Skip to Content

07.சாவித்ரி

 சாவித்ரி

P.71 The eyes of mortal body plunge their gaze

         Into Eyes that look upon eternity.

காயமான உடலின் ஊனமான கண்கள் பிரம்மத்தைக் கண்ட நெற்றிக்கண்களை ஊடுருவும்.

.உயர்ந்த உலகின் காலத்தின் வழிப்போக்கன் உள்ளே சென்று ஆராய்வான்.

.முயற்சியின் முடிவில் முடியிலிருந்து எழும் உச்சாடனம்.

.தூரம் குரல் கொடுத்து, புலப்படாதது கிட்டே வந்து ஸ்பர்சிக்கிறது.

.காணாத எல்லைக்கல்லைக் கடந்துவந்தான்.

.ஊனக்கண்ணின் எல்லையைக் கடந்தான்.

.உலகை உள்ளே தானாகக் காணும் ஞானதிருஷ்டி.

.உருவாகும் உலகத்துள் உறையும் ஆத்மா.

.அவ்வாத்மா தன்னையும் அறியாது, அவனையும் அறிய முடியாது.

.இலக்கற்ற இலட்சியத்தின் மேல்நிலை அடையாளம்.

.அகம் கண்ட ஆழத்தை அறிந்துரைக்கும் ஞானம்.

.ஒளியைத் தேடும் இருளின் ஆத்மா அவன்.

.அழியாத அமரத்துவத்தின் அழியும் வாழ்வு.

.புவியில் ஜனித்த புனித மரக்கலம்.

.சிறுஉணர்வின் குறுகிய பாதை.

.அலையாக எழும் காலத்தின் மந்திரசக்தியைக் கண்டான்.

.உலகைக் கவ்விய இருளைப் போக்கும் ஜோதியெனும் சந்திர ஒளி.

.பார்வையிலிருந்து விலகும் குறுகிய நோக்கங்கள்.

.கனவுலக ஜோதியின் பனித்திரைபோல.

.புதிரான கரையின் புலப்படாத எல்லை.

.பாதாள இருளின் ஆழ்ந்த கடலில் அலையும் மாலுமி.

.ஜொலிக்கும் நட்சத்திர உலகில் சஞ்சாரம் செய்பவன்.

.ஜடம்எனும் கப்பல்தளத்தில் ஆன்மீகச் சூரியனை நாடும் அன்பன்.

.ஆயிரம் ஒலியின் சப்த அலைகளின் ஊடே,

.கண்டறியாத கனத்த மௌனத்தூடே,

.வினோதமான லோகத்தூடே வானவெளியை நோக்கி,

.புவியின் ஆடையலங்காரத்தைக் கடந்து,

.தெளிந்த புலம் கடந்த தெரியாத இலட்சியம்.

.எவருக்கும் விளங்காத, எங்குச் செல்கிறோம்என அறியாத,

.எந்த இலட்சியத்தை இரகஸ்யமாகத் தாங்கும்   மனிதன்,                              

லோகமாதா எதையளித்தாள்என அறியமுடியாத இரகஸ்யம்.

.ஆட்டுவித்தான், ஆட்டத்தின் மறைந்துள்ள வலிமை,

.அலைமோதும் ஆழத்தின் எழுச்சியின் வேகம் நடத்தும் செயல்.

.இடியோசையின் கர்ஜனையில், சலனமற்ற நிசப்தத்தில்,

.பனியும் மூடுபனியும் பார்க்கவிடாத அவலட்சணத்தில்,

.அகிலத்தின் ஈஸ்வரி அனுப்பிய ஆணையைத் தாங்கிச் செல்கிறான்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

எண்ணத்திலிருந்து ஜீவியத்திற்குப் போனால் அவிழாத சிக்கல்கள் அவிழும்.

எண்ணத்தின் சிக்கல்களை ஜீவியம் அவிழ்க்கும்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஞானத்தைப் பெற்றபொழுது "ஞானோதயம்'' என்ற உணர்வு ஏற்படுவதுபோல் கண்மூடியாக வாழ்வை நடத்துபவன் கண்ணைத் திறந்தவுடன் ஆச்சரியப்படுகிறான்.

பார்வை குருடனுக்கு ஞானோதயம்.

 


 



book | by Dr. Radut