Skip to Content

அன்பர் கடிதம்

 

இனிய அன்னைக்கு,

நான் இப்பொழுது "அன்னையின் தரிசனம்'' புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இதன் மூலம் என் நம்பிக்கை (அன்னையின் மேல்) மேன்மேலும் அதிகரிப்பதை உணர்கிறேன்.

2 நாட்களுக்கு முன் அன்னை என் ஒரே மகளைக் காப்பாற்றிய அருளை இக்கடிதத்தின் மூலம் என் நன்றியுடன் தெரியப்படுத்த விரும்புகிறேன். 12ஆம் வகுப்பு படிக்கும் அவள் college இல் exam எழுதுவதற்காகச் சென்றிருந்தாள். Around 4 pm  exam முடிந்துவிட்டது. நியாயமாகப் பார்த்தால் 4.45 to  5 வீடு வந்துவிட வேண்டும். 5மணி அளவில் என் மனத்தில் ஏதோ restlessness இருந்தது. மகளுக்கு ஏதோ accident ஆகப் போகிறது என்பது போன்றதோர் உணர்வு ஏற்பட்டது. உடனே நான் அன்னையிடம் மனத்தைச் செலுத்தி நாமஸ்மரண் செய்ய ஆரம்பித்தேன். 5.30 மணிக்கு என் மகள் படபடப்புடன் வந்து அப்படியே அசந்து உட்கார்ந்துவிட்டாள். முகமெல்லாம் கருத்து விட்டு இருந்தது. Nervous ஆகி லேசாக விசும்பவும் செய்தாள். நான் தண்ணீர் கொடுத்துவிட்டு விஷயம் கேட்டதில் ஒரு second இல் தன் உயிர் தப்பியதாகவும் ஒரு பெண்மணி red signal போட்டிருந்தும் மிக வேகமாக 2 wheeler ஐ ஓட்டி வந்து தன்மேல் almost இடிக்க வந்ததாகவும், அவர் வந்த speed இல் தன் மேல் பட்டிருந்தால் தனக்கு என்ன ஆகியிருக்கும் என்பதே தெரியவில்லை என்பதையும் சொன்னாள். நான் உடனே அன்னைக்கு ஆயிரம் கோடி நன்றி கூறினேன். முக்கியமாக I want to write about the tremendous change in me after praying to Mother which is, I don't get nervous or perturbed by anything. A sort of calmness remains in my mind. A lot of peace prevails in my heart. இதே போன்றதொரு நிகழ்ச்சி 2 வருடங்களுக்குமுன் நடந்திருந்தால் (அன்னையை அறியாத தருணம்) நான் அழுது புரண்டு வேண்டாதனவெல்லாம் imagine செய்து கொண்டு nervous ஆகி அந்த stateஇல் இருந்து recover ஆக1 week ஆகியிருக்கும். ஆனால் இன்று அன்னையின் அருளால் தெளிவுடன் அவருக்கு நன்றி செலுத்தும் நிலையில் என்னைப் பதப்படுத்திவிட்டார் அன்னை.

*****

 

Comments

அன்பர் கடிதம்Para No. 2, Line

அன்பர் கடிதம்

Para No. 2, Line No. 2 - விரும்பு கிறேன் - விரும்புகிறேன்

Para No. 2, Line No. 4 - examமுடிந்துவிட்டது - exam முடிந்துவிட்டது

Para No. 2, Line No. 6 - accidentஆகப் போகிறது - accident ஆகப்போகிறது

Para No. 2, Line No. 17 - mother - Mother 

Para No. 2, Line No. 18 - is, I

Para No. 2, Line No. 18 - anything.A - anything. A

Para No. 2, Line No. 20 - வருடங்களுக்குமுன்நடந்திருந்தால்(அன்னையைஅறியாததருணம்)நான் -

வருடங்களுக்கு முன் நடந்திருந்தால் (அன்னையை அறியாத தருணம்) நான்

Para No. 2, Line No. 22 - ஆகிஅந்த state இல்இருந்து - ஆகி அந்த stateஇல் இருந்து



book | by Dr. Radut