Skip to Content

05.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

                                                  (சென்ற இதழின் தொடர்ச்சி....)  கர்மயோகி
 

XVII. The Divine Soul

Page No.150-151, Para No.1

17.தெய்வீக ஆன்மா

We have formed a conception.

நமக்கு ஓர் எண்ணமுண்டு.

It is of the Supermind.

அது சத்தியஜீவியத்தைப் பற்றியது.

It is opposed to our mentality.

அது மனப்போக்குக்கு எதிரானது.

Our human existence is based on it.

நம் மனித வாழ்வுக்கு அது அடிப்படை.

Our conception is precise.

நம் எண்ணம் தெளிவானது.

It is not a vague idea of divinity.

அது கடவுள்என்ற பொது எண்ணமில்லை; விவரமற்றதன்று.

Nor is it so of divine life.

அது தெய்வீக வாழ்வைப் பற்றியதுமில்லை.

(They are of loose expressions.They are condemned to this language.Such wording is vague.It is of a large aspiration.But it is almost an impalpable one.)

(அவை தெளிவற்ற கருத்துகள். அது சொல்லின் குறையால் ஏற்பட்ட நிர்ப்பந்தம். அது போன்ற சொல் குழப்பம் விளைவிக்கும். அது பெரிய ஆர்வம். ஆனால் அது பிடிபடாத எண்ணம்).

We give these ideas a firm basis.

இதுபோன்ற கருத்துகட்கு நாம் வலுவான அடிப்படை தரலாம்.

It is the basis of a philosophic reasoning.

அது தத்துவ விசாரணைக்குரியது.

They put it into a clear relation with humanity.

அவை இக்கருத்தை மனிதகுலத்தோடு தெளிவாக இணைக்கும்.

It does so with human life too.

மனித வாழ்வுடனும் அது போல் இணைக்கும்.

At present it is all we enjoy.

இதையே நாம் தற்சமயம் அனுபவிக்கிறோம்.

Thus we justify our hope and aspiration.

இவ்விதம் நாம் நம் மனதினைத் திருப்திப்படுத்திக்கொள்கிறோம்.

It is done by the very nature of our world.

இது உலகம் அமைந்த வகை.

So also it is by our cosmic antecedents.

பிரபஞ்சத்தில் இதுவரை நடந்தவை நம்மை இப்படி நிர்ணயிக்கின்றன

The inevitable future of our evolution demands it.

எதிர்காலப் பரிணாமம் தவிர்க்க முடியாதது. அதற்கு இது அவசியம்.

The world came out of the Divine.

உலகம் இறைவனினின்று எழுந்தது.

It has to return to the Divine.

அது மீண்டும் இறைவனையடைய வேண்டும்.

It is inevitable.

இது தவிர்க்க முடியாதது.

We perceive that.

நாம் அதைக் காண்கிறோம்.

Man has had a solitary ecstatic realisation of the Divine.

மனிதன் தனியே இறைவனைக் கண்டு இதயத்தில் பூரித்திருக்கிறான்.

It is in the profundities of our being.

அது நம் ஜீவனின் ஆழ்ந்த பெரிய அம்சங்களில் நிறைவேறியது.

Now we can ask and expect a reply too.

இப்பொழுது நாம் ஒரு கேள்வியை எழுப்பி, பதில் எதிர்பார்க்கலாம்.

How we must change to arrive there in our nature.

நம் சுபாவம் அங்கு சென்றடைய நாம் எப்படி மாற வேண்டும்எனக் கேட்கலாம்.

We must also arrive there in our life and in our relations with others.

நாம் அங்கு நம் வாழ்வை எடுத்துப் போகவேண்டும். மற்றவர் உறவிலும் அதைச் சித்திக்கவேண்டும்.

There is a chance of our getting a reply.

நமக்குப் பதில் கிடைக்கும் வாய்ப்புண்டு.

There is still a defect in our premises.

நம் கொள்கையில் மேலும் ஒரு குறையுண்டு.

We have analysed the Divine in the descent.

சிருஷ்டியில் இறைவனை நாம் அறிந்தோம்.

We are ourselves the Divine in the ascent.

பரிணாமத்தில் நாமே இறைவன்.

The Divine descends to our limited Nature.

இறைவன் நம் சிறு சுபாவத்துள் வருகிறது.

We ascend back to our proper divinity.

நாம் மீண்டும் நம் தெய்வீகத்தையடைய வேண்டும்.

The lives of gods have never known the fall.

தெய்வங்களுக்கு அஞ்ஞான வாழ்வு தெரியாது.

The life of man is redeemed.

மனித வாழ்வு அஞ்ஞானத்திலிருந்து மீண்டு வருகிறது.

He is the conqueror of the lost godhead.

அவனே இழந்த ஞானத்தைப் பெறுபவன்.

He bears within him the experience.

அனுபவத்தைத் தன்னுள்தாங்கி வருகிறான்.

It may be the new riches gathered by him.

இது அவனுக்குப் புதுச் செல்வம்.

It is by his acceptance of the utter descent.

தெய்வம் கீழே வருவதை அவன் மனதார வரவேற்பதால் இது நடக்கிறது.

This is the difference of movement.

இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் இதுவே.

It is the difference between gods and Man.

இது மனிதனுக்கும் தெய்வத்திற்கும் உள்ள வித்தியாசம்.

There can be no difference between essential characteristics.

அடிப்படையான அம்சங்களில் எந்த வித்தியாசமும் இருக்காது.

The difference is in the mould and colouring.

மாற்றம் தோற்றத்திற்கும் அச்சுக்கும் உரியது.

We have arrived at a conclusion.

நாம் ஓர் முடிவுக்கு வந்துவிட்டோம்.

On the basis we can ascertain the nature of divine life.

இந்த அடிப்படையில் தெய்வீக வாழ்வை நாம் அறியலாம்.

We aspire towards that life.

அவ்வாழ்வை நாம் நாடுகிறோம்.

Page No.151, Para No.2


 

The divine soul has not had the fall.

தெய்வீகஆன்மா அஞ்ஞானத்தை அறியாது.

It is a fall into the ignorance.

வழுவுதல் எனில் அஞ்ஞானத்தில் நுழைதல்.

It is a fall of Spirit into Matter.

ஆன்மா ஜடமாவதாகும்.

It is an eclipse of soul by material Nature.

ஜடமான இயற்கை ஆன்மாவை இருளால் கவ்வுவதாகும்.

What would be the existence of such a divine soul?

அப்படிப்பட்ட தெய்வீக ஆன்மாவின் வாழ்வு என்ன?

What would be its consciousness?

அதன் ஜீவியம் எது?

It lives in the original Truth of things.

அது சத்தியத்தின் உற்பத்தி ஸ்தானத்தில் உறைகிறது.

It lives in the inalienable unity.

அதன் ஐக்கியம் அதைவிட்டு விலக முடியாதது.

It lives in the world of its own infinite being.

அது தன் அனந்த ஜீவியத்துள் வாழ்கிறது.

It is like the Divine Existence itself.

அது தெய்வத்தின் வாழ்வாக அமையும்.

It is able to enjoy the differences from God.

அதனால் கடவுளுக்கும் தனக்கும் உள்ள வித்தியாசத்தை அறிய முடியும்.

At the same time it enjoys the unity with God.

அதே சமயம் அதனால் தெய்வத்துடன் ஐக்கியத்தையும் உணர முடியும்.

It embraces difference with other divine souls.

மற்ற தெய்வீக ஆன்மாவுடன் உள்ள வித்தியாசத்தை அனுபவிக்க முடியும்.

It also embraces oneness with those souls.

அவற்றுடனும் ஒருமையை அது நாடும்.

It does so in the infinite play of the self-multiplied Identical.

ஒன்று பலவாகும் லீலை அதன் அரங்கம்.

It does so by the Divine Maya.

அதை தெய்வீக மாயையால் சாதிக்கிறது.

It is also done by the distinction of the comprehending and apprehending Truth-Consciousness.

சத்திய ஜீவியத்தின் இரு நிலைகளுக்குரிய வித்தியாசத்தால் அதைச் சாதிக்கிறது.

                           Contd....

                                  தொடரும்.....


 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

கண்ணை மூடிக்கொண்டு அன்னை பொருள்களைக் காண்பதுண்டு.

மூடிய கண்ணின் சூட்சுமப் பார்வை.

ஸ்ரீ அரவிந்த சுடர்

சத்தியத்தின் அம்சங்களை எதிர்த்தால் அவை வளரும் (அன்பு சண்டை மூலம் வளரும்).

எதிர்ப்பால் வளரும் சத்தியம்.


 


 


 


 


 book | by Dr. Radut