Skip to Content

09.மலரும் மணமும்

"அன்னை இலக்கியம்"

மலரும் மணமும் 

(சென்ற இதழின் தொடர்ச்சி....)    

                     மகேஸ்வரி

     முல்லை அவசரமாகத் தன் கம்ப்யூட்டருக்குள் கணக்கையெல்லாம் ஏற்றிக்கொண்டிருந்தாள். "முல்லை, இங்கே கொஞ்சம் வர்றியா? கணக்கில் பணம் குறையுதுயாருக்கோ அதிகமா கொடுத்திருக்கேன் போலிருக்கு .  ஒன்றல்ல, இரண்டல்ல, பத்தாயிரம் ரூபாய் குறையுதுஒரு நூறு ரூபாய் கட்டை அதிகமா கொடுத்திருக்கேன்இன்றைக்கு ஐம்பதாயிரம், ஒரு இலட்சம், முப்பதாயிரம்என நிறைய பேர் எடுத்திட்டு போயிருக்காங்க, சம்பள தினமல்லவா? யாரிடம்போய் கேட்பது என்று தெரியவில்லை. நானும் ஞாபகப்படுத்திகொண்டு பார்க்கிறேன். எதுவும் நினைவிற்கு வரவில்லைமனம் படபடக்கிறது, தலைக்குள் பட்டாம்பூச்சி பறக்கிறது'' செண்பகம் மெதுமெதுவாக இண்டர்காமில் சொன்னதைக் கேட்ட முல்லை, "இதோ நான் வருகிறேன். நிதானமாகப் பார்க்கலாம்நிச்சயமாகக் கண்டுபிடித்து விடலாம்'' என்று தைரியமாகச் சொன்னாள்ஒவ்வொரு எண்ட்ரியாகப் பார்த்துக்கொண்டு வந்தவளுக்கு செண்பகம் சொன்னதுபோல் இன்றைக்கு நிறைய பேர் அதிகமாகப் பணத்தை எடுத்துக்கொண்டும் போயிருக்கிறார்கள், நிறைய பேர் அதிகமாக, அதாவது பத்தாயிரத்திற்கும் மேலாகப் பணம் கட்டியிருப்பவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக இருக்க, திரும்பத் திரும்ப எத்தனை பேர்களுக்குப் போன் செய்து கேட்பது என்று தெரியாமல் தவித்தாள். யாராவது அதிகமாக எடுத்துச் சென்றவர்கள் தாமாகவே கொண்டுவந்து கொடுத்தால்தான் கிடைக்கும் என்ற நிலைக்கு வர, மதியம் யாரும் 10,000த்திற்குமேல் எடுத்துச் செல்லவில்லை; காலையில் தான் எடுத்துச் சென்றிருக்கிறார்கள்என்று பார்த்தவுடன், இந்த நேரத்திற்குள் நிச்சயமாகப் பணத்தை எண்ணாமல் இருந்திருக்க மாட்டார்கள்.  அதிகமாக இருந்திருந்தால் கொண்டுவந்து கொடுத்திருக்க வேண்டும். இல்லையென்றால் போனாவது செய்திருக்கவேண்டும். இந்த இரண்டில் ஒன்றும் நடக்கவில்லை. அதனால், நிச்சயமாக இனி பணம் வரும் என்ற நம்பிக்கையில்லாது மனம் சோர்ந்துவிட்டது. அவள் மேனேஜராக இருக்கின்ற இந்த 5 வருடத்தில் இம்மாதிரி ஒரு தடவைகூட நடந்ததில்லை. ஏதோ கொஞ்சமாக இருந்தாலாவது சரி செய்துவிடலாம். பத்தாயிரம் என்றால் செண்பகத்திற்குத்தான் பொறுப்பு என்றாலும், செண்பகத்தின் குடும்பத்தைப்பற்றி எல்லாமும் தெரிந்திருந்த முல்லைக்கு இந்த பத்தாயிரம் அவளுக்கு எத்தனை சிரமமானது என்பதும் நன்றாகவே தெரியும். தன் கணக்கிலிருந்த பணத்தை எடுத்து உடன் கணக்கில் வைத்து, சரி செய்து, "வா புறப்படலாம்'' என செண்பகத்தை அழைத்துக்கொண்டு புறப்பட்டாள்என்ன செய்வது என்று திரும்பத் திரும்பக் கேட்ட செண்பகத்திற்கு, "பார்ப்போம், ஏதாவது வழி கிடைக்கும். நீ தெரிந்து தவறு செய்யவில்லை.ஆனாலும் கவனக்குறைவாக இருந்திருக்கிறாய்பார்ப்போம். மனம் நிதானத்திற்கு வந்தபின்பு யோசித்தால் நிச்சயம் நல்லதொரு வழி கிடைக்கும். இப்பொழுது மீண்டும் மீண்டும் இதைப் பற்றி யோசித்து கொண்டு இருக்காதே. மனம் குழப்பமாக இருக்கும்போது யோசித்தால் தெரிகின்ற வழிகளெல்லாம் கோணலாகத்தான் இருக்கும். தைரியத்தை விட்டுவிடாதே. நிம்மதியாக இன்றைக்குத் தூங்கி எழுந்திரு. நாளை காலை மீண்டும் பார்ப்போம்'' என்று கூறி, தன் கைனடிக்கில் ஏறினாள்.

     அவளுக்கென்ன வலி, எனக்குத்தானேஎன் நிலைமையில் எனக்கு எப்படி தூக்கம் வரும்? ஒரு ரூபாயா, இல்லை இரண்டு ரூபாயா,கையிலிருந்து கொடுத்து சமாளிக்க? யாரிடம் ஏமாந்து கொடுத்தோம்? தலைவலி மண்டையைப் பிளக்கிறதுபோனவுடன் மாமியார் எதைப் புதிதாக ஆரம்பிக்க போகின்றார்களோ தெரியவில்லைஎன்ன வாழ்க்கையோ? திருமணத்திற்கு முன்பு அம்மா, அப்பாவுடன் இருந்த வாழ்க்கைதான் சந்தோஷமான வாழ்க்கைஎத்தனைக் கனவுகளுடன் வந்தேன்? வந்த உடன், "உனக்கு எந்தத் தேதியில் சம்பளம் கொடுக்கிறார்கள்? 30ஆம் தேதியா இல்லை 1ஆம் தேதியா? எப்படி பேங்க்கில் கணக்கு வைத்திருக்கிறாய்? இனி அந்தக் கணக்கை ஜாயிண்ட் அக்கவுண்ட்டாக மாற்றிவிடு. செக்புத்தகத்தை என்னிடம் கொண்டுவந்து கொடு'' இதுதான் முதலிரவில் ஒரு கணவன் பேசிய முதல் வார்த்தை என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். அன்று வெந்துபோன மனது, கவுண்டரில் உட்கார்ந்தால் என்ன செய்கிறோம் என்பது நினைவிற்கு வருவதில்லைஎப்படி இந்தப் பத்தாயிரத்தைச் சமாளிப்பது? முல்லை கொடுத்துவிட்டாள். ஆனால் அவளுக்கு எப்படி அதைத் திருப்பிக் கொடுப்பதுஒரு வண்டி வாங்கிகொடுத்தால் செலவு என்று தினமும் ஆபீசிற்குத் தானே வந்து கூட்டிப்போகும் கணவனுக்காகக் காத்திருக்கும் போது, செண்பகத்திற்குத் தலையே வெடித்துவிடும் போலிருந்தது. ஒரு காப்பி சாப்பிடக்கூட கையில் காசில்லை, மாதம் பதினாலாயிரம் சம்பளம் வாங்குபவளுக்குஇந்த நிலையிலும் அழத் தெரியாமல் சிரிக்கத் தோன்றியது.

சுமுகம்:

     "இன்றைக்கு என்ன பூ வைக்கப்போகிறாய்?''

     "கொடிரோஸ். நீங்கள் அதைத்தான் அதிகமாகக் கொண்டு வந்திருக்கின்றீர்கள்''.

     "ஆமாம், நேற்று யாராவது வந்து கேட்டார்களா? நம் காயாம்பூவும், தாமரையும் வந்து கேட்டார்கள்தேவைகள் இருப்பவர்கள் தானே வந்து கேட்பார்கள்''.

     "யாருக்குத்தான் தேவையில்லாமல் இருக்கிறது. ஆனால் யார் அன்னையை ஏற்றுகொள்கிறார்களோ அவர்களின் தேவைக்கேற்ப அன்னை தாமாகவே அவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அப்படித் தேர்ந்தெடுத்தவர்கள்தான் இப்பொழுது காயாம்பூவும் தாமரையும்''.

     "அம்மா, எனக்குக் கல்யாணம் நிச்சயம் செய்யப்போகிறார்கள். நேற்று நம் ராமபத்ரன் சார் தானாகவே கல்யாணச் செலவை ஏற்றுக்கொள்வதாக எங்கள் இருவரிடமும் சொல்லிவிட்டார். ஆனால், எங்கள் அக்காவிற்குக் கல்யாணம் செய்யாமல் நான் முதல்லே எப்படிச் செஞ்சுகிறது? எனக்கொண்ணும் புரியலைம்மா. நீங்கள் எனக்கொரு வழி காட்டுங்களேன்''.

     "ஆமா, உங்க அக்காவிற்கு ஏன் கல்யாணம் கூடிவரலை?''

     "யாருக்கும்மா தெரியும்? ஆனா, கையில பணம் இருந்தா நாளைக்கே கல்யாணம் செய்திடலாம்''.

     "அப்படிச் சொல்லாதேடிஅப்படின்னா பணக்கார வீட்ல இருக்கிற பெண்களுக்கெல்லாம் நினைச்சவுடனே கல்யாணம் நடக்காது? அதனால அப்படியெல்லாம் சொல்லாதேஉங்க அக்காவுக்குக் கல்யாணம் செஞ்சுக்க இஷ்டம் இருக்கா?''

     "அது ஒரு நாளைக்கி ஒரு மாதிரியா பேசுது, நிலையில்லை. அதுக்கு இஷ்டம் இருக்கா, இல்லையா, எனக்கு தெரியலைம்மா''.

     "அம்மா, முல்லையம்மா எனக்குப் பணம் தரேன்னு சொல்லியிருக்காங்க.ஆனா நேத்து ராத்திரி அவங்க வீட்டுக்குப் போய் சொன்னப்போ, இப்ப கையில இருந்த பணத்தை அவங்க பேங்க்கில இருக்கிற பிரெண்டுக்கு கொடுத்துட்டேனு சொல்றாங்க. சரி, எங்களுக்கு அவ்வளவுதான்''.

     "தாமரை, மாப்பிள்ளை யாராச்சும் பாத்தாங்களா?''

     "எங்கம்மா, எங்க அப்பனுக்கும் ஆயிக்கும் சண்டை போடறதுக்கே நேரம் பத்தாதுஇதுல யாரு பொறுப்பா பார்க்குறதுநான்தான் காயாம்பூகிட்டே சொல்லி பார்க்கசொல்றேன். அவரும் பார்க்கறாரு''.

     "இந்தப் பூவை கொண்டுபோய் உங்க வீட்ல வை. சண்டையும் குறையும்,உங்க அக்காவுக்கு கல்யாணமும் நடக்கும்''.

     "ஏம்மா, நீங்க வைக்கிற பூவெல்லாமே கடையில கிடைக்கிற பூவா இல்லையேம்மாஆமா, உங்களுக்கு எங்கயிருந்து இந்தமாதிரி பூவெல்லாம் கிடைக்குது? நேத்து வச்ச பூவும், இப்ப நீங்க குடுக்கற பூவையும் இதுவரைக்கும் நான் பார்த்ததேயில்ல. எனக்குத் தெரிஞ்சது மல்லிகை, கனகாம்பரம், ரோஜா மட்டும்தான்''.

     "நேத்து நான் ஒரு அம்மா படத்தை கொடுத்தேனே, அதக் கொண்டு போய் உங்க வீட்ல வச்சியா?''

     "நீங்க சொன்னாப்புலயே நல்லா சுத்தமா துடைச்சி, பூ வச்சி, வத்தி கொளுத்தி வச்சேன்எங்க அக்காவுக்கும் எனக்கும் சீக்கிரமா கல்யாணம் நடக்கணும் என்று கேட்டேன்''.

     "உன் அக்காவுக்கு எத்தன வயசு?''

     "என்னைவிட எட்டு வயசு பெரியவங்கஆனா, ஆரம்பத்திலேர்ந்து கல்யாணம் வேண்டாம், வேண்டாம் என்று சொல்லிட்டிருந்தாள்எங்க அப்பாவும் அம்மாவும் சும்மா சண்டை போட்டுகிட்டு இருப்பாங்கஅதப் பார்த்து எங்க அக்கா தனக்குக் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிகிட்டு இருந்தது''.

     "முல்லை, 4ஆம் நம்பர் வீட்டில் புதிதாக யாரோ குடி வந்திருப்பதாக காயாம்பூ சொன்னான்இப்பொழுது வந்திருப்பவர்கள் நம் அன்னையை ஏற்றுக் கொண்டிருப்பவர்கள்போலிருக்கிறதுகாயாம்பூ ஒரு போட்டோவை ராம்பத்ரன் சார் வீட்டில் கொடுத்திருப்பான்போலிருக்கிறது. கனகாம்பரம் என்னிடம் கொண்டுவந்து காட்டி, என்னென்ன செய்ய வேண்டும் என்று கேட்டாள்''.

     "அப்படியா, சரி. இதிலென்ன பெரிய விஷயம் இருக்கிறது. இப்பொழுது என்னைத் தொந்தரவு செய்யாதே. பேங்க்கில் ரூ.10000 அதிகமாகக் கொடுத்துஇன்றைக்கு என் கணக்கிலிருந்து அதைச் சரி செய்தேன். யாருக்கு அதிகமாகக் கொடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.  20பேருக்குமேல் போன் செய்தும் விசாரித்துவிட்டேன்யாரும் அதிகமாக பெறவில்லை என்று சொல்கிறார்கள்இன்றைக்குக் கையில் இருந்ததால் கொடுத்துவிட்டேன்ஆனால் இது சரியல்லஎங்கு தவறு இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லைமனம் ஏதேதோ காரணங்களைச் சொல்கிறதுஆனால் எதுவும் சரியாகப்படவில்லைஎந்த இடத்தில் நான் தவறு செய்திருக்கிறேன் என்று யோசித்துப்பார்த்தாலும் புரியவில்லை. காலையிலிருந்து நடந்த எல்லா விஷயங்களையும் அன்னையிடம், "பணம் குறைகிறது' என்ற செய்தியைக் கேட்டவுடனேயே, சொல்லிவிட்டேன்.  இருந்தாலும் ஏதோ ஓர் இடத்தில் மனம் தயங்கிக்கொண்டே இருக்கிறது.  அது எந்த இடத்தில் என்றுதான் புரியவில்லை''.

     "நீயாக எதையாவது யோசித்துக்கொண்டிருப்பதைவிட என்னுடன் வா.  4ஆம் நம்பர் வீட்டு அன்னையை பார்த்துவிட்டு வருவோம்''.

"நான் வரவில்லை. நீ வேண்டுமானால் போய்விட்டு வா''.

     "கொடிரோஸை பார்த்தவுடன் காலிங்பெல்லை அழுத்தாமல் மல்லிகை ஒரு நிமிடம் நின்று ரசித்தாள்மிகநன்றாக இருக்கிறதே. நாமும் இதே மாதிரி நம் வீட்டு வாசலிலும் வைக்கலாமா என்று யோசித்தாள்அன்னைக்கு மிகப்பிடித்த சுமுகம் கொட்டிக்கிடக்கிறதேஇந்தக் காலனியில் எல்லோர் வீட்டிலும் சுமுகம் நிலவவேண்டும் என்று அன்னையிடம் பிரார்த்தித்தவள், "அம்மா, நீங்கள் விரும்பினால் கதவு திறக்கட்டும்' என்று மௌனமாக நினைத்தவுடன், கதவு திறக்கப்பட, அன்னைக்கு நன்றி செலுத்தினாள்.

     "நான் 10ஆம் நம்பர் வீட்டில் இருக்கிறேன். என் பெயர் மல்லிகை. உங்கள் வீட்டின் பெயரென்ன சுமுகமா? வாசலில் மலர் வைத்திருக்- கின்றீர்களே?''

     "உள்ளே வாம்மா. நீயும் அன்னையின் குழந்தையா?''

     "என்னுடைய அம்மா மதர்''.

     "நன்றாகப் பேசுகின்றாய். என்ன செய்துகொண்டிருக்கிறாய்?''

     "கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறேன்நானும் என் அக்காவும் தான் இருக்கிறோம்எங்கள் இருவருக்கும் எல்லாமே மதர்தான்நான் சாதாரணமாகச் சொல்லவில்லை. என் தாய், தந்தை இருவருமே எனக்கு மதரும், பகவானும்தான். அவர்களைத்தவிர சொல்லிக் கொள்ள யாருமில்லை. உங்கள் வீட்டு அன்னை ஏதோ என்னைக் கூப்பிட்டாற் போலிருந்தது என்று வந்தால், இதென்ன ஆச்சரியமாக இருக்கிறதேநான் எப்பொழுது கண்ணை மூடினாலும் சரி, என் நெஞ்சத்தில் இந்த அம்மாதான் தெரிவார்கள்இவர்களிடம்தான் என் எல்லா விஷயங்களையும் பேசுவேன்அதனால்தான், தான் இங்கு நிதர்சனமாக வந்திருப்பதை சொல்வதற்காகக் கூப்பிட்டிருக்கிறார்கள். என்ன கண்களப்பா! இந்த மாதிரி புன்னகை! ஒரு வினாடி பார்த்தால்கூட போதுமே, ஏதோ எனக்கு மட்டுமே சொந்தமான பந்தத்தை தருகிற இந்தப் புன்னகை, அப்பா! எத்தனை தடவை பார்த்தாலும் சரி, இந்தப் புன்னகையை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தால் போதும். வேறு எதுவுமே தேவைப்படாது. உலகில் ஏதேதோ வேண்டும் என்கிறார்களே, அவர்கள் எல்லோரையும் ஒரு வினாடி இந்தப் புன்னகையைப் பார்த்துவிட்டு, அதன்பின் ஏதாவது வேண்டுமா என்று கேட்டால், இதுவொன்றே போதும் என்றுதான் சொல்வார்கள் இல்லையாக்கா?''

     "மல்லிகை, என் பெயர் என்னவென்று தெரியுமா? உனக்கு சகோதரியாக இருக்க எல்லாவிதத்திலும் சரியான பெயரைத்தான் எனக்கும் அன்னை வைத்திருக்கிறார்கள். அதுதான் ரோஜா''.

     "ரோஜாவும் மல்லிகையும் சேர்ந்தால் பின், அங்கு சரணாகதியும், தூய்மையும் சேர்ந்துவிட்டது என்றுதானே அர்த்தம்'' என்ற குரல் ஒலிக்க திரும்பியவர்கள் முன்,

     "என்னம்மா மல்லிகை, நான் சொன்னது சரிதானே? உன் அக்காவின் கணவன் மாயநாதன். நான் நம்முடைய பேங்க்கில் வேலை செய்து கொண்டிருக்கிறேன்''.

     "அப்படியானால் நிச்சயமாக நாம் எல்லோரும் ஒரு குடும்பம் ஆகிவிட்டோம். ஏனென்றால் என் அக்கா யூகோ பேங்க்கில் வேலை செய்கின்றாள்''.

     "ஏனக்கா, எனக்கு ஒரு காபி கொடுக்கமாட்டீர்களா? எனக்கு எப்பொழுதுமே தியானம் செய்துவிட்டு எழுந்தால் பசிக்க ஆரம்பித்து விடும்இந்த வீட்டு மதர் ரூமில் உட்கார்ந்தவுடனேயே எங்கேயோ போய்விட்டேன்என்னையும் மீறி அரை மணி நேரம் உட்கார்ந்திருக்கிறேன்முல்லை இன்றைக்கு இருக்கும் மனநிலையில் எதுவும் கேட்க மாட்டாள். அவள் பேங்க்கில் இன்றைக்கு பணம் குறைந்து போயிருக்கிறது''.

     காபியுடன் அடையும் அவியலும் கூடிய தட்டை கொண்டுவந்து நீட்டினாள் ரோஜா.

     "ஆமாம், எனக்கு அடை பிடிக்குமென்று யார் சொன்னார்கள்?''

     "நம் அம்மாதான். என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருந்தவள் பார்வையில் எதற்கும் இருக்கட்டுமேஎன்று வாங்கிய திடீர் அடைமாவு கண்ணில் பட்டதுஉடனேயே உனக்கு பிடித்ததைத்தான் அன்னை கண்ணில் காட்டியிருக்கின்றார்கள் என்று செய்துவிட்டேன்''.

     "நம் அம்மா என்றால் அம்மாதான். யாருக்கு எது தேவை என்பதை ஒவ்வொரு கணமும் பார்த்துப் பார்த்து மனதிற்கும் உணர்விற்கும் உடலுக்கும் கொடுப்பதோடு அல்லாமல் ஆன்மாவிற்கும் அளிப்பதில் நிகர் அவர் ஒருவர்தான் இல்லையா மாமா?''

     "நிச்சயமாக. தியானத்தை முடித்தவுடன் நீ சாப்பிடவேண்டும் என்பதால் அடையை தயாராக வைத்து இருக்கின்றார்கள். தினமும் ஆறு மணிக்கு நான் தியானம் செய்வது வழக்கம். முடியுமானால் நீயும் வாயேன்'' என்று அன்புடன் ரோஜா அழைத்துக்கொண்டே, "இந்தா, இது முல்லைக்கு''என்று கொடுத்தாள்.

     "நல்ல வேலை செய்தாய் ரோஜாநான் நினைத்தேன், "முல்லைக்கு கொடுக்க வேண்டும்மல்லிகை இங்கே சாப்பிட்டுவிட்டு அவள் மட்டும் அங்குத் தனியாக இருப்பாளே பசியுடன்' என்று. வாயேன், நாம் இருவருமே போய் அவளைப் பார்த்துப் பேசிவிட்டு, கொடுத்துவிட்டு வரலாம்'' எனப் புறப்பட்டனர்.

     அன்னையின் அறையிலிருந்த சுமுகத்தையும், முல்லையின் மனத்தில் அமைதியை வேண்டி வெண்விருட்சிப்பூவையும் மறக்காமல் ரோஜா எடுத்துக்கொண்டாள்.

"முல்லை, இங்கே பாரேன், நிச்சயமாக உன் பணம் மீண்டும் கிடைத்து விடும்கவலையே படாதேஉன்னைத் தேடி அன்னை சுமுகத்தையும், வெண்விருட்சிப்பூவையும் கொண்டு வந்திருக்கிறார்கள்இதைக் கையில் வைத்துக்கொள். உடலிலுள்ள ஒவ்வோர் அணுவிலும் அமைதி வந்து விட்டால் மனதிலுள்ள கலக்கம் நீங்கி, சுமுகம் வந்துவிட்டால், பின் அங்கு பிரச்சினைக்கு ஏது இடம்?''

     ரோஜா கொடுத்த மலர்களைக் கையில் எடுத்தவுடனேயே, விருட்சிப்பூ அவளின் கைகளில் இருந்து தன் அமைதியை அவள் உடல் முழுவதுமாக சிறிது சிறிதாக feed செய்ய, முல்லைக்குத் தான் எந்த இடத்தில் தவறு செய்தோம் என்று புரிந்துவிட்டது. காலையில் கைனடிக்கில் ஒரு கஸ்டமரை பார்க்கச் சென்றுகொண்டிருந்தபோது ஹாரன் அடிக்காமல் ஒரு சந்தில் அவசரமாகத் திரும்பியவுடன் அப்பக்கமாக வந்த இன்னொரு வண்டியில் வந்த ஒரு சின்ன பெண் ஒரு நிமிடம் தன்னை முறைத்துப் பார்த்தவுடன், தான் செய்த தவற்றை உணராமல், நிறுத்தாமல் வண்டியை ஓட்டிச் சென்றது நினைவிற்கு வந்தது. "அம்மா'' என்று அழைத்தவுடன் அவளின் செல்போன் அடித்தது.

     "மேடம், நான்தான் பேசுகிறேன். இன்றைக்கு நான் 50 ஆயிரம் பணம் கொண்டுவந்து கட்டினேன். ஆனால் ஐந்து கட்டிற்குபதிலாக 4கட்டைதான் கட்டியிருக்கிறேன். செலானில் 500x 100 என்று போட்டு விட்டிருக்கிறேன்இப்பொழுதுதான் எல்லாக் கணக்கையும் சரி பார்த்தேன்.பத்தாயிரம் ரூபாய் அதிகமாக இருந்ததைக் கண்டுபிடித்தவுடன் என்னவென்று யோசித்து பார்த்தேன். அவசரத்தில் 4 கட்டு எடுத்து கொடுத்திருக்கிறேன். பேங்க்கிலும் கூட்டம் அதிகமாக இருந்ததுஉங்கள் சீட்டைப் பார்த்தேன்அங்கு நீங்கள் இல்லைஅவசரமாகப் போக வேண்டியிருந்ததால் அப்படியே கிளம்பிவிட்டேன். வெரி சாரிம்மா''.

    அன்னையென்றால் அன்னைதான். மலரும் மனமும் சேரும்பொழுது அங்கு அற்புதம் மட்டும்தான் நிகழும்.

    அடையைச் சாப்பிட்டுகொண்டே முல்லை எல்லா விவரங்களையும் சொன்னாள்.

கொடி ரோஸுக்கு மட்டும் தனித்திறனுண்டுஆனால் அது அமைதியுடன் சேரும்பொழுது அதனின் திறன் இன்னும் அதிகமாவதைப் பார்த்த ரோஜாவிற்கு அன்னையின் அற்புத மலர்களை நினைக்க நினைக்க ஆனந்தம் பொங்கியது.

தொடரும்....

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

கனிந்த ஆத்மாக்கள் வாழத் தெரியாதவர்கள், புரட்சி வீரர்கள், வக்ரபுத்தியுடையவர்களாக இருப்பதுண்டு. சமூகத்தில் ஏற்றுக் கொள்ள முடியாத ஓர் அம்சமாவது உள்ளவர்கள் இவர்கள்.

கனிந்த ஆத்மாக்கள் வாழத் தெரியாதவர்கள்.


 


 


 


 



book | by Dr. Radut