Skip to Content

03.சாவித்ரி

சாவித்ரி

P.62 Her mighty plan She holds back from our sight.

எவர் கண்ணிலும் படாமல் எடுத்த பெரும் திட்டம்.

. தன் பெருமையையும், ஆனந்தத்தையும் திரையிட்டு மூடினாள்.

. நெஞ்சுநிறை அன்பையும் விவேகத்தையும் மறைத்துவிட்டாள்.

. அழகும், அற்புதமும் அவளுக்குரியன.

. அவற்றின் இருண்ட சாயலே நாம் கண்டது.

. அவனது தெய்வீகமும் அமிழ்ந்து தோன்றுகிறது.

. தன் பெருந்திறமையை கைநழுவ விட்டுவிட்டான்.

. தன் அனந்தத்தையும், அமைதியையும் அவனிழந்தான்.

. அவளை அறிவான்; தன்னை மறந்தான்.

. அவள் பெருமைக்காகத் தன்னைத் தியாகம் செய்தான்.

. அவளில் தான் மீண்டும் புத்துயிர்பெற விழைகிறான்.

. அனந்தத்தின் அமைதியை ஏற்று ஜனித்தவன்.

. அவள் சிருஷ்டித்திறனின் பூரிப்பு வேகம்.

. பூமியும், சொர்க்கமும் அவனுடையதே.

. பிரபஞ்ச நிர்வாகத்தை அவளிடம் ஒப்படைத்தான்.

. அவன் செயலுக்கு அவனே சாட்சி.

. அவள் அரங்கத்தின் அதிபதி அவன்.

. சொல்லையிழந்து, இறக்கையில் மறைந்தான்.

. அவளுலகில் அவன் பிறந்தான். அவள் உத்தரவுக்குக் காத்திருக்கிறான்.

. அவள் புதிரான புலன்கள் அவனுக்குப் புலப்படும்.

. புயலென மாறும் அவள் குணத்தின் சந்தர்ப்பம்.

. அவளறியாத அர்த்தத்தை அறிந்துகொள்பவன் அவன்.

. நெடுநாள் வாழ்வின் இரகஸ்யத்தை கண்டுகொண்டான்.

. அவன் வணக்கத்தை மீறிய ஜீவனுடையவள்.

. அவனது ஆசையின் பொக்கிஷமாக அவளை ஏற்றுப் போற்றுகிறான்.

. இரவு பகலாக எண்ணத்தால் ஏற்றிப் போற்றுகிறான்.

. தியாகச் சின்னமாக, வாழ்வை அர்ப்பணித்தான்.

. அவள் அன்பை அருளாகத் தேடும் அன்பன்.

. அவளில் தேடும் ஆனந்தம் அவனது லோகம்.

. அவனுடைய திறமைகள் அவள்மூலம் வளர்கின்றன.

. இறைவனின் திருவுள்ளத்தை அவளில் அவன் காண்கிறான்.

. அவள் சபையில் அவன் ஓர் அம்சம்.

. அவளருகிலிருப்பதே அவன் இலட்சியம்.

. அவள் தரும் துளி அவன் பெறும் பெருவெள்ளம்.

. அவள் செய்கை எல்லாம் அவனை ஆனந்தத்திரையாகக் கவர்ந்தன.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

நம் ஆன்மாவால்மட்டும் சேவை செய்யமுடியும். அது அடுத்த ஆன்மாவைச் சென்றடையும். மனித உறவில் நட்பும், சேவையும் உண்டு. அவை அவர்களுடைய பண்பின் எல்லைக்குட்பட்டது.எல்லையை மீறிய சேவையோ, நட்போ இல்லை. எல்லைக்கு உட்பட்டு நட்புண்டு; சேவையுண்டு. அவை நாட்டின் பழக்கம்,குடும்பப் பாரம்பரியம், அவர்களுடைய பண்பு ஆகியவற்றால் நிர்ணயிக்கப்படுகிறது. சட்டம் பொது. இது விதிவிலக்கு.விலக்கு சட்டத்தைப் பொய்யாக்காது.

பண்பால் செய்யப்படும் சேவை விதிக்கு விலக்கு.


 


 



book | by Dr. Radut