Skip to Content

14. சமூகம் என்ன செய்யும்?

கிராமத்திலிருந்து செய்ய முடியாததை டவுனில் செய்ய முடியும் என்பதற்கு விளக்கம் தேவையில்லை. டவுனில், பஸ், போன், கடைத்தெரு, காலேஜ் இருக்கின்றன. கிராமத்தில் அவையில்லை. டவுனில் இன்று நமக்கு நடக்காததை சென்னை, பம்பாயிலுள்ள நம் போன்றவர்கள் செய்கிறார்கள். அவ்வளவு பெரிய ஊருக்குள்ள வசதி அது.

* மாதம் ரூ. 1200/- சம்பாதிக்க ஒரு வேலை கிடைக்கவில்லை என்றவன் தனக்கும் அமெரிக்கா போக வழியுண்டு என்று கண்டு, அந்த வழியைப் பின்பற்றி அங்கு வேலை ‘கிடைத்து', பிறகு நமக்கு அது வேண்டாம் என முடிவு செய்து, மறுபடி மனம் மாறி இன்று மாதம் ரூ. 1,60,000 சம்பாதிக்கிறான். பல லட்சம் பேரில் இவனும் ஒருவன்.

* செப்டம்பர் மாதம் 7ஆம் தேதியிட்ட ‘Trend Letter'* என்ற அமெரிக்க பத்திரிகை முதல் பக்கத்தில் கூறுபவை நம்ப முடியாதன. அவற்றுள் ஒன்று ‘இந்நூற்றாண்டில் குக்கிராமங்கள் webஇல் சர்வதேச வியாபாரம் செய்து அழிந்து போன காட்டுமிராண்டிகள் உயிர் பெறுவார்கள்' என்று எழுதுகிறது.

Internet உலகுக்கு வந்தது 1956லும், 1967லும், 1969லும் சத்தியஜீவியம் உலகுக்கு வந்ததால் அமெரிக்காவுடன் தொடர்பு கொண்டதால் கிடைக்காத Rs.1200, கிடைத்த Rs.1,60,000 ஆயிற்று என்றால் அன்னையோடு தொடர்பு கொண்டு அதையே பெற்றால் போதும். முன்வருபவர்கட்குண்டு.

* சமூகம் அதிர்ஷ்ட சாகரம்  - அன்னை அதிர்ஷ்ட சாகரங்களின் உற்பத்தி ஸ்தானம். ஸ்ரீ அரவிந்தர் "மனிதன் தன் ஆன்மாவைக் கண்டு, பிறருக்கு அவர் ஆன்மாவைக் காண உதவுவதே லட்சியம்" என்கிறார். நான் அதைச் சற்று மாற்றி, "மனிதன் அன்னை மூலம் அதிர்ஷ்டம் பெற்று, பிறருக்கு அவ்வழி காட்டுவது மனிதலட்சியம்" எனக் கூறுகிறேன்.

சமூகம் பெரியதைச் சாதிக்கும், அன்னை அனைத்தையும் சாதிப்பார். பெரிய மனிதன் ஆன்மாவைக் காணலாம். எளிய மனிதன் அதிர்ஷ்டம் பெறலாம். அதிர்ஷ்டம் பெறுவது ஆன்மாவைக் காண்பதற்கு முன்படியாகும்.

* ‘டிரெண்ட் லெட்டர்' என்ற பத்திரிகை எதிர்காலத்தைப் பற்றிக் கூறுவதில் சமீப காலமாகப் பிரபலமாகிவிட்டது. 



book | by Dr. Radut