Skip to Content

13.செல்வம் - பணம்

செல்வம் - பணம்

- நாட்டில் சுபிட்சம் உற்பத்தியாகி, பணப்புழக்கம் வளர்வதைக் காண்கிறோம்.

- எப்படி இந்த வளர்ச்சி வருகிறதுஎன இதுவரை எவரும் விளக்கியதாகத் தெரியவில்லை.

- வளர்ச்சி மிகச்சிறியதானாலும், ஆமை நகர்ந்தால் முயலை ஜெயிக்கும்.

- பொருளாதாரரீதியில் விளங்காவிட்டாலும், அன்பர்கள் தங்கள் அனுபவத்தை நம்பினால், மனதார ஏற்றால், அது விளங்கும். சிறு வளர்ச்சி, பெரு வளர்ச்சியாகும்.

-அடிப்படையில் சிருஷ்டி ஏற்பட்ட வழியும், பணம் பெருகும் சட்டமும் ஒன்றே.

-தம் சொந்த வாழ்வில் பணம் உபரியாகப் பெருகிய நேரம் மனம் எப்படியிருந்ததுஎன அன்பர் நினைவுகூர்ந்தால், மனம் மலரும் பொழுது பணம் பெருகுகிறதுஎனத் தெரியும்அதனால் பணம் எந்த அளவு பெருகவேண்டுமோ அந்த அளவுக்கு மனம் மலர்வது அவசியம்என்பது தெளிவுஇது புரியாமல் ஏற்பது.

-புரிவதுஎன்பது பொருளாதாரரீதியில் பணப்பெருக்கம் சட்டமாகப் புரிவது.

-தெளிவாகப் புரிந்து, முழுமையாக ஏற்றால், மலரும் மனம், பெருகும் பணம்எனக் காணலாம்.

- புரியாமல் மனம் மலர்ந்தாலும், பலன் அபரிமிதமாக இருக்கும்.

- புரியும்படி எழுதிய கட்டுரை ஆங்கிலத்தில் நூலாக வெளிவர இருக்கிறதுசாரம் தெளிவாக இருந்தாலும் மேல்நாட்டார் மனநிலை ஏற்குமாறு அதை எழுத நாளாகும். அதன்பின் தமிழன்பர்கள் சூழ்நிலை ஆமோதிக்கும்படியும் மனநிலை மகிழ்வோடு ஏற்கும்படியும் எழுத மேலும் கொஞ்ச நாளாகும். அதுவும் நூலாக அப்பொழுது வெளிவரும்.

-அந்நூல்கள் வெளிவரும்வரை, தற்காலிகமாக, அன்பர்கள் மனத்தை சற்று (1% - 5%) எந்த வகையில் உயர்த்தினாலும் - மெய், நிதானம், பொறுமை,நல்லெண்ணம், பொறுப்பு - அந்த அளவு வரவு உயர்வதைக் காணலாம். இது ஆன்மீக சக்தி என்பதால் 1% உயர்ந்த தூய்மைக்கு 10% வரவு உயர்வது அதே சமயம் நடக்கும். சிறு உயர்வை பேர் உயர்வாக மாற்றலாம் (1% முதல் 95% அல்லது 99%). 100% தூய்மை என்ற எல்லைக்கு வரும்பொழுது மனம் பழைய நிலையை விரும்புமேதவிர புதிய ஆன்மீக சுபிட்சத்தை ஏற்க மறுக்கும். மறுக்காதவர் அருளுக்குரிய அன்பர். மறுப்பவரும் பெறுவது பெறற்கரிய பேறு.

****


 



book | by Dr. Radut