Skip to Content

08. அஜெண்டா

அஜெண்டா

Sri Aurobindo envelopes and dissolves conflicts (Volume 2, Page 152)

பகவான் பிணக்கை ஏற்று சூழ்ந்து கரைத்து விடுகிறார்

  • அன்னை முரண்பாடுகளை வரவேற்று ஆதரிப்பது பழக்கம்.
  • பொதுவாக முரண்பாடுகளைத் தவிர்ப்பது உலக வழக்கம்.
  • புத்தரை ஒருவன் திட்டினான். அவர் நின்று அமைதியாகக் கேட்டுக் கொண்டார், முடிவில் அவன் நேர் எதிராக மாறி அவருக்குச் சிஷ்யனானான்.
  • திட்டு, எதிர்ப்பு, முரண்பாடு, பிணக்குகளை மனிதர்கள் விட்டு விலகுவார்கள்.
  • எதிர்ப்பைத் தாங்க முடியாமலும், தவிர்க்கும் எண்ணத்திலும் மக்கள் விலகுவார்கள்.
  • எதிர்ப்பின் தன்மையை அறிந்தவர், எதிர்ப்பு வலிமையற்றது என அறிவர்.
    வலிமையற்றதை ஏற்றுக்கொள்வதால், அது தன் பலஹீனத்தை அறியும் வாய்ப்புண்டு.
  • எதிர்ப்பு பலஹீனத்தை அறிந்தால் பலஹீனம் அதிகமாகும், முடிவில் கரையும்.
  • பகவானுடைய சூழலுள் நுழையும்பொழுது மிருதுவான உணர்வேற்படும் என்பது அவர் சூழல் நுழைபவரின் குறைகளைக் கரைக்கிறது என்பதால்.
  • மனம் முரண்பாடான கருத்தையறியும்பொழுது சீறும்.
  • ஏற்றுக்கொண்ட முரண்பாடு சீற்றமாகும்.
  • ஆராய்ச்சியின் பலனாக முரண்பாடு உடன்பாடு என அறியும் பொழுது சீற்றம் அமைதியுறும்.
  • தபஸ்வி ஞானம் பெறும்பொழுது மனம் சாந்தமடைவதின் காரணம் இதுவேயாகும்.
  • உடலாலான மனிதனுக்குக் கருத்து வேறுபாடு எழுந்தால் சண்டை எழுகிறது.
  • அக்காலத்தில் அண்டை நாடுகள் வேறுபாட்டை சண்டையிட்டு தீர்த்துக் கொண்டனர்.
  • நாகரிகம் வந்தபின் போர்க்களம் பேச்சு வார்த்தை நடக்கும் மகாநாடாகிறது.
  • அதன் விளைவாக வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டு, இருநாட்டு செல்வமும் வளர்கிறது.
  • உடலால் வாழ்பவன் வளர்ந்து அறிவால் சண்டையிட்டு அழியும் சக்திகள் பரஸ்பரம் செழிக்கும் செல்வமாக மாறுகின்றன.
  • நாகரிகம் என்பது அறிவு வளரும் செல்வம்.
  • குடும்பம் சச்சரவைக் கைவிட்டு சமாதானத்தை மேற்கொண்டால் பண்பால் உயர்ந்து வாழ்க்கைத் தரம் உயரும். குடிசை வாழ் மக்கள் நடுத்தர வர்க்கமாவார்.
  • அசோகர் காலத்தில் பல இந்திய ராஜ்யங்கள் ரோமாபுரியைப் போன்று உயர்ந்த அரசாட்சியை நடத்தின என பகவான் கூறுகிறார்.
  • 2500 ஆண்டுகட்கு முன் அசோகன் போரைக் கைவிட்டான் எனில் இந்திய நாகரிகம் அன்று இன்றைய உலகைவிட உயர்ந்த நாகரிகம் பெற்றதாகும்.
  • நாகரிகம் என்பது மனநிலை, பொருள் நிலை, வாழ்வு நிலை.
  • இக்கண்ணோட்டத்தில் இன்றும் இந்திய மக்களின் மனநிலை ஐரோப்பியர், அமெரிக்கர் மனநிலையிலும் உயர்ந்தது.
  • மக்கள் அமெரிக்காவைக் கொண்டாடலாம். அது உண்மையில்லை.

********



book | by Dr. Radut