Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

Page 172: Make the abysm a road for Heaven’s decent

பாதாளத்துள் பரமண்டலத்தைக் கொணர்ந்து

  • உயர்ந்த ஒளியை ஆழத்துள் பதித்து
  • புதிரான நெருப்பு இருளைப் பிளந்தது
  • மீண்டும் பிறப்பிடையே எடுத்த பெருமுயற்சி
  • ஆபத்தான பார்வை வழியே, கனத்த அசைவு
  • அடுத்த உலக குழப்பத்தூடே பாதை வகுத்து
  • ஒளியிழந்த முகங்களிடையே, வலிமையுள்ள சிறு தெய்வங்கள்
  • விரைந்தோடும் பிசாசுகளின் முணுமுணுப்பு எழுப்பும் கேள்வி
  • நயமாக விரையும் சக்தியின் சாகஸத்தால் முற்றுகையிடப்பட்டு
  • புது உலகு வழியே வழி தெரியாமல் நடப்பவர் போல
  • எங்கு போகிறோமென அறியாமல், எந்த நம்பிக்கையுமின்றி
  • அடிதவறும் பூமியில் பாதையை நாடி
  • கல்லென உறுதிபூண்டு அழியும் முடிவை நாடி
  • மறையும் வழி பின்தொடர
  • விவரமற்ற பெருவெளியின் மினுமினுக்கும் புள்ளிகள்
  • உடலில்லாமல் முணுமுணுக்கும் ஓசை உடன் வந்தது
  • அடிபட்ட கவலை ஒளியைக் குறை கூறியது
  • அசையாத அதன் நெஞ்சம் பெரிய தடை
  • கவனிக்கும் மங்கிய பார்வை அசைவதால் பெருகியது
  • உயிரற்ற கண்கள் உற்று நோக்க எதிர்ப்பின் தொகுப்பு
  • மரணஸ்பரிசம் இருளாகப் பிரகாசித்தது
  • இறந்த பேயின் ஒளி சூழும்படி
  • தவறான வழிகாட்டும் நிழலுருவங்கள் நிறைந்த
  • இருண்ட அளவற்ற ஜட இருளின் குகை விவரமற்றது
  • தன் ஆத்ம சுடரே அவனறிந்த சூரிய ஒளி

********

ஜீவிய மணி

நாம் சந்திக்கும் நிகழ்ச்சி, கடமை, செயல் ஆகியவற்றைவிட நமக்கு வலிமை குறைவானால் தோல்வி ஏற்படுகிறது. புறநிகழ்ச்சிகள் அவற்றைப் பிரதிபலிப்பதால் அவை பொருட்டல்ல. நாம் என்பது மனம். எக்காரணத்தாலோ, மனம் ஈடுபாடு இல்லை எனில், வலிமை இல்லை எனில் நஷ்டமோ, தோல்வியோ ஏற்படுகிறது. இதுவே ஆன்மீக, மனோதத்துவ உண்மை. அன்று புரியவில்லை, பிடிக்கவில்லை, ஈடுபாடு இல்லை, வலிமை இல்லை. இன்று அது புரிந்தால், பிடித்தால், ஈடுபாடு இருந்தால், வலிமை இருந்தால் என்ன நிலைமை? நஷ்டப்பட்டவர் இன்று ஆசையால் நஷ்டப்பட்டேன் என்ற அறிவு பெற்றால் என்ன வரும்? அறிவு வரும். இனி அதுபோன்ற நஷ்டம் வராது. இதை புத்திக் கொள்முதல் என்பார்கள். பொறாமையால் கொலை செய்தேன்; அவசரப்பட்டு முதலை இழந்தேன்; நண்பனை நம்பி ஏமாந்து போனேன் என்பவர்கள் இன்று பொறாமையைக் கைவிட்டால், அவசரம் தவறு என்று உணர்ந்தால், இனி ஏமாற மாட்டேன் என்றால் மனம் நிம்மதி அடையும். போகிற கதி நல்ல கதியாகும். இந்த அறிவுக்கு இழந்ததைப் பெற்றுத் தரும் திறன் இல்லை.

அன்னைக்கு இம்மனமாற்றம் வேறு;
இழந்ததைப் பெற்றுத் தரும்.

********



book | by Dr. Radut