Skip to Content

09.யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

871) அம்முனையில் அன்னையோடு தொடர்பிருந்தால் இந்த 5 நிபந்தனைகளும் தாமே சேர்ந்து நினைத்த காரியம் முடியும்.

அன்னையின் தொடர்பு அனைத்தின் தொடர்பு.

****

872) இந்தச் சட்டத்தை நாமறிவது நடைமுறையில் செயல்பட ஓரளவு உதவும்.

சட்டம் செயல்பட உதவும்.

 • ஆச்சரியமான விஷயங்கள் நமக்குப் புரிவதில்லை.
 • புரியவில்லை என்பதால்தான் ஆச்சரியம் வருகிறது.
 • சில சமயம் அப்படிப்பட்ட விஷயங்கள் புரியும்.
 • உதாரணமாகத் தைரியமாக இருந்தால் எதிரி அடங்குவான் என்று புரிவதால் தைரியம் வாராது.
 • தைரியம் சாதிக்கும் என்று புரிவது அறிவு.
 • அறிவிருப்பதால் அதைச் செய்யமுடியும் என்று பொருளில்லை.
 • அவசரப்பட்டால் விலை அதிகமாகும்; அவசரமில்லை என்றால் விலை குறையும், படியும் என்பதால் அவசரப்படாமலிருக்கமுடியாது.
 • தெரிவது இன்றில்லை என்றாலும் ஒரு நாள் அதைச் செய்ய முயன்றால் முதற்படி எடுத்துவைக்க உதவும்.
 • அன்னையை அறிந்த அன்பர்க்குட்கு சட்டம் வேறு.
 • எது சாதாரண மனிதனுக்கு நிச்சயமாக முடியாதோ, அது அன்பர்க்கு நிச்சயமாக முடியும்.
 • அது முடிய உதவுவது இந்த அறிவு.
 • அறிவிருந்தால் - ஷேக்ஸ்பியர் எப்படி எழுதினார், சர்ச்சில் எப்படிப் போரை வென்றார், ஐன்ஸ்டீன் எப்படி மேதையானார் என்ற அறிவிருந்தால் - அன்பர்கள் அதற்குரிய முயற்சியை எடுத்தால் பலிக்கும்.
 • ஷேக்ஸ்பியர் எப்படிக் கவியானார் என்பதையும், ஐன்ஸ்டீனுடைய மேதாவிலாசம் எங்கிருந்து வருகிறது என்ற விஷயங்களை பகவான் ஸ்ரீ அரவிந்தர் விளக்கமாக எழுதியுள்ளார்.
 • உலகுக்குப் புதிரானவற்றை தெளிவான நீண்ட விளக்கமாக ஸ்ரீஅரவிந்தர் எழுதியுள்ளார்.
 • முயற்சியை, சரணம் செய்தால் ஒரு க்ஷணம் அப்பெருந்திறன் வந்து போகும்.
 • வந்தது போகாமல் நீடிக்க சரணாகதி பலித்தது நீடிக்கவேண்டும்.
 • இவை யோகத்தை மேற்கொண்டவர்க்கு எளிது, வாழ்வில் உச்சக் கட்டம்.
 • வாழ்வில் அதிர்ஷ்டம் முதற்படி. அதை எல்லா அன்பர்களும் பெறலாம்.
 • அதிர்ஷ்டத்திற்கும், அருளுக்கும், யோகத்திற்கும், சித்திக்கும் சட்டம் ஒன்றே; பெறும் நிலை வேறு.

ஹோட்லில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜோஸ்யர் உடன் உள்ளவர்களிடம் ஆர்வமாக அவர்கள் நட்சத்திரத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது சர்வர் காபி கொண்டு வந்தான். அவனை நோக்கி, "உன் கையைக் காட்டு'' என்றார். அவன் விருப்பமில்லாமல் காட்டினான். "இது அதிர்ஷ்ட ரேகை'' என ஒரு ரேகையைப் பார்த்துச் சொன்னார். சர்வர் கேலியாக சிரித்து, "அதிர்ஷ்டம் என்றால் என்ன?இப்பொழுது கிடைக்கும் 2 இட்லி இனி எனக்கு 4 இட்லியாகக் கிடைக்கும்'' என்றான். இது பெரிய விவேகம். உலகமே தலைகீழாகப் புரண்டாலும் நமக்குள்ளது தான் கிடைக்கும் என்பது நம் நாட்டு விவேகம். இது பரம்பரை ஞானம். இது பெரிய உண்மை.

 • அன்னை வந்தபின் அது எப்படி மாறுகிறது என்பதில் ஒரு பகுதியை நெம்பர் 870இன் வாயிலாகக் கூறினேன்.
 • அதை ஏற்றுப் பெரும் பயனடைபவரும் தம் மனப்போக்கால் மேற்கூறிய சட்டம் உண்மை என்று முடியும்படி நடக்கலாம்.

ஒரே சந்தர்ப்பத்திலுள்ள இருவர் ஜாதகப்படி "அதிர்ஷ்டம்" என்று புரிந்துகொண்டால், அதில் ஒருவர் அன்பரானால், அடுத்தவர் அன்பராய் இல்லாவிட்டால், அவர்கள் வாழ்வு மாறி வளரும். அதுபோன்ற இருவர் பாங்க் மானேஜராக இருந்தனர். அதிர்ஷ்டம் ஒருவரைப் பெரிய அதிகாரி ஆக்கியது. அது அவர் வாழ்வில் எதிர்பாராதது. அன்பரை அதே அதிர்ஷ்டம் சிறிய பாங்கிலிருந்து பெரிய பாங்க்கிற்கு எடுத்துப்போய் சேர்மனாக்கியது. அதிர்ஷ்டம் என்பது உண்மை. அதற்கு வாழ்விலும், அன்னையிலும் அளவுகடந்த மாற்றம் உண்டு.

1964இல் நேரு காலமானபொழுது குல்ஜாரிலால் நந்தா உள்துறை அமைச்சராக, மந்திரி சபையில் நெ.2ஆக இருந்தார். அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும்வரை 15 நாட்கள் தற்காலிகமான பிரதமராக இருந்தார்.நெ.3ஆக மொரார்ஜி தேசாய் இருந்தார். பிரதமர் பதவி அவருக்கு என்று அனைவரும் கருதினர். நெ.2 நந்தாவுக்கு கட்சியில் ஆதரவில்லை.சாஸ்திரி நெ.4, அவருக்கு இலாகா இல்லாத பதவி. ஆனால் அவர் நேருவுடன் அன்னையை 6 மாதங்களுக்குமுன் சந்தித்தவர். அவர் பிரதமரானார். இது எவரும் எதிர்பாராதது. 1966இல் சாஸ்திரி காலமானார்.அப்பொழுது இந்திரா பிரதமரானார். எவரும் எதிர்பார்க்காதது. அவரும் நேருவுடன் அன்னையைச் சந்தித்தவர். இது அன்னை, இல்லாத அதிர்ஷ்டத்தை உற்பத்தி செய்து தருவது. 1966இல் காமராஜை 5 முதன்மந்திரிகள் பிரதமராகும்படி வேண்டினர். அவரும் நேருவுடன் அப்பொழுது அன்னையைச் சந்தித்தவர். சாஸ்திரிக்கும், இந்திராவுக்கும் கொடுத்ததை அன்னை காமராஜுக்கும் கொடுத்தார். "எதற்கும் அளவுண்டு அல்லவா?'' என்ற பரம்பரை விவேகத்தை காமராஜ் நம்பியதால் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பிரபலமாக நெடுநாளிருந்தாலும், பிரதமராக முடியவில்லை. அதிர்ஷ்டம் வந்தாலும்,மனம் ஏற்காவிட்டால் அதிர்ஷ்டம் பலிக்காது. இப்புதிய Force சக்தி புவியில் செயல்படுவதால் திறமையுள்ள அன்பர்கள் நம்பிக்கையுடன் உண்மையாகச் செயல்பட்டால் வாய்மொழி அவர்கள் வாழ்வில் அபரிமிதமாகப் பலிக்கும் என்று நெம்பர் 870 செய்தி கூறுகிறது. 871, 872 அவை உயர்ந்தும், தாழ்ந்தும் செயல்படும் வகை.

தொடரும்.....

****

ஜீவிய மணி

காலனை, கற்பு வெல்லும் எனினும் கடைசிவரை பலன் தெரியாது.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்

இடையறாத தரிசனம் நாடுபவர் மனிதவாழ்வில் சிறப்புற வேண்டும். அதைப் பெற மனிதன் தன் திறமைகளைப் பூரணமாகத் தாண்டிவரவேண்டும். தாண்டிவர, அதுபோல முனைந்தால் அகந்தை அழியும். பூரணமான முயற்சியை நல்ல முறையில் மேற்கொள்ளவேண்டும். அப்படியானால் மனம் நேர்மையாகவும், உணர்வு முழுமையாகப் பயன்பட்டும், உடல் சிறப்பான முயற்சியையும் மேற்கொள்ளவேண்டும்.

அது இடையறாத தெய்வ தரிசனத்தைக் கொடுக்கும்.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஆர்வம் அடக்கமுடியாமல் பீறிட்டெழுந்தால் அது தீவிரமாகி

சத்தியஜீவிய அலையோசையாகிறது.

*****

Comments

09. யோக வாழ்க்கை விளக்கம்

09. யோக வாழ்க்கை விளக்கம் V

 872)

Please indent and highlight all the points by few spaces

Please indent the paragraph starting with the following line by few spaces      

ஹோட்லில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜோஸ்யர் உடன் உள்ளவர்களிடம் ....

 For the last point starting with the following line

    அதை ஏற்றுப் பெரும் பயனடைபவரும் தம் ..

      Please make a new paragraph for the following lines

            ஒரே சந்தர்ப்பத்திலுள்ள இருவர் ஜாதகப்படி ..

            :

            :

            அதற்கு வாழ்விலும், அன்னையிலும் அளவுகடந்த மாற்றம் உண்டு.

     In the new paragraph

     Please change  "அதிர்ஷ்டம்'       -       "அதிர்ஷ்டம்"

     Please combine the last paragraph with the one above it.book | by Dr. Radut