

 

 Please indent 3 sub points under first point starting with the following line by few spaces
    இக்கதையில் கெட்ட எண்ணம் செயல்படுவதைத் தவிர்க்கவேண்டும்
     Point 1 - Sub point 2  -  Line 5     -   சேவையிலிருக்கிறா ன்        -    சேவையிலிருக்கின்
     Point 1 - Sub point 2  -  Line 8     -   வீட்டைத்தலைவருக்கு       -  வீட்டைத் தலைவருக்கு
    Point 1 - Sub point 2  -  Line 13   -    ஸ்பெஷஸ்டாலும்                  - ஸ்பெஷலிஸ்டாலும்
     Point 1 - Sub point 2  -  Line 17   -   திருப்பிக்கொடுக்கச்சொல்கேஸ் - திருப்பிக்கொடுக்கச்சொல்லி கேஸ்
     Point 1 - Sub point 3  -  Sub point 3 - Line 2 -  அதிருந்து                        -   அதிலிருந்து
     Point 1 - Sub point 3 - Please align following points with this sub point 3
                  தலைவருக்கு உன் வீட்டைக் கொடு என்ற பேராசிரியருடைய ...
                  மகள் நல்லபுடவை கட்டி அழகாக இருப்பதைக்கண்டு ...
                  தனக்குப் பெரிய சேவை செய்த நண்பனை ....
                  "உன்னுடைய பிரபலமான திட்டம் ...
                  திருடாதவன் மீது போலீஸ் பிராது கொடுத்து...
                  மனிதனுக்கு சத்தியம், நேர்மை தேவையில்லை...
                  துரோகம் செய்து பலியானபின் விடமுடியாத ....
               For point starting with தனக்குப் பெரிய சேவை செய்த நண்பனை ....
                        Line 3  -  லிபயானவன்             -    பலியானவன்
               For point starting with துரோகம் செய்து பலியானபின் விடமுடியாத ....
                              Line 3 - உறவு எனக்கொள்ள -  உறவுஎனக்கொள்ள

For points

For points under
மட்டமானவர்க்கு, கெட்டஎண்ணமுள்ளவர்க்கு உதவிசெய்தால் நம் வேலை கெடுமென கணவர் அறிவார்
Point 2  - Line  5  - கெட்ட எண்ணம். அழிவதன் முன் -  கெட்ட எண்ணம் அழிவதன் முன்
Point 2  - Line 14 - Please indent the points  1 & 2 by few spaces
Point 3  - Para 1  - Line 5 உலகப்போரை அன்னையின் போர் எனக் சர்ச்சில் - உலகப்போரை அன்னையின் போர் எனக் கூறினார். சர்ச்சில்
 Please make a following line to a new sub point 1
     இங்கிலாந்து பாராமுகமாக இருந்ததால் ஹிட்லர் வளர்ந்தான் என சர்ச்சில் எழுதுகிறார்.
 Point 3 - Sub Point 7 -  Please align the paragraph starting with following line, with square marked points
             காட்டியிருக்கிறேன். இவற்றையெல்லாம்விட அந்தஸ்து உயர்வதையும்
 For the same paragraph mentioned above - Please align the point under it with the start of this paragraph      

 For the points under the

 

For the points under the following line 

    அன்னைக்கு பண்பும் - இந்தியப்பண்பும் - பெரும்தடை

           Point 12 -  Line 1 -   உண்மை- யும்   -   உண்மையும்

 

For the points under the following line
      மட்டமானவர்க்கு, கெட்டஎண்ணமுள்ளவர்க்கு உதவிசெய்தால் நம் வேலை கெடுமென கணவர் அறிவார்:  
 
      Point 2 -  Para 6 - Please change the following
             from
                கெட்டஎண்ணம் அழியும்பொழுது நாமும் அழிவோம் - அதாவது நம்   எப்படியும் முடிவு நல்லதாக இருக்கும். கெட்டஎண்ணமும் அழியும்
             to
               கெட்டஎண்ணம் அழியும்பொழுது நாமும் அழிவோம் - அதாவது நம்  கெட்டஎண்ணமும் அழியும் 
      Point 2 - Para 12 -  அது எனக் கொள்ள இருப்பார்கள் -  அதுஎனக் கொள்ளலாமா?
      Point 2 - Para 12 - Please change the line to following
                தத்துவம் சரி. நம்மால் அது முடியுமா? நமக்கு அது தேவையா? என்பது கேள்வி.கெட்டஎண்ணம் அழியும் வழிகள் இரண்டு:
      Also, please indent the the points under this Para 12 by few spaces.
      Point 2 - Para 12  - Point 1  -  Please remove the second line from point numbered  1
      Point 2 - Para 13  - Please change the line 6 & 7 to following
                  பெரியவன் கிளப்பில் பேசாததை பேசியதாக அடியாள் கூட்டம் அறிந்து அவனை அடிக்க முயன்றனர்
      Point 2 - Para 13 - Please indent sub points under this para
      Point 2 - Para 13 - Please change Sub point 1 to the following
                   அது அருளால் விலகியதை நாம் போற்றுகிறோம். 
      Point 2 - Para 13 - Sub point 3 starting with  எப்படியும் முடிவு நல்லதாக இருக்கும்.
                   Line  7  - Please remove extra blank line  

 

 

 

02. எங்கள் குடும்பம் II For

02. எங்கள் குடும்பம் II
 
For points under conversation
 
தாயார் - பள்ளியைப்போல் சாதனை; முக்கியஸ்தர்போல் முடிவு இருந்தால் வருவது தவறாது; வருவது சிறியதாக இருக்காது:
 
Please align all the lines under each point
 
Point 11 -  Line 2  -  ங.க.ஆ.    -    M.L.A.
Point 11 - Please move the line starting with following to a new paragraph
            வாக்காளர் அரசியல் பெறக்கூடிய மிகச்சிறிய .....
Please indent points under following by few spaces
      இந்தக் குடும்பம் இந்திய மண்ணிலிருந்து பெற்றது என்ன?
Please indent points under following line by few spaces
      இந்தியர் விவசாயம், வியாபாரம், தொழில், அரசியல், ராஜ்ய பரிபாலனம்...
Please indent sub points under the point starting with the following by few spaces
       ஆன்மீகச் சட்டப்படி விவசாயம் செய்பவனுக்கு
For Point starting with  இந்தியர் எல்லாத் துறைகளிலும் ஆன்மீக ....
    Line 3 -   உயர்ந்தவரே. .இக்குடும்பத்தில் -   உயர்ந்தவரே. இக்குடும்பத்தில்
    Also, please indent two points under this point by few spaces
     
Please indent all the sub points under the point starting with following line by few spaces
   அன்னைக்கு பண்பும் - இந்தியப்பண்பும் - பெரும்தடை
           Sub point 12 -    உண்மை- யும்   -   உண்மையும்
 book | by Dr. Radut