Skip to Content

11. லைப் டிவைன் -கருத்து

P. 11.

  • கால் தரையில் பலமாக ஊன்றியிருக்க வேண்டும்
  • பூமியே அஸ்திவாரம் - உபநிஷதம்

தவமிருந்து மோட்சம் பெற்றாலும் அத்தவசிக்கும் உணவு வேண்டும். கௌபீனமானாலும் தவம் அதைத் தாராது. Aldous Huxley என்பவர் உலகப் பிரசித்தி பெற்ற எழுத்தாளர். அவர் குடும்பத்தாரில் ஒருவர் நோபல் பரிசு பெற்றவர். அவரும், அவர் உடன்பிறந்த இருவரும் பிரபலமானவர்கள். Huxley  ஸ்ரீ அரவிந்தர் புத்தகங்களைப் படித்தவர். மேற்சொன்ன கருத்து அவரைக் கவர்ந்தது. தம் புத்தகத்திற்கு மேற்கோளாக எடுத்துக் கொண்டார்.

  • நாட்டுக்கு விவசாயம் அஸ்திவாரம்.
  • மனிதனுக்கு வாழ்வு அடிப்படை.
  • எந்த ஆராய்ச்சிக்கும் பயன் முக்கியம், மக்களுக்குப் பயன்படாத ஆராய்ச்சிக்கு உயர்வு இருந்தாலும் உயிரில்லை.
  • எழுத்தாளர், கலைஞர், அரசியல்வாதி ஆகியவர் லட்சியமாக இருந்தாலும் வருமானமே அடிப்படை.

செய்யும் காரியம் பெரியதா, சிறியதா என்பதை விட அவர் குடும்பம் வாழ வழி செய்திருக்கிறாரா என்பதே முக்கியம். யோகத்தை மேற்கொள்ள சாதகர்களை ஏற்குமுன் அன்னையின் ஸ்தாபனம் தரையில் காலை ஊன்றி வைத்ததை நாம் அறிவோம்.

  • கல்லூரியில் படிக்கும் மாணவன் நடிப்பு, பேச்சு, எழுத்து, விளையாட்டுகளில் எவ்வளவு  உயர்ந்தாலும் படிப்பும், பட்டமுமே அவனுக்கு அடிப்படை. அவையில்லாவிட்டால் மற்றவை எடுபடாது.
  • Inter-caste வேறு ஜாதியில் திருமணம் செய்து கொள்வது 50 ஆண்டாக இலட்சியமாக இருக்கிறது. இதைச் செய்தவர்கள் பலர் நல்ல நிலையிலிருக்கிறôர்கள். பலர் கெட்டுப் போய்விட்டனர். கெட்டழிந்தவர்கள் வேறு ஜாதியால் கெடவில்லை. அஸ்திவாரமான வருமானமில்லாமல் கெட்டுப் போனவர்கள்.
  • 1947இல் பாகிஸ்தான் ஏற்பட்டபொழுது இந்தியாவின் மிகச் செழிப்பான பகுதிகளை பாகிஸ்தான் பெற்றது. 53 ஆண்டுகட்குப் பின் ‘வரவு  - செலவு' கணக்குப் பார்த்தால் பாகிஸ்தானில் உணவுப் பற்றாக்குறையுள்ளது. சர்வதேச அரங்கத்திலும், பாகிஸ்தான் மக்கள் மனதிலும் இந்தியாவுக்குள்ள கௌரவம் பாகிஸ்தானுக்கில்லை. பாகிஸ்தான் 1947இல் பெற்றது
    அரசியல் சுதந்திரம். அரசியலுக்கு அடிப்படை மக்களாட்சி.
    அடிப்படையில்லாததால் சுமார் 10 ராணுவப் புரட்சிகள் ஏற்பட்டன.
  • மனிதனுக்குக் குடும்பம் அடிப்படை. அவன் பல இலட்சிய வேலைகளைச் செய்யலாம். ஊதாரியாக இருக்கலாம். குடும்பத்தைப் புறக்கணிக்காதவனுக்கு கடைசி காலம் நல்லபடியாக இருக்கும். குடும்பமே மனிதனுக்குக் காலூன்றும் இடம்.
  • மேல்நாடுகள் செழிப்பானவை. மதவழிபாடு அதிகம். சர்ச்சுக்கு ஏராளமான சொத்து உள்ளது. ஆனால் வாழ்வுக்கு அடிப்படை சொத்தைவிட, படிப்பை விட, மத வழிபாட்டைவிட, ஆன்மீகமாகும். ஆன்மீகம் புறக்கணிக்கப்பட்டதால் இன்று ஏராளமான செல்வமிருந்தும், அவர்களால் சந்தோஷம் பெற முடியவில்லை.
  • ஜப்பான் USAயிடம் போட்டியிட்டு உலகப் பொருளாதாரத்தில் முதன்மையாயிற்று, அமெரிக்காவுக்குப் புதிய கண்டு பிடிப்புகளில் முதலிடம் உண்டு. ஜப்பான் பிறநாட்டுக் கண்டுபிடிப்பைக் காப்பி அடித்தது. ஏராளமான பணம் குவிந்தது. ஆனால் நாட்டில் இன்று ‘நிலை'யில்லை. ஏனெனில் அவர்கள் முன்னேற்றத்திற்கு அடிப்படையான ஆராய்ச்சியைப் பிறரிடமிருந்து காப்பி அடித்தனர். சொந்தக் காலே சுகம் தரும். ஜப்பானுக்குச் சொந்தக் காலில்லை.



book | by Dr. Radut