Skip to Content

09. அன்பர் உரை

பழக்கம் பழைய நிலையை நீடிக்கும் மலர்ச்சி அன்னையை நிலைநிறுத்தும்

(சென்னை - மாம்பலம் - தியான மையத்தில், பிப்ரவரி 4, 2001இல், திரு. P.V. பாலகிருஷ்ணன் நிகழ்த்திய உரை) 

சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப் பழக்கம் என்பது போல் உணவு, தூக்கம், உடை, பண்பு, பாவனை போன்ற எவையும் பழக்கத்தால் சிறப்பெய்தியவை.

உலகத்து நாகரீகம் அனைத்தும் உயர்ந்த பழக்கத்திற்குரியவை.

பழக்கம் உடைந்து மனம் மலர்ந்ததால் மட்டுமே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

பழக்கமில்லாவிட்டால் பயனில்லை. மனிதனுக்குப் பழக்கமுண்டு. குடும்பத்திற்குப் பழக்கமுண்டு. அதை ‘அவர்கள் குடும்பப் பழக்கம்' என்போம். ஜாதிக்குப் புத்தியுண்டு. அது பழக்கமானால் ‘ஜாதி புத்தி' என்பர். செட்டிப்பிள்ளை கெட்டிப் பிள்ளையாகும். ஊருக்குப் பழக்கமுண்டு. உலகத்திற்கும் பழக்கமுண்டு. அவற்றைப் பண்புகள் என்கிறோம். ஒரு காரியத்தைச் செய்து கற்ற பின் திரும்பத் திரும்ப விரும்பி அதையே செய்யும் திறன் பழக்கம் என வழங்குகிறது. பழக்கங்கள் நல்லவை, கெட்டவை எனப் பிரியும். நல்லவையானாலும், அல்லவையானாலும், அடிப்படையில் இரண்டும் பழக்கங்களாகும்.

பழக்கத்தால் ஏற்பட்டு நின்று நிலைத்த பண்பை உலகம் ஏற்றுப் போற்றும்.

பண்புகள் உடலுக்குரிய உடல் நலப் பண்புகள், வாழ்வுக்குரிய நடைமுறைப் பண்புகள், அறிவுக்குரிய மனநிலைகள், ஆன்மா பக்குவப்பட உதவும் ஆன்மீகப் பண்புகள் என நால்வகையானவை. உடலுக்குரிய பண்புகள் எளிதில் மாறக் கூடியவை அல்ல. அதை மனித சுபாவம் எனக் கூறி நாய் வாலுக்கு ஒப்பிடுகிறோம். ஆன்மீகப் பண்புகள் இந்தியாவில் வளர்ந்து நிலைத்தால் உலகத்தின் குருவாக நாடு மாறும் என்பது ஸ்ரீ அரவிந்தம்.

  • கடைசி கட்டமான உடலின் பழக்கத்திற்கும் உயிர் உண்டு.
     
  • முடிவான ஆன்மீகப் பண்புக்கும் பழக்கத்தின் உயிரற்ற இறுக்கம் உண்டு

என்பது சிருஷ்டியின் அடிப்படையான ஆன்மீக உண்மைகளில் ஒன்று. பழைய நிலைமை நீடிப்பது பழக்கத்தின் இறுக்கம். ஆன்மாவின் மலர்ச்சி அன்னையை வாழ்வில் அனுமதித்து அவர் பொறுப்பில் நம் வாழ்வை ஒப்படைத்தல் என்பது தலைப்பு. இதுபோன்ற கருத்துகளை அன்னை விரும்பினார், போற்றினார். அதனால் இக்கருத்தின் கூறுகள், பிரதிபலிப்புகள், அம்சங்கள், பகுதிகள் என்ன என்பதை அன்பர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளின் மூலம் அறிவது ஆன்மா பலன் பெற உதவும். நீங்கள் என்னை மறந்தாலும், நான் எவரையும் மறக்கமாட்டேன் என்று அன்னை கூறுவதை, மாற்றி அன்னையை நான் மறந்தாலும் என் ஆன்மா மறக்கக் கூடாது என்று கூற உதவும் கருத்தை தலைப்பு தொடுகிறது.

ஆபத்து நேரத்தில் எவருக்கும் பழக்கம் வெளிப்படும். ஆபத்து பெரியதானாலும், பழக்கமில்லாததானாலும், பழக்கம் விலகி, புதுமை எழும். அப்படி நடப்பது சிறப்பாக அமையும். சமயோசிதமான அறிவுக்கு மலர்ச்சியுண்டு. அது பழக்கத்தைக் கடந்தது. வழக்கமாகப் பொய் மட்டும் பேசுபவர் தம்மைப் பழக்கத்திற்கு அடிமைப்படுத்த மாட்டார். அவர்கள் என்றும் புதுமையின் மலர்ச்சியுடனிருப்பார்கள். துரோகத்திற்கும் அத்துணிவுண்டு. பேட்டிகளில் பதிலளிப்பவர்கள், மேடையில் பேசுபவர்கள், கையும் களவுமாக திருடும்பொழுது அகப்பட்டவர்கள் இதுபோன்ற புதுமை, மனமலர்ச்சி, ஆத்மா வெளிவந்து செயல்படுவது போன்றவற்றைக் காண்பார்கள். மலர்ச்சி பொய்க்கும் உண்டு, நல்லதற்கு மட்டுமன்று என்பது வாழ்வுக்குரிய உண்மை.

சமர்ப்பணத்தைப் பற்றிப் பேசும்பொழுது அன்னை "எண்ணங்கள் உணர்வுகள், உந்துதல்கள்,  பழக்கங்களைச்" சமர்ப்பணம் செய்யவேண்டும் என்கிறார். சமர்ப்பணமும், சரணாகதியும் யோகத்திற்குரியவைகள். அன்பர்கள் வாழ்விலிருப்பவர்கள். வாழ்வில் யோகம் என்பது பிரச்சினை தீருவது. பிரச்சினை தீர சமர்ப்பணத்தை மேற்கொண்டால், சமர்ப்பணம் சற்று ஆரம்பித்தவுடன் பிரச்சினை தீர்ந்து விடுவதால், அன்பர்கள் சமர்ப்பணத்தை முழுவதும் அறிய முடிவதில்லை. எண்ணம் என்பதைக் கருதினால்,

  • எண்ணத்தைச் சமர்ப்பணம் செய்வது எளிதன்று எனத் தெரியும். தொடர்ந்து முயன்றால் முடியாது என்று கைவிட்டு விடுவார்கள்.
     
  • அது ஒருவருக்குப் பலித்தால், அவருக்கு யோகத் தகுதியுண்டு.
     
  • அடுத்தாற்போல உணர்வைச் சமர்ப்பணம் செய்ய முயன்றால், எண்ணமே சுலபமாகத் தெரியும்.
     
  • அதையும் செய்தவர் impulse உந்துதலைச் சமர்ப்பணம் செய்யமுயல்வது குளத்தில் நீரை விலக்குவதுபோல் என அறிவார்.
     
  • கடைசியாகச் சமர்ப்பண வரிசையில் நிற்பது பழக்கம், உடலுக்குரியது.
     
  • அது மிகக் கடினம், ஏனெனில் உடல் இருளாலானது.
     
  • உடலுக்கு consciousness ஜீவியம், substance பொருள் என இரு பகுதிகளுள்ளன.
     
  • ஜீவியம் சூட்சுமமானது.
     
  • பொருள் ஜடமானது.
     
  • ஜடமான பொருளில் computer chipல் software commands இருப்பதைப் போல் பழக்கம் ஊறியுள்ளது.
     
  • பழக்கத்தை விடமுடியாது என்பதை சுபாவம் மாறாது என்கிறோம்.
     
  • பழக்கம் மாறாது என்பது மட்டுமன்று, அது அடுத்த, அடுத்த தலைமுறைகள் எனத் தொடர்ந்து வரும். அழியாது. அதனால் அது மாற்றத்திற்கு எதிரி. ஆன்மீக மாற்றத்திற்குப் பரம வைரி.

உலகம் மாறும்பொழுது பழக்கங்கள் அளவு கடந்து மாறுகின்றன. எதிராகவும் மாறுகின்றன. ஒரு பழக்கம், வேறு பழக்கமாகலாம், ஆனால் பழக்கம் என்பது நிலையாக இருக்கும். அதனால் பழக்கத்தை மாற்றுவது முடியாது. சமர்ப்பணத்திற்கும், சரணாகதிக்கும் பழக்கமும் தலை வணங்கும் என்றாலும் அது மனிதன் சந்திரமண்டலத்தை எட்டுவதுபோலாகும். இதுவரை பழக்கத்தால் ஆட்கொள்ளப்படாத இடத்தில் மலர்ச்சி spontaneous behaviour  முடியும். பழக்கத்தை விலக்குதல் சிரமம், மாற்றுவதோ, அழிப்பதோ கடினம்.

பழக்கம் மனிதன், விலங்கு ஆகிய இருவருக்கும் உண்டு. மேலும் ஜடப்பொருட்கட்கும் பழக்கம் உண்டு. அதை நாம் அப்பொருளின் இராசி என்கிறோம்.

  • இது ராசியான வீடு.
     
  • இந்த tennis racket டென்னிஸ் மட்டைக்கு இராசி உண்டு.
     
  • இந்தப் பேனாவால் எழுதிய எந்தப் பரீட்சையும் பெயிலாகவில்லை.
     
  • நான் இப்பேனாவால் எழுதிய எந்தப் பத்திரமும் இதுவரை கோர்ட்டுக்குப் போகவில்லை என்பது பேனாவின் இராசி.

இராசி என்று நாம் கூறுவது ஜடப்பொருள் பெற்ற பழக்கம்  - நல்ல பழக்கத்தை இராசி என்கிறோம்.

நீரோட்டம் மேட்டிலிருந்து பள்ளத்திற்குப் போவதை நாம் பழக்கம், இராசி என்று கூறுவதில்லை. புவிஈர்ப்புச் சக்தி என்கிறோம். ஓர் அன்பர் தம் வீட்டுத் தரையில் தண்ணீர் விட்டு அலம்பும்பொழுது வாட்டம் தலைகீழாக இருப்பதால் நீர் ஓட்டம் உள்நோக்கி வருவதைக் கண்டார். வழக்கமாக நீரை வலிய தள்ளுபவர், ஏன் அன்னையிடம் கூறக்கூடாது என்று நினைத்துக் கூறினார். நீர் பள்ளத்திலிருந்து மேட்டை நோக்கி ஓடுவதைக் கண்டார். புவி ஈர்ப்புச் சக்தியை மீறும் திறன் சக்திக்குண்டு. அது செயல்பட பழக்கம் தடை, மலர்ச்சி உதவும்.

அகதி முகாமில் நாம் யார்? என்ன படிப்பு? என்ன உத்தியோகம் செய்தோம், என்ன அந்தஸ்து என எவரும் அறியமாட்டார்கள். அத்துடன் ஏதாவது வேறு நாட்டில் முகாம் போடுவதால், பாஷை தெரியாது. எப்படி நம் தேவைகளைப் பூர்த்தி செய்வது? ஷாங்காய் நகரில் அப்படி ஒரு முகாமில் ஜெர்மானிய யூதர் ஒருவரிருந்தார். தம் சொந்த சாமர்த்தியத்தால் சிறு காரியங்களையும் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். இது பகீரதப் பிரயத்தனம். தாம் பெற்ற எந்த உயர்ந்த பழக்கமும் பலன் தரவில்லை அங்கு எனக் கண்டார். புதிய மௌனமான திறன்களைப் capacity பெற்றார். முகாமிலிருந்து விடுபட்டு அமெரிக்கா திரும்பி, அங்கு citizenship குடிமகனானார். சர்க்காரில் Treasury secretary ஆனார். அது மத்திய நிதிமந்திரிப் பதவி. ஓய்வு பெற்று தொழில் நடத்தினார். பல பெரிய கம்பெனிகளை இணைத்து புதிய பெரிய கம்பெனி ஒன்றை 25 ஆண்டுகட்கு முன் ஆரம்பித்தார். அதன் மூலதனம் $10 பில்லியன். அன்றைய மதிப்பு ரூபாயில் 10,000 கோடி. தாம் பெற்ற அனுபவங்களைப் புத்தகமாக எழுதினார். ஷாங்காய் நகரில் அகதி முகாமில் தாம் கற்றவை அனைத்தும் பழக்கங்கள் பயனில்லை என்றபொழுது புதியதாக தாம் அப்பொழுது பெற்ற திறமையே தாம் முன்னுக்கு வரக் காரணம் என்று அந்நூலில் எழுதினார்.

பழக்கம் முன்னேற்றத்திற்குப் பகை.

மலர்ச்சி அருள்பெறும் மகத்தான முறை.

சென்னை பிரசிடென்சி கல்லூரி மாணவர் அகில இந்தியப் பேச்சுப் போட்டிக்காக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வந்திருந்தார். பட்டமளிப்பு விழா மண்டபத்தில் கூட்டம். மண்டபம் நிறைய மாணவர்களும், ஆசிரியர்களும் பேச்சுக்களைக் கேட்டு மகிழ்ந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர். நடுவர்கள் தங்கள் மார்க்குகளை எடுத்துக் கொண்டு பின்புறம் சென்று ஆலோசனை செய்யும்பொழுது பிரசிடென்சி மாணவர், எனக்குப் பாடவேண்டும்போல் தோன்றுகிறது என்றார். அதைக் கேட்ட நிர்வாகி அவரைப் பாடச் சொன்னார். மேடைக்கு வந்து ஹிந்திப்பாட்டு ஒன்று பாடினார். இதுவரை இல்லாத ஆரவாரம். மாணவர் அகமகிழ்ந்தனர். தமிழ்ப்பாட்டு ஒன்று பாடினார். மண்டபம் அதிரும்படி கோஷம், பேச்சுப் போட்டியில் அவருக்கு பரிசு வரவில்லை. பேச்சுப் போட்டியில் பரிசு பெற்றவரை எவரும் கருதவில்லை. பாடகர் பிரபலமானார். மறுநாள் பல்கலைக்கழகத்தினர் பல இடங்களிலும் அவரைப் பாட அழைத்தனர். அவர் பிரபலம் அதிகரித்தது.

தானாக எழும் (spontaneous) பாட்டு, நாமே

தயார் செய்யும் பேச்சைவிட மனிதனுக்கு ஜீவனளிக்கிறது.

ஜாமெண்ட்ரி (geometry) தேற்றங்களுண்டு. அவை பல கணித மேதைகளால் கண்டுபிடிக்கப்பட்டவை. பொதுவாக ஒருவர் வாழ்நாள் முழுவதும் சிந்தனை செய்து ஒரு தேற்றம் கண்டுபிடிப்பார். அடுத்தவர் சில எழுதுவதும் உண்டு. சீனுவாச ராமானுஜம் உடல் நலம் குன்றி படுக்கையாயிருந்தபொழுது ஹார்டி என்ற பேராசிரியர் அவரைக் காணச் சென்றார். ஒரு குறிப்பிட்ட விஷயத்தை ஹார்டி சுட்டிக் காட்டியபொழுது அதற்குரிய தேற்றத்தை ராமானுஜம் உடனே கூறினார். அது ஹார்டிக்கு ஆச்சரியம் தந்தது. நெடுநாள் சிந்திப்பதன் பலனாக எழும் தேற்றம் எப்படி மனத்தில் உடனே எழுந்தது எனப் புரியவில்லை. ஹார்டி எழுந்து போகுமுன் ராமானுஜம் மேலும் 5 தேற்றங்களைக் கூறினார். படிப்பு பட்டம் பெற நாம் படிக்கும் பழக்கத்தை மேற்கொள்கிறோம். அதை நன்கு அறிந்தவர் ஹார்டி.

அவரறிந்தது பழக்கம்.

இராமானுஜத்தின் மனம் கணிதத்தைப் பொறுத்தவரை அறியாதது பழக்கம்.

இராமானுஜத்தின் மனதில் தேற்றம் தானே எழும் அது மலர்ச்சி.

பழக்கம், தேவை

இவை மாறுபட்டவை. திரும்பத் திரும்ப செய்வதால் எழுவது பழக்கம். தேவை பழக்கத்திலிருந்து மாறுபட்டது. உடலுக்குத் தேவையான உணவை நாம் பழக்கப்படுத்திக் கொள்வதால் அத்தேவையைப் பழக்கம் என அறிவது சரியன்று. பேசும் பழக்கம், காப்பி குடிக்கும் பழக்கம், மாலையில் உலவும் பழக்கம், பொய் சொல்லாத பழக்கம், பிடிவாதம் பிடிக்கும் பழக்கம் போன்றவை தேவையான பேச்சு, அவசியமான காப்பி, உடலுக்குத் தேவையான நடை, ஆத்மாவுக்குத் தேவையான சத்தியம், உறுதியாகச் செயல்படும் அவசியம் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டவை.

பழக்கம் காலத்திற்குரியது. மலர்ச்சி காலத்தைக் கடந்தது. பழக்கத்திற்குட்பட்டவர் தம்மைப் போன்ற மற்றொருவர் மலர்ச்சியுடையவராக இருப்பதை அறிந்தால், பிற்காலத்தில் அவர்கள் வாழ்வுநிலை, வாழ்க்கைத் தரம், அந்தஸ்து அளவு கடந்து வேறுபட்டிருப்பதைக் காணலாம்.

வாழ்வில் வளமும், சுபிட்சமும் அளவு கடந்து பெருகினால், பழைய பழக்கங்கள் அளவு கடந்து மாறுவதைக் காணலாம்.

பழைய பழக்கமும் புதிய சுபிட்சமும் சேரா.

Pride & Prejudice கதையில் டார்சி செல்வன். அவனை மணக்க எவரும் விரும்புவர். தான் விரும்பிய பின் எந்தப் பெண்ணும் தன்னை ஏற்கத் தயங்க மாட்டாள் என்பது அவன் அபிப்பிராயம். ஏனெனில் அதுவே உலகத்தில் பழக்கம். அதுவரை அவனறிந்த பழக்கமும் அதுவே. எந்தப் பெண்ணுக்கும் தான் அதிர்ஷ்டமான வரன். எலிசபெத் ஆர்வமாக, ஆச்சரியமான தன்னை ஏற்பாள் என தன் பழக்கப்படி நினைத்தான். தான் அவளைச் சந்திப்பதே அவளுக்கு பாக்கியம் என்று நினைத்தான். ஷார்லோட் உலகை ஒட்டி வளர்ந்தவள். அவளும் அப்படியே நினைத்தாள்.

ஒரு நாள் பார்க்கில் எலிசபெத், ஷார்லோட்டுடன் உலவப் போன பொழுது ஷார்லோட்டின் தங்கையும் உடனிருந்தாள். காலின்ஸ் ஓடி வருகிறான். டார்சி அவர்கள் வீட்டிற்கு வருவதாகவும், உடனே இருவரும் வந்து அவனை வரவேற்க வேண்டும் எனவும் பதை பதைத்துக் கூக்குரலிடுகிறான். எலிசபெத் கேட்டுக் கொண்டாள்.

ஷார்லோட் அதைக் கேட்டவுடன் "டார்சிக்கு உன் மீது அபிப்பிராயமிருக்க வேண்டும். என்னைப் பார்க்க இவ்வளவு சீக்கிரம் டார்சி வருவதில்லை" என எலிசபெத்திடம் கூறுகிறாள். காலின்ஸ் செய்த ஆர்ப்பாட்டத்தில் இவள் தங்கை அவனை நோக்கி ஓடுகிறாள்.

அடுத்து ஒரு நாள் ஷார்லோட் வெளியிலிருந்து திரும்பி வந்த பொழுது டார்சி எலிசபெத்துடன் தனியே பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு, ‘எனக்குச் சந்தேகமேயில்லை. டார்சிக்கு உன்னை மணக்க ஆசை' என்கிறாள். இது உலகம். டார்சி இவ்வுலகத்தைச் சேர்ந்தவன். இது போன்ற அபிப்பிராயங்களுடன் டார்சி ஒரு நாள் எலிசபெத்திடம் வந்து தன்னை மணக்கும்படிக் கேட்கிறான். எரிமலை வெடித்தது. அது முடியாது என்று பதில் வந்தவுடன், டார்சி ஏன் முடியாது என விளக்கம் கேட்கிறான். எரிமலையுடன் பூகம்பமும் சேர்ந்து கொண்டது.

"நீ சுயநலம், கர்வி,

உன்னை மணக்க நான் என்றும் சம்மதிக்க மாட்டேன்.

மரியாதையாகப் பழக உனக்குத் தெரியவில்லை.

உன்னைக் கண்டவுடன் நான் எடுத்த முடிவு இது, இன்றல்ல."

பழக்கத்தின் கோட்டையை மலர்ச்சியின் வெடிகுண்டு தகர்த்தது. நாட்டில் நடக்க வேண்டிய புரட்சி, மனத்தில் இடம் மாறி கொந்தளித்தது. பழக்கம் தகர்ந்தது. மலர்ச்சி வென்றது. அவன் மீண்டும் வருவான் என அவள் நினைக்கவில்லை. டார்சி மனம் மாறினான். நரகத்தின் நளினங்களை டார்சி அறிய வேண்டியதாயிற்று. எதைக் கண்டு வெறுப்படைந்தானோ, அவற்றை விரும்பி நாடிப் போற்றி ஏற்க வேண்டியதாயிற்று. எலிசபெத்திற்கு பணத்தை மதித்து அடங்கும் பழக்கமில்லாதது அதிர்ஷ்டமாயிற்று.

  • பழக்கம் ஜீவனற்றது.
     
  • மலர்ச்சி ஜீவனுடையது.
     
  • மலர்ச்சி தீண்டுபவை ஜீவன் பெறும்.
     
  • மனத்தின் அபிப்பிராயம், உணர்ச்சியின் நோக்கம், உடலின் பழக்கம் ஜீவனற்றவை.
     
  • வெள்ளை மனம் மலர்ச்சியால் ஜீவன் பெறும்.
     
  • திறந்த வெள்ளை மனமிருப்பது மனத்தில் ஒரு பிரளயமாகும்.
     
  • மனிதனுக்குரிய பழக்கம் மற்றவை அனைத்திற்கும் உண்டு.
     
  • பருவங்கள் பூமியின் பழக்கமாகும்.
  • ஆவேசம் உடலின் பழக்கம் உடைந்த பொழுது எழுவது.
     
  • உடலின் பழக்கம் ஆன்ம மலர்ச்சியால் உடைந்தால், உலகை உய்விக்கும் சக்தி எழும்.
     
  • தவற்றால் தடம் மாறியபொழுது எழுந்தவை பென்சிலின், Post-it ஆகியவை.
     
  • பழக்கமாக விழும் ஆப்பிள், பழக்கத்திற்கு மாறான மனநிலையால் நியூட்டனை உலகப் பிரசித்தி பெற்றவராக்கியது.
     
  • பழக்கத்திற்கு அடிமையான எவரும் சாக்ரடீஸ்போலவோ, ஐன்ஸ்டீன்போலவோ சாதித்திருக்க முடியாது.
     
  • பெரியவரின் பழக்கத்தைச் சிறியவரின் மலர்ச்சி வெல்லும் நேரம் உண்டு.
     
  • நாடு பழக்கத்தை விட்டு சிந்தனை செய்ததால் ஏற்பட்டது பசுமைப் புரட்சி.
     
  • பழக்கமில்லாத இடங்களில் புரட்சிகரமாகச் செயல்பட முடியும்.
     
  • புது விஷயங்களில் தடை செய்யப் பழக்கமில்லாததால், வேகமாக முன்னேறலாம்.
     
  • வெற்றி வீரனுக்கும், வெட்கங்கெட்டவனுக்கும் மலர்ச்சியுண்டு.
     
  • சரளமாகப் பொய் சொல்பவனுக்கு எந்த நேரமும் பொய்யில் மலர்ச்சியுண்டு.
     
  • மனமோ, உடலோ, ஆத்மாவோ தடை செய்யாமல் உடல் அருளைப் பெறும் என்கிறார் அன்னை.
     
  • எதையும் பழக்கமெனலாம், மலர்ச்சி எனவும் கூறலாம் என்பது தத்துவம்.
     
  • மேடைப் பிரசங்கிக்கும், நிருபர்களைச் சந்திக்கும் அரசியல்வாதிக்கும் உள்ள சமயோசித புத்தியில் செயல்படுவது மலரும் மனம்.
     
  • மனவளர்ச்சியற்ற மக்கட்கு மனம் வளராத காரணத்தால் தடையான பழக்கங்கள் இருப்பதில்லை.
     
  • மலர்ச்சி நல்லவனுக்கும், கெட்டவனுக்கும், பொய்யனுக்கும், வீரனுக்கும் உண்டு.
     
  • பழக்கத்திற்குக் கட்டுக்கோப்புண்டு. மலர்ச்சிக்கு அதில்லை.
     
  • sincerely உண்மை, genuineness தூய்மை, expansiveness பிறரில் மகிழ்ந்து மலர்வது மலர்ச்சிக்குரிய அம்சங்கள்.
     
  • வீரனைத் தயார் செய்யும் முறை (deconditioning) மலர்ச்சியாகாது.
     
  • மனம் மலர்ந்து எழும் புதுக் கருத்து மரணத்திலிருந்தும் காப்பாற்றவல்லது.
     
  • மாட்டை விற்றுப் பணம் பெற்றவன் மாட்டைத் தர மறுப்பது அவன் பழக்கம்.
     
  • மரணமும் அன்னைக்கு உடலின் பழக்கமாகும்.
     
  • ஜே. கிருஷ்ணமூர்த்திக்கு ‘நேற்று' என்பதில்லை. ‘நாளை' என்பதுமில்லை.
     
  • கதை மலர்ந்த மனத்தில் எழுந்தால், பாத்திரங்கள் ஆசிரியரின் போக்குக்கு இசைய மறுப்பார்கள்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

நாம் அன்னையை நாடுவது என்பதேயில்லை, எப்பொழுதும் அன்னை தான் நம்மை நாடிவருகிறார். நம்முள் மறைந்துள்ள அன்னை அவ்வப்பொழுது மேலே வருகிறார். அன்னையின் அசைவு நல்வுணர்வாகவும், நல்ல நிகழ்ச்சியாகவும் காணப்படுகிறது. அதை எதிர்கொள்வதற்குப் பதிலாக, நாம் சுவையான புற நிகழ்ச்சிகளை நோக்கி விரைகிறோம். வருவது நின்று விடுகிறது, புறநிகழ்ச்சியின் கவர்ச்சி தவிர்க்க முடியாததாக நமக்கு அமைகிறது.

நாடுவது அன்னை விலகுவது மனிதன்.

 

Comments

09. அன்பர் உரை(Contd.)para

09. அன்பர் உரை(Contd.)

para no.9, line no.9 - முகாமிருந்து - முகாமிலிருந்து

      do.          do.   10 - citizenshipல் - citizenship

       do.          do.        - treasury - Treasury

        do.         do.    14 - $10 பில்யன் - $10 பில்லியன்

         do.         do.    16  -   -பழக்கங்கள் -பயனில்லை -

                                          - space பழக்கங்கள் - space பயனில்லை

         do.          do.     18 - அந்நூல் - அந்நூலில்

After para no. 9 -

From பழக்கம் to பகை. -           separate line, bold, centred.

From  மலர்ச்சி to முறை. -                        do.

After para no.10 -

From தானாக to  நாமே                             do.

FRom தயார் to ஜீவனளிக்கிறது.            do.

para no.11 -  after line no.7 - extra space.

        do      - line no.12 -அவரறிந்தது பழக்கம். - Separate line, bold, centred.

From இராமானுஜத்தின் to பழக்கம்.      -                               do.

From இராமானுஜத்தின் to  மலர்ச்சி       -                               do.

பழக்கம், தேவை - From margin, bold and separate line.

From இவை மாறுபட்டவை to  வேறுபட்டவை. - next paragraph

para no.12, line no.3 - பழக்கத்திருந்து - பழக்கத்திலிருந்து

        do.      after line no.6 - extra space.

para no.12, line no.10 - ஆகியவற்றிருந்து - ஆகியவற்றிலிருந்து

        do.  15 - after line no.6 - extra space.

        do.   16 -       do.        5 -      do.

para no. 17, line no.1 -  வெளியிருந்து - வெளியிலிருந்து

        do.        after line no.4 - extra space.

After para no.17 - the following are separate lines, centred. 

நீ சுயநலம், கர்வி,

From உன்னை to  மாட்டேன்.

From மரியாதையாக to  தெரியவில்லை.

From உன்னை to  இன்றல்ல."

para no.18 - line no.1 - From பழக்கத்தின் to தகர்த்தது - bold letters.

    do.             do.     5 - டார்சிஅறியவேண்டியதாயிற்று. -

                                      டார்சி அறிய வேண்டியதாயிற்று.

After para no.18 - There is no line space in between the bullet points.

Bullet point no.4 - உடன் - உடலின்

      do.              9 - உடன் - உடலின்

       do.            22 - After line no.1, extra space.

       do.            26 - sincerely - sincereity

        do.            26 - expansivenessபிறரில் - expansiveness பிறரில்

ஸ்ரீ அரவிந்த சுடர்

To be justifed

line no.1 - எப்பொழுதும்அன்னைதான் - எப்பொழுதும் அன்னைதான்

line no.2 - நாடிவருகிறார்.-  நாடி வருகிறார்.

     do.     - நம்முள்மறைந்துள்ள - நம்முள் மறைந்துள்ள

      do.  3 -  அவ்வப்பொழுதுமேலே - அவ்வப்பொழுது மேலே

       do.  4 - நல்லநிகழ்ச்சியாகவும் - நல்ல நிகழ்ச்சியாகவும்

       do.   5 - எதிர்கொள்வதற்குப் - எதிர் கொள்வதற்குப்

        do.     - நிகழ்ச்சிகளைநோக்கி -  நிகழ்ச்சிகளை நோக்கி

        do.    6 - புறநிகழ்ச்சியின் - புற நிகழ்ச்சியின்

        do.    7 - நமக்குஅமைகிறது.- நமக்கு அமைகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



book | by Dr. Radut