Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம் VI

யோக வாழ்க்கை விளக்கம் VI

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

II/62) மடையனின் வருத்தம் நம்மைப் பாதிக்காதது போல தேவர்கட்கு நம் வருத்தம் புரிவதில்லை.

  • தேவருக்கு மனிதன் மடையன்.
  • அறிவு இல்லாததால் மடையனை உலகம் ஒதுக்கிவிட்டது.
  • ஒரு துறையில் அளவு கடந்து சிறந்தவன் பிறருக்கு மடையனாகத் தெரியும்.
  • பஞ்சாங்கம் எழுதுபவர் மேதைகள்.
  • எவ்வளவு படித்தவராலும் அதைக் கற்றுக் கொள்ள முடியாது.
  • அது பரம்பரை ஞானம் என்பதுடன் மேதாவிலாசமில்லாமல் கற்க முடியாது.
  • பழைய பஞ்சாங்கம் என்பது இன்று அவச்சொல், கேலிக்குரியது.
  • ஒருவன், வாழ்வை உலகம் அறிவது போல் அறியாவிட்டால் அவனைச் சமூகம் ஒதுக்கிவிடும்!
  • நாம் மடையன் என்பவனை சமூகம் சில சமயம் மேதையென அறிந்து idot-genius மடையனான மேதை என்ற சொல்லை உற்பத்தி செய்துள்ளது.
  • தேவருக்கு நம் உலக சட்டம் பொருந்தாது.
  • தங்கள் இஷ்டம் போல் செயல்படுவர் தேவர். அதை உலகம் சரியென ஏற்கும்.
  • திருக்குறள் கயவரைத் தேவர் போன்றவர் எனக் கூறுகிறது.
  • கயவர் சட்டத்தை மீறி தங்கள் இஷ்டம் போல் செயல்படுவதால் அவர்களைத் தேவர்க்கு ஒப்பிடுகிறது குறள்.
  • நாம் கல், மரத்தை ஜடம் என இழிவாகக் கூறுகிறோம்.
  • ஜடத்தில் அணுவுள் சக்தி ஆயிரமாயிர மைல் வேகத்தில் செல்வதை விஞ்ஞானம் அறியும்.
  • கண்ணுக்கு அசையாத ஜடம் ஒளி வேகத்தில் தன் அணுவைச் சுழற்றுகிறது.
  • தோற்றம் வேறு, உள்ளது வேறு.
  • எந்த மடையனின் அறிவைச் சோதனை செய்ய முயன்றாலும், அவன் அறிவில், அதுவும் அவன் மனம் வேலை செய்யும் துறையில், மேதைக்கு நிகரானவன் எனக் காணலாம்.
  • தேவ கன்னிகட்குக் கற்பில்லை.
  • சூரிய குலத் தலைவி ஊர்வசி அர்ஜுனன் மீது பிரியப்பட்டு, அவன் மறுத்ததால், அவனைப் பேடியாகும்படி சபித்தாள்.
  • தேவர்கட்குச் சட்டமில்லை.
  • மடையன் படும் வேதனை நமக்குச் சிறுபிள்ளைத்தனமாகிறது.
  • நம் வருத்தம் தேவர்க்குச் சிறுபிள்ளைத்தனமாகிறது.
  • தேவருலகம் தெய்வீக மனம் overmind.
  • தேவர்க்கு சக்தி ஏராளமானாலும், இருளும், அகந்தையும் உண்டு.
  • மனிதன் தேவரில் மேம்பட்டவன்.
  • தேவரும் இறைவனையடைய பூலோகத்தில் பிறக்க வேண்டும்.
  • தேவரும் மடையனும் உயர்ந்தவர்.
  • மடையன் இவ்வகையில் தேவர்க்கு நிகரானவன்.

******

II/63) அசுரனின் குரல் இனிமையாக இருப்பதைக் கண்டு அதன் பின் கிருஷ்ணன் ஒளிந்திருப்பது தெரிந்தது என பகவான் கூறுவதை, நாம் பின்பற்ற, உணர்வின் மறைவில் அதன் எதிரானது ஒளிந்திருப்பதைக் காண வேண்டும்.

  • அசுரன் கிருஷ்ணனின் மாறுவேடம்.
  • இது பகவானுடைய சொந்த அனுபவம்.
  • அழகான பெண் பால் கொடுக்க வந்ததின் பின் பூதகி இருந்தாள்.
  • அழகிய மான், மாய மானாக இருந்தது.
  • நல்லதின் பின் கெட்டதும், கெட்டதின் பின் நல்லதும் இருப்பது திருவிளையாடல்.
  • மனிதன் தன் குணத்தைப் பின்பற்றக் கூடாது, திருவுள்ளத்தை ஏற்க வேண்டும் என்பதற்காக ஆண்டவன் செய்த ஏற்பாடு இது.
  • நல்லதை நல்லது என ஏற்பதும், கெட்டதை கெட்டது என மறுப்பதும் மனித உள்ளம், திருவுள்ளமில்லை.
  • நம்மை விலக்கி ஆண்டவனை ஏற்பது சமர்ப்பணம்.
  • ஏற்பதையும், விலக்குவதையும் சமர்ப்பணம் செய்தால் திருவுள்ளம் பலிக்கும்.
  • ஆபத்திற்கு உதவ வந்தவர், பல வருஷ பிரச்சனையைத் தீர்க்கிறார்.
  • சிருஷ்டி நல்லதும் கெட்டதும் கலந்தது.
  • நல்லதை எட்டித் தொட நாம் கெட்டதில் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது.
  • குருவின் அனுக்கிரகத்தைப் பெற ஆரம்பத்தில் குருவின் தண்டனைகளைக் கடக்க வேண்டும்.
  • குழந்தை பெரிய மனிதனாக பிரசவ வேதனையில் அவன் வாழ்வு ஆரம்பிக்கிறது. பல ஆண்டுகள் சிறு குழந்தையை வளர்த்தால் பலன் முடிவாக வருகிறது.
  • இந்த தத்துவம் முதற் கோணல் முற்றிலும் கோணல் என்பதற்கு எதிரானது. அதனால் அம்மொழியில் உண்மையில்லை என்று பொருளில்லை.
    கர்மம் செயல்படும்வரை, நாம் கர்மத்தை நம்பும்வரை பழமொழி உண்மை.
  • நாம் ஜீவனில் வாழ கர்மத்தில் ஆரம்பிக்கிறோம்.
  • நாம் இன்றிருப்பது கர்மம்.
  • அதனால் கர்மத்தில் - கோணலில் - ஆரம்பிக்கிறோம்.
  • கர்மம் செயல்படும்வரை விஷயம் கோணலாகவே இருக்கும்.
  • "Tolerable" பரவாயில்லை என்பதில் ஆரம்பித்து பெம்பர்லியில் முடிகிறது.
  • கோணலில் ஆரம்பித்தாலும், முழுவதும் கோணலாக இல்லை, முடிவில் பெம்பர்லி வந்தது.
  • பழமொழி கர்மத்திற்குரியது.
  • எப்படி ஆரம்பித்தாலும் நல்லதாகவே முடியும் என்பது அன்னைக்குரியது - ஜீவனுக்குரியது.
  • பரவாயில்லை என ஆரம்பித்து, வம்பு வளர்ந்து, மணப் பேச்சு காரசாரமான திட்டுதலாகி, கடிதம் தொடர்ந்தது. அதுவரை முற்றிலும் கோணல் சரி.
  • பிறகு அவன் மனம் மாறியது, அவள் மனம் மாறியது. பிரெஞ்சுப் புரட்சி செயல்பட்டது.
  • புரட்சி உள்ளே வந்தபின் இருந்த கோணலெல்லாம் ஓடிப் போவதாயிற்று.
  • குறையான லோகத்தில் பெரும் நல்லது வந்தால் குறை வளரும்.
  • குறை குன்று போல் வளர்ந்தது.
  • டார்சி மனம் மாறி தன் குறையை விலக்கி, எலிசபெத்திற்காக அவள் தாயாரையும் ஏற்றுக் கொண்டு, முடிவில் அவளுக்காக ஓடிப் போன லிடியாவையும், பரம எதிரியான விக்காமையும் ஏற்று, அவன் கடனடைத்து, கமிஷன் வாங்கிக் கொடுத்து

    எதுவும் வெளியில் தெரியக் கூடாது என்ற பொழுது

    திருவுருமாற்றம் நிறைவேறி அதையும் லேடி காதரீன் ஜ்வாலையாக வந்து கொளுத்த முயன்றபொழுது பாதை திரும்பி, பெம்பர்லி அவளுக்கு வரதட்சிணையாக வந்தது.
  • அசுரனின் குரலில் கிருஷ்ணன். லேடி காதரீன் சண்டையில் பெம்பர்லி.

தொடரும்....

*******

ஜீவிய மணி
 
தனக்கு மட்டும் புரியும்படி பேசுவது சுயநலம்.
தன்னைத் தவறு என அறியும் தன்மை மனிதனுக்கில்லை.
பிரார்த்தனை தவறியது பெரிய வாய்ப்பு.
அனைத்தையும் சரி செய்வது அழைப்பு.
நன்றியை உணர்வது சரணாகதிக்கு முன்படி.
 

*******



book | by Dr. Radut