Skip to Content

05.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

1989 முதல் 2005வரை அன்னையை ஏற்றுக்கொண்டது முதல் நடந்த நிகழ்ச்சிகள்:

  1. 1989ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் என்னுடைய சகோதரன் மூலமாக அன்னையை அறிந்துகொண்டேன். உனக்குத் தேவையானது எதுவோ,அதை அன்னையிடம் கேள் என்றார். நான் அன்னையிடம் உங்களுடைய புத்தகம் என்வீடு தேடி வரவேண்டும்என்று மானசீகமாக வேண்டினேன்.உடனே என்ன ஆச்சரியம் அண்ணன் நண்பன்மூலம் புத்தகம் வீடு தேடி வந்தது.
  2. 1990ஆம் ஆண்டு குடியிருக்கும் வீட்டில் பல பிரச்சினைகளும் வதந்திகளும் இருந்தன. நான் அன்னையிடம் பிரார்த்தனை செய்தேன்.அன்னை ஒயிட் நிற உடை அணிந்து, "நான் இருக்கிறேன். கவலையின்றி உன் குழந்தைகளுடன் நிம்மதியாக உறங்கு'' என்றார். மிகவும் ஆனந்தப் பரவசமடைந்தேன்.
  3. 1994ஆம் ஆண்டு: ஜனவரி 1ஆம் தேதி பாண்டிக்குச் செல்வது வழக்கம்.எனது தீராத வயிற்றுவலி குணமடையவேண்டும்என சமர்ப்பணம் செய்தேன். நான் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டு இருந்தேன். அங்கு ஸ்கேன் எடுத்து பார்த்ததில் "வயிற்றில் கட்டி முற்றிவிட்டிருக்கிறது. அது ஆப்பரேஷன் செய்யும்போது வெடித்துவிட்டால் உயிருக்கு ஆபத்து'' என்று கூறினர். நான் அன்னையிடம், "பரிபூரணமாக நான் குணமடைந்து என் 3 பிள்ளைகளுக்காக (குழந்தைகள்) வாழவேண்டும்'' என்று பிரார்த்தனை செய்தேன். ஆப்பரேஷன் செய்து கட்டியை அகற்றியபின் சில வினாடிகள் கழித்து கட்டி வெடித்தது. பிறகு நான் மயக்கநிலையில் இருக்கும்போதும் வலி அதிகமாக இருந்தது. அப்போது நான் அன்னையிடம் "என் வலி நீங்கவேண்டும்'' என்று வேண்டினேன். வெண்ணிற ஜோதி ஒன்று கண்ணிற்குத் தெரிந்தது. அதைப் பார்த்தவுடன் உடல் வலி குறைந்தது. நான் ஆப்பரேஷன் தியேட்டருக்குள் செல்லும் போது அன்னையின் சிம்பல் கொண்ட மோதிரம் அணிந்திருந்தேன். அதனால்தான் ஆப்பரேஷன் சக்ஸஸ் ஆயிற்று.
  4. 1995ஆம் ஆண்டு கடன் தொல்லையால் என் கணவர் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். என் கணவருக்கு செட்டில்மெண்ட் செய்யும் பணம் வேலை செய்யும் இடத்தில் முதலிலேயே கிடைக்கப் பெற்றது. அதன்மூலம் கடன் பிரச்சினை நீங்கியது.
  5. 1996ஆம் ஆண்டு ராணிப்பேட்டையில் அன்னையின் அருளால் சொந்த வீடு வாங்கி குடி சென்றோம்அந்த இடத்தில் பக்கத்து வீட்டுக்காரன் தொல்லை தாங்கமுடியவில்லை. அப்போதுதான் இராணிப்பேட்டை தியான மையத்தில் நடந்த சொற்பொழிவு கேட்டு அதன்படி நடக்க முற்பட்டேன்.  அவன் அட்டகாசம் தாங்கமுடியவில்லைநாங்கள் வீட்டை விற்கவும் முடியவில்லைஅன்னையின் சொல்படி நடந்துகொண்டோம். அவனுக்கு ஆக்ஸிடெண்ட் ஆனதுஅவன் அப்போதும் திருந்தவில்லைஅந்த ஊரில் உள்ளவர்களின் சப்போர்ட்டுடன் அந்த இடத்தை அபகரிக்க முயன்றான்.  துர்அதிர்ஷ்டத்தில்தான் அன்னையின் பேரதிர்ஷ்டம் உள்ளதுஎன்று அன்பர் கூறியதுபோல அவனே அவன் செய்த தவறுகளை எண்ணி வெட்கித் தலைகுனிய ஆரம்பித்தான். அவன் எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் செய்த தொல்லைகள் மற்றும் செய்வினைகள் பலிக்கவில்லை. காரணம் அன்னையின் அருள்என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லைநாங்கள் அங்கு உயிருடன் இருப்பதும் அன்னையின் அருளால்தான்அவன் தினமும் பாடல் போட்டு, அந்த பாடல்மூலமாகவே தன்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டான்அவன் எங்களுக்குச் செய்த கொடுமைகள் அனைத்தும் அவனுக்குத் தானாகவே நேர்ந்தது. 2004ஆம் ஆண்டு அவன் செய்த கொடுமைகள், ஆடிய ஆட்டம் அனைத்தும் 2004 டிசம்பர் மாத இறுதியிலே அடங்கியது. எங்களுக்கு அங்கு இருக்க விருப்பமில்லை.  அதனால் வீட்டை விற்க முடிவு செய்தோம்ஆனால் அனைவரும் அடிமாட்டு விலைக்கே கேட்டனர்பிறகு அன்னையிடம் நான் பிரார்த்தனை செய்தேன்.  அனைவரும் வியக்கும்படி ரூ.1 லட்சத்திற்கு விற்று, நாங்கள் அங்கிருந்து வந்தவிதம் 100 பேரில் ஒருவராய் எங்களை அன்னை உயர்த்திய விதத்தினைக் கண்டு மெய்சிலிர்த்தோம்.  குருநாதர் வழிப்படி நடந்து கொண்டதால் எங்கள் வாழ்வில் நடந்த அதிசயத்தை நான் கூறவேண்டும் என்று நினைத்துகொண்டிருந்த நிலையில் அன்னை எனக்கு வாய்ப்பு அளித்த விதத்தினை நான் எப்படிச் சொல்வேன்எனக்குக் கண்ணீர் தான் வருகிறதுநாங்கள் வாங்கிய வீட்டில் ஏற்பட்ட துன்பங்கள் அனைத்தையும் தாயாய் வந்து தாங்கிச் சென்ற தெய்வம் என்ற தலைப்புப்படி நடந்தது.
  6. 2005ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முத்திக்கடையில் குடியேறினேன்.  அன்னையின் அருளால் ஜெயந்தி, டிப்ளமோ பிசியோதெரபி; தமிழ்ச்செல்வி, பி.காம். இறுதி ஆண்டு; பிரேம்குமார், பி.எஸ்.சி. இயற்பியல் முதல் ஆண்டு படிக்கிறார்கள்.  நான் என்னுடைய வருமானத்திற்கு மீறி அவர்களைப் படிக்கவைக்கிறேன். அதனால் எங்களுக்கு கஷ்டம்என்று உடன் பிறந்தோரும், மற்றவர்களும் ஏளனமாகப் பார்க்கின்றனர், பேசுகின்றனர்.  அன்னையின் அருளால்தான் எங்கள் குடும்ப வருமானத்திலேயே யாரிடமும் கடன் வாங்காமல் கஷ்டப்பட்டுப் படிக்க வைக்கிறோம்.

     என் கணவர் தற்காலிக வேலையினைச் செய்துவருகிறார். என் மகள் பிரைவேட் ஹாஸ்பிடலில் வேலை செய்கின்றாள். இருவரின் சம்பாத்தியத்தில்தான் குடும்பம் நடத்துகிறேன். எங்களுக்குப் போதிய வருமானம் கிடைக்கவில்லை. பொருளாதார முன்னேற்றம் கிடைக்க நாங்கள் என்ன வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்என்று கூறுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

 

****

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

நேரடியாக உடனே தனக்குமட்டும் பலன் தாராததை சுயநலமி நினைவு வைத்திருக்கமாட்டான். பிரபலமாகிக்கொண்டிருப்பவன் தன்வெற்றிகளில் எதையுமே நினைக்க முடிவதில்லை. ஆழ்ந்த அன்புக்கு உண்மையான பதில் நினைவையே அழிக்கும்.

பழையவை அத்தனையும் தானே அழியுமளவு

அன்னைமீது நமக்கு அன்பு சுரக்குமா?


 


 



book | by Dr. Radut