Skip to Content

Agenda

 

Vol VI, P.75

Age does not matter because advantages and disadvantages balance

வயது தடையில்லை. ஏனென்றால் வசதிகளும் குறைகளும் ஒன்றுக்கொன்று சரிக்கட்டிக் கொள்ளும்

இளமையிற் கல் என்பது வாசகம். இளமையில் கற்காவிட்டால் பின்னால் படிக்க முடியாது. படித்தால் வாராது. "ஓரெட்டில் பெறாத கல்வி'' பயன்படாது என்பது பழைய வாக்கு. இளைமையில் படிக்காவிட்டால் பிறகு படிக்க வெட்கமாயிருப்பதால் படிக்கும் முயற்சியை மேற்கொள்வதில்லை "ஈரெட்டில் பெறாத மனைவியும், மூவெட்டில் பெறாத பிள்ளையும், நாலெட்டில் பெறாத செல்வமும்...'' என, கல்வி, திருமணம், புத்திரன், செல்வம் பெற நம் மரபு வயதைக் குறித்துள்ளது. அன்னை இதுபோன்ற மரபுவழி வந்த ஞானத்தை ஏற்பதுடன் அவற்றையே முடிவாகக் கொள்வதில்லை. இதைக் கடந்த உண்மைகள் உள. அவை:

  1. Biological truths உடற்கூற்றுக்குரியவை
  2. Truths of life வாழ்வுக்குரிய சூட்சுமங்கள்
  3. Subtle Truths சூட்சும இரகஸ்யங்கள்
  4. Spiritual Truths ஆன்மீக உண்மைகள்

சந்தர்ப்பம் வரும்பொழுது இவற்றை அன்னை குறிப்பிடுவதுண்டு. ஆராய்ச்சியில் ஆர்வம் உள்ள அன்பர்கள் இது போன்ற தலைப்பை எடுத்து "அன்னை கூறியுள்ள உண்மைகள்'' என்று அவருடைய 33 Volumesகளிலிருந்து சேகரம் செய்தால் அது மற்ற அன்பர்கட்குப் பயன் படும். பலஇடங்களில் அன்னை இதுபோல்பேசுகிறார்கள், சில இடங்களில் இவற்றில் எப்படி உண்மை வந்தது என விளக்கமாகக் கூறுகின்றார்கள்.

தாகூர் 48 வயதில் ஆங்கிலம் பயின்றார். அவர் கீதாஞ்சலியை வங்காளியில் எழுதினார். ஆங்கிலத்தில் அவரே மொழிபெயர்த்தார். Mr. Underwood என்பவருடன் சேர்ந்து அதைச் செய்தார். அந்நூலுக்கு நோபல் பரிசு கிடைத்தது. அன்று நோபல் பரிசுடன் 1லட்சரூபாயும் அளித்தனர், இன்று அதே தொகையை 3 கோடி ரூபாயாக மாற்றியுள்ளனர். இளம் வயதில் தெம்பு அதிகம், ஆர்வம் அதிகம். அதனால் எளிதில் படிக்க முடியும். படித்தது மனதில் நிற்கும், ஆனால் வயதான பின் அனுபவம் அதிகம், பொறுப்பும், திறமையும் அதிகம். தெம்பும் ஆர்வமும் குறைந்தால் பொறுப்பும் திறமையும் அவற்றைச் சரிக்கட்டுகின்றன என்கிறார் அன்னை.

60, 70 வயதிற்கு மேல் உடற்பயிற்சியை மேற் கொண்டு சிறப்பாக உடல்நலம் பேணுவதை இன்று மேல்நாடுகளில் செய்கிறார்கள். எந்த விளையாட்டு ஆனாலும் இளம் வயதைக் கடந்தால் ஒலிம்பிக் பரிசில்லை என்பதை உலகம் அனுபவபூர்வமாக அறிந்து ஏற்றுக் கொண்டபின் சமீபத்தில் ஒருவர் தாம் முதல் ஒலிம்பிக் பரிசினால் அலங்கரிக்கப்பட்ட பிறகு 15 வருஷம் கடந்து மீண்டும் அதே பரிசைப் பெற்றார்.

கல்வி, செல்வம், விளையாட்டு, யோகம், கலை ஆகியவற்றை இளம்வயதில் பயிற்றுவிப்பது உலக வழக்கம். அது சரி. ஆனால் அதுவே சரி என்று அன்னை ஏற்கவில்லை. ஆர்வமும், முயற்சியும் ஆன்மாவைத் தொட உதவும்.

ஆன்மா விழித்தெழுந்த பின் வாழ்வின் சட்டங்கள் நிற்கா. அன்னையைப் பொருத்தவரை அவர் கூற்றுகள் அனைத்தும் ஆன்மாவின் வழியை அடிப்படையாகக் கொண்டவை. பிறவிப் புத்திசாலித்தனம் வளரும் என்பதையும் அதுபோன்றே கூறுகிறார்கள். உபவாசம், "உண்டி சுருங்குவது பெண்டிற்கழகு'' என்ற சொல்லின் உண்மையை அன்னை மாற்றி, சுருங்கச் சாப்பிடுவது முறையன்று. எத்தனை ஆண்டானாலும் உடல் அன்றிழந்த சாப்பாட்டை மீண்டும் ஈடுகட்டும் வகையில் சாப்பிட விழையும், கண்விழித்தாலும் உடல் அதைப் பின்னர் சரி செய்யும் என உடலுக்கேயுரிய சட்டங்களைப் பற்றிக் கூறி இந்த யோகத்திற்கு முக்கியம் "balance'' நிதானம் என்பதைப் பல இடங்களிலும் வலியுறுத்துகிறார்.

Comments

AgendaPara No.2, Line No.4 -

Agenda

Para No.2, Line No.4 - Volumeகளிலிருந்து- Volumes களிலிருந்து

Para No.2, Line No.5 -பலஇடங்களில்அன்னை இதுபோல்பேசுகிறார்கள்,சில இடங்கüல் - பல இடங்களில் அன்னை இதுபோல் பேசுகிறார்கள், சில இடங்களில்

Para No.3, Line No.4 - அüத்தனர்,  - அளித்தனர்,



book | by Dr. Radut