Skip to Content

12.ஸ்டீவ் ஜோப்

ஸ்டீவ் ஜோப் - STEVE JOBS

     Apple கம்பனி உலகப் பிரசித்திபெற்றது. அதன் ஸ்தாபகர் ஸ்டீவ். கம்பனி பெரியதானபின் அவரை விலக்கினர். பல ஆண்டு கழித்து மீண்டும் அவரைக் கூப்பிட்டனர்.

- கம்ப்யூட்டரில் நடக்கும் பல புரட்சிகளில் அவருடையது ஒன்று.

- Steve பெயர் தெரியாதவர் கம்ப்யூட்டர் உலகில்லை.

- கள்ளம் கபடமற்ற குழந்தையுள்ளம் பெற்றதுபோன்ற இப்படிப்பட்டவர்க்கு - சாதனையாளருக்கு - அசாத்தியமான நம்பிக்கை இயல்பாக இருக்கும்.

      ஒரு சமயம் டாக்டரிடம் போனபொழுது இவருக்கு pancreasஇல் கான்சர் என்று கண்டு, 6 மாதமே உயிரோடிருக்க முடியும் என்றனர். இது பாதகமான நினைவு. இத்துடன் எப்படி வாழ்வது? அன்று மாலை biopsy செய்தனர்வாய்வழியாக குழாய் அனுப்பி குடலைச் சோதனை செய்தனர்ஒரு ஊசிமூலம் pancreasலிருந்து சில cellsஎடுத்தனர். அதை மைக்ராஸ்கோப்மூலம் பார்த்த டாக்டர் அழ ஆரம்பித்துவிட்டார்இது குணமாகும் கான்சர் என்றார். அவர்கள் முடிவு கூறிய 6 மாதம் போய் மேலும் 6 மாதமாகிறது என்றார் ஸ்டீவ்.

-நம்பிக்கை மலையை நகர்த்தும்; எதையும் சாதிக்கும்.

-நமக்கு நம்பிக்கையுண்டு எனத் தெரியாமலுமிருக்குமளவுக்குச் சாதனையாளருக்கு நம்பிக்கையிருக்கும். அது ஸ்டீவுக்கிருந்திகிருக்கிறது.

-பயம் வியாதியை அதிகப்படுத்தும்; இல்லாத வியாதியை உற்பத்தி செய்யும்.

- நம்பிக்கை வியாதி வருவதைத் தடுக்கும்; வந்த வியாதியைக் குணப்படுத்தும்.

1956 முதல் இது அதிகமாக நடக்கிறது.

****


 



book | by Dr. Radut