Skip to Content

06.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)   

கர்மயோகி

XV. The Supreme-Truth Consciousness

15. உயர்ந்த சத்தியஜீவியம்

The Supermind possess this truth of unity.

Page No.137,

Para No.11

சத்தியஜீவியத்திற்கு இந்த ஐக்கியத்தின் சத்தியம் உண்டு.

It always acts on this truth.

எப்பொழுதும் அது இந்த சத்தியத்தின்படி நடக்கும்.

To the mind this is only a secondary truth.

மனத்திற்கு இது இரண்டாம்பட்ச உண்மை.

Or, it is an acquired truth to the Mind.

அல்லது இது மனம் தானேபெற்ற உண்மை.

It is not the very grain of its seeing.

இவ்வுண்மை மனத்திற்கு அதன் உடன்பிறந்ததில்லை.

Supermind sees the universe as itself.

சத்தியஜீவியம் பிரபஞ்சத்தைத் தானாகவே காண்கிறது.

Its contents too are seen as itself.

பிரபஞ்சத்தின் உள்ளடக்கமும் தானாகவே தெரியும்.

It is a single indivisible act of knowledge.

அது ஒரு முழுமை, பகுக்க முடியாத ஞானம்.

It is an act which is its life.

இச்செயல் சத்தியஜீவியத்தின் உயிர் மூச்சு.

That act is its very movement of its self-existence.

இச்செயல் அதன் வாழ்வின் சலனம்.

This is the comprehensive divine consciousness.

இது தெய்வீக ஜீவியம் அனைத்தையும் தன்னுட்கொள்வது.

Its aspect of Will acts not to guide.

அதன் செயல்திறன் அதன் போக்கை நிர்ணயிப்பதில்லை.

Nor does it govern the development of cosmic life.

அதன் பிரபஞ்ச வாழ்வின் வளர்ச்சியை ஆட்சி செய்வதுமில்லை

But it consummates it in itself by an act of power.

தன்னுள்ளே தன் சக்தியால் அதைப் பூர்த்தி செய்கிறது.

This power is inseparable from its knowledge.

அதன் ஞானத்திருந்து இந்த சக்தியைப் பிரிக்க முடியாது.

It is one with the movement of self-existence.

அதன் சுயவாழ்வின் அசைவுடன் இது ஒன்றியது.

It is indeed one and the same act.

சொல்லப்போனால் அது ஒரே செயல்.

We have already seen this differently.

இதை நாம் ஏற்கனவே கண்டோம்.

The universal force and universal consciousness are one.

பிரபஞ்ச சக்தியும், பிரபஞ்ச ஜீவியமும் ஒன்றே.

(Cosmic force is the operation of cosmic consciousness)

(பிரபஞ்ச சக்தி பிரபஞ்ச ஜீவியத்தின் செயல்).

So also divine Knowledge and divine Will are one.

அதேபோல் தெய்வீக ஞானமும், தெய்வீகச் செயலும் ஒன்றே.

They are the same fundamental movement.

இரண்டும் அடிப்படையில் ஒரே செயலாகும்.

That movement is an act of existence.

அச்செயல் வாழ்வின் சலனமாகும்.

Page No.138,

Para No.12


 

Comprehensive Supermind is indivisible.

பூரண சத்தியஜீவியம் பகுக்கமுடியாத முழுமை.

It contains multiplicity.

அது எல்லாப் பகுதிகளையும் உடையது.

It does not derogate from its own unity.

பொருள்கள் பெருகுவதால் ஐக்கியம் குறைவதில்லை.

We have to insist upon this truth.

இந்த உண்மையை நாம் வற்புறுத்தவேண்டும்.

Our analytical mind erred initially.

பகுத்தறிவுள்ள மனம் ஆரம்பத்தில் செய்த தவறு இது.

We must get rid of that error.

இத்தவற்றை நாம் விலக்கவேண்டும்.

Thus we will understand the cosmos.

இவ்வழி நாம் பிரபஞ்சத்தை அறியலாம்.

A tree evolves out of the seed.

மரம் விதையிliருந்து

வருகிறது.

The tree is contained already in the seed.

விதையுள் மரம் இருக்கிறது.

The seed emerges out of the tree.

விதை மரத்தினின்று வருகிறது.

It is a fixed law.

இது நிலையான சட்டம்.

It is an invariable process.

இது தவிர்க்கமுடியாத முறை.

It reigns permanently.

இந்தச் சட்டம் நிலையாக ஆள்கிறது.

It manifests the form.

இது ரூபத்தை சிருஷ்டிக்கிறது.

We call it tree.

நாம் அதை மரம்என்கிறோம்.

To the mind this is a phenomenon.

மனத்திற்கு இது ஒரு நிகழ்ச்சி.

It is a birth.

இது பிறப்பு.

It is life.

இது வாழ்வு.

It is reproduction of a tree.

ஒரு மரத்தை மீண்டும் இவ்வழி உற்பத்திசெய்கிறோம்.

Mind considers it a thing in itself.

மனம் இதை ஒரு தனிச்செயலாகக் காண்கிறது.

On that basis Mind studies.

அவ்வடிப்படையில் மனம் ஆராய்கிறது.

It classes and explains the birth of a tree.

பகுத்தும் சேர்த்தும் மனம் மரத்தை விளக்குகிறது.

It explains the tree by the seed.

மரத்தை விதைமூலம் விளக்குகிறது.

It explains the seed by the tree.

விதையை மரத்தைக்கொண்டு விளக்குகிறது.

It declares a law of Nature.

இது இயற்கைச்சட்டம்.

But, it has explained nothing.

எதுவும் விளக்கப்படவில்லை.

Here is a mystery.

இது புதிர்.

Mind has analysed the mystery.

மனம் புதிரை ஆராய்கிறது.

It declares its process.

புதிர் செயல்படும் வழி புரிகிறது.

It also records its analysis.

அதை எழுதிவைக்கிறது.

Suppose it percieves a soul.

அங்கு ஆத்மாவைக் காணலாம்.

It can see the secret consciousness as the soul.

இரகஸ்ய ஜீவியத்தை ஆத்மாஎனக் கண்டுகொள்ளலாம்.

It is the real being of this form.

அது ரூபத்தின் ஜீவன்.

The rest is merely a settled operation.

மற்றவை வழக்கமாக நடைபெறும் செயல்கள்.

It is a manifestation of the force.

சக்தி சிருஷ்டியாக வெளிப்படும் வகையிது.

Still, it is not all right.

இருந்தாலும், இது சரியில்லை.

It regards the form as a separate existence.

இது ரூபத்தை தனித்த அம்சமாகக் கருதுகிறது.

It has a separate law of nature.

அதற்குத் தனித்த சுபாவத்தைக் கற்பிக்கிறது.

It is its process of development.

இதுவே வளர்ச்சியின் வழிமுறை.

In the animal and the man the same thing occurs.

மனிதனும் விலங்கும் இப்படிச் செயல்படுகின்றனர்.

Man has his conscious mentality.

மனிதனுக்குத் தெளிவான மனம் உண்டு.

The separative tendency is prominent.

தனித்தியங்கும் போக்கு பிரதானமாகிறது.

It is induced to regard itself as a separate object.

தான் தனிப்பொருள்எனக் கருத வேண்டுகிறது.

It thus becomes a conscious subject.

அவ்வழி மனம் தன்னையறியும் அகமாகிறது.

The other forms too become separate objects.

மற்ற ரூபங்களும் தனித்த பொருள்களாகின்றன.

They are the objects of its mentality.

அவை அதன் மனப்போக்கின் பொருள்கள்.

This is a useful arrangement.

இது செயல்பட உதவும் வழி.

It is necessary to life.

இது வாழ்வுக்கு அவசியம்.

It is first basis of all its practice.

எல்லாச் செயல்களுக்கும் இது முதல் அடிப்படை.

This is accepted by mind as an actual fact.

மனம் இதையே முடிவான செயலாகக்கொள்கிறது

From there proceeds all the error of the ego.

இதிலிருந்து அகந்தையின் அனைத்து தவறுகளும் எழுகின்றன.

Contd....

தொடரும்....

****

****


 


 

 


 


 


 


 

 

.


 


 


 



book | by Dr. Radut